சித்தவைத்தியம்ங்குறது தமிழ் வைத்தியம்ன்னு சொல்லுவாங்க. நம்ம முன்னோர்கள் பயன்படுத்திட்டு இருந்த தொன்மை வாய்ந்தது இந்த மருத்துவம். இந்த மருத்துவமுறை இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைத் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய், சீனி, முதலியக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக்கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும். இந்த மருத்துவ முறையில உடன் பருமனை எப்படி றைக்குறது?ன்னு சொல்லித்தராங்க.
உடல் பருமனை குறைக்க வழி
இனி, நாம வீட்ல எப்பவும் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்குற மிளகுவோட மருத்துவ குணம் பத்தி தெரிஞ்சுப்போமா?
ஏன்னா, பத்து மிளகு இருந்தா எதிரி வீட்ல கூட விருந்து சாப்பிடலாமாம். அந்த அளவு அதுகிட்ட நச்சை முறிக்குற சக்தி இருக்கு. அப்போ கண்டிப்பா இன்னும் அத பத்தின டீடைல்ஸ் வேணும்ல... வாங்க, பாப்போம்.
மிளகு - ஒரு முழுமையான மருந்து
ஹச்... ஹச்ன்னு தும்மல் வருதா? அப்போ ஏதாவது பண்ணியாகணுமே???? என்னப் பண்ணலாம்? இத படிக்கலாம், படிச்சு தெரிஞ்சுக்கலாம், தெரிஞ்சுகிட்டு அத அப்படியே பாலோ பண்ணலாம்.
ஜலதோஷம் - பாட்டி வைத்தியம்
எந்த மருந்து எந்த நோயை ஆரோக்கியமான நிலையிலுள்ள மனிதனிடத்தில் தோற்றுவித்ததோ, அதே மருந்து அந்த நோயுள்ள மனிதனுக்கு கொடுத்தா அந்த நோயை தீர்க்கும்னு சொல்றது ஹோமியோபதியோட அடிப்படை தத்துவம். மனித உடல்ல நோய் வந்தா மனசும் பாதிக்கப்படும். அப்போ பாதிக்கப்பட்ட உடம்பு, மனம் ரெண்டையும் சேர்த்து குணப்படுத்துறது தான் ஹோமியோபதி மருத்துவம். இயற்கைக்கு மாறான செல்களினால் ஏற்படும் புற்றுநோயை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த, அழிக்க ஹோமியோபதி மருத்துவம் ஆற்றல் உள்ளதா இருக்கு. மனச்சோர்வு, பரபரப்பு ஏற்படுத்தாமல், இதமான இயல்பான அளவில் வலியைக் குறைத்து உடலுக்கு தெம்பூட்டும் சிகிச்சையை அளிப்பதோடு பக்கவிளைவுகளையும் ஹோமியோபதி மருத்துவம் ஏற்படுத்துவதில்லை. உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு வல்லமையையும் அதிகரிக்கிறது. மற்ற ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து ஹோமியோபதி மருந்துகளைச் சாப்பிடலாம். உடல், மன உறுதி இவற்றைச் சார்ந்த நோயாக புற்றுநோய் இருப்பதால் ஹோமியோபதி மருந்துகள் மூலம் புற்று நோய்க்கான போராட்டத்தை ஒரு நோயாளி வெல்ல முடியும்ன்னும் சொல்றாங்க.
இத பத்தின விரிவான விளக்கத்த இங்க பாக்கலாம்.
மனித நலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்
இது கொஞ்சம் புதுசுங்க. மருந்துகளின்றி மனித இனம் காப்போம், மருந்துகளிடமிருந்து மனித உயிர்களை மீட்போம்னு சொல்ற தாரக மந்திரம் ஒண்ண கேட்டுருக்கீங்களா? ஆமா, அக்குபஞ்சர் மருத்துவம் அப்படி தான் சொல்லுது. நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் சாராம்சம். இயற்கைச் சக்திகள் இயைந்த ஒரு மருத்துவ முறைதான் அக்குபங்சர். ஓடுபாதைகள்,அக்குப்புள்ளிகள், ஊசிகள், அடைப்புகள், தூண்டுதல்கள், நீடிலிங், பிரபஞ்ச உயிர்ச்சக்தி என, மற்ற மருத்துவ முறைகளில் இருந்து 'வித்தியாசப்படும்' இந்த மருத்துவம், உண்மையாகவே மக்களுக்குக் கிடைத்திருக்கும் 'அருட்கொடை'னு தான் சொல்லணும். இத பத்தி மேலும் தெரிஞ்சிக்கணும்னா இத படிங்களேன்.
வலிகள் என்றால் என்ன? அவை ஏன் ஏற்படுகின்றன?
சரி, சரி, மருத்துவ முறைகள் எதுவா இருந்தா என்ன? நமக்கு நோய் குணமாகணும். அதானே நமக்கு வேணும். என்ன நான் சொல்றது சரி தானே... ஆமான்னு தலையாட்டுரவங்க எல்லாம், எல்லாத்தையும் மறக்காம மனசுல வச்சுக்கிட்டு, தேவைப்படுறப்போ யூஸ் பண்ணி பயனடையணும். சரியா?
நான் அப்புறமா வரேன்.
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களோட வாழ்த்துக்கு நன்றி
Deleteசுய அறிமுகம் அன்றே பதிவர்களின் அறிமுகமா...! உங்களின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்... அறிமுகங்களை பார்த்து விட்டு வருகிறேன்...
ReplyDeleteஅப்படி இல்ல அண்ணா, நான் வேற போஸ்ட் தான் எழுதி வச்சிருந்தேன், அத நாளைக்கு காலைல போடலாம்னு இது கடகடன்னு ரெடி பண்ணி போட்டுட்டேன்
Deleteஎப்பவுமே, நாம ரொம்ப ஆரோக்கியமா இருக்குற வர, எத பத்தியும் கவலைப் பட மாட்டோம்//
ReplyDeleteஉண்மை.
எல்லாம் தேவையான செய்திகளை அடங்கிய் வலைத்தளம். நன்றி.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
எல்லோரையும் வாழ்த்தி, கூடவே என்னையும் வாழ்த்திய உங்களுக்கு தேங்க்ஸ் :)
Deletehttp://siddhamaruthuvakuripugal.blogspot.in/2010/05/blog-post_5006.html - இந்த தளத்தில் கருத்துரை உங்களால் இட முடியுமா...? Try Pl...
ReplyDeleteஉங்களோட கமன்ட் மட்டும் இருக்குது அண்ணா, ஆனா என்னால கமன்ட் போட முடியல, ஏனோ?
Deletehttp://siddhamaruthuvakuripugal.blogspot.in/2010/05/blog-post_5006.html?m=1 இவ்வாறு தளத்தை தொடரவும்... நன்றி...
Deleteசரி அண்ணா
Deleteமுதல் நாளே இரு பதிவுகள்...
ReplyDeleteபயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்////
வாழ்த்துக்கு தேங்க்ஸ் :)
Delete
ReplyDeleteவலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியராக தங்களுக்கு அழைப்பு வந்து, தாங்களும் ஏற்றுக் கொண்ட பின், வலைச்சரத்தில் இணைவது எப்படி? பதிவு எழுதுவது எப்படி? என சில சந்தேகங்களுக்கான விடை தான் இந்த பதிவு
வலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்!!!
நான் படிச்சு, அங்க கமன்ட்டும் போட்டுட்டேன் :)
Deleteennudaiya blog thagaval kalangiyam ennudaiya pathivai veliyittathukku nanriyal pala.....
ReplyDeleteஉங்களுக்கு எங்களுடைய வாழ்த்துகள். நிறைய எழுதுங்க. அதுவும் பயனுள்ளதா எழுதுங்க, கண்டிப்பா மக்களுக்கு ரீச் ஆகும்
Deleteஇளங் கன்றின் வேகம் .... அருமை டா... சில பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் போட முடியவில்லை .... மருத்துவத் துறையில் இருந்து ஆரம்பமா ....
ReplyDeleteஆமா அம்மா, கண்டிப்பா நமக்கு அவசியமான தகவல் தானே
Deleteaha morning than unga pathiva inga padichu class ku ponnen akka. vanthu parkkuren athukkula innoru pathiva.. hmm ellam thevaiyana visayam. time kidaikkumpothu ella senru na padikkanum..
ReplyDeleteகண்டிப்பா படி மகேஷ்... நாம படிக்காம போனா எப்படி
Deleteஅருமையான தளங்களை அழகாய் பகிர்ந்தமைக்கு நன்றி! சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteதேங்க்ஸ்க்கு ஒரு தேங்க்ஸ்.... கண்டிப்பா படிச்சு பாருங்க
Deleteஅருமையான சித்த வைத்தியம் உருக்குலைய நாமே காரணமாகி விட்டோம்!..
ReplyDeleteகுழந்தை பிறந்ததும் - 16 நாள் கழித்து - சித்தரத்தை, வசம்பு, கடுக்காய், திப்பிலி இன்னும் சில வகைகளை உரசி - உரைமருந்து எனக் கொடுப்பார்கள். பச்சரியை வறுத்து கறுக்கி, மையாக ஆக்கி - திலகம் தீட்டுவார்கள். இடுப்பிலும் கால் கைகளிலும் வசம்பு கோர்த்து அணிவிப்பார்கள். பெண் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்து உடலெங்கும் பூசி தலைக்கு ஊற்றி - சாம்பிராணிப் புகை போடுவார்கள். ஒவ்வொரு குழந்தைகள் கத்திக் கதறும். ஒவ்வொரு குழந்தைகள் ஆனந்தமாய் நம்மையும் குளிப்பாட்டி விடும். அதற்காகவே மீண்டும் பிறக்கலாம்!..
இப்போது குழந்தைகளுக்கு உரைமருந்து கொடுப்பதே இல்லை. எல்லாம் நவீனமாகி - நுனி நாக்கு மோகத்தில் முகத்தில் கரியைப்பூசிக் கொண்டிருக்கின்றோம். பழைய முறை மீண்டும் தொடர்ந்தால் மருந்துக் கடைகளை மூட வேண்டி வரும்!..
நல்ல அறிமுகங்களுடன் இனிய பதிவு!.. மகிழ்ச்சி!..
நல்ல ஒரு தகவல்... கண்டிப்பா எல்லோரும் தெரிஞ்சு வச்சிருக்க வேண்டிய ஒண்ணு... தேங்க்ஸ்
Deleteமிக மிக அற்புதமான பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்!
ReplyDeleteஅறிமுகமானவர்களுக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கு தேங்க்ஸ் :)
Deleteபயனுள்ள பதிவு. ஆண்டவனை தினமும் ஆனந்தமாகத் தொழ அவன் வாழும் என் இதயத்தைக் காக்கும் உடம்பும் வலியதாக இருக்கவேண்டும். அதனால் ஊன் வளர்த்தேனே உயிர் வளர்க்க என்ற பொருளில் பாடுவார் திருமூலர்.
ReplyDeleteஅதற்கான வழிமுறைகளை எளிய முறையில் தரவிழையும் பாங்கு பாராட்டத்தக்கது.
உண்மைதான்.
''பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்''.
மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் தமிழ்ப் பயணம். :)
ம்ம்ம்ம்ம்ம்ம் தேங்க்ஸ் :)
Deleteஉடல் நலம் காக்கும் மருத்துவம் ...
ReplyDeleteஅதிலிருந்து பதிவுகளை அறிமுகப்படுத்தி... முதல் நாளே சபாஷ் போடவைத்துவிட்டீர்களே, நன்று...
ஹஹா தேங்க்ஸ்
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கு தேங்க்ஸ் :)
Deleteமருத்துவக் குறிப்புகள் பற்றிய தளங்கள்..... நிச்சயம் பலனுள்ளவையாகத்தான் இருக்கும். படிக்கிறேன்.
ReplyDeleteஅறிமுகத்திற்கு மிக்க நன்றி. அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள்.
கண்டிப்பா படிங்க.... வாழ்த்துக்கு நன்றி
Deleteஆரோக்கியத்துடன் ஆரம்பம் அசத்தல் பா.
ReplyDelete