Monday, October 28, 2013

பூக்களாகிய உங்கள் முன், படப்படப்புடன் இந்த பட்டாம்பூச்சி...


ஹாய், ஹாய், ஹாய்.... மனசு டிக் டிக் டிக்ன்னு அடிச்சுட்டே இருக்கு. ஏன்னு கேக்குறீங்களா? இந்த பதிவர் வட்டதுக்கே நான் புதுசு. நான் இங்க மறுபடியும் ஒரு அங்கீகாரத்த தேடி வந்து ஒரு மாசம் தான் ஆகுது. அதனால நானே இப்போ என்னை அறிமுகப்படுத்திக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். அதுக்குள்ள எனக்கு இப்படி ஒரு பொறுப்பு குடுத்துருக்குறது நீங்க (தமிழ்வாசி பிரகாஷ் அண்ணாவும், சீனா ஐயாவும்) என் மேல வச்சிருக்குற நம்பிக்கைய காட்டுது. அந்த நம்பிக்கையை வீணாக்கிட கூடாதுங்குற பிரார்த்தனையோட என்னை பத்தின அறிமுகத்த நான் ஆரம்பிக்குறேன்.

பெரிய அளவுல என்னை பத்தி அறிமுகப்படுத்திக்க இப்போதைக்கு ஒண்ணும் இல்லீங்க. ஆனா வருங்காலத்துல பெருசா சாதிக்கணும்ன்னு ஒரு வெறி இருக்கு. இப்போதைக்கு நான் ஒரு ஆராய்ச்சித் துறை மாணவி. அதாங்க, பி.ஹச். டி பண்ணிக்கிட்டு இருக்கேன். வீட்ல அன்பான அப்பா, சண்டை எல்லாம் போடாத தம்பி (என்ன கொடுமை பாத்தீங்களா), அவ்வளவு தாங்க. கிராமத்து வாழ்க்கைய அணுஅணுவா ரசிச்சு வாழ்ந்துட்டு இருக்கேன்.

வலைப்பூ ஆரம்பிக்கணும்னு ஆசை எல்லாம் ரொம்ப இல்ல என்கிட்ட. காரணம், அப்படினா என்னனே தெரியாது எனக்கு. மனசுல படுறத முகநூல்ல கொட்டிட்டு அப்படியே போயிட்டு இருந்தேன். அப்புறமா, ஒரு வழியா வலைப்பூ ஒண்ணு ஆரம்பிச்சு, அதுல கவிதைகள மட்டும் போஸ்ட் பண்ணிட்டு இருந்தப்போ அத வந்து எட்டிப்பாக்க கூட யாரும் இருக்க மாட்டாங்க. திண்டுக்கல் தனபாலன் அண்ணா மட்டும் தான் அப்பப்போ வந்து கமன்ட் போட்டுட்டு இருப்பார். ஒரு கட்டத்துல ரொம்ப வெறுத்து போய் நான் வலைப்பூ பக்கம் வர்றதே இல்ல.

இப்போ தான் ஒரு மாசம் முன்னாடி, திடீர்னு ஒரு ஆசை. சரி, மறுபடியும் நாம வலைப்பூ-ல எழுதினா என்னன்னு. ஆனா இந்த தடவை கொஞ்சம் வித்யாசமா கவிதை மட்டுமில்ல, மனசுல தோணுற எல்லாத்தையும் எழுதுவோம்னு முடிவு பண்ணிட்டு, தம்பி மகேஷ் உதவியோட, மறுபடியும் வந்தேன். ஒன்னரை வருசமா ஆறாயிரம் விசிட்டர்ஸ்ல இருந்த என்னோட ப்ளாக், இப்போ ஒரு மாசத்துக்குள்ள மேலும் பதினோராயிரம் விசிட்டர்ஸ் கூடி பதினேழாயிரம் விசிட்டர்ஸ்ஸ சம்பாதிச்சு குடுத்துருக்கு. இதுக்கெல்லாம் நான் முதல்ல உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.

பொதுவா நான் எது எழுதினாலும் நானே ரசிச்சா தான் எழுதுவேன். என்னால எல்லோர் மாதிரியும் சட சடன்னு கவிதைகள கொட்டிட முடியாது. அப்படி நான் எழுதின சில கவிதைகள உங்க பார்வைக்கு வைக்கலாம்னு நினைக்குறேன். நீங்க கண்டிப்பா படிங்க, படிச்சுட்டு உங்க கருத்துக்களையும் சொல்லுங்க. காரணம் உங்களோட ஊக்கம் தானே எங்கள எல்லாம் இன்னும் நல்லா எழுத தூண்டும்...

அம்மா அப்படினாலே எல்லோருக்கும் ஸ்பெசல் தான். அதுவும் எனக்கு என் அம்மான்னா ரொம்ப ஸ்பெசல். அம்மா பத்தி நிறைய எழுதி இருக்கேன், ஆனாலும் அதுல ரெண்ட மட்டும் இப்போ உங்க பார்வைக்கு வைக்குறேன்...

நீ என் அம்மா தானா?
வந்தாள் அம்மா....!

அம்மா கடவுள் தான், ஆனா அம்மான்னா யாருனே தெரியாத ஒரு பொண்ணுக்கு அம்மா எப்படி பட்டவளா இருப்பா? தெரிஞ்சுக்கணும்ல, அப்போ இத படிங்க...

உணராத பந்தம் இவள்...!

என் அம்மா அப்பாவோட காதலை பாத்து பாத்து வளர்ந்தவ நான்.. என்கிட்ட எப்படி நீ காதல இப்படி எழுதுறன்னு கேக்குறவங்க கிட்ட எல்லாம் நான் ரோல் மாடலா கை காமிக்குறது என்னை பெத்தவங்கள தான். அப்படி என்னதான் நீ காதல பத்தி சொல்ல வர்றன்னு கேக்குரவங்களுக்காக இந்த கவிதைகள்...

சாரலடிக்கும் நேரம்
உன்னிடம் ஒரு யாசகம் 

எல்லோரும் பாசிடிவாவே தான் எழுதுறாங்க. ஆனாலும் காதல் தோல்வியால் தற்கொலை பண்ணிகிட்ட மனம் எவ்வளவு தகிக்கும்னு யோசிச்சு தான் இந்த கவிதைய எழுதினேன்..

இன்னுமோர் அக்னி பிரவேசம்
இதெல்லாம் விடுங்க, எல்லோருக்குமே கண்டிப்பா மனசுல சோகம் இருக்கும், எதோ ஒரு வகையில நம்மை பற்றிய ஒரு பயம் இருக்கும். அப்படி என் மனசுல நான் என்ன உணர்ந்தேன்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாமா? இதோ படிச்சு பாருங்களேன்

பயமறியா விடியல்

அப்படியே மனசுல தோணுறத எல்லாம் கிறுக்கிட்டு இருந்த எனக்கு கொஞ்சம் இடைவெளிகள் தேவைப்பட்டது. ரொம்ப நாள் எதுவுமே எழுதாம இருந்த நான் ஒரு நாள் நண்பர் கார்த்திக்கோட கவிதைக்கு பதில் எழுத, அதுவே ஒரு கவிதையா மாறிடுச்சு. மறுபடியும் நான் எழுத காரணமான அந்த கவிதைய நீங்க பாக்க வேண்டாமா?

நிலவு வழி தூது

அத தொடர்ந்து அதே மாதிரி நான் எழுதிய இன்னொரு கவிதை இது

சங்கமிக்கும் பார்வைகள் (கடற்காதல்)


சரி, இப்போ உங்களோட உளவியல் தோட்டத்துல பூத்த வலைப்பூக்கள்ல இருந்து பல்சுவை தேன் குடிக்க கிளம்பிடுச்சு இந்த பட்டாம்பூச்சி....

ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்..... அதென்ன பட்டாம்பூச்சின்னு கேக்குறீங்களா? நான் ஏன் என்னை பட்டாம்பூச்சின்னு சொல்லிக்குறேன்னா, அதுக்கு காரணம் அப்புறமா சொல்றேன். இப்போ, நீங்க என்ன பண்றீங்கனா நான் ரசிச்சு ரசிச்சு எழுதின கவிதைகள்னு என்னோட வலைப்பூல ஏராளமா கொட்டிக் கிடக்கு. நேரம் இருக்குறப்போ ஒண்ணொண்ணா படிச்சு பாருங்க. நான் அப்புறமா வந்து, வலைப்பூவுல இருக்குற என்னோட நண்பர்கள், தோழிகளை உங்களுக்கு அறிமுகப் படுத்துறேன். புதுசாவோ, இல்ல நமக்கு அறிமுகம் சரியா இல்லாதவங்களையோ நமக்குள்ள நாமே அறிமுகப்படுத்திக்குறது தானே முறை. அதனால அதுவரைக்கும் காத்திருங்க...

இப்போதைக்கு உங்ககிட்ட இருந்து விடைபெறுவது.... வேற யாரு, நான் தான், பட்டாம்பூச்சி காயத்ரி தேவி.... என்ற ஜி.டி... டாட்டா



58 comments:

  1. சுய அறிமுகம் நன்று... பட்டாம்பூச்சி மேலும் ரசிக்கட்டும்... வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  2. வருக, வருக! பட்டாம்பூச்சிக்கு மனமகிழ்வுடன் நல்வரவு! நிறைய மலர்களிலிருந்து தேன் உறிஞ்சிவந்து நமக்குப் படைக்கவிருக்கிறது பட்டாம்பூச்சி என்பது தெரிகிறது. மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. ஹஹா வந்துட்டேன் வந்துட்டேன்... எதோ, என்னாலான வரைக்கும் முயற்சி பண்றேன்

      Delete
  3. பட்டாம்பூச்சியாக பறக்கும் தலையங்கமும் பதிவும் நன்றாக இருக்கு. வாழ்த்துக்க்ள்

    ReplyDelete
  4. சுய அறிமுகம் சுவாரசியமாக...
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் :) வாழ்த்துக்கு

      Delete
  5. அன்பின் காயத்ரி - சுய அறிமுகம் - துவக்கம் அருமை - அனத்து சுட்டிகளையும் சென்று பார்த்து மறு மொழி இடுகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் ஐயா... எல்லாம் உங்க ஆசிர்வாதம்

      Delete
  6. வணக்கம் காயத்ரி கவிதை என்பது எழுத்துகளின் கலவை மட்டுமல்ல அது உணர்வுகளோடும் சேர்ந்து பிரவேசிக்கும் போதுதான் கவிதையாக பரிணமிக்கிறது அப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியை உங்கள் கவிதைகளில் காண முடிகிறது...வாழ்த்துக்கள் தோழி!!!ண

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் இப்படி பட்ட பாராட்டுகள் தான் மேலும் மேலும் எங்கள மாதிரி பட்டவங்கள எழுத தூண்டும். ரொம்ப தேங்க்ஸ்

      Delete
  7. சூப்பரான சுய அறிமுகம்... மேலும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா... உங்களோட வாழ்த்துக்கு

      Delete
  8. சுய அறிமுகம் நன்று. பட்டாம்பூச்சி தேடிய தேனை நாங்களும் ருசிக்க காத்திருக்கிறோம்.....

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா எல்லா போஸ்ட்டும் படிச்சு, எல்லா அறிமுகங்களையும் தேடி போய் வாழ்த்திட்டு வரணும் ... இப்போ என்னை வாழ்த்திய உங்களுக்கு தேங்க்ஸ்

      Delete
  9. பட்டாம் பூச்சி என்று சொல்லி விட்ட பின் - சுவைக்கு பஞ்சம் ஏது!..

    தங்கள் வரவு நல்வரவாகுக!..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா என்னால முடிஞ்ச அளவு நல்லா பண்றேன், வாழ்த்துக்கு தேங்க்ஸ்

      Delete
  10. வாங்க வாங்க காயத்ரி பட்டாம்பூச்சி. உங்களோட பதிவுகளுக்கெல்லாம் சென்று வருகிறேன். வலைச்சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் எ லாட்... எல்லாம் உங்கள ஒரு வாரமா பின்தொடர்ந்து தான் கத்துகிட்டேன் :)

      Delete
  11. "உச்சத்தை தொட உச்சத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்." இது ஒரு ஜென் தத்துவம். நீ ஆரம்பித்திருப்பது உச்சத்திளிருந்தே....உச்சத்தை தொடுவாய். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா.... தேங்க்ஸ் எ லாட் அண்ணா :)

      Delete
  12. பட்டாம்பூசியுடன் பறந்து பார்த்தேன்.
    படித்து பார்த்தேன்.
    ரசித்து மகிழ்ந்தேன்.
    பசிக்கு ஒரு உணவாக இல்லை..
    ருசிக்கு ஒரு பலாவாக,
    இனிக்கின்றன பல கவிதைகள்.

    அது சரி. அம்மா அம்மா என ஆரம்பித்தீர்கள்.
    ஆனாலும் என்னை
    அழ வைப்பீர்கள் என்று
    எதிர்பார்க்கவில்லை.



    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. அச்சோ... நானும் அழ வைக்கணும்னு நினைச்சு அழ வைக்கலயே.... உண்மைய சொன்னா அது அம்மாவ நினச்சு தூக்கம் வராத ராத்திரிகள்ல எழுதினது, அதான் அழ வச்சிடுச்சு

      Delete
  13. சுய அறிமுகம் பதிவு நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு தேங்க்ஸ் :)

      Delete
  14. //பொதுவா நான் எது எழுதினாலும் நானே ரசிச்சா தான் எழுதுவேன். என்னால எல்லோர் மாதிரியும் சட சடன்னு கவிதைகள கொட்டிட முடியாது. // I like this open statement :) :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி.... :) அதென்னமோ அப்படி சொல்லியே பழகிடுச்சு

      Delete
  15. பட்டாம்பூச்சியின் கை பிடித்து வலைப்பூக்களை ரசிக்க வரும் தென்றல்... ஹஹ எப்பூடி நாங்களும் வருமோமில்ல....
    அறிமுகம் சிறப்புப்பா. பொதுவா அக்கம் பக்கத்து வீட்டு தோழிகளை "பா." என்று அழைத்து பழக்கம் அப்படி அழைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா நீங்க என்னை எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம். தென்றல் எப்பவுமே எல்லோருக்கும் அவசியமாச்சே, அப்போ பட்டாம்பூச்சி கூட வந்தா வேணாம்னு சொல்லுவோமா என்ன? வாங்க வாங்க

      Delete
  16. பட்டாம் பூச்சியின் சுய அறிமுகம் மிகச் சிறப்பு!
    இவ் வார வலைசர ஆசிரியப் பணி சிறக்க நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் சிறப்பா ஒரு தேங்க்ஸ்... நன்றி

      Delete
  17. அடடே, வாழ்த்துகள் பட்டாம்பூச்சி. உன் அறிமுகம் அருமை. சிறப்பாக உன் பணியினை மேற்கொள்ள என் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மேடம். அப்படியே டெய்லி வந்து எல்லா போஸ்ட்டும் படிச்சுடுங்க

      Delete
  18. வணக்கம் காயத்ரி......

    நான் நினைத்தது போலவே ரொம்ப இயல்பான நடையில் சுய அறிமுகம்....
    இந்த எளிய நடையே உங்கள் வலைப்பூவின் பக்க பார்வைகள் அதிகரிக்க காரணம்...
    வலைச்சரத்திலும் அவ்வாறே தொடர்க....//

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு தேங்க்ஸ் :)

      Delete
  19. வலைச்சரத்தின் இவ்வருட தீபாவளி உங்கள் கையில்...
    அதற்கான சிறப்பு பதிவு ஒன்றை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி சிறப்பு பதிவா???? நல்ல வேளை நியாபகப்படுத்துனீங்க, அப்போ ரெடி பண்ணிட வேண்டியது தான்... done (y)

      Delete
  20. பாட்டாம்பூச்சிக்கு அம்மாவின் வாழ்த்துக்கள் டா...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அம்மா, லவ் யூ... எப்பவும் நீங்க கூட இருப்பீங்கங்குற நம்பிக்கை தான்மா பறக்குறதுக்கு துணையா இருக்கு

      Delete
  21. வணக்கம்
    சுயஅறிமுகம் நன்று உங்கள் பயணம் ஒரு வாரகாலம் இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள்
    உங்களின் வலைப்பூ எனக்கு தெரியாது.....முயற்ச்சி செய்து இணையப்பக்கம் தேடுவோம்...கிடைத்தால் சரிதான்.......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. என்னோட ப்ளாக்-ல நீங்க அடிக்கடி கமன்ட் போடுவீங்களே...
      உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ் :)

      Delete
  22. இந்த பட்டாம்பூச்சியின் எண்ணங்கள் விண்ணை எட்டும் .... ! வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் கிரி.... அவ்வ்வ்வ் நீங்கெல்லாம் இந்த பக்கம் வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல

      Delete
    2. அதெல்லாம் வரவேண்டியே நேரத்துலே கரெக்ட்டா வருவோம்

      Delete
    3. அவ்வ்வ்வ்.... வருகைக்கு நன்றி

      Delete
  23. பட்டாம்பூச்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க

      Delete
  24. தமிழ்வாசி பிரகாஷ்Mon Oct 28, 01:59:00 PM வலைச்சரத்தின் இவ்வருட தீபாவளி உங்கள் கையில்...
    அதற்கான சிறப்பு பதிவு ஒன்றை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்....////

    ahaa, nanum athutan ninichu irunthen, ninga solletinga sir...

    muthal nale supera elutha arampicha ninga vetrikaramaka thodara vazthukkal akka.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மகேஷ்... அதான் ரெண்டு பேரும் சொல்லிட்டீங்கல, கண்டிப்பா எழுதிற வேண்டியது தான்

      Delete
  25. அறிமுகமே ஆனந்த ரீங்காரமாக இருக்கிறது.
    ஓ ! அது பட்டாம் பூச்சியின் ரீங்காரமோ ?
    ரீங்காரத்துடன் தமிழின் ஆங்காரத்தையும் எதிர்பார்க்கிறோம்.
    ஆவலுடன்....

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் பாக்கலாம் பாக்கலாம்...

      Delete
  26. அறிமுகம் அசத்தல்! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் உங்க பாராட்டுக்கு :)

      Delete
  27. அறிமுகப் பதிவு
    அசத்தலாக இருக்கிறது.

    தொடருங்கள் காயத்ரி.
    நானும் உங்களைத் தொடருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி... அப்படியே தொடருங்க

      Delete
  28. தலைப்பே கவிதையாகி விட்டது. சிறப்பான தொடக்கம் உங்கள் பதிவுகளை நிச்சயம் படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. :) தேங்க்ஸ், கண்டிப்பா படிங்க

      Delete