சமூகம் சிந்திப்போம்
****
****
படித்தது..
அப்பத்தாவோடு கடலைச்
செடி பிடுங்க காட்டுக்குப் போவோம். கொத்துக் கொத்தாய் செடிகளைப் பிடுங்கி
மடி நிறப்பும் அப்பத்தா ஓரிடத்தில் மட்டும் செடிகளைப் பிடுங்காமல் வட்டமாய்
கோடு கிழித்து நகர்ந்து போவாள். பிறிதொரு நாளில் அறிந்து கொண்டோம்
பிடுங்காமல் விட்ட கடலைச் செடிகளின் நடுவே காடைக் குருவி முட்டைகளை
வைத்திருந்தன என்பதை, கடலைச் செடிகளை தியாகம் செய்து காடை முட்டைகளைப்
பாதுகாத்த அப்பத்தாவின் கருணை வழியும் முகத்தோடு கொஞ்சம்
பேரன்களும்,பேத்திகளும் இருக்கவே செய்கிறார்கள். கடந்த ஆண்டு உத்தர்காண்ட்
மானிலத்தில் பள்ளி ஒன்றில் ஓங்கி வளர்ந்த மரமொன்றை வெட்டிச் சாய்க்க
அம்மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த 260 கொக்குகளின் குஞ்சுகளும் பொதைபொதையாய்
நசுங்கிச் செத்தன. அதைக் கண்டு பதறி அழுத குழந்தைகளின் தோய்ந்த ஈரத்தில்
தான் சூழலியலம் குறித்து எழுதியும் பேசியும் வருகிறேன்
- எழுத்தாளர் சதாசிவம்-இறகுதிர் காலம் நூல் முன்னுரையில்
****
இன்றைக்கு
நாம சந்திக்கப் போறது சமூகம் பற்றி மட்டுமே சிந்திக்கும் வித்தியாசப்
பதிவர்கள்...இவர்களில் சிலர் ரொம்ப குறைவாத் தான் பதிவிடறாங்க ..ஆனால்
இவங்களோட பதிவை தொடர்ந்து படிப்பேன் .பல விஷயங்கள் தெரிந்து கொள்ளும்
இல்லை.. இல்லை ...கற்றுக் கொள்ள வாய்ப்பு. நம்மை ஏதாவது ஒரு விதத்தில்
சிந்திக்க வைக்கும் இவர்களின் பதிவுகள். இவர்களின் பதிவுகளுக்கு
பெரும்பாலும் நான் மறுமொழி இடுவதில்லை..அவர்களின் பதிவுகளுக்குச்
செல்லுங்கள் ஏன் என்று புரியும்...
இவர் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர்,கவிஞர் ஆகிய அடையாளங்களோடு ஒரு சூழல் போராளி....
பில் கேட்ஸ் - தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் எண்ணற்ற பேருக்கு
வாழ்வளித்துக் கொண்டிருப்பவர்.இந்திய இளைஞர்களின் முன்மாதிரி தேர்வு. இந்த
இருக்கப்பட்ட மகராசன் ஏன் ஒரு வாழைப்பழப் பஞ்சாயத்துக்கு வரவேண்டும்..?
காரணம் இருக்கிறது.
இவரின் பதிவுகளில் அருமையான மொழிபெயர்ப்புகளை காணலாம் ஒவ்வொன்றும் உங்களை ஒவ்வொரு சமுதாய எல்லைக்கு அழைத்துச் செல்லும்.
அந்தக் காலத்து கிராமத்து வாசனை உணர வேண்டுமா... இந்த கிராமத்துக்குப் போலாமே
எவ்வளவோ மழைக் கவிதைகள் படித்திருப்போம்... இவரின் கைவண்ணத்தில் உள்ள வித்தியாசம் உணருங்கள்.....
. இவரின் பதிவுகள் ஒவ்வொன்றும் சமூக ஏற்றத்தின் வெவ்வேறு தளங்களைத் தொட்டுச் செல்லும்..
நாம்
சாப்பிடும் போது நாம் உண்ணும் உணவு எங்கு கிடைக்கிறது? எப்படி
கிடைக்கிறது? அதன் விலை எப்படி யாரால் நிர்ணயிக்கப்படுகிறது? அதனால் நம்
உணவின் விலையில் என்ன மாற்றம் ஏற்படுத்தப்போகிறது ? என்பன போன்ற கேள்விகள்
நம்முள் எழுந்துள்ளதா? இந்தத் தொகுதியைப் படியுங்களேன்.... இந்தக்
கேள்வியுடன் பதிலும் பதிவிலேயே கிடைக்கும்...
