கவுண்டமணி (உடன்) ஒரு நேர் காணல்
பிரபல தொலைகாட்சியில் இணையத்தில் எழுதுபவர்களை கவுண்டமணி இண்டர்வியூ செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது
கவுண்டமணி ஸ்டார்ட் மியூசிக் என்ற குரலுடன் உள்ளே நுழைய சூரியன் பட பேக் கிரௌண்ட் மியூசிக் ஒலிக்க ஆரம்பிக்கிறது. ஏகப்பட்ட கர கோஷத்துடன் வந்து நாற்காலியில் அமர்பவர் கேமரா வை பார்த்து "கும்பிடுறேனுங்க" என்று அவரது ஸ்டைலில் வணக்கம் வைக்கிறார்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் "சார் நீங்க கோட் சூட் போட்ருக்கீங்க இங்கிலீஷ் ல தான் சொல்லணும் " என்கிறார்.
"அப்ப பெர்முடாஸ் போட்டிருந்தால் எந்த மொழி பேசச் சொல்றே
இல்லே புதுசா மொழி எதுனா என்னை கண்டு பிடிக்க சொல்வியா. நான் ரொம்ப பிஸி. என்னை டார்ச்சர் பண்ணாதே கோ மேன்
என்று எகிறவே அவர் நகர்கிறார்
நிகழ்ச்சி ஆரம்பமாகிறது
ஹாய் ஹாய் , பசியோட இருக்கிற புள்ளைங்களுக்கு சாப்பாடு கூட கொடுக்காம, புருஷன் எப்ப வீட்டுக்குள்ளே வந்தார்னு கூட தெரியாம டி வி பெட்டியே கதி னு உட்கார்ந்திருக்கிற லேடீஸ்,அப்புறம் பொண்டாட்டி கிட்டே போட வேண்டிய சண்டையை கூட நிப்பாட்டி வச்சிட்டு ப்ரோக்ராம் பார்த்ததுக்கு அப்புறம் சண்டை போடலாம் னு காத்திட்டிருக்கிற ஜென்ஸ் இவங்க எல்லாருக்கும் நம்ம நிகழ்ச்சி சார்பா ஒரு வெல்கம் சொல்லிக்கிறேன் எல்லாரும் காத்துகிட்டு இருக்கீங்கண்ணா அதுக்கு காரணம் எங்க நிகழ்ச்சியோட வெற்றி தான். உடனே நிகழ்ச்சிக்கு போயிடறேன் இன்னிக்கு யாரோட பேச போறோம்னு பார்க்கலாமா கமான் பாய்
என்று அவர் சைகை காண்பிக்க நான் வந்து அமர்கிறேன்
என்னை ஒரு முறை மேலிருந்து கீழ் வரை நக்கலாக பார்க்கிறார்
மணி : உன் பேரென்ன
நான் : ஆர்.வி. சரவணன்
உன்னோட ப்ளாக் பேரு
குடந்தையூர்
பெயர் காரணம்
கும்பகோணதோட இன்னொரு பேரு குடந்தை. அதுல ஊர்னு
சேர்த்து குடந்தையூர் ஆக்கிட்டேன்
இருக்கிற ஊர் பத்தாதுனு நீ வேற புதுசா உண்டாக்குறியா
கொஞ்சம் தனி தன்மையோட இருக்கட்டுமேனு தான்
அப்ப நீ தனி தீவுல தான் இருந்திருக்கணும். பை த பை நெட்ல
எத்தனை வருசமா எழுதரே
மூன்று வருஷமா
எவ்வளவு எழுதிருக்கே
250 இருக்கும்
வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் னு கேப்சர் வோர்ட் உன் சைட் ல வச்சிருக்கியே. நீ முதல்ல அதை பாலோ பண்றியா
நம்மாலே யாருக்கும் கெடுதல் இல்லாமே நடந்துகிட்டாலே
நன்மை பண்ண மாதிரி தானே
இந்த குண்டூசி விக்கிறவன் புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர் னு சொல்றான்யா னு நான் ஒரு படத்துல வசனம் பேசுவேன். அதை இப்ப
ஏன் இங்கே சொல்றேன்னு உன்னாலே புரிஞ்சிக்க முடியுதா
ஏன் இங்கே சொல்றேன்னு உன்னாலே புரிஞ்சிக்க முடியுதா
எஸ். பேனா பிடிச்சவன் எல்லாம் எழுத்தாளர் ஆகிட முடியுமா னு
சொல்ல வரீங்க
வெரி குட் . கேட்ச் மை பாயிண்ட் . இதுக்கு எதுனா நீ பீல் பண்றியா
நோ சார். யாருக்கு திறமை இருக்கோ அவங்க கண்டிப்பா மேல வருவாங்க
சரி உன் ப்ளாக் பற்றி உன் எண்ணங்கள் பற்றி நாங்க தெரிஞ்சிக்க நீ எதுனா எழுதியிருக்கியா
உன் ஊர் பற்றி என்ன எழுதிருக்கே நீ
கும்பகோணத்தில் இருக்கும் கோவில்களில் உச்சம் தரும் அருள் மிகு உச்சி பிள்ளையார் கோவில் , வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா புதன் ஸ்தலம் பற்றி திருவெண்காடு எழுதியிருக்கேன்
சினிமா விமர்சனம் ஒண்ணு சொல்லு
நீ திருப்தி பட்டது
இளமை எழுதும் கவிதை நீ.... தொடர்கதை
வேற எதுனா ஸ்பெசலா இருக்குதா
மணி மேலும் கீழும் என்னை பார்த்து விட்டு
கனவு காணுங்கப்பா வேணாம் னு நான் சொல்லல. நாங்க எல்லாம்
நம்பற மாதிரி கனவு காணுங்க.சரி நெஞ்சை நக்கின சீ நெஞ்சை தொட்ட
மாதிரி எதுனா இருக்கா
கனவு காணுங்கப்பா வேணாம் னு நான் சொல்லல. நாங்க எல்லாம்
நம்பற மாதிரி கனவு காணுங்க.சரி நெஞ்சை நக்கின சீ நெஞ்சை தொட்ட
மாதிரி எதுனா இருக்கா
சரி எது வரைக்கும் எழுதுலாம் னு பிளான் வச்சிருக்கே
கூகுள்காரன் கழுத்தை பிடிச்சு தள்ளற வரைக்கும்னு சொல்லாதே
என்னாலே எழுத முடியற வரைக்கும்
நான் உன்னை நீ வா போ னு சொல்றேனே இதை பத்தி எதுனா பீல் பண்றியா
உங்க ஸ்டைல் சார் அது. யானை பிளிரினால் தானே அழகு.
சிணுங்கினால் அழகாவா இருக்கும்
சிணுங்கினால் அழகாவா இருக்கும்
வெரி குட் நீ என்னை தனியா வந்து பாரு
சரி வேற எதுனா பிளான் வச்சிருக்கியா
சரி வேற எதுனா பிளான் வச்சிருக்கியா
ஷார்ட் பிலிம் எடுக்கணும். டைரக்டர் நாற்காலி ல உட்காரணும்
வாழ்த்துக்கள்
என்றவர் என் கை பற்றி குலுக்கி
நைஸ் மீட்டிங் சரவணன் என் கிட்டே எதுனா கேள்வி கேட்க
நீங்க ஆசைபடறீங்களா
என்றவர் என் கை பற்றி குலுக்கி
நைஸ் மீட்டிங் சரவணன் என் கிட்டே எதுனா கேள்வி கேட்க
நீங்க ஆசைபடறீங்களா
எஸ் சார் நீங்க ஒருத்தர்ட்ட கேட்ட கேள்விக்கு பதில் வந்திருச்சானு தெரிஞ்சிக்க ஆசைபடறேன்
நான் யாருட்ட கேள்வி கேட்டேன்
ஒரு பழம் இந்தாருக்கு இன்னொன்னு எங்கேனு செந்தில் கிட்டே கேட்டீங்களே
ம் பழனிக்கு போயிருக்கு. அது இந்நேரம் பஞ்சாமிர்தம் ஆகிருக்கும்
என்று சீரியசானவர்
சும்மாருந்தவனை சொரிஞ்சு விட்டுட்டாண்டா.
தன் உதவியாளரிடம்
நீ செந்திலுக்கு உடனே போன போடு. இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்
சும்மாருந்தவனை சொரிஞ்சு விட்டுட்டாண்டா.
தன் உதவியாளரிடம்
நீ செந்திலுக்கு உடனே போன போடு. இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்
மணி போன் பேச முயற்சிக்கையில், எப்படியும் செந்தில் "அதாண்ணே இது" என்ற அதே பதிலை தான் சொல்ல போகிறார்.கவுண்டமணி இன்னும் டென்சன் ஆக போகிறார் என்பதால் நான் அங்கிருந்து எஸ்கேப் ஆகிறேன்
நாளை முதல் இணைய நண்பர்களின் தளங்களுக்கு நாம் சென்று பார்க்க போகிறோம் .இப்போது விஜயதசமி வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்
ஆர்.வி.சரவணன்
ஆர்.வி.சரவணன்
சூப்பர்... கவுண்டமணி கூட உரையாடுற மாதிரியே சுய அறிமுகம்.... நல்லாருக்கு...
ReplyDeleteசூப்பர் சரவணா... சூப்பர்!
ReplyDeleteசுய அறிமுகம் அருமை. ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteஷார்ட் பிலிம் எடுக்கணும். டைரக்டர் நாற்காலி ல உட்காரணும்
ReplyDeleteவாழ்த்துக்கள்
அசத்திட்டீங்க... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... தங்களின் பதிவுகளின் இணைப்புகளை மட்டும் வேறு கலர் (or background color) கொடுக்கவும்... நன்றி...
ReplyDeleteநல்ல துவக்கம்..புதுமையான அறிமுகம். வாழ்த்துக்கள். வாரம் முழுவதும் அசத்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஆரம்பம் சுப்பர் மேலும் அசத்த எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDelete<<>>
சுப்பர் நகைச்சுவை எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்கள் இவர்கள்.....
இவர்களின் புகழ் இந்த வைகத்தில் வாழவேண்டும்....
ஒரு வித்தியாசமான நடையில் பதிவு அமைந்துள்ளது.......அருமை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஒரு பழம் இந்தாருக்கு இன்னொன்னு எங்கேனு செந்தில் கிட்டே கேட்டீங்களே
ம் பழனிக்கு போயிருக்கு. அது இந்நேரம் பஞ்சாமிர்தம் ஆகிருக்கும்
சுப்பர் நகைச்சுவை எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்கள் இவர்கள்.....
இவர்களின் புகழ் இந்த வைகத்தில் வாழவேண்டும்....
ஒரு வித்தியாசமான நடையில் பதிவு அமைந்துள்ளது.......அருமை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வித்தியாசமான நடையில் - கலகலப்பு!..
ReplyDeleteகலகலப்பான ஆரம்பம் அண்ணா... அசத்துங்க....
ReplyDeleteசரவணன் ஐயா..
ReplyDeleteசூப்பர்...சூப்பர்...சூப்பர்...சூப்பர்...சூப்பர்...சூப்பர்... சுய அறிமுகம்.
நல்ல துவக்கம்...ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com
சுவையான பேட்டி... சுய அறிமுகம்.
ReplyDeleteஉற்சாகத்துடன் தொடருங்கள்.
அசத்தலான அறிமுகம் கலக்குங்க நமது மாவட்டம் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
ReplyDeleteகாரை இவர் வச்சிருக்கார் ,சொப்ன சுந்தரியை யார் வச்சிருக்காங்கன்னு கேட்டு சொல்லுங்க ,சரவணன் !முயற்ச்சி செய்ங்க ,டைரடக்கரு ஆயிடலாம் !
ReplyDeleteattakaasam sir...
ReplyDeleteகரண்டி இல்லாமயே கலக்க வாழ்த்துகள்
ReplyDeleteதங்கள் பதிவுகளில் சிலதை எடுத்துக்காட்டு தருவதற்கு கவுண்டமணியின் பேட்டி வாயில்-ஆக பதிவு,,, வித்தியாசமாய்
ReplyDeleteஇருந்தது. கவுண்டமணியின் குரல் மாடுலேஷன்படி படித்துப்
பார்த்தால் இன்னும் சுவை கூடுகின்றது.
தொடர்ந்து சிறப்பு செய்யுங்கள் சரவணன்!
சிறப்பான .அறிமுகப் பகிர்வு....
ReplyDeleteவாழ்த்துகள்.....
அற்புதமான சுய அறிமுகம்
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
கலகலப்பான ஆரம்பம் தொடரட்டும்!அண்ணா...
ReplyDeleteவித்தியாசமான புதுமையான
ReplyDeleteசுய அறிமுகம்..
வாழ்த்துக்கள் நண்பரே...
நீங்க மிமிக்ரி பேசி பார்த்திருக்கேன். எழுதி இப்பத்தான் பாக்குறேன்..
ReplyDeleteஅனைத்து நண்பர்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் என் இதயம் நிறைந்த நன்றி ( ஒரே கருத்தில் நன்றி சொல்வதற்கு மன்னியுங்கள் நண்பர்களே
ReplyDeleteசுய அறிமுகம் நன்று, சரவணன்.
ReplyDeleteஅற்புதமான சுய அறிமுகம்!
ReplyDeleteசரவணன், கவுண்டர் உங்களை திட்டினதை எல்லாம் சென்சார் பண்ணிட்டீங்களா.. ஹி ஹி ஹி
ReplyDeleteநல்லா கற்பனை செய்து இருக்கீங்க..அப்படியே பழப் பிரச்னையை தீர்த்து வைத்து இருக்கலாம் ;-)
ஹா ஹா! நன்றாகவே சிரிக்கவைத்த பதிவு! :)
ReplyDeleteநிஜமாகவே நீங்களும் கவுண்டமணி சாரும் படத்துல பேசறது போல ஒரு தோற்றத்தைத் தரும் ஒரு பதிவு. நல்ல ஒரு கற்பனை.கவுண்டமணி சார் இதப் படித்தால் 'எவண்டா இவன் நமக்குப் போட்டியா' அப்படினு மகிழ்ச்சி அடைவார். மட்டுமல்ல ஒரு வேளை அவர் நடித்தாரானால் இதைக் கூட ஒரு காமெடி ட்ராக் போட யோசிக்கலாம், ஏன்னா அந்தப் பழம்...ம் பழனிக்கு போயிருக்கு. அது இந்நேரம் பஞ்சாமிர்தம் ஆகிருக்கும் என்ற பதில் அவரையே சிரிக்க வைச்சிடும், சரவணன்....ஹாட்ஸ் ஆஃப்!!
ReplyDeleteஅருமையான கற்பனைப் பதிவு....உங்களின் சில தளங்களுக்கு சென்று வந்து விட்டேன்... வாழ்த்துக்கள்
ReplyDelete[[உன்னோட ப்ளாக் பேரு
ReplyDeleteகுடந்தையூர்
பெயர் காரணம்
கும்பகோணதோட இன்னொரு பேரு குடந்தை. அதுல ஊர்னு
சேர்த்து குடந்தையூர் ஆக்கிட்டேன்
இருக்கிற ஊர் பத்தாதுனு நீ வேற புதுசா உண்டாக்குறியா]]
உண்மையிலே இது பெஸ்ட்; இந்தியாவிற்கு தேவை! பேர் மாத்தி உயிரை எடுக்கிரானுங்க!
தமிழ்மணம் வோட்டு 5.