Friday, November 1, 2013

டம்... டுமீல்.... டமால்......


ஹாய் ஹாய் ஹாய்..... ஏனுங்க, நேத்து ஏன் யாரையும் அதிகமா இந்த பக்கம் காணோம்? எல்லோரும் தீபாவளி பிசி போல...

ஜவுளி கடை, பட்டாசு கடை, ஸ்வீட் ஸ்டால்ஸ்னு கூட்டம் நிரம்பி வழியுதாமே.... அனேகமா நீங்களும் இங்க எங்கயாவது பிசியா இருப்பீங்க....

இந்த வாரம் முழுக்க நான் ரொம்ப பிசி, தீபாவளி பத்தி எல்லாம் யோசிக்கவே நேரம் இல்லாதப்போ தான் வலைச்சரத்துல இந்த வருஷ தீபாவளி ஸ்பெசல் என் கையிலன்னு நியாபகப் படுத்திட்டாங்க. ரொம்ப யோசிச்சு யோசிச்சு பாத்தேன். நாம இங்க விசேஷமா என்னப் பண்ணலாம்னு... அப்படியே யோசிச்சுட்டு இருக்குறப்பவே பாதி பேரு தீபாவளி கொண்டாட அவங்க அவங்க ஊர்களுக்கு எஸ்கேப் ஆகிட்டாங்க. அவங்களுக்கு எல்லாம் முதல்ல ஒரு பெரிய தீபாவளி வாழ்த்த தெரிவிச்சுப்போம்.

அதுக்கப்புறமா, மறுபடியும் இங்க வந்த பிறகு கண்டிப்பா எல்லாம் படிச்சு கமன்ட் போடணும்னு தண்டனை குடுத்துக்கலாம்...

அது சரி, இந்த தீபாவளிக்கு என்ன ஸ்பெசல்?


எண்ணெய் தேய்ச்சு விட ஆள் செட் பண்ணியாச்சா?

மத்தாப்பு கொளுத்த நாலு வாரத்துக்கு முன்னாடியே தயாராகிட்டீங்களா?

வீட்டுக்கு வரவங்க, அக்கம் பக்கத்து வீட்டுக்கு குடுக்க வச்சிருக்குற பலகாரத்துல இருந்து அப்பப்போ யாருக்கும் தெரியாம திருடி சாப்ட்டுட்டு இருக்கீங்களா?

ஓலை வெடிய கொளுத்தி போட்டுட்டு என்னமோ சந்திர மண்டலத்துக்கே ராக்கட் விட்ட மாதிரி பெருமையா நெஞ்ச நிமிர்த்து ஒரு பார்வை பாக்குறீங்களா?

அப்படினா கண்டிப்பா நீங்க தீபாவளி கொண்டாட ரெடி ஆகிட்டீங்கங்க...

நான் தான் இங்க என்ன பண்ணலாம்னு ரெண்டு நாளா மூளையை போட்டு கசக்கிகிட்டே இருக்கேன், எப்படிடா இந்த தீபாவளிய ஸ்பெசல் ஆக்குறதுன்னு...

கவிதை போட்டி வைக்கலாம்னு பாத்தா, ஆத்தீ.... ஏகப்பட்ட பேர் கவிதைய எழுதி குவிச்சுட்டாங்க போலயே... இந்த நேரத்துல நம்ம திண்டுக்கல் தனபாலன் அண்ணாவுக்கு ஒரு ரிக்குவஸ்ட்.... அந்த கவிதை போட்டியில கலந்துகிட்டவங்க லிஸ்ட் அப்படியே எனக்கு கொஞ்சம் தட்டி விடுங்களேன், நாமளும் அந்த பூங்கொத்துகள்ல இருந்து அப்பப்போ தேன் சுவைச்சுட்டு அப்படியே இங்க உள்ளவங்க கிட்டயும் ஷேர் பண்ணிப்போம்ல....


எங்க இருந்து எப்படி ஆரம்பிக்குரதுனே தெரியல, இந்த நாகேஷ் சொல்ற மாதிரி சொக்கா...... கையும் ஓடல, காலும் ஓடல.... ஆனா எப்படியும் இந்த தீபாவளிக்கு வகை வகையா சாப்ட தான் போறோம், அப்போ முன் எச்சரிக்கையா நம்ம தென்றல் சசிகலா அக்கா, திண்ணைல உக்காந்துகிட்டே ப்ரீயா டிப்ஸ் குடுக்குறாங்களே, கூடவே இனிப்பா கவிதையும் குடுக்குறாங்களே... அத படிச்சு, மனசுல வச்சுகிட்டே தீபாவளி பட்சணங்கள ஒரு பிடி பிடிப்போம்.


எப்பவுமே மனசு தெளிவா, அப்படியே ஒரு பூ மாதிரி மென்மையா இருந்தா தான் எதையுமே சரியா செய்ய முடியும். பதறாத காரியம் சிதறாது ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க... ஆனா நான் அழகான ரம்யமான ஒரு சூழ்நிலைல உக்காந்து ரொம்ப ரொம்ப யோசிச்சு டையர்ட் ஆனது தான் மிச்சம், அதனால முதல்ல ஏதாவது ஸ்வீட் சாப்பிட்டு எனர்ஜி லெவல இன்க்ரீஸ் பண்ணிக்குறேன். அப்படி என்ன ஸ்வீட்னு கேக்குறீங்களா? சீம்பால்ல செய்த குலோப் ஜாமூன். சீம்பால்ல குலோப் ஜாமூனா? அப்படின்னு அதிர்ச்சி எல்லாம் அடையாதீங்க, இந்தா இவங்க ரிக்கோடா சீஸ்ல எப்படி குலோப் ஜாமூன் பண்றதுன்னு சொல்லித் தராங்க, என்னான்னு கொஞ்சம் பாருங்க...

அட, அட அடடே, குலோப் ஜாமூன் சாப்ட்டுட்டே இருக்குறப்போ தான் இந்த ஐடியாவே உதிச்சுது... தீபாவளினாலே பட்டாசுக்கு அடுத்து நல்லா சாப்டவும் செய்வோம். அப்போ இந்நேரம் சாப்பாடு பத்தி போஸ்ட் போட்டா எவ்வளவு பொருத்தமா இருக்கும்?


இனி யோசிக்கவே வேணாங்க, வாங்க, இதெல்லாம் பாத்து நல்லா தெரிஞ்சுகிட்டு அதே மாதிரி செய்து குடுத்து தீபாவளிக்கு அசத்திடுவோம்....

சமைக்கவே தெரியாதவங்க முதல் முதலா ஸ்டவ் பக்கம் போய் நின்னு செய்ய வேண்டியது ரவா கேசரி


சாதம் வச்சா குழஞ்சு போகுதுன்னு பீல் பண்ணாதீங்க, அப்படியே அத வெண்பொங்கலா மாத்திடலாம்

வடை பிடிக்காதவங்க இருக்காங்களா என்ன? ஈஸியா செய்துடலாம் உளுந்து வடை 


மட்டன் மேல பிரியமா இருக்குரவங்களுக்காக ஹைதராபாத் மட்டன் பிரியாணி 


ஹைய்யோ நான் சுத்த சைவம்னு பதறுரவங்களுக்காக வித்யாசமா கத்தரிக்கா பிரியாணி 


பரோட்டோவா? அதெல்லாம் கடைல தானே செய்வாங்கன்னு கேக்குறவங்களுக்கு வீடியோ லிங்கோட இந்த பரோட்டா 


என்ன? அவ்வளவு தானான்னு கேக்காதீங்க, நான் குடுத்த லிங்க் போய் அவங்க ப்ளாக் புல்லா படிச்சு பாருங்க, அப்படியும் அங்க கிடைக்காத சமையல் குறிப்பு வேணும்னா அப்புறம் என்கிட்ட வந்து கேளுங்க, நான் ஞே.... னு ஒரு முழி முழிச்சுட்டு அப்படியே எஸ்கேப் ஆகிடுறேன்... அடப்பாவி, அப்போ உனக்கு என்ன சமையல் தெரியும்னு கேக்குறீங்களா?

வெந்நீர் நல்லா வைப்பேன். எங்க ஊர்ல அத சுடு தண்ணின்னும் சொல்லுவாங்க, பலரோட வீட்ல காப்பின்னும் சொல்லுவாங்க....

மதியம் சமையலுக்கு இப்பவே ரெடி ஆகணும், அதனால இப்போதைக்கு உங்க கிட்ட இருந்து வடை (எதுக்கு ரெடி ஆகுறேன்னு இப்போ தெரிஞ்சிருக்குமே) பெறுவது, உங்கள் பட்டாம்பூச்சி.... காயு....

22 comments:

  1. வணக்கம்
    சிறப்பான அறிமுகத்துடன் சிறப்பான வலைப்பூக்களை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் மற்றும் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. உங்களோட வாழ்த்துக்கு தேங்க்ஸ்... உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

      Delete
  2. வயிறும் மனதும் நிறைந்து விட்டது சகோதரி...

    அனைத்து பதிவர்களின் கவிதைகள் பற்றிய பதிவு விரைவில் வெளி வரும்...

    இரு தளங்கள் (Viji,alavudeen) புதியவை... நன்றி...

    அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு தேங்க்ஸ் அண்ணா...

      Delete
  3. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் என்னோட தீபாவளி வாழ்த்துகள்

      Delete
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
    subbu thaatha meenaachi paatti.
    subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் தாத்தா அண்ட் பாட்டி... உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

      Delete
  5. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ். உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

      Delete
  6. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.அருமையான பகிர்வுகள்.என் குறிப்பையும் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி. நன்றி.தகவல் தந்த தனபாலன் சாருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். உங்க பதிவு மாதிரியே இன்னும் நிறைய பதிவுகள் இருக்கு, எல்லோருக்கும் வாழ்த்து சொல்லுங்க

      Delete
  7. எவ்வளவு அழகா ஆர்வத்தக் குறையவிடாம எழுதிருக்கீங்க...அருமை காயத்ரி!
    நீங்க சொல்லியிருக்கும் தளங்கள் போய் பாத்து விதம்விதமாய் சமச்சுடலாம்...நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஹஹா எல்லா தளங்களுக்கும் போனதுக்கு ