இன்று கவிஞர்கள் தினம்...
இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததுமே உங்கள் மனதில் ஏதேனும் வரிகள் ஊற ஆரம்பித்துவிட்டதா ...அப்போ நீங்க கவிஞர் தாங்க....
இது
எங்க ஊரு மக்களுக்காக இயற்கை அளித்த கொடை சிறுவாணி ஆறு... இதனைப்
பாதுகாக்கா விட்டாலும் சிதைக்காம இருக்கணுங்க... எதிர்கால சந்ததியினருக்கு
நம்மால சேமிக்க முடியற உண்மையான சொத்து இது தானுங்களே....
****
படித்தது...
தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது.
குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.
தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள் தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.
எப்படியெல்லாம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது மற்றும் எப்படி சேமிப்பது , எப்படி பாதுகாப்பது என்று சிந்திப்போமா....
தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள் தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.
எப்படியெல்லாம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது மற்றும் எப்படி சேமிப்பது , எப்படி பாதுகாப்பது என்று சிந்திப்போமா....
****
நண்பர்கள்
தினம், காதலர்கள் தினம் அப்படிங்கற மாதிரி கவிஞர்கள் தினம்னு ஒன்று
இருக்கலாம். எனக்குத் தெரியலை...ஆனா இன்னைக்கு இந்த பதிவுல அவங்களோட
தினம்...
இன்று சில கவிஞர்களைப் பார்ப்போம்.
ப.தியாகு இவரின்
கவிதைகளோடு தான் படித்த நல்ல கவிதைகளையும் பகிர்ந்து கொள்கிறார். இயல்பான
கவிதைகள் அனைத்துமே...சின்ன வரிகளில் ஒரு ஈர்ப்புடனும்...
இதோ உங்கள் வாசிப்பிற்காக ஒன்று....
குருச்சந்திரன்
கொஞ்ச மாதமாக எழுதாமல் இருந்த இவர் தற்போது எழுத ஆரம்பித்துள்ளார்
வாழ்த்துக்கள். இவரின் சமூகக் கவிதைகளில் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதைப்
போன்ற பாவனை கையாளப்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இதோ படித்துப்
பாருங்கள்.
நம்மை மலரும் நினைவுகளில் கொண்டு செல்லும் இந்தக் கவிதை...
இந்திரா கிறுக்கல்கள்
இந்திரா இம்சிக்கிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவர் கவிதைகள்
இம்சைதான். இவரின் சமூகக் கவிதைகளின் வீரியம் என் இரவுத் தூக்கத்தைக்
கெடுத்தது நிஜம். எங்கிருந்து வருகிறதோ இந்த வரிகளெல்லாம் இவருக்கு என
எப்போதும் நினைப்பதுண்டு...
இதோ சான்றுக்கு ஒன்று
எங்கேயும், எப்போதும், ஏதோ ஒரு தோழியின் குமுறல் இதோ....
வெற்றிவேல்....இரவின் புன்னகை
இவரின் கவிதைகள் பெரும்பாலும் காதல் கவிதைகள்... அவற்றிற்குரிய இலக்கணம்
மாறாமல் அப்படியே... ஆனாலும் வித்தியாசமான இந்தக் காதல் நம்மை ஈர்க்கத்தான்
செய்கிறது....இப்படியொரு காதலைப் பார்க்க நமக்கும் ஆசைதான்....
மற்றுமோர் ஜென்மம் உண்டெனில் இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள். புரியும்.
மேலும் களப்பிரர் குறித்த கட்டுரை நிஜமாகவே நமது தேடுதலுக்கு தீனி போட்டே செல்கிறது தொடருங்கள்....
இளஞ்சேரல்...
நல்ல எழுத்தாளர்.... மூன்று புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்...
இவர்
முக நூலில் நிறைய கவிதைகள் பகிர்வார். இலக்கிய வாசனை கலந்ததும், கிராமிய
மணம் கமழ்வதுமாய்..... ஆனால் வலைப் பக்கத்தில் பல்வேறு புத்தகங்களை
விமர்சனம் செய்து வருகிறார்.... இடையே சில கவிதைகளும்...
கவிதைகளை நீங்கள் படித்து உணரவே வரிகளை நான் கையாளவில்லை....
எல்லாக் கவிதைகளையும் படித்து ரசிச்சீங்களா.... நாளை சந்திப்போம்.....
கவிஞர்கள் தினம் - சிறப்பு.
ReplyDeleteவலைச்சரத்தில் இன்று குறிப்பிடப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
மிக்க நன்றி வெங்கட் சார்.
Deleteகவிஞர்கள் தினத்தை கொண்டாடிவோம்..
ReplyDeleteகொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்கள்
Deleteஇந்திராவின் இம்சையும், மகிழ்வும் தரும் கவிதைகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். குருச்சந்திரன் மீண்டும் எழுத ஆரம்பிச்சாச்சா எழில்...? நான் கவனிக்கலையே... பாத்துடறேன்! மத்த அறிமுகங்களுக்கு உங்களுக்கு ரொம்ப டாங்ஸுங்கோவ்!
ReplyDeleteவாங்க சார்... மற்ற நாட்களில் எழுதியுள்ள பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சார்
Deleteஇவங்க ஒரு சிலர் தவிர மற்றவர்களை தெரியாது.. போய் படிக்கிறேன்..
ReplyDeleteபடிச்சு உங்க ஞானத்தை அதிகப்படுத்திக்கோங்க....அடுத்த கவிஞர் பட்டியலில் இடம்பிடிக்கணுமில்லையா...
Deleteஅப்பறம்... போட்டோவைப் பாத்துட்டு கவிதை எழுதத் தோணலியான்னு கேக்குறதெல்லாம் ரொம்ப ஆபத்தாக்கும்...! ஆர்வம் உந்தித் தள்ள நான்லாம் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டா... கோவையிலருந்து எழில்ங்கறவங்க தலைமறைவாயிட்டாங்கன்னு வலைச்சரத்துல அறிவிப்புல்ல வரும்...! ஹா... ஹா...! என்னா விபரீதம்?!
ReplyDeleteஅப்படித் தோன்றுகிறவர்கள் கவிஞர்கள்னேன் மத்தவங்கெல்லாம் பாத்து ரசிக்கணும் அம்புடுதேன்....
Deleteநண்பர் குருச்சந்திரன்..சகோதரி இந்திரா..தம்பி வெற்றிவேல் ஆகியோர்
ReplyDeleteநன்கு பரிச்சயமானவர்கள் .. கவிதைகள் நீரோடை போல
கலகலவென்று ஆர்பரித்து ஓடும் அவர்கள் தளங்களில்...
நண்பர் தியாகு அவர்களின் தளம் சென்று பார்க்கிறேன்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி மகேந்திரன் சார்.
Deleteமுடிவில் உள்ள தளம் புதிது (நம்புங்க...!) அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நம்பிட்டேன் அண்ணா...
Deleteகண்டிப்பா நம்பறேன் சார் ஏன்னா தியாகுவோடதிலே கூட உங்க பின்னூட்டம் பார்த்தேன்...
Deleteமூன்று பேர் புதியவர்கள். போய் என்னன்னு பார்த்துட்டு வரேன்
ReplyDeleteபார்த்துங்க நீங்க சொல்றதைப் பாத்தா என்னன்னு கேக்கறேன்ற மாதிரி இருக்கு
Deleteபதிவுலகின் அற்புதமான கவிஞர்களை
ReplyDeleteஅறிமுகப்படுத்தி விதம் அருமை
அறிமுகத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்ட
கவிஞர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி சார்.
Deleteவணக்கம் அண்ணா...
ReplyDeleteஎனது தளத்தையும் வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அண்ணாவா...? அக்கான்னுல்ல நியாயமா சொல்லியிருக்கணும் இந்தத் தம்பி...! சரி, டங் ஆப் த ஸ்லிப்! மன்னிச்சிருவோம்...!
Deleteஅடப்பாவி வெற்றிவேல் அண்ணான்னு சொல்லி இப்படி கவுத்திட்டயே .... ஏற்கெனவே பாலா சார் என்னை பாட்டின்னு சொல்ல முயற்சி எடுத்த மாதிரி இருந்தது நீ வேற....
Deleteகொண்டாட்டம் நன்று
ReplyDeleteமிக்க நன்றி கவியாழி சார்
Deleteஎன் பதிவுகளையும் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிங்க. மற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteமிக்க நன்றி இந்திரா
Delete// இவரின் சமூகக் கவிதைகளின் வீரியம் என் இரவுத் தூக்கத்தைக் கெடுத்தது நிஜம். //
ReplyDeleteஇதுக்காக நீங்க நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடலாம்.
இங்கணம்
போட்டு கொடுப்போர் சங்கம்
சுகமான வலிப்பா அது.... அப்படின்னா அவங்களை நஷ்ட ஈடு கேட்க சொல்லி ஆரம்பிச்சுடாதீங்க...
Deleteப்ளாக் உலகமே ஆக்டிவா இல்லாட்டியும், ஆக்டிவா இருக்குற ஒரே ப்ளாக் வலைசரம் தான் :)
ReplyDeleteஇன்றைய தின கவிஞர்கள் அறிமுகங்கள் அனைவரின் தளங்களும் மிகச் சிறப்பு!
ReplyDeleteஅறிமுகம் செய்த உங்களுக்கும் பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி இளமதி
Deleteமிகுந்த வேலைகளால் அவ்வளவாக வலைச்சரம் பக்கம் வர முடிவதில்லை... ஆனால் எழில் நீங்க ஆசிரியர் பொறுப்பு எடுத்துகிட்டது தெரிஞ்சவுடனே நேரம் அட்ஜஸ்ட் பண்ணி ப்ரசண்ட் ஆயிடறேன்... ஏன்னா நீங்க நல்ல ரசனை, சிந்தனை மிக்கவர்... என்பது தெரியும்.
ReplyDeleteகுருசந்திரன் பக்கத்தினை நான் மிகவும் ரசிப்பேன். சமீபத்தில் எழுத தொடங்கியதை நான் கவனிக்கவில்லை. வலைச்சரத்தில் உங்கள் மூலம் அழகான பிச்சைக்காரனை ரசித்து படிக்க முடிந்தது.. மற்ற அறிமுகங்களும் எனக்கு சில புதிதுதான்.. வெல்டன்! இப்படியே புதியவர்களை அறிமுகப்படுத்துங்கள்... தேடுதல் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...!
மிக்க நன்றி உஷா... இப்படி சொல்வதாலேயே எனக்கு பொறுப்பு கூடுகிறது ..உங்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென பயமும் ஏற்படுகிறது.
Deleteசிறுவாணித் தண்ணீர் - உலகிலேயே இரண்டாம் இடத்தை பெற்ற சுவையான தண்ணீர் என்று என் அப்பா அடிக்கடி பெருமையாக சொல்லிக் கொண்டிருப்பார். அந்த சுவைக்கு ஈடு இணையில்லை....:) நான் சிறுவாணிக்கு அடுத்த படியாகத் தான் கங்கை நீரையே சொல்வேன்....:))
ReplyDeleteகவிஞர்கள் தினம் மிகச் சிறப்பு. அனைவருக்கும் பாராட்டுகள்.
மிக்க நன்றி ஆதி...இப்பெல்லாம் நகரத்தில் பாதி பகுதிக்கு சிறுவாணி கிடைப்பதில்லை...
Deleteகவிஞர்கள் தினத்தின் சிறப்பாக - நல்லதொரு அறிமுகங்கள்.. அனைவருக்கும் பாராட்டுகள்..
ReplyDeleteமிக்க நன்றி துரை சார்
Deleteஇன்றைய கவிஞர்கள் தினத்தில் நல்ல நல்ல கவிதைகள் அறிமுகம் வாழ்த்துக்கள் வலைச்சரத்தில் அறிமீகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி கவிஞரே...
Deleteஅருமையான கவிஞர்களின் சிறப்பான தளங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்
Deleteவலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி எழில் ! அறிமுகப்படுத்தப்பட்ட பிற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteகவிஞர்கள்/ பாவலர்கள் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteபாவிளக்கம் நன்று.
கவிஞர்கள் தினம் - வாழ்த்துகள்!
ReplyDeleteகவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎழில் மேடம், முதலில் என்னை கவிஞன் என்று சொன்னதற்கு நன்றி. :)
ReplyDeleteவலைச்சரத்தில் என் பக்கத்தை அறிமுகம் செய்திருப்பதோடு, நிறைய நண்பர்களின் நட்பை பெற்றும் தந்திருக்கிறீர்கள். மனம் நெகிழ்ந்துவிட்டது. அன்பு நன்றிகள் மேடம். அன்பால் நட்பால் இணைந்திருப்போம், பகிர்வோம். வலைச்சரம்-க்கு என் அன்பு.
அறிமுகங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .ஆசிரியைக்கும்
ReplyDeleteநன்றி கலந்த வாழ்த்துக்கள் .