Sunday, October 27, 2013

காயத்ரி தேவி எழிலிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற எழில் தான் ஏற்ற பொறுப்பினை ஈடுபாட்டுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 053
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 036
பெற்ற மறுமொழிகள்                            : 262
வருகை தந்தவர்கள்                              : 818


எழிலினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க ஆரவத்துடன் இசைந்துள்ளார் காயத்ரி தேவி. 


இவர் முதுகலை முடித்து விட்டு இப்பொழுது முனைவர் பட்டத்திற்கு படித்துக்கொண்டு இருக்கிறார். இவரைப் பற்றிச் சொல்ல பெரிதாக் ஒன்றும் இல்லை என்றாலும் அன்பான அப்பா, தம்பின்னு ஒரு சின்ன குடும்பத்துல இருக்கிற எல்லா மகிழ்ச்சியையும் (பொறுப்புகளையும்) அனுபவித்துக் கொண்டு இருக்கிறவர். இவரோட மனசுல தோணுகின்றதை  எழுதவும், இவரோட கவிதைகளுக்கு ஒரு அங்கீகாரம் தேடவும் தான் இவர் வலைத் தளம் வந்தார். இங்கு இவர் மனத்தில் இருப்பதை அப்படியே பேசுவதால் பலருக்கும் இவரைப் பிடித்திருக்கிறது. இவருடைய தளத்தின் பெயர்என்னில் உணர்ந்தவை “  

அனைத்துப் பதிவர்களின் வாழ்த்துகளோடு இவர் பணியினை நாளை காலை ஆறு மணியில் இருந்து துவங்குவார். 

இவரை வருக ! வருக ! என வரவேற்று - வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம். 

நல்வாழ்த்துகள் எழில் 

நல்வாழ்த்துகள் காயத்ரி தேவி 

நட்புடன் சீனா  


29 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நல்லது மிக்க்வும்ம்ம் நன்றி ஐயா .........

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, தேங்க்ஸ் சொன்ன உங்களுக்கு தேங்க்ஸ்...

      Delete
  3. வலைச்சர ஆசிரியராய் பொறுப்பேற்கும் காயத்ரி தேவிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வருக வருக காயத்ரி தேவி....

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு காலைல வரேன் :) வரவேற்றதுக்கு தேங்க்ஸ்

      Delete
  5. வாழ்த்துக்கள் காயத்ரி... நீங்கள் சிறப்பாக செயல் பட எல்லாம் வல்ல இறைவனாக ஆசீர்வதிக்கிறேன்.

    ReplyDelete
  6. காயத்ரி தேவி.. தங்கள் வரவு நல்வரவாகுக!..

    ReplyDelete

  7. வருக வருக காயத்ரி தேவி அம்மா ..புது ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!... நன்றி..

    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
    www.99likes.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. அவ்வவ்வ்வ்வ் அம்மாவா??????????????????????????

      யாராவது எனக்கு பன்னீர் தெளிச்சு எழுப்பி விடுங்களேன்.... நான் மயங்கிட்டேன்

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்.
    தனித்திறன் பணித்திறன் சிறக்க
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்....ம்மா. உனது பணி சிறக்க எனது ஆசிர்வாதங்கள்......God Bless You.....

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் காயத்ரி. மிக்க நன்றி சீனா ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ்ங்க...

      Delete
  12. வணக்கம்

    கடந்த ஒரு வாரகாலமும் சிறப்பாக பணியை செய்து முடித்த எழில் அவர்கட்கு மிக்க நன்றி அத்தோடு இந்த வாரத்துக்கு பொறுப்பாக வந்திருக்கும்...... காயத்ரிதேவிக்கு எனது வாழ்த்துக்கள்.இந்த வாரம் சிறப்பாக அமையட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு தேங்க்ஸ்

      Delete
  13. சென்ற வார ஆசிரியர் எழிலிற்கு பாராட்டுகள்.

    இந்த வார ஆசிரியர் காயத்ரி தேவிக்கு வாழ்த்துகள். சில பதிவுகளில் இவரது பின்னூட்டங்களைப் படித்திருந்தாலும் இவரது தளத்திற்குச் சென்றதில்லை. பார்க்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ். கண்டிப்பா பாருங்க

      Delete
  14. போன வாரம் ஆசிரியரா இருந்த எழில் அம்மாவோட எல்லா படைப்பையும் பாத்து தான் நான் என்னை தயார் படுத்திகிட்டேன். அவங்க எல்லோரோட ஆசிர்வாதத்தோட இந்த ஒரு வாரமும் உங்க கூட இருக்க போறேன். தேங்க்ஸ்

    ReplyDelete
  15. வித்தியாசமான சரம் தொடுக்க வாழ்த்துக்கள் காயத்ரி...

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் காயத்ரி, வலைச்சரம் பொறுப்பிற்கும் உங்கள் முனைவர் பட்ட வெற்றிக்கும்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் டா காயு மா....

    ReplyDelete