Friday, October 18, 2013

மங்கையராய் பிறந்திடவே....




மங்கையராய் பிறந்திடவே....


அன்புள்ள அத்தை காயத்ரி ராஜேஷ்குமார் அவர்களுக்கு உங்கள் மருமகள்  உமா அனேக  நமஸ்காரத்துடன் எழுதுவது. மாமா , அண்ணன், அண்ணி குழந்தைகள் மற்றும் தங்களின் நலம் கூட அறிய ஆவலாய் இருக்கிறேன்.  லெட்டர் ல எழுதற மாதிரி ஷேம நலம் லாம் விசாரிசிட்டிருக்கே  னு   இங்க இவர் திட்டிட்டு இருக்கார் (நானும் பதில் கொடுத்துட்டேன் என்னை திட்டலேன்னா உங்க பொழுது விடியாதேனு ) என்ன தான் மின்னஞ்சலாக இருந்தாலும் பெரியவங்களுக்கு எழுதறப்ப இப்படி எழுதறது தானே முறை.

அப்புறம் அமெரிக்கா எப்படி இருக்கு. எல்லாரும் என்னை மட்டும் விட்டுட்டு வேலைக்கு போயிடறா போர் அடிக்குது னு போன்ல சொன்னீங்க.  பிசினஸ் மீட்டிங் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு கொஞ்சம் உங்களுக்காகவும் டயம் ஒதுக்க சொல்லுங்க மாமாவை. இங்க மட்டும் 
என்ன வாழுது. அத்தை  நீங்க இருக்கிறப்ப  கொஞ்சம் பரவாயில்ல பயந்துட்டு சீக்கிரம் வந்துருவாரு. இப்ப நீங்க வேற இல்லையா ரொம்ப லேட்டா வறாரு கேட்டால் கேர் பண்ண மாட்டேங்குறாரு. இந்த ஆண்கள் பெண்களுக்குனு ஒரு உலகம் இருக்கு அவங்களோட  உலகத்துலயும் கொஞ்சம் அவங்களுக்காக டயம் ஸ்பென் பண்ணுவோம் னு அக்கறையே கிடையாது. வீடே கதின்னு கிடக்கிறதினாலே நமக்கு இப்படி தோணுது போலிருக்கு. நாமளும் வேலைக்கு போயிருந்தா இப்படிலாம் தோணாதுனு நினைக்கிறேன்.

நேற்று நான் முக நூல்ல ஒரு சமுதாய நிகழ்வை பற்றி ஸ்டேடஸ் போட்டேன். என்ன ரெஸ்பான்ஸ் தெரியுமா. இவர் கிட்டே சொல்றேன்  
சட்டை பண்ணவே இல்லை கேட்டால் அதான் இத்தனை பேர் லைக் பண்ணிருக்காங்களே. கூட்டத்தோட என்னையும்  கோரஸ் பாட சொல்றியா 
கேட்கிறார். எவ்வளவு பேர் பாராட்டினாலும்  புருஷனோட பாராட்டு நமக்கெல்லாம் விலை மதிப்பில்லாத ஒண்ணுனு அவருக்கு ஏன் புரிய மாட்டேங்குது. சரி விசயத்துக்கு வரேன்.


நீங்க போரடிக்குது னு  சொன்னதால் இணையத்தில் படிக்கிறதுக்காக 
 நான் நீங்க கேட்ட படி பெண்கள் எழுதற சில தளங்களை அறிமுகப்படுதறேன்.  

ராதா ராணி, அவங்களோட ராதாஸ் கிச்சன்  ல  சமையல், வீட்டு மருத்துவம், கோலங்கள் னு வித விதமா பதிவுகள் இருக்கு.

அடுத்து  பவித்ரா நந்தகுமார்  இவங்க தளத்துல சிறுகதை, கட்டுரைகள் கவிதைகள், கோலங்கள், இப்படி நிறைய இருக்கு. அது மட்டும் இல்லாம உங்களுக்கு பிடிச்ச எழுத்தாளர் இந்துமதியை சந்திச்சது பற்றி கூட  எழுதியிருக்காங்க

அடுத்து ஆனந்தி , இவங்களோட  அன்புடன் ஆனந்தி  தளத்துல கவிதை சமையல் அனுபவம் னு நிறைய எழுதறாங்க 

அடுத்து பிரியா இவங்க பெயிண்டிங் கலையில கிரேட். கவிதையும் எழுதுவாங்க  வெளிநாட்டில் சென்று வந்த இடங்கள் பற்றியும் எழுதுவாங்க வரையறது எப்படின்னு சொல்றாங்க பாருங்க. என் மனதில் இருந்து  

இளையநிலா  இளமதி இவங்க கவிதை எழுதறது மட்டுமில்லாம க்வி லிங்க்   செய்யறதிலே கூட கலக்கறாங்க. நீங்க கத்துக்க ஆசைப்படுவீங்க னு நினைக்கிறேன். 

அடுத்து ஜீவா ராஜசேகர் இவங்க  நினைவலைகள்   தளத்துல
அறிந்துகொள்வோம் கவிதைகள்னு எழுதறாங்க. தண்ணீர் பற்றிய கட்டுரை எழுதியிருக்காங்க படிங்க நல்ல பதிவு இது

அடுத்து அபயா அருணா இவங்க தளம் நினைவுகள்  கொஞ்சம் நகைச்சுவை கலந்து எழுதறாங்க நல்லாருக்கு

இது போதும் னு நினைக்கிறப்ப, ஏற்கனவே அறிமுகமானவங்களா  இருந்தாலும் லேடீஸ் பத்தி எழுதற பதிவுல  கண்டிப்பா இவங்களை பத்தியும் நான் சொல்லி யாகணும். 

காணமல் போன கனவுகள் ராஜி  இவங்க சமையல் கோவில்கள் ஜாலி கட்டுரை இப்படி நிறைய எழுதறாங்க. இவங்க போடற கமெண்ட் கூட நகைச்சுவையா எழுதறாங்க.

தென்றல் சசிகலா இவங்க  தென்றல் தளத்துல கவிதை கொட்டி கிடக்கு நாட்டுபுற பாட்டு  திண்ணை பேச்சு  கூட  எழுதிட்டிருக்காங்க


அடுத்து  ரஞ்சனி நாராயணன் அம்மா இவங்க தளத்துல படிக்க பல விஷயங்கள் இருக்கு 

இன்னும் நிறைய பெண்கள் எழுதறாங்க அவங்களை பத்தி அப்புறமா சொல்றேன். 

இதோ உங்க பேர  பசங்க வந்துட்டாங்க நீங்க அமெரிக்கா போறப்ப அழைச்சிட்டு போகல னு  உங்க கிட்டே டூ விட்டிருக்கிறதா சொல்ல சொல்றாங்க.  ஒரு பாக்ஸ் நிறைய சாக்லெட் வாங்கி நீங்க அனுப்ப போறதா  அவங்க கிட்டே போன்ல பேசறப்ப சொல்லிடுங்க.

அப்புறம் உங்க பிள்ளை கேட்கிறார். நீங்க ரெண்டு பேரும்  வாரத்துக்கு ஒரு சண்டையாவது போட்டு என்னையும் அப்பாவையும் உயிரை வாங்குவீங்க இப்ப என்ன பாச மழை பொழியுது  னு கிண்டல் அடிக்கிறார். கண்ணு வைக்காதீங்க னு கண்டிச்சிட்டு இருக்கேன் 

இப்படி எழுதிகிட்டே இருந்தால் நான் எப்ப படிக்கிறது னு நீங்க சொல்றது எனக்கு புரியது. எனக்கென்னமோ இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க எதுனா பேசறதா இருந்தால் சாட்டிங் ல வா னு  சொல்ல போறீங்க னு நினைக்கிறேன் 

ப்ரியமுடன் 
உங்கள் மருமகள்
உமா சிவா 

பெண்கள் பற்றி எழுதுவதால் இப்படி ஒரு பெண்ணோட பார்வையில எழுதியிருக்கேன் ஏதேனும் குறைகள் இருந்தால் மன்னிக்கவும் 

மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டும் 

நாளை சந்திப்போம் 

ஆர்.வி.சரவணன் 

47 comments:

  1. அனைத்து தளங்களும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    மிகவும் அருமையாக தொகுத்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  2. சில பேர் புதியவர்கள்.. இன்று அவர்களை உங்கள் அறிமுகம் வாயிலாய் சந்திக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  3. இன்று என் தளத்தில் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Happiness.html

    ReplyDelete
  4. வணக்கம்
    வலைச்சர அறிமுகங்கள் அனைருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை...

    என் தளத்தில் புதிய பதிவு அன்புடன் வருக..
    http://2008rupan.wordpress.com/2013/10/18/%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4%e0%af%81/

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  5. அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  6. அறிமுகத்திற்கு நன்றி .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  7. என் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சரவணன்.
    மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  8. தோழி பவித்ராவின் தளம் புதுசு எனக்கு அறிமுகத்துக்கு நன்றி. என்னையும் ஒரு ஆளாய் மதிச்சு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. இதுக்குதான் உங்களைப் போல தம்பி வேணும்க்குறது!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அக்கா

      Delete
  9. அட, பவித்ரா எங்க ஊர்க்காரங்க போல!... ம்ம்ம

    ReplyDelete
  10. தாங்கள் அறிமுகம் செய்துள்ள தளங்கள்
    அனைத்தும் நான் விரும்பித் தவறாது தொடர்பவைகள்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  11. தளத்தில் என்னை அறிமுக படுத்தியதற்கு நன்றி. எனக்கே இன்னும் தெரியயில்லை எப்படி உங்கள் கண்ணில் பட்டேனென்று

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  12. வணக்கம் சகோ சரவணன்!.. இன்று இங்கு வந்து வாழ்த்த வருவதற்கு எண்ணியிருந்தேன்..
    அதே சமயத்தில் எங்கள் அன்பு தனபாலன் என்தளம் வந்து இன்று உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளனர் என்றவுடன் ஆச்சரியமுடன் ஓடோடி வந்தேன்...:)

    அட ஆமா.. என்னை எப்போது இப்படி அறிமுகம் செய்ய நீங்கள் கண்டீர்கள்...:0.

    மிக்க நன்றி சகோ என்னையும் பல திறமைசாலிகளுடன் இங்கு இன்று அறிமுகம் செய்தமைக்கு!

    என்னுடன் அறிமுகமாகியுள்ள சக பதிவர்களுக்கும் உங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    அறிவித்தல் தந்த அன்புச் சகோ தனபாலனுக்கும் எனது நன்றியும் வாழ்த்தும்!...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அந்த க்வி லிங்க் செய்வது எப்படின்னு பதிவு ஒண்ணு கொடுங்க வீட்ல நல்லாருக்குன்னு சொன்னங்க

      Delete
    2. ஓ.. மிக்க நன்றி உங்கள் ரசனைக்கு சகோதரரே!..

      விரைவில் இதற்கான இணையத்தள இணைப்புள்ள பதிவொன்றினைத் தருகிறேன் என் வலையில்..

      மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்!

      Delete
  13. நீங்கள் குறிப்பிட்டவற்றில் நிறைய தளங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறேன், மற்றைய தளங்களின் அறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  14. மிகவும் அருமையாக தொகுத்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

      Delete
  15. அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  16. எல்லோருக்கும் வாழ்த்துகள் (y)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  17. நல்ல தொகுப்பு...


    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  18. சிலர் அறிமுகமானவர்கள் சிலர் புதியவர்கள்! சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  19. தென்றலின் அறிமுகமும் கண்டு மகிழ்ந்தேன். என் கணினிக்கு காய்ச்சல் எந்த நேரம் ஆன் ஆகும் எந்த நேரம் ஆப் ஆகும் என்றே தெரியவில்லை. அதனால் தொடர்ந்து வர தாமதம் மன்னிக்கவும்.

    ஒரு யோசனை தவறாக இருந்தால் மன்னிக்கவும். அறிமுகம் செய்பவர்கள் நமக்கும் நம் நட்பு வட்டாரத்தில் தெரிந்தவர்களையும் விடுத்து அனேகம் பேருக்கு தெரியாத புதிதாக எழுத ஆரம்பித்தவர்களை அறிமுகம் செய்ய முயற்சி செய்யுங்க. அது தான் புதிய அறிமுகமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லும் கருத்து சரி தான். இன்றைய சில தளங்கள் புதிது என்று சில நண்பர்கள் கருத்துரை சொல்லியிருக்கிறார்கள். மேலும் நான் அறிமுகமானவர்களை பற்றி குறிப்பிடுவது அவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் தான். நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்

      Delete
    2. புரிதலுக்கு நன்றிங்க. இன்னும் ஆங்காங்கே புதிதாக வலை ஆரம்பித்து எழுதுபவர்கள் இருப்பாங்க. நமக்கு தெரிந்தவர்களையே நாம் திரும்ப திரும்ப அறிமுகம் செய்து என்ன பயன் ஆதலால் சொன்னேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

      Delete
    3. உங்கள் கருத்து சரியே இதுக்கு எதற்கு மன்னிக்கவும் என்றெல்லாம் சொல்கிறீர்கள் நன்றி வணக்கம்

      Delete
  20. அருமை அண்ணா...
    நல்லா எழுதியிருக்கீங்க...
    எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...
    தொடருங்க... தொடர்கிறோம்...

    ReplyDelete
  21. நண்பரே! நல்ல பதிவு. என் தோழிக்கு ஒரே சந்தோஷம். நீங்கள் குறிப்பிட்டுள்ள தளங்கள் பல, தோழி தொடர்வதால் எனக்கும் அறிமுகம். பல தளங்களையும் நல்ல ஒரு கற்பனைத் தளத்தில் இறக்கிவிட்டீர்கள். கற்பனை வளம் செழுமை.

    ReplyDelete
  22. மங்கையர் திலகமான பதிவர்களின் அறிமுகங்கள் அனைத்தும் சிறப்பு. அதிலேயும் மாமியாருக்கு மருமகள் அன்பு பொங்க எழுதும்
    இ-மெயில் வாயிலாகவே பதிவுகளை அறிமுகப்படுத்தியவிதம்
    ஆஹா சுவை எனும்படியிருந்தது. பாராட்டுக்கள் சார்!

    ReplyDelete
  23. மாமியாருக்கு மருமகள் - அன்பின் வழி எழுதிய மடல் - அழகாக இருந்தது. அறிமுக தளங்கள் அருமை!.. மகிழ்ச்சி!..

    ReplyDelete
  24. அறிமுகம் செய்யப்பட அனைவரும் அருமையான படைப்பாளிகள்..
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  25. அற்புதமான பதிவர்கள். அவர்களை அறிமுகம் செய்த விதம் அழகு. மிகவும் சிறப்பான தளங்கள். அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  26. எனது தளத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.. அறிமுகப் படுத்தப் பட்ட அனைவருக்கும், தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  27. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete