Friday, October 25, 2013

புத்தம் புது காலை

                                                   புத்தம் புது காலை



*******

மன அழுத்தம் எனும் வார்த்தை இன்றைய அவசர வாழ்வில் சாதாரணமாகியுள்ளது. மன அழுத்தம் ஏற்படும்போது அட்ரினலின் மற்றும் கார்டிசோல் என்னும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது இருதய துடிப்பை அதிகப்படுத்தும். மீண்டும் மீண்டும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால் செரடோனின் (நமது உணர்வுகளைக் கட்டுப்படுத்தக் கூடியது)எனும் ஹார்மோனின் அளவு மாறுபடுகிறது.  குருதி சுற்றோட்டம்  பாதிப்படைகின்றது. கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மேலும் மூளையிலுள்ள செல்களின் அளவு குறையும். இதனால் ஞாபகமறதி உண்டாகும். மன அழுத்தத்தால் இருதய நோய், மன நிலை மாறுபாடு, வெறுப்பு , தூக்கம் பாதிப்பு, அதிக இரத்த அழுத்தம், தலைவலி, குடி வெறி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பாகின்றது.
மேலும் நரம்பு மண்டலமும் பாதிப்பிற்குண்டாகி அதனால் அது தன் கட்டுப்பாட்டினை இழக்கிறது. மேலும் குடலின் இயக்கங்களும் பாதிப்படைகிறது.

மனவியலின் தந்தை என்றழைக்கப்படும் ஃப்ராய்டு கொள்கைப்படி ஒரு மனிதனின் சிறு வயதில் ஏற்படும்  நல்ல நிகழ்வுகளோ, அல்லது மறுக்கப்படும் நிகழ்வுகளுக்கோ ஏற்றார் போல் மனிதனின் குண நலன் மாறுதல் ஏற்படும் என்கிறார்.  தாயிடம் கிடைக்காத அன்பு, மல ஜலம் கழிப்பதை பண்படுத்தும் காலத்தில் ஏற்படும் விரும்பத்தகாத நினைவுகள், தன்னை உணரும் காலம் தந்தையையோ, தாயையோ போட்டியாக எண்ணி மருகுதல், பள்ளியில் நடைபெறும் தாழ்மைப்படுத்தல் போன்ற நிகழ்வுகள் இவையெல்லாம் அவர்களின் வாழ்வில் மறக்காத நினைவுகளாக ஆழ்மனதில் படிந்து பிற்காலத்தில் அவர்களின் ஆளுமைத்தன்மையை ஆக்கிரமிக்கிறது.

மேலும் அவரின் பின் வந்த எரிக் எரிக்சன் அவர்களின் கொள்கைப்படி ஒவ்வொரு பருவத்திலுமே ஏற்படும் நல்ல செயல்கள் நல்ல ஆளுமைத் தன்மையையும், எதிர்மறை நிகழ்வுகள் விரும்பத்தகாத ஆளுமைத்தன்மையையும் ஏற்படுத்தும் என்கிறார்...  உங்களின் ஆளுமையை மாற்றிக்கொள்ளவும், குழந்தைகளின் ஆளுமைத்தன்மையை, சுய மதிப்பை உயர்த்தவும் உங்கள் தேடுதலை விரிவுபடுத்துங்கள்

******



இன்று  சொல்லப்படுவர்கள் ஒன்று புதிய எழுத்தாளர்களாகவோ இல்லை என்றால் ஏனோ அவ்வளவாக அங்கீகரிக்கப்படாமல் இருப்பவர்கள்.... அதனால் இவர்களின் பதிவுகள் குறித்த விமர்சனம் இல்லை ...


.இப்படிக்கு இளங்கோ  
                 இவரின் பதிவில் நூல் விமர்சனங்களும், இயல்பான நிகழ்வுகளும் கொண்டது.

பலகை-கீர்த்திகாதரண்
                          கல்வி குறித்த பதிவுகள் அதிகம் உள்ளது

சிகரம்-பாரதி
             
                    எல்லா விதமான செய்திகளையும் தொட்டுச் செல்லும் பதிவுகள்

கீதாவின் வண்ணக் களஞ்சியம் 

              உள் மன தேடலான பதிவுகள்

கி.மு.பக்கங்கள்

                  நூல் மற்றும் எழுத்தாளர்கள் குறித்த பதிவுகள்
நினைவுகள்-அபயா அருணா


                     நிகழ்வுகள் குறித்த நினைவுகள்

உங்கள் எழுத்துலகம் அருமையானது வாழ்த்துக்கள்.....


இவங்கெல்லாம் நல்லா எழுதிக்கொண்டு இருந்தாங்க இப்ப கொஞ்ச  காலமா ஏனோ எழுதுவதை நிறுத்தியிருக்காங்க....
கண்டிப்பாக திரும்ப வருவார்கள் எனும் நம்பிக்கையில்....

நினைவில் சில.... கனவுகள்

                அனைத்து விதமான பதிவுகளும் சமையல் குறிப்பு உட்பட (முக்கியமா பாலாக் கீரை)

வரிக்குதிரை-அருண்குமார்

         சமூகம் சார்ந்த குறிப்பாக மலையகத்திலிருந்து தொடர்...
 
என் ஜன்னலுக்கு வெளியே-நிரஞ்சனா

              இளைய தலைமுறை பதிவுகள்

மழை கழுவிய பூக்கள் -அதிசயா

                 இனிய கவிதைகள்

வரலாற்றுச்சுவடுகள்

                      அறிவியல் ரீதியான சூழல் பதிவுகள்


உங்கள் எழுத்துலகம் தொடர வாழ்த்துக்கள்





40 comments:

  1. எழில் அம்மா அவர்களே... இங்கே சென்று வாருங்கள்... (http://minnalvarigal.blogspot.com/2013/10/blog-post_25.html)

    நான் அறிமுகங்களை வாசித்து விட்டு வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க் நன்றி தனபாலன் சார்..ஒரு கவிஞரை உலகுக்கு கொண்டு வந்து சேர்த்ததில் மிக்க மகிழ்வு.... அம்மான்னா சும்மாவா.....

      Delete
  2. கீதா அவர்களின் வண்ணக் களஞ்சியம் புதியது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அறிமுகப் படுதியதற்கு மிக்க நன்றி!

      Delete
    2. மகிழ்ச்சி கீதா.

      Delete
  3. சில தளங்கள் எனக்குப் புதியவை..... படிக்கிறேன்.

    வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட் சார்

      Delete
  4. பதிவுகள் எழுதத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் நிறையப் பேரை நமது படைப்பு சென்றடைய வேண்டுமே என்ற ஆவலும், எப்போது சென்றடையும் என்ற ஏக்கமும் நிறைய என்னுள் இருந்தது. அதைப்போல நிறைய வாசகர்கள் சென்றடைய வேண்டிய தளங்களை அழகாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்று உடன் விசிட் செய்ய முடியவில்லை என்றாலும் அனைத்து தளங்களையும் அவசியம் பார்ப்பேன் நான். மிக்க நன்றி எழில்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாலா சார்

      Delete
  5. ஓரிரு தளங்கள் புதியவை சகோதரி..
    சென்று பார்த்துவிடுகிறேன்...
    அறிமுகத்துக்கு நன்றிகளும்
    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்களும்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி மகேந்திரன் சார்

      Delete
  6. ஓராண்டுக்கும் மேலாக எதுவும் எழுத இயலாத சூழலில் இருந்து இப்போது மீண்டும் எழுதலாம் என்ற சபலம் பிறக்கும் வேளையிலே என்னை எப்படியோ இனங்கண்டு இங்கே அழகாய் அறிமுகமும் பணணியிருக்கீங்க! (ஹை... ஒரு வருஷத்துல என் தமிழ் எவ்வளவு இம்ப்ரூவ் பண்ணிட்டேன், பாத்தீங்களா!) உடனே எழுத எனக்கு உற்சாகம் தந்த எழில் அக்காவுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி(என்னைச் சொன்னேன்....) வாங்க நிரஞ்சனா காத்திருக்கிறோம்....

      Delete
    2. எல்லோரும் என்னை அம்மா, அண்ணா பாட்டிங்கற ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாங்க... அதான் நான் குமாரின்னு சொல்லிக்கிட்டேன்... :)

      Delete
  7. //பள்ளியில் நடைபெறும் தாழ்மைப்படுத்தல் போன்ற நிகழ்வுகள் இவையெல்லாம் அவர்களின் வாழ்வில் மறக்காத நினைவுகளாக ஆழ்மனதில் படிந்து பிற்காலத்தில் அவர்களின் ஆளுமைத்தன்மையை ஆக்கிரமிக்கிறது.// பள்ளியில் நடப்பது தானே நம் கையில் இல்லை எழில்! அதற்கு என்ன செய்வது என்று ஏதேனும் தெரிந்தால் பகிரவும்..நன்றி!
    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்! கண்டிப்பாக சென்று படிக்கிறேன்...நன்றி எழில்!

    ReplyDelete
    Replies
    1. மனித வாழ்க்கையின் ஏதோ ஒரு இடத்தில் இடருதல் ஏற்படுதல் இயல்பே.. குழந்தைகளுக்கு எங்கு என்ன நடந்தாலும் அதனை பயமில்லாமல் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றோர்கள் அளித்தாலே போதும்.பள்ளிப்பிரச்சனைகளை எளிதில் தீர்க்கலாம்.மகிழ்வு கிரேஸ்.

      Delete
  8. புத்தம் புது காலையில்
    புது மலர்களின் அறிமுகங்கள் அருமை..வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு இராஜராஜேஸ்வரி மேடம்

      Delete
  9. நிறைவான மதிப்புரை

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு கவியாழி சார்

      Delete
  10. புத்தம் புது காலையில் அறிமுகங்கள் அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. புத்தம் புதுக் காலையில் பூத்த பொன்மலர்கள் யாவும் சிறப்பு!
    இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும்
    உங்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. எனது வலைத்தள பகிர்விற்கு அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  13. எழில் மேம் உங்க வாரம் சிறப்பு..! இப்படியே (எனக்கு) புதியவர்களை அறிமுகப்படுத்துங்கள்... தொடர்கிறேன்.

    ReplyDelete
  14. மன உளைச்சல் பற்றிய தகவல்கள் சிறப்பு.

    சிறப்பான அறிமுகங்கள். அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்...

    ReplyDelete
  15. நல்லதொரு முறையில் அழகிய அறிமுகங்கள்...

    அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. //இவங்கெல்லாம் நல்லா எழுதிக்கொண்டு இருந்தாங்க இப்ப கொஞ்ச காலமா ஏனோ எழுதுவதை நிறுத்தியிருக்காங்க....
    கண்டிப்பாக திரும்ப வருவார்கள் எனும் நம்பிக்கையில்....// வித்தியாசமான முறையில் பல பதிவுகள் தருபவர்களின் சூழ்நிலை அவங்க தொடர்ந்து எழுதாம இருக்கலாம். முடிந்த அளவு சில பதிவுகளையாவது அவங்க எழுத யோசிக்கலாம்.

    ReplyDelete
  17. அறிமுகங்கள் அருமை. வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. அருமையாக தொகுத்து வழங்குகிறீர்கள்... இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  19. அழகான தொகுப்பு!.. நல்ல அறிமுகங்கள்.. அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. என் வலைதளம் இரண்டாவது முறையாக அறிமுகம் ஆனது சந்தோஷத்தை கொடுக்கிறது. மேலும் பின்வரும் பதிவின் வரிகளில் அடியேனும் ஒருவன்.

    //இவங்கெல்லாம் நல்லா எழுதிக்கொண்டு இருந்தாங்க இப்ப கொஞ்ச காலமா ஏனோ எழுதுவதை நிறுத்தியிருக்காங்க....
    கண்டிப்பாக திரும்ப வருவார்கள் எனும் நம்பிக்கையில்....//

    எக்ஸாம் நெருங்குகிறது. அதனால் பதிவுகளின் எண்ணிக்கை குறைகிறது. ஆனால் எழுதாமல் இல்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

    இப்பதிவை மற்றுமோர் அங்கீகாரமாக கருதுகிறேன். :)

    ReplyDelete
  21. புத்தம் புதுக் காலை அறிமுகங்களை அழகாய் பதிவிட்டீர்கள் எழில் அம்மா... நன்றி!

    ReplyDelete
  22. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. அறிமுகம் செய்யப்பட்டுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி

    ReplyDelete
  24. Thank you for the introduction and i'm grateful.

    ReplyDelete
  25. thanks for the information Danabalan Sir, :-)

    ReplyDelete
  26. அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .ஆசிரியைக்கும் என்
    அன்பு கலந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    ReplyDelete
  27. அறிமுகப் படுதியதற்கு மிக்க நன்றி.
    இடையில் வெளியூர் சென்றிருந்தேன்.
    நமது புண்ணிய பூமியில் ஐந்து நாட்கள் குடும்பத்தலைவி வீட்டில் இல்லைஎன்றால்...... நீங்களே புரிந்துகொள்ளுங்கள் .
    அதனால்தான் பதிவு தாமதமாகிறது.
    இனி மெல்ல மறுபடியும் தொடரும்.

    ReplyDelete
  28. வணக்கம் சொந்தமே!.!!இப்போதுதான்பரீட்சை விடுமுறை கிடைத்தது.அதிசயா காணாமல் போயிருக்காளோ என கலங்கிய பொழுதுகளில் தான் இப்படியான நினைவுீட்டல்கள் தலை தடவுகிறது.நிச்சயம்தொடப்வேன்இமிக விரைவில்.

    ReplyDelete
  29. மீண்டும் எனது வலைத்தளத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகள். அதிசயா மீண்டும் வரவிருப்பது மிக்க மகிழ்ச்சி. வரிக்குதிரை அருண்பிரசாத் மீண்டும் வருவாரா என்பது தெரியாது. ஆனால் வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். வலையுலகம் புதியவர்களால் முன்னேற வேண்டும். அனுபவமிக்கவர்களால் மெருகேற வேண்டும். வாழ்க வலையுலகம்.

    ReplyDelete