Monday, October 14, 2013

ஆர்.வி.சரவணன் from குடந்தையூர்

------



ஆர்.வி.சரவணன் from குடந்தையூர் 

சில வருடங்களுக்கு முன் குமுதத்தில், வாரம் ஒரு பிரபலம் ஆசிரியராக பங்கேற்கும் ஒரு புதுமையை ஆரம்பித்திருந்தார்கள்.ஒரு வருடம் முழுக்க நடந்த இந்த ஆசிரியர் அணிவகுப்பில் பல பிரபலங்கள் பங்கேற்று சிறப்பா செய்திருந்தார்கள்.  பல பேரோட கருத்துக்களை எண்ணங்களை ஆர்வங்களை இதன் மூலம் தெரிஞ்சிக்க முடிஞ்சுது.

அப்ப நான் நினைச்சுக்குவேன். நம்மை ஒரு வாரத்திற்கு குமுதம் வார இதழ்
ஆசிரியராக்கி இருந்தால் ஒவ்வொரு பக்கத்தையும் நாம் எப்படி உருவாக்கி இருப்போம் னு மனசுக்குள் கற்பனை பண்ணி பார்த்து சந்தோசப்பட்டேன். அந்த கனவு தான்ங்க இப்ப நிஜமாகி இருக்கு. ( திரு.அப்துல் கலாம் கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம்னு சொன்னது 100 % உண்மை தான்).

ஆம்.வாரம் ஒரு வலைப் பதிவரை ஆசிரியராக்கி அழகு பார்க்கும், நமது 
வலைச்சரத்தில் இந்த வாரம் நான் தாங்க ஆசிரியர். என்னை ஆசிரியராக அமர்த்திய  திரு.சீனா அய்யா அவர்களுக்கும், நண்பர் திரு. தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றி.

எனக்கு கொடுக்கப்பட்ட இந்த பொறுப்பை சரியாய் செய்து முடிக்கணும்கிற டென்சன்  சீனா அய்யா கிட்டே நான் ஓகே சொன்ன அடுத்த வினாடியே ஆரம்பிச்சுடுச்சு. " எந்த வேலையும் சுலபமில்லை தான். இருந்தும் அது கடினமாவது நம் அலட்சியத்தால் தான்" னு படிச்சிருக்கேன். 
அதனால தீயா வேலை செய்யணும் குமாரு னு மனசு சொல்லிட்டிருக்கு 

இது வரை எனக்கு முன்பு ஆசிரியரா இருந்த அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் சொல்றதோட, தொடர்ந்து வலைச்சரத்தை படித்து வரும் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கத்துடன் கூடிய நல்வரவும் சொல்லிட்டு கடவுள் ஆசியுடன் என் ஆசிரியர் வேலையை இனிதே தொடங்குகிறேன்

எனது குடந்தையூர் தளத்தின் பதிவுகள்  பற்றிய ஒரு ரிப்போர்ட் 
(ஒரு பிரபலத்தின் உதவியுடன்) இதோ வந்திட்டே இருக்கு 

படம் : எனக்கு பிடித்த தஞ்சை பெரிய கோவிலை என் செல் போனில் 
பிடிக்க ஆசைப்பட்டு கிளிக்கியது 


ஆர்.வி சரவணன் 

49 comments:

  1. வணக்கம்

    அறிமுகம் சிறப்பு வலைச்சரப் பொறுப்பாசிரியராக உள்ளது மிக சந்தோசமாக உள்ளது இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன்

      Delete
  2. வலைச் சர பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்க என் உள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜெயக்குமார் சார்

      Delete
  3. சுய அறிமுகம் அருமை... அசத்த வாழ்த்துக்கள்... தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்...

    படம் அசத்தல்... தீயா வேலை செய்யுங்க...!பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன் சார்

      தமிழ்மணத்தில் இணைத்தமைக்கு நன்றி

      Delete
  4. Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோவை ஆவி

      Delete
  5. அன்பின் சரவணன் - பெரிய கோவில் கோபுரப் படத்துடன் துவங்கிய பதிவு நன்று - கனவுகள் கை கூட நல்வாழ்த்துக்ள் - முதல் பதிவே தூள் கிளப்புகின்ற பதிவு.

    கடவுள் ஆசியுடன் துவங்குகின்ற பணி சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீனா அய்யா

      Delete
  6. வாங்க! வணக்கம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளங்கோ சார்

      Delete
  7. இனிய வணக்கம் நண்பரே...
    வலைச்சரப் பணிசிறக்க
    மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  8. உள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அபயா அருணா

      Delete
  9. வாங்கய்யா! வணக்கமய்யா! வந்து வலைச்சரத்தில் கலக்குங்கய்யா! முதல் பதிவே அசத்தி விட்டீர்கள். நல்லதொரு பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாண்டியன்

      Delete
  10. பெரிய கோவில் கோபுரப் படத்துடன் துவங்கிய
    வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

      Delete
  11. பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி உழவன் ராஜா

      Delete
  12. வாருங்கள்.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்கூல் பையன்

      Delete
  13. பெரிய கோவில் ..பெரிய எண்ணம் ...கலக்குங்க சரவணன் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பகவான்ஜி

      Delete
  14. இனிய அறிமுகம்!.. வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி துறை செல்வராஜ்

      Delete
  15. ஜமாயுங்கள்
    ஆவலுடன் தங்கள் பதிவுக்குக் காத்திருக்கிறோம்
    இனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  16. சுவையோடும் பொருளோடும் கூடிய
    சுகமான சுய அறிமுகம்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  17. பணிசிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மணிமாறன் சார்

      Delete
  18. வந்தாச்சா குடந்தையூராரே...! இந்த வாரம் முழுவதையும் சிறப்பாக, கலகலப்பாகக் கொண்டு செல்ல என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாலா கணேஷ் சார்

      Delete
  19. குடந்தையூர் என்பது கும்பகோணம் தானே ??

    குடந்தை என்று தான் சொல்லி பழக்கம். நான் தஞ்சை.

    குடந்தையில் இருக்கும் ராமசாமி கோவில், கும்பேஸ்வரன் கோவில்,மற்றும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் உப்பிலி அப்பன் கோவில் இவைகளையும் இந்த வாரத்தில் ஒரு நாள் எழுதுங்களேன்.

    டயமண்ட் டாக்கீஸில் இப்ப என்ன படம் ?

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  20. நல்ல அறிமுகம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சரவணன்! கனவு கண்டும் தீயாய் வேலையும் செய்யும் உங்கள் நல்ல கனவுகள் எல்லாம் நிறைவேறட்டும்! :)

    ReplyDelete
  21. இனிய அறிமுகம்!..ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
    www.99likes.blogspot.com

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. தங்கள் சுய எண்ண அறிமுகம் சிறப்பு.
    பணியில் சுவையுடன் பதிவுகள் தந்திடுக...

    ReplyDelete
  24. //குடந்தையூர்
    நான் ஆசிரியராகிறேன்//

    -" 14/10/2013 துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்பவர் ஆர்.வி.சரவணன் " என்ற அறிவிப்பைக் காணவில்லையே?

    ReplyDelete
  25. வாங்க! வணக்கம்! தீயாக வேலை செய்ய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. வாங்க சரவணன், நல்வரவு!
    கம்பீரமான தஞ்சை பெரிய கோவில் புகைபடத்துடன் அறிமுக ஆரம்பம் அருமை. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  27. அருமையான, கம்பீரமான உலகிற்கே கட்டடக் கலையின் சிறப்பையும், நமது தேசத்தின் திறமையையும் பறைசாற்றும் தஞ்சை கோவிலின் புகைப்படத்துடன் உங்கள் அறிமுகம், நமது தமிழ் திரைப் படங்களில் ஹீரோ அறிமுகம் போல்! உங்கள் பணி சிறந்து இந்தக் கோவிலைப் போல் உங்கள் புகழ் மணம் பரவ அந்த இறைவன் அருளுடன் தொடருங்கள் நண்பரே! தீயா வேலை செய்து கலக்குங்கள்!

    ReplyDelete