இயற்கை
கொடுத்துள்ள கொடையான காடுகளை அழித்தால் நமக்குத்தான் எவ்வளவு பாதிப்பு...
இப்போதே அடைந்தாக வேண்டும் எனும் நம் எண்ண வேகத்தால் எப்படி அதனை
அழிக்கிறோம் இதற்கு உலக அரசியலின் பங்கு என்ன என்பதையும் இந்தப் பதிவில்
படியுங்கள்... நாம் சூழல் அக்கறையாளராக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
நம் வீட்டின் முன் வைக்கும் மரம் மட்டும் போதாது...
இவருடைய நிலைத்தகவல் பக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமூகக் கதை பேசும்.
நாம்
ஒரு கம்ஃபர்ட் ஸோனில் அமர்ந்து கொண்டு யோசித்தால் சமூகம் எந்த
பிரச்சனையும் இன்றி சென்று கொண்டிருப்பதாய்த் தான் தோன்றும். அதற்காக
சமூகத்தின் கடினத்திற்குள் புகுந்து செல்ல வேண்டுமா என்றால் தேவையில்லை .
இது போன்ற புத்தகங்கள் வழி காட்டும்.. இந்தப் புதினத்தை நான்
வாசிக்கவில்லை ...வாசித்தறிய இந்த புத்தக விமர்சனம் பயன்படும்...
நானெல்லாம் விமர்சனம் எழுதுவதென்றால் அதிலுள்ள வரிகளைக் கையாண்டு முடித்து
விடுவேன்.. இது போன்ற எழுத்துக்களைப் படிக்கும் போதுதான் உணர்வாலும்,
உள்ளத்தாலும் எழுச்சி பெறுவோம்.
கல்வி
வியாபாரப் பொருளாக்கப்பட்டிருப்பது நமக்கு தெரிந்தாலும் அதன் தெரியாத சில
கருப்பொருளைக் காட்டியிருக்கிறார் இந்தப் பக்கத்தில்...
இவரின்
பதிவுகளைப் பலர் படித்திருப்பர். எழுத்து வடிவத்தால் ஈர்க்கப்பட்டுத்தான்
படித்தேன். இதை எப்படி சமூகத்தோடு இணைத்தேன்... ஒவ்வொரு பதிவிலும் உள்ளீடாக
இருக்கும் சமூக நிர்பந்தங்களும், ஆழமான சமூக முரண்பாடுகளையும் சொல்வதாக
இருப்பதே இவரின் பதிவின் சிறப்பு. இது இப்படித்தான் இதனை மாற்றுவதும் ,
ஏற்றுக்கொள்வதும் வாசகனாகிய உந்தன் பொறுப்பு என்பதாகத் தான் இவரின் ஒவ்வொரு
பதிவையும் உணர்கிறேன். இவரின் பதிவுகளில் வரும் புகைப்படங்களால்
ஈர்க்கப்படாதோர் மிகக் குறைவு... அதைப் பார்க்கும் போது உள்ளே ஆழமான
விஷயங்கள் பொதிந்து கிடக்கிறது அதனால் இப்போது உங்கள் மன நிலையை
நிதானப்படுத்திக்கொள்ளுங்கள் என்பதாக உணர்கிறேன் நான்.
இந்த இரண்டு பதிவுகளைப் படியுங்கள்..மற்றதை நிறுத்தாமல் படித்து விடுவீர்கள்....
இதையெல்லாம் படிக்கும் போது எனக்கே கொஞ்சம் சுமையாகிப் போனதான உணர்வு....
இவருடைய
இந்தப் பதிவின் வாயிலாகத் தான் இவரின் மற்ற பதிவுகளுக்குச் சென்றேன்.
நானும் தூப்புக்காரி குறித்து எழுதினேன் . ஆனால் இந்த விமர்சனம் இன்னொரு
தூப்புக்காரியைப் படித்த உணர்வு கொடுத்தது...
அடுத்து....
சமூக
விழிப்புணர்வைக் கற்கும் அதே நேரத்தில் அப்படியான மக்களை இனங் கண்டு
பாராட்டி வருகிறார் ஒருவர் . இவரையும் இவர் பதிவுகளும் வலைதளத்தில் பிரபலம்
என்றாலும் நல்ல விஷயங்களை எத்தனை முறை படித்தாலும் ஏதோ ஒரு உந்துதல்
நமக்குள் ஏற்படுவது நிஜம் . அப்படியான இவரின் இந்தப் பதிவுகளைப்
படிக்கலாமே....
மனிதர்களைப் படிப்போம்...மனிதம் அறிவோம்...
நாளை சந்திப்போம்.....
அறிமுக தளங்களுக்கு சென்று வருகிறேன்...
ReplyDeleteஎன்னால் யாருடைய பதிவிற்கும் சென்று அறிவிக்க நேரமில்லை ஆனால் நீங்கள் கண்டிப்பாக அந்தப் பணியை செவ்வனே செய்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..... நன்றி தனபாலன் சார்
Deleteதலைநகரின் திரு ஷாஜஹான் அவர்களையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
மிக்க நன்றி வெங்கட் சார்
Deleteமுதல் தளம் புதிது (என்று நினைக்கிறேன்) அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
எத்தனை விதமான திறமைகள்! என்ன கனமான எழுத்து! இதையெல்லாம் பார்க்கும்போது ‘நாம உருப்படியா எழுதாம சும்மா ஜாலியாவே எழுதிட்டுப் போறோமே’ன்னு மைல்டா ஒரு ஃபீலிங்கே வருதுங்கோவ்! ‘சிரி’யஸை விட்டுட்டுக் கொஞ்சம் சீரியஸ் ஆயிட வேண்டியதுதான்!
ReplyDeleteவாழ்க்கையில் இரண்டு பக்கத்தையும் கையாள நமக்குத் தெரிந்தால் போதும் அப்படி எழுத அவங்க இருக்காங்கன்னா நகைச்சுவையா எழுத உங்களைப் போன்றோரும் வேணும் சார்....
Deleteதங்களின் கடமை உணர்வுக்கு பாராட்டுக்குள்
ReplyDeleteTyped with Panini Keypad
Typed with Panini Keypad
நன்றி கவியாழி சார்
Deleteசமூக உணர்வோடு தரமான பதிவுகளைத் தரும்
ReplyDeleteஇந்தப் பதிவர்கள் எல்லாம் நானும்
தவறாது தொடர்பவர்கள்தான் எனச் சொல்லிக் கொள்வது
பெருமையாய் இருக்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி சார்
Deleteபதிவுகளின் அறிமுகம் அருமை!.. சில தளங்களில் இருந்து வெளியேறும் போது மனம் மிகவும் கனக்கின்றது!.. எதனால்?!..
ReplyDeleteஅந்த கனமே அந்த எழுத்தாளரின் வெற்றி..நன்றி துரை சார்
Deleteஅன்பும் நன்றியும் எழில்! :)
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி கதிர் சார்
Deleteநன்றி எழில். நன்றி தனபாலன்.
ReplyDeleteமிக்க நன்றி ஜோதிஜி சார்
Deleteezhil mam...u dne gd job..! excellent!
ReplyDeleteமிக்க நன்றி உஷா.
Deleteஅப்பத்தாவின் கருணை மனதை கவர்ந்தது.
ReplyDeleteஅறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.
மிக்க நன்றி ஆதி
Deleteஇன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் உங்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல தளங்களை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள். மிக்க நன்றி. எல்லாவற்கும் வாழ்த்துக்கள். நல்ல ஒரு பதிவு, இப்போது உள்ளச் சூழலுக்கு மிக அத்தியாவசியாமான ஒரு பதிவு.
ReplyDeleteஉங்களின் பார்வைக்கு நன்றி
Deleteஇன்றைக்கு கனமான எழுத்துக்களை அறிமுகப்படுத்திஇருக்கிறீர்கள், எழில். பாராட்டுக்கள். சிலர் தெரிந்தவர்கள், தொடருபவர்கள். தெரியாதவர்களைப் படிக்க ஆரம்பிக்கிறேன்.
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு நன்றி
சரியாச் சொன்னீங்க மேடம்.... கனமான எழுத்துக்கள் தான்
Deleteமிகவும் சிறந்த தளங்கள்! சென்று பார்க்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்
Deleteஅறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சார்
Deleteகனமான எழுத்துகளைக் கொண்ட பதிவுகளை இங்கு நினைவு கூர்ந்தமைக்கு நன்றி எழில் அம்மா!
ReplyDeleteஉங்களின் பார்வைக்கு நன்றி
Deleteநன்றி எழில் மேடம்.தங்களின் அறிமுகத்திற்கும்,பாராட்டுதலுக்குமாய்/
ReplyDeleteஉங்களின் எழுத்துக்களின் வாசகி அதில் எனக்கு மகிழ்வு.
Deleteசமூக சிந்தனையாளர்களின் பதிவுகள் சில எமக்கும் அறிமுகம் இல்லாதது. சிறப்பான பதிவுகள் ,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete