என்னைப்பற்றிய நாடகம்
நடக்கிறது - எனக்குமுன்பாய்
காட்சிகள் எதுவும் தொடர்பில்லை
கடந்தநிமிட காட்சிவரை
அரங்கத்தில் - நானில்லை,
தொடரப்போகும் காட்சிகளின்
ஆருடத்தை - அலசுகின்றன
அறிவுபிண்டங்கள்,
பார்வையாளர் வரிசையில்
என்னைப் பார்த்த சிலரிடமும்
நான் இல்லை எனபதான
கள்ளத்தமே பல் இளிக்கிறது.
========================================================================
வையவன் ஒரு எழுத்தாளர் அவரின் ஒரு கட்டுரையின் வாயிலாக அவருக்கு வயது 70 வதை தாண்டியிருக்கும் என அறியமுடிகிறது. அடிப்படையில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறார்.
அடிமாடுகளும் சினையாடுகளும் கட்டுரையில் கிராமப்புரத்தில் மக்கள் வாழ்ந்த இயற்கையோடு இயைந்தவாழ்வை மிக தெளிவக எடுத்துரைக்கிறார்.
படம் அகலிகன்
படம் அகலிகன்
மாநகரங்களை நோக்கி லாரி லாரியாக மாடுகள் போகின்றன. ஆடுகள் போகின்றன. சினையாடுகளும் கூட. நான்கு வழிச்சாலைகள் உள்ள எந்த தேசீய நெடுஞ்சாலையிலும் அன்றாடம் நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை நின்று, உட்கார்ந்து கவனித்துப் பார்த்தால் அவை தென்படும். மலங்க மலங்க விழிக்கும் கண்கள். ஆடுகளாகவும் மாடுகளாகவும் பிறக்க நேர்ந்த அவலத்தை அவை மௌனமாக முறையிடுவது போல் தென்படும் காட்சி அது.
பாரதியைப்பற்றி சிலாகிக்கையில்
இவரின் கட்டுரைகள் நிச்சயமாய் பல கதவுகளுக்கு இட்டுச்செல்லும்.
ஒரு சிறப்புத்தகவல் இவர்
வையவன் மெய்ஞனம், வையவன் அழகியல், வையவன் குறுங்கதைகள், வையவன் காவிய வானம் என ஐம்பதிற்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் வைத்திருக்கிறார்.
========================================================================
மகாபாரதத்தில் கண்ணன் நல்லவனா, கெட்டவனான்னு கேட்டா ஆத்திகர்கள் அவன் நல்லவன் மட்டுமல்ல வல்லவன்னும்கூடன்னு சொல்வாங்க. நாத்திகர்கள் அவன் ஒரு பக்கா ஃப்பிராடுன்னு முகத்தில் அரையராப்போல சொல்வாங்க. அலுவலக மேளாண்மை வகுப்புகளில் மகாபாரதத்தில் கண்ணனின் சமயோஜிதங்கள் அத்தனையும் நிறுவனத்திற்கு நல்ல பலனை தரும் என வாதிடுவார்கள். இப்படியும் இன்னும் பல கோணங்களிலும் மகாபாரத கண்ணன் இன்றுவரையிலும் திகட்டாத பேசுபொருளாகவே இருக்கிறான்.
இன்னிக்கி இருந்திருந்தா அந்த கண்ணனின் நிலையும் தருமனின் நிலையும் என்னவ்வாய் இருக்கும்னு ஒரு கதை சொல்றாரு விந்தமனிதன்
லூசு கதைகள்

“தங்கச்சி.. கொஞ்சம் சில்லுன்னு தண்ணி கொண்டுட்டு வாம்மா”ன்னு குரல்கொடுத்த கிருஷ்ணன்கிட்ட கொஞ்சம் கடுப்பா “அவ நடுலவன்கூட காட்டுக்கு சுள்ளி பொறுக்கப் போயிருக்கா போல.. உம்ம அத்தையும் மேலுக்கு நோவுதுன்னு படுத்திருக்கு.. இரும்.. நானே போயி எடுத்தாரேன்”ன்னு சொல்லி மறுவடி எந்திரிச்சிப் போயி தண்ணி கொண்டாந்து கொடுத்த யுதிர்ஷ்டிரன்
“என்ன மச்சான் சலிச்சிப்போயி வந்திருக்கீரு.. போன காரியம் என்னாச்சு? காயா பழமா?” ன்னான்.
“எங்கய்யா... நீரு விடாக்கண்டன்னா உம்ம பங்காளி கொடாக்கண்டனா இருக்கான்.. “அவந்திமிரு... சீட்டாடித் தொலைச்சதை என்ன உரிமைல திருப்பிக் கேக்குறான்.. அப்டியே பாவம்புண்ணியம் பாத்து கொடுக்கலாம்னு பாத்தாக்கூட எங்கப்பன் வதவதன்னு நூறுபேத்த பெத்துப் போட்டுட்டான்.. அம்பது வேலி நெலம்.. மிராசுதார்னு பேருதான்.. எழவு பாகப்பிரிவினை பண்ணா குடிசை போடக்கூட ஆளுக்கு முப்பது குழி நெலம்தான் தேறும்.. இதுல சித்தப்பன் மக்களுக்கு எங்கேருந்து குடுக்குறது?”ன்னு திரும்பிக் கேக்குறான் மச்சான்.. நானும் என்னன்னமோ அகடவிகடம்லாம் பண்ணிப் பாத்துட்டேன்.. பய அசையலையே.. வயல் என்ன வரப்புகூட தரமுடியாதுங்கிறான்..ஊருல இருக்குற பெரிய மனுசன் பூரா அவம்பக்கம்தான் பேசுறானுவோ”ன்னான் கிருஷ்ணன்.
ரசித்தேன் சிரித்தேன்
பாண்டவர்களின் ஆண் என்ற அகந்தையை துடைத்தெரிய செய்யும்
அதிர்ந்தேன்
========================================================================
கலாச்சாரம் நாட்டுக்கு நாடு , ஊருக்கு ஊர் , காலத்திற்கு காலம் மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது. இன்று கலாச்சரமாக நாம் கற்பித்துக்கொண்டிருப்பவை எல்லாம் சில நூற்றாண்டுகளுக்குமுன் நம்மேல் திணிக்கப்பட்டதுதான். சிலவற்றை நாம் விரும்பியும் ஏற்றுக்கொண்டோம். கற்பு பற்றிய குஷ்புவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தவர்களும், கலாச்சாரத்தை காப்பாற்ற பெங்களூரு நட்சத்திர விடுதியில் பெண்களை அடித்து துரத்தியவர்களும் காட்டுமிராண்டிகளே.
நினைவுகளும் சிந்தனைகளும் நம்பள்கி
என் தமிழ் சுமார் தான்! எனது தமிழின் ஆழத்தை, அகலத்தை, நீளத்தை சுருங்கச்சொல்லி விளங்கவைக்க என் நண்பன் கூறிய ஒரு வரி போதும்: "நீ தமிழ் நல்லா பேசறே; ஆனா, எழுதும் போது கோட்டை விட்டுரே!" தமிழ்நாட்டில் மருத்துவராவதற்காக தமிழை கல்லூரியில் எடுத்த அவன், தமிழில் முதல் மூன்று மாணவர்களில் ஒருவன். எனக்கு தமிழை இலகுவாக எழுதக் கற்றுக் கொடுத்த சேட்டு நண்பனுக்கு நன்றி செலுத்துவதற்காகவே இங்கு இந்த "நம்பள்கி."
தமிழன் கலாச்சாரத்தில் தாலியும் இல்லை; முதல் இரவும் இல்லை!

பதிவில் கலாச்சாரம் குறித்து கவலைப்படுபவரை கலங்கடித்திருக்கிறார்.
மாமா பெண்ணை கட்டும் போது சித்தப்பா பெண்ணையும் கட்டலாமே...!
என்ற இடுகையிலும் சடங்கு சம்பரதாயம் பற்றிய நீள அகலங்களை கிண்டலடிக்கிறார். இடுகை என்னவோ மேலோட்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இடுகைக்கு வதிருக்கும் பின்னூட்டங்கள் ஒரு புத்தகமே போடும் அளவிற்கு ஆழமானதாகவும், அகலமானதாகவும் உள்ளது.
நல்ல பதிவு என்பது பல கேள்விகளை எழுப்பக்கூடியது. விடைகளை தேடவைப்பது.
========================================================================
கடவுளின் படைப்புக்களிளேயே அழகான படைப்பு எது என்றால் அது பெண்கள்தான். இது ஒரு ஆணின் பார்வையாகூட இருக்கலாம். பெண்களின் பார்வையில் ஆண்தான் அழகு என சொல்லக்கூடும். எப்படியானாலும் ஒருவரை ஒருவர் சைட் அடிக்காமல் இருந்ததில்லை இருக்கப்போவதுமில்லை. அதன் சுவாரஸ்யம் ஆளுக்கு ஆள் கூடுமோ குறையுமோ தவிர சுரத்து இல்லாமல் போகாது. ஆண்கள் பேண்களை சைட் அடிப்பதையும் பெண்கள் ஆண்களை சைட் அடிப்பதும் அவர் அவர் பிறப்புரிமை, இதை எவரும் தடுக்கவோ, ம்றுக்கவோ முடியாது.பத்துவருடங்களாய் தொடர்ந்து பதிவெழுதிக்கொண்டிருக்கும் திரு டுபுக்கு அவர்கள் தானும் தன் நண்பர்களும் பெண்கள்பின்னால் துள்ளித்திரிந்த காலத்தை மிக அழகாயும் நேர்மையாயும்
நான் சொல்லும் ஜொள்ளு எனப்படுவது யாதெனின், அகலாது அனுகாது, மனதைப் புண்படுத்தாமல், அப்புறம் நினைத்துப் பார்க்கும் போது உதட்டின் ஓரத்திலோ, மனதின் ஓரத்திலோ சம்பந்தப்பட்ட பெண்மணி உட்பட எல்லாருக்குமே ஒரு புன்முறுவல் வரவைக்குமே...அது..அந்த குறும்பு, சேட்டை, ஃபீலீங்...அதே தான். இந்த சேட்டை சில நேரங்களில் காதலாக டெவலப் ஆகி சில அபாக்யவான்களுக்கு கல்யாணத்தில் முடிந்திருக்கிறது.
அது நாங்கள் ஜொள்ளித்திரிந்த காலம் என ஜொள்ளுகிறார்.இது பல பதிவுகளாய் தொடர்கிறது.
குண்டலினி யோகம் இருப்பவர்களுக்கு மட்டுமே லேடீஸ் காலேஜில் போய் தேவுடு காக்கும் சந்தர்ப்பம் கிட்டும் என்று ஜோதிட சம்பூஷணம் தினமலரிலும், இதே யோகத்திற்கு கோடியில் ஒருத்தருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய நாலாம் பிறை மச்சம் புட்டத்தில் இருக்க வேண்டும் என்று ஜோதிடலேகாவில் மச்சேந்திரரும் சொல்லியிருப்பதால், இல்லாதவர்கள் "சொக்கா சொக்கா இல்ல இல்ல எனக்கில்லை" என்று மனதை தேர்த்திக் கொள்ளுதல் நலம். அசூயையால் மேற்கூறிய இடத்தில் வரைந்து கொண்டு கண்ணாடியில் பார்ப்பவர்களுக்கு லீவு நாட்களில் அதே லேடீஸ் காலேஜில் தேவுடு காக்கும் தண்டணை தான் கிட்டும் என்று மச்சேந்திரர் அன்பாய் எச்சரிக்கிறார்.
என காத்திருப்பதின் சுக துக்கங்களை தேவுடு காத்தல் பதிவு ஆவணப்படுத்துகிறது.
========================================================================
அழகான தொகுப்பு...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி.
Deleteஅற்புதம்
ReplyDeleteஎனக்கே கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு. அழகான தேடல்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஉங்களுக்கு மகிழ்ச்சின்னா எனக்கு ரோம்ப மகிழ்ச்சி.
Deleteஅழகான தொகுப்பு.
ReplyDeleteநன்றிகள்.
Deleteவிந்தமனிதனின் தளம் ரசனை!.. அறிமுகங்கள் அனைத்துமே சிறப்பு.. நன்றி!..
ReplyDeleteநன்றி!
ReplyDeleteஉங்கள் பதிவுகள் சிம்பிளி சூப்பர்.
Deleteஅழகான அறிமுகத்திற்கு மிக்க நன்றி ரூபன்.
ReplyDelete