Saturday, October 19, 2013

இணையம் ஒரு கதம்பம்





இணையம் ஒரு கதம்பம் 


ஹோட்டலுக்கு போறோம் அங்க போய் இட்லி மட்டுமோ இல்லை தோசை மட்டுமோ சாப்பிடறதை விட, எல்லாம் கலந்த மாதிரி மினி டிபன் சாப்பிட ஆர்வமா இருக்கும். அது மாதிரி இன்னிக்கு நாம பார்க்க போறது பல துறை
சம்பந்தப்பட்ட தளங்களை (இதுக்கு இவ்வளவு பில்டப் பா ) 


முதல்ல பார்க்க போறது சினிமா. சினிமாங்கிறது எல்லாரையும் சந்தோசபடுத்தற ஒரு விஷயம் (சில பேருக்கு பிடிக்கல) என்னை சினிமா பார்க்க போலாம்னு சொன்னா எந்த நேரமும் ரெடி யா இருப்பேன்.
கல்லூரி நாட்களில் ஒரே நாள்ல மார்னிங் ஷோ மாட்னி ஷோ போய்ட்டு தலைவலியோடு வீட்டுக்கு வந்தேன். அன்னிக்கு வீட்டுக்கு உறவினர்லாம் வந்திருந்தாங்க இரவு காட்சி குடும்பத்தோட கிளம்பினாங்க நானும் கிளம்பிட்டேனே. சமீபத்தில் வந்து எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒரு படத்தை பற்றி ஒரு நண்பர் விமர்சனம் எழுதியிருக்கார்.படிக்க நல்லாருந்துச்சு நீங்களும் படிங்களேன் சின்னப்பயல் என்பது அவரது தளத்தின் பெயர் 




கதை கேட்கிறது ஈசிங்க. ஆனால் அதை  எல்லாரும் ரசிச்சு படிக்கிற 
மாதிரி எழுதி பெயர் வாங்குறது கொஞ்சம் கஷ்டம் தாங்க. எனக்கு 
கல்லூரி காலத்தில் வீட்டில் வார இதழ்கள் கதைகள் படிக்க அனுமதி கிடையாது எந்நேரமும் படிப்பு படிப்பு தான். இதனால் படிப்பு மேல வெறுப்பு வந்து புக் படிக்கிறதுல இண்டரெஸ்ட் வந்துருச்சு. வாங்க சிறுகதைகள் குறுநாவல்கள் எழுதற தேவா சார் தளத்துல WARRIOR   அவரோட சிறுகதையை படிங்க 


சென்ற வருடம் எனக்கு பீவர் வந்து ரொம்ப படுத்தி எடுக்கவே பாமிலி டாக்டரை போய் பார்த்தேன். அவர் செக் பண்ணிட்டு ட்ரிப்ஸ் போட்டு கொள்ளுங்கள் என்றார். நானும் சரி என்று யாரது துணையுமில்லாமலே. 
அட்மிட் ஆகி ட்ரிப்ஸ் போட்டுட்டு வந்தேன். வீட்டில் கூட கஷ்டப்பட்டாங்க. இப்படி அனாதை மாதிரி தனியா ஏண்டா போகணும்னு. எனக்கென்னமோ இதில் எந்த தயக்கமும் இல்லாததின் காரணம் டாக்டரின் சேவை மனப்பான்மை தான். ஆமாங்க நீங்க நினைக்கிறது சரி தான். இப்ப நாம 
பார்க்க போறது மருத்துவ தளம் பற்றி. டெங்குவின் கோர முகத்தை பற்றி சொல்கிறார் டாக்டர் . தன்னோட  முருகானந்தம் கிளினிக்   தளத்தில்


நான் பணிபுரியும் இடங்களில், உன்னாலே இந்த வேலையை முடிக்க முடியாது என்று யாரேனும் சொன்னால் முடியும் என்று நிரூபித்து காட்டுவேன். அதற்கு தூண்டுகோலாய் அமைவது நம்ம கிட்டே இருக்கிற தன்னம்பிக்கை தான். இதோ தன்னம்பிக்கை பற்றிய பதிவை தன் தளத்தில் தருகிறார் சக்கரகட்டி

நான் எனது தளம் தொடங்கும் போது அதை உருவாகுவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டேன்.அப்போது எனக்கு இணையத்தில் நண்பர்கள் யாரும் கிடையாது என்பதால் யாரிடமும் உதவி கேட்க முடியவில்லை. இப்ப என் தளம் பார்க்கிற என் அலுவலக நண்பர்கள் நீயா உருவாக்கினே என்று ஆச்சரியப்படும் போது சந்தோசமாக இருக்கிறது.இப்ப தொழில் நுட்பம் சம்பந்தமான தகவல்கள் நிறைய நண்பர்களிடமிருந்து கிடைக்கிறது.
நண்பர் தங்கம் பழனி யின்  தொழில்நுட்பம்  அப்படிப்பட்ட செய்திகளை 
தான் நமக்கு வழங்குகிறது.

திரைப்படம் பார்க்கும் போதும் நாம் பணி புரியும் இடத்திலேயும் 
ஒரு டீ பிரேக் கொடுப்பாங்க. இங்கேயும் இப்ப ஒரு சின்ன பிரேக் 
விரைவில் வருகிறேன் 

கப்பல்கள் துறைமுகத்தில் நிறுத்துவதற்காக கட்டப்படவில்லை.
அலைகளின் சீற்றத்தையும் புயலின் புரட்டலையும் எதிர் கொண்டால் 
தான் கப்பலாக இருப்பதன் மதிப்பு கப்பலுக்கு கிடைக்கும் 
(இன்போசிஸ் நாராயணமூர்த்தி)

படம் வி ஜி பி யில் எனது கிளிக் 

ஆர்.வி.சரவணன்  


39 comments:

  1. இன்றைய அறிமுகங்களில் தேவா அண்ணனின் எழுத்துக்கு நான் ரசிகன்.
    சக்கரக்கட்டி, தங்கம் பழனியின் தளங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
    மற்ற இருவரும் புதியவர்கள்... சென்று பார்க்கிறேன்.
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி குமார்

      Delete
  2. சின்னப்பயல் தளம் கண்ணடித்துக் கொண்டே இருக்கிறது... வாசிக்க முடியவில்லை... எனக்கு மட்டும்தானா இல்லை மற்றவர்களுக்கும் இப்படியா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  3. அனைத்தும் தொடரும் தளங்கள்... இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தனபாலன் சார்

      Delete
  4. தங்கம் பழனியின் தளம் சென்றிருக்கிறேன். மற்றவரின் தளங்கள் இன்றே அறிமுகம் சென்று வருகிறேன். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  5. வணக்கம்
    வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரூபன்

      Delete
  6. எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு ஆர்.வி.சரவணன் குடந்தையூர் அவர்களுக்கு நன்றி.
    அத் தகவலை எனக்கு அறிவித்த சே.குமார் அவர்களுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்

      Delete
  7. Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  8. அறிமுகங்கள் அனைத்தும் அருமை! நல்ல தளங்கள்!

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  9. கப்பல்கள் துறைமுகத்தில் நிறுத்துவதற்காக கட்டப்படவில்லை.
    அலைகளின் சீற்றத்தையும் புயலின் புரட்டலையும் எதிர் கொண்டால்
    தான் கப்பலாக இருப்பதன் மதிப்பு கப்பலுக்கு கிடைக்கும்
    (இன்போசிஸ் நாராயணமூர்த்தி)

    துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்படவா கப்பல் தயாரிக்கப்படுகிறது ...!!

    அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    படம் வி ஜி பி யில் எனது கிளிக் //

    கலர்ஃபுல் ஆன கதம்பத்திற்கு அருமையாய் பொருந்தும் அழகான படம் ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  10. மிக மிக அருமையான அறிமுகங்களுடன்
    இந்த வார வலைச்சரத்தை
    அழகுபடுத்தியமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்

      Delete
  11. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  12. அறிமுகத்துக்கு நன்றி தோழர்...!!!! வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துகள்...!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தேவா

      Delete
  13. அருமையான தளங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  14. கண்டிப்பா படிச்சுடுவோம்.... அறிமுகமான எல்லோருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  15. அருமையான தளங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  16. அசத்தலான அறிமுகங்கள்.. அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்

      Delete
  17. //படம் வி ஜி பி யில் எனது கிளிக் //

    நீங்க கிளிக்கும்போது 'கிளிக்'னு சப்தம் வந்ததா? (ச்சும்மா...)
    நல்லா கிளிக்கியிருக்கீங்க சார்!

    ReplyDelete
  18. இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்கள் சொன்ன நற்சிந்தனையுடன் இன்றைய பதிவை முடித்தது,
    உங்களை கொண்டாடும் விதமாய் அமை(ந்)த்துவிட்டது. நன்று சார்!


    ReplyDelete
  19. //ஒரு டீ பிரேக் கொடுப்பாங்க. இங்கேயும் இப்ப ஒரு சின்ன பிரேக்
    விரைவில் வருகிறேன் //

    சார் எங்கிருக்கீங்க?


    ReplyDelete
  20. இன்றைய அறிமுகத் தளங்கள் அனைத்துமே மிக பயனுள்ள தளங்கள்தான். தொகுப்பிற்கு பாராட்டுக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நிஜாமுதீன்

      Delete
  21. இன்று அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே எனக்குப் புதியவர்கள்...அவர்கள் தளத்திற்கு செல்கிறேன் ...அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete