Saturday, October 19, 2013

பல்சுவையின் அணிவகுப்பு







பல்சுவையின் அணிவகுப்பு 

என்ன சின்ன பிரேக் னு சொன்னே பெரிய பிரேக் எடுத்துட்டே னு நீங்க பள்ளிக்கு லேட்டா வரவங்களை பென்ச் மேல நிக்க சொல்ற  தண்டனை 
கொடுத்துடாதீங்க. உங்க கோபத்தை கூ லாக்க ஒரு விஷயம் சொல்றேன்.

 ஒருவர் அல்வா கிண்டுவதற்காக சமையல் கலை புத்தகத்தை வைத்து கொண்டு அதில் சொல்லியுள்ள படி அல்வா கிண்டி கொண்டிருந்தார். 
அல்வா கிண்டி முடித்தவர் தீடீரென்று ஒரு கிலோ நூறு ரூபாய் என்று 
குரல் கொடுக்க ஆரம்பித்தார். அவர் மனைவி அவர் கத்துவதை   பார்த்து "என்னங்க ஏன் இப்படி குரல்  கொடுக்கறீங்க" என்று கேட்டார் அதற்கு 
அவர் "புத்தகத்தில் அல்வா கிண்டி முடித்தவுடன் ஏலம் போடவும் னு சொன்னங்க அதான் ஏலம் போட்டுட்டிருக்கேன்" என்றார் 

இன்னும் சில தளங்களை சென்று பார்த்து வருவோம் வாருங்கள் 


கீழா நெல்லி பயிரிட்டு பணம் பார்க்கலாம், மானாவாரி மிளகாய் சாகுபடி,வேளாண் டிப்ஸ், சுற்றுசூழல் என்று பல வேளாண்மை 
சம்பந்தப்பட்ட தகவல்கள் விளைந்திருக்கும் தளம். எனது நண்பர், 
என்வழி வினோ பயிரிட்டிருக்கும் விளைச்சல் இது  விவசாயி


இனியவை கூறல்  ரத்த நாளத்தினுள் நுட்ப எந்திரங்கள் மற்றும் 
நாசாவின் எதிர்கால திட்டம், இந்திய கற்பாறை சித்திரங்கள் முதலான கட்டுரைகள் படிக்க சுவாரசியம் தருகிறது 


நண்பர் நிஜாமுதீனின் தளம் நிஜாம் பக்கம்  . நகைச்சுவை ததும்பும் வார்த்தைகள் இவரது பெரிய பலம். அவரது கருத்துரையில் கூட அது தொடர்ந்து எதிரொலிக்கும். எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம் வார இதழில் கேள்விகள் கேட்டு பதில் வாங்கியிருப்பதை பகிர்ந்து  கொண்டுள்ளார்

எனது நண்பர் கிரி எழுதும் தளம். கிரி ப்ளாக் தொழில்நுட்பம் மட்டுமில்லாமல் 
இணையம் தரும் சேவைகளை அவ்வப்போது பகிர்வதுடன் சினிமா விமர்சனம் அனுபவங்கள் என்று பல்சுவையையும் தன் தளத்தில் தருகிறார். நேரிடையாக நம்மிடம் பேசுவது போன்றிருக்கும் அவரது எழுத்து ஸ்டைல் 


எனது தங்கை (சித்தி மகள்) ஒரு ஹோமியோபதி டாக்டர். 
என் தளம் பார்த்து ஆர்வத்தில் அவர் தொடங்கியிருக்கும் 
தளம்  NATURAL WAY TO HEALTH


இப்படி ஒவ்வொரு தளமாக பார்த்து கொண்டே சென்றால் இதற்கு எல்லையுண்டோ. இணைய கடலில் மூழ்கி நான் எடுத்த முத்துக்களை 
தான் இங்கே உங்கள் பார்வைக்கு வழங்கியிருக்கிறேன் 

தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதை பார்க்கும் 
போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தம்பி தமிழ்நாடு வாழ்க
என்றெழுது.தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ் பள்ளி கூடங்கள் 
மலிக என்றெழுது. ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு கலைகள் 
என்றெழுது. அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது 

மகா கவி பாரதியார் தன் கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ள வரிகளை 
இங்கே பதிவு செய்து, நாளை நன்றியுரைக்க வருகிறேன் நீங்களும் 
அவசியம் வாருங்கள் என்று சொல்லி விடை பெறுகிறேன் 

படம் : எங்க வீட்டு கொலுவில் கிளிக்கியது 
ஆர்.வி. சரவணன் 


14 comments:

  1. அண்ணா...
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமையான தளங்களின் அறிமுகங்கள்...
    வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  3. பல தளங்கள் எனக்குப் புதியவை. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அற்புதமான வாரமாக வலைச்சர வாரத்தை
    ஆக்கியமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இனியவை கூறல் தவிர மற்ற தளங்கள் புதியவர்கள்... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  7. நல்ல தளங்களின் அறிமுகம்.. தங்களுடன் பயணித்தது போல இருந்தது. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. சரவணன் என்னுடைய தளத்தையும் அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி :-)

    அனைவருக்கும் தகவல் தரும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  9. அனைவரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  10. இன்று இங்கு என் தளத்தையும் அறிமுகப்படுத்தியதோடு, அதில்
    உங்களுக்கு(ம்) பிடித்த எழுத்தாளர் சுஜாதாவின் பதில்கள் என்ற
    பதிவின் அறிவிப்பையும் தந்தீர்கள் நண்பரே! அதோடு நான் தருகின்ற கமெண்ட்கள் பற்றிய உங்களது எண்ணத்தையும் இங்கு வெளியிட்டது... உங்கள் பாராட்டத் தயங்காத உயர்ந்த மனதினையும் வெளிப்படுத்தியது. அனேக நன்றிகள் உங்களுக்கு!

    ReplyDelete
  11. பல புதிய தளங்களின் அறிமுகம்.. சிறப்புங்க.

    ReplyDelete
  12. வணக்கம்
    வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. அறிமுகமான எல்லோருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  14. //அல்வா கிண்டி முடித்தவர் தீடீரென்று ஒரு கிலோ நூறு ரூபாய் என்று
    குரல் கொடுக்க ஆரம்பித்தார்.//

    சுவையான, இனிப்பான அல்வா கதை!
    "ஒரு கிலோ நூறு ரூபாய் ஒரு தரம்...
    ஒரு கிலோ நூறு ரூபாய் ரெண்டு தரம்...
    ஒரு கிலோ நூறு ரூபாய் மூணு தரம்..." என்று குரல் கொடுத்தார் -
    - என்று அந்த நகைச்சுவைக் கதை இருந்திருந்தால்
    இன்னும் சிறப்பாயிருக்கும் நண்பரே!

    ReplyDelete