Saturday, October 26, 2013

நட்பு வட்டம்

                                                               நட்பு வட்டம்


 கண்டிப்பாய் கரை சேரும் இந்த நட்பு வட்டம்....

****
 நாட்பட்ட மன அழுத்தமோ ,மன இறுக்கமோ அல்லது மூளையின் நியூரோடிரான்ஸ்மிட்டர்களில் சுரக்கும் பொருட்களின் அளவு மாறுபாட்டாலோ மன நோய்கள் உண்டாகிறது அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

ஹிஸ்டீரியா (Hysteria)
     மூர்க்கமான கட்டுப்படுத்த முடியாத மன உணர்வு

ஆட்டுவிப்பு நோய்(Obsession)
      ஒருவர் மனதில் ஆதிக்கம் செலுத்துகின்ற இடையறாத கருத்து அல்லது எண்ணம்

மனத்திரிபு (Paranoia)
        சுய முக்கியத்துவம் பற்றிய திரிபுணர்வு மற்றும் தனக்கு எதிரான சதி பற்றிய திரிபுணர்வு

அதீதக் கவலை(Hypochondrial)
           தன் ஆரோக்கியம் பற்றிய அதிகமான கவலை. நன்னிலையில் இருக்கும்போது பிணி இருப்பது போன்று உணர்தலே ஆகும்

தப்பெண்ணம் (Delusion)
             மனதில் தவறான எண்ணம் கொண்டு உண்மையற்றவற்றை நம்புவது

மாறுபடுத்தி உணர்தல்(Illusions)
          எண்ணச் சிதறல்களின் தொடர்பாக பொருட்களை விபரீதமாக மாறுபடுத்தி வெளிப்படுத்துவது

மிகுபயம் (Phobia)
      பயம் காரணமாக ஒரு பொருளையோ அல்லது அந்தச் சூழ் நிலையினைத் தவிர்த்தல்.

ஒனிரோப்ரீனியா
          கனவு உலகத்தில் சஞ்சரிக்கும் நிலை

ஸ்கீஸோஃபெர்னியா
          எண்ணச் சிதறல் நோய். சமூக வாழ்க்கையிலிருந்து பின்னடைதல் ஏற்படும்

நியூரோசிஸ்
        மனதின் மாறுபாடு காரணமாக நரம்பியல் செயல்பாடுகளில் மாறுபாடு ஏற்படும்போது பல குறி குணங்கள் தோன்றும்

இதெல்லாம் குறைபாடெனத் தெரியாமலேயே அப்படியே விடும் போது நோய் தீவிரமாகி அடுத்த கட்டத்திற்கு செல்லலாம். ஆரம்ப கட்டத்திலேயே மன நல ஆலோசகரிடமோ, மருத்துவரிடமோ செல்லலாம். உடலின் குறைபாடு வலி உணர்வதால் உடனே மருத்துவரிடம் செல்கிறோம். ஆனால் மனதில் குறை ஏற்படுவது அதைவிட பெரிய வலி என்பதை ஏன் உணர மறுக்கிறோம்

****


என்  நட்பு இணைப்புகளில் எனக்குப் பிடித்த பதிவுகளின் அணிவகுப்பு..

 சந்தித்ததும் சிந்தித்ததும் -வெங்கட் நாகராஜ்

இனிமையான  ஃப்ரூட் சாலட் 

அருணா செல்வம்

குட்டிக் கதை ராணி (இப்ப கொஞ்ச நாளா குட்டிக் கதைகளை காணாமல் ஏங்கிப் போயிருக்கிறேன்)


வீடு திரும்பல்

சுய முன்னேற்றப் பதிவுகள் (Who moved my cheese - தமிழாக்கம் இன்னும் என் நினைவில்)

தமிழ்மயில் - உஷா அன்பரசு

கதைகளில் உலாவரும் அறிவான கருத்துக்கள், கவிதைகளில் செறிந்து நிற்கும் உண்மைகள்

ரஞ்சனி நாராயணன்

மருத்துவ உண்மைகள்

எங்கள் ப்ளாக்

பாசிட்டிவ் செய்திகள்

கடல்பயணங்கள்

தொழிற்சாலைகளிலே உட்புகுந்த பதிவுகள்

மின்னல்வரிகள்

 நகைச்சுவைப் பதிவுகள் (சமீபத்தில கவிதையும் எழுத ஆரம்பிச்சுட்டார் )

முத்துச்சிதறல்

சின்னச் சின்ன வீட்டுக் குறிப்புகள்

கரைசேரா அலை

இனிய கிராமத்துக் கவிதைகள்

தீபா

இயல்பான நிகழ்வுகள்

தளிர்-சுரேஷ்

குட்டி குட்டி ஹைகூக்கள்

வினையூக்கி

அறிவியல் சார்ந்த சிறுகதைகள்

மூங்கில் காற்று-டி.என்.முரளிதரன்

நிகழ்வுகள் குறித்த விவாதங்கள்


திண்டுக்கல் தனபாலன்

தன்னம்பிக்கைத் தொடர்கள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

கவிதைகள் இவரால் மட்டும் எப்படி தினமும் முடிகிறது....
 நிறுத்தி வைத்த தொடர்கதை (வாழ்வை) தொடரலாமே ரமணி சார்


இவர்களில் பலரை பலரும் அறிவோம் ... ஆனால் புதிதாக உள் நுழைபவர்கள் இந்தத் தளங்களை சென்றடையவே இந்தப் பதிவு.



27 comments:

  1. எதேச்சையா ஒரு கவிதையை உங்க தூண்டுதலால எழுதப் போக, நிறையப் பேர் பாராட்டினாங்க எழில். நிறைய எழுதணும்னு உந்துதலே வந்துருச்சு. எல்லாப் புகழும் எழிலுக்கே! என்னையும் இங்கே கண்டதில் மீண்டும் மகிழ்ச்சி. என் இதயம் நிறை நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாயகன் (கவிஞன்) உதயமாகிறான்.... பாட்டாத்தான் பாடணும்.... நாளை பின்ன அவார்ட் ஃபங்ஷன்ல எல்லாப் புகழும் எழிலுக்கேன்னு சொல்லணும் சரியாங்க பாலா சார்.

      Delete
  2. வணக்கம்
    வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்வு ரூபன்.

      Delete
  3. என்னையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு நன்றி எழில்.

    அறிமுகம் செய்யப்பட்ட நட்பு வட்டத்திற்கு வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்வு வெங்கட் சார்

      Delete
  4. தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களுடன் - இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அருமை!.. நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்வு துரை சார்.

      Delete
  5. எனது தள அறிமுகத்திற்கும் நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வீடு திரும்பல் (http://veeduthirumbal.blogspot.com/) தளத்தின் இணைப்பு மட்டும் மாற்ற வேண்டும்...

    கொடுத்துள்ள இணைப்பு இங்கே செல்கிறது--->http://www.artveedu.com/

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி தனபாலன் சார்.மாற்றிவிட்டேன்.

      Delete
  7. எல்லோருக்கும் வாழ்த்துக்கள் எழில்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்வு கவியாழி சார்.

      Delete
  8. 'எங்களை'க் குறிப்பிட்டதற்கு நன்றி.
    எங்களுடன் சேர்ந்து குறிப்பிடப் பட்டவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்வு ஸ்ரீராம் சார்

      Delete
  9. மன குறையை ஆரம்பித்திலேயே கண்டறிந்து தீர்க்கப்படாவிட்டால் மன நோயாகிவிடும் என்று விழிப்புணர்வாக சொல்லியது சிறப்பு..
    நட்பு வட்டத்தில் என் பக்கம் இணைந்ததற்கு மிக்க நன்றி!..
    இந்த வாரம் முழுதும் வித்தியாசமான தலைப்புகளில் கலக்கி வருகிறீர்கள்...!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்வு உஷா.

      Delete
  10. வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அறிமுகம் செய்துள்ள உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  11. மன அழுத்தம், மன இறுக்கம் பற்றிய நல்ல தகவல் பகிர்வு.
    அருமை! தெரிந்திருக்க வேண்டிய ஒன்று.. பகிர்விற்கு மிக்க நன்றி!

    இன்றைய கலக்கல் அறிமுக பதிவர்கள் அனைவருக்கும்
    அறிமுகப்படுத்திய உங்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. உடலைப் போலவே மனமும் முக்கியத்துவம் தர வேண்டிய ஒன்று என்பதனை எளிமையாக அழுத்தமாகக் கூறிய விதம்....வரவேற்கத்தக்க ஒன்று...அருமை...! எனது வலைப் பூவிற்கு வருகை தாருங்கள்...நன்றி...!

    ReplyDelete
  13. அருமையான தளங்களின் அணிவகுப்பில் என்னுடைய தளத்தினையும் சேர்த்தமைக்கு மிக்க நன்றி எழில்! சிறப்பான தொகுப்புக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. நட்பு வலைப்பூக்களை நினைவிலிருத்தி பகிர்வு செய்தமை... மிக்க அருமை... தொடர்க...

    ReplyDelete
  15. என்னை இங்கே அறிமுகம் செய்ததற்கு அன்பு நன்றி எழில்!
    அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு இனிமையான வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  16. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. “குட்டிக் கதை ராணி!!!“

    அடடா.... உங்களின் பட்டம் எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது தோழி.
    மிக்க நன்றி.

    சின்னச் சின்ன எதார்த்தங்களைத் தான் குட்டிக் குட்டிக் கதைகளாக எழுதுகிறேன்.
    இப்பொழுது சற்று உடல்நிலை சரியில்லாததால் மண்டை காய்ந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
    கூடிய விரைவில் மனத்தில் படுவதை எழுதுகிறேன்.
    என்னை இங்கே அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.

    மற்ற அனைவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
    நன்றி தோழி.

    ReplyDelete
  18. சிறந்த பதிவர்கள் உடன் என்னையும் அறிமுகம் செய்தது
    அதிக மகிழ்வு தந்தது, பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் தோழி தங்களின் மிகச் சிறப்பான தேர்வுக்கும் பணிக்கும் .
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .

    ReplyDelete