Sunday, October 27, 2013

பெண்களே...உலகம் உங்களுக்காகவும்....

                                       பெண்களே... உலகம் உங்களுக்காகவும்....


பெண்களும் ரோஜாக் கூட்டம்தானே....
                             
                                          வலைச்சரம் 7

மன அழுத்தம் போக்கும் வழிகள்

**   மெலடியான இசையை ரசிக்கலாம்
**  மனம் விட்டுப் பாடலாம்
** அடுத்தவரைப் பற்றி புறம் பேசுதல் தவிர்த்தல்
**  உங்களை நேசியுங்கள்
** கவலைப்படுவதால் எதுவுமே நிகழாதென்பதை உணர்தல்
**  ஈகோவை (தான் எனும் எண்ணம்) விடுத்தல்
** நாமும் சிரித்து மற்றவரையும் சிரிக்க வைக்கலாம்
** குறைந்தது 7 மணி நேரமாவது ஆழ்ந்த உறக்கம் தேவை
** துன்பங்களை மனதிற்குள்ளாக புழுங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
** பரிதாப நிலையை  உருவாக்க முயற்சிக்கக் கூடாது
** தாழ்வு மனப்பான்மையை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்
** மகிழ்ச்சி என்பது பணம் சார்ந்ததல்ல மனம் சார்ந்தது என உணர வேண்டும்
** பயம் விலக்க வேண்டும்
** சந்தேகம் விலக்க வேண்டும்
** மற்றவரை மன்னிப்பதால் மனது இலேசாகும்
** எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள பழக வேண்டும்
** கோபம் தவிர்க்க வேண்டும்
** பொறாமை தவிர்க்க வேண்டும்
** புதிய சூழலுக்கு பயணம் செய்யலாம்
** நடனம் ஆடுவது அல்லது ரசிப்பது
** செடி கொடிகள் வளர்க்கலாம்
** வீட்டு விலங்குகள் வளர்க்கலாம்
** பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்

வலையுலகத்தில் பல்வேறு விதத்தில் கலக்கும் பெண்களின் வலைதளங்கள்
பல்சுவை கலவை    காணாமல் போன கனவுகள்-ராஜி

ஆவேசத்தின் எதிரொலி    பூச்சரம்              

தென்றலாய் கவிதைகள் தென்றல்-சசிகலா

குட்டிக் கவிதைகள்     அன்புத்தோழி

க்விலிங்      இளைய நிலா-இளமதி

ஆன்மீகப் பதிவுகள் குலம்தரும்- ஷைலஜா
 
அனுபவப் பதிவுகள்   கண்மணி அன்போடு

பல்சுவை பதிவுகள்   கதம்ப உணர்வுகள்-மஞ்சுபாஷிணி (ஃபேஸ்புக்கில் அருமையான கவிதைகளை இங்கும் தொகுக்கலாம்)

அனுபவப் பகிர்வுகள்  கோவை2தில்லி-ஆதிவெங்கட்
 வாழ்த்துக்கள் பெண்களே !!!!

என்னுடைய வலைச்சர வாழ்க்கை இன்றோடு முடிவடைவதில்லை..ஏனெனின் நான் இணைந்துள்ள பெரும்பாலான வலைதளங்கள் வலைச்சரத்தின் மூலம் அறிமுகமானவையே... அதனால் தொடர்ந்து அதனுடன் இணைந்திருக்கத்தான் போகிறேன் பின் தொடர்பவளாக....என்னுடன் ஏழு நாள்  இணைந்திருந்து ஊக்கமளித்த அத்துணை நட்புகளுக்கும் என் நன்றிகள். இந்த வாய்ப்பை நல்கிய வலைச்சர ஆசிரியர் குழு சீனா ஐயா, தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

போய் வருகிறேன் நட்புக்களே.....



27 comments:

  1. மன அழுத்தம் போக்கும் வழிகள் அனைத்தும் பின்பற்ற வேண்டியவை...

    அன்பு தோழி, குலம் தரும் ஷைலஜா - இவர்களின் தளம் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் பல... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்வு தனபாலன் சார்...

      Delete
  2. மன அமுத்தத்தை குறிக்கும் வழிகள் மிகவும் உபயோகமுள்ளவை. அனைவருக்கும் பயனளிக்கும்.

    இந்த வாரம் சிறப்பாக அமைந்தது. பாராட்டுகள். என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள். மற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்வு ஆதி

      Delete
  3. மன்னிக்கவும் எழுத்துப் பிழை.... மன அழுத்தம் மற்றும் குறைக்கும் என வாசிக்கவும்.

    ReplyDelete
  4. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    என்னுடைய வலைப்பக்கம் (தாயே நீ இருந்திருந்தால்) என்ற தலைப்பில் கவிதையாக பார்வைக்கு.இதோ
    1.http://2008rupan.wordpress.com
    2.http://tamilkkavitaikalcom.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்வு ரூபன்

      Delete
  5. மன அழுத்தத்தினைக் குறைக்கும் வழிகளைக் கூறியதுடன் - நல்ல வலைத் தளங்களை அறிமுகப்படுத்திய தங்களுக்கு வாழ்த்துக்கள்!..

    அனைவருக்கும் அன்பின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்வு துரை சார்.

      Delete
  6. மன அழுத்தம் நம்மள அழுத்தாதபடி நாம பாத்துக்கணும்.... நல்ல இன்ட்ரோ எல்லோருக்கும். :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி காயத்ரி

      Delete
  7. அருமையாகத் துவங்கி
    அழகாகத் தொடர்ந்துச்
    சிறப்பாக வலைச்சர வாரத்தை
    நிறைவு செய்தமைக்கு மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரமணி சார்

      Delete
  8. தாமதமாகப்பார்க்கிறேன் ஆனாலும் அழகிய ரோஜா மாலையைக்கண்ட உணர்வு.. நல்ல தொகுப்பு என் புதிய வலைப்பூவினையும் அறிமுகம் செய்துவைத்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  9. மனஅழுத்தம் குறைக்கும் மாண்புகளை அழகாகத்
    தினம் கடைப்பிடித்துச் செயலாற்ற வேண்டுமென
    இனம்வாழ இனியவைகூறிய எழிலே! நின்திறமை
    மனம்உவக்கும் மகிழ்வும் மிளிரும் மிகவே!..

    உங்களின் அருமையான பகிர்வுடன், அழகான மாதர் அணி
    வலைச்சரத்தில் அறிமுகங்களாக இன்று மகிழும் சமயம்,
    எனையும் அவர்களுக்குள் ஒருத்தியாக அறிமுகம் செய்த
    உங்கள் அன்பிற்கு மனம் நிறைந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் தோழி!

    என்னுடன் இன்றிங்கு அறிமுகமாகியிருக்கும் அத்தனை
    பதிவர்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    இனிதாய் ஆசிரியப்பணி நிறைவு செய்திருக்கும் உங்களுக்கும்
    நன்றியுடன் வாழ்த்துக்களும் எழிலி!

    ReplyDelete
    Replies
    1. என் வலைத்தளத்தில் எனது அறிமுகச் செய்தியினைப் பகிர்ந்த
      அன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலனுக்கும்,
      ஐயா துரை செல்வராஜூ அவர்களுக்கும்
      மனமார்ந்த நன்றிகள்!

      Delete
    2. கவிதையாவே பாடிட்டீங்களா இளமதி... மிக்க மகிழ்வு

      Delete
  10. இன்று வலைச் சரத்தில் இடம் பிடித்துக் கொண்ட சொந்தங்கள் அனைவருக்கும்
    என் இனிய வாழ்த்துக்கள் .ஆசிரியைக்கும் என் நன்றி கலந்த அன்பான வாழ்த்துக்கள்
    உரித்தாகட்டும் !

    ReplyDelete
  11. சில நாட்களாக வலை பக்கமே வரவில்லை தோழி. வந்ததும் தென்றலின் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்வு சசிகலா

      Delete
  12. மன அழுத்தம் போக்கும் வழி முறைகளோடு இன்று பெண்கள் சிறப்பாய், சிறந்த பெண்களின் வலைத்தளங்களை சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  13. என்னில் பாதியையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ.....

    இனிமையான வலைச்சர வாரம். தொடர்ந்து உங்கள் தளத்தில் சந்திப்போம்.

    ReplyDelete
  14. அறிமுகத்திற்கு மிக்க நன்றி ..அடைமொழி புன்னகை வரவழைத்தது .நன்றி .
    செய்தி சொல்லிய தனபாலனுக்கும் இளமதிக்கும் நன்றி

    ReplyDelete
  15. அறிமுகத்திற்கு மிக்க நன்றி :) நல்ல வழிகள் சொன்னீர்கள் மன அழுத்தம் போக்க. மனம் விட்டுப் பாடுதல், ஆடுதல் இது தான் நான் செய்வேன் பல நேரம், ஆனால், என்ன வீட்டில் இருப்பவர்கள் தான் பாவம் ;)

    ReplyDelete
  16. தாமத வருகை மன்னிக்கவும்..! வலைச்சரத்தில் எழில் அவர்கள் பங்கு கொண்ட இந்த வாரம் முழுதுமே மிக சிறப்பாய் இருந்தது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete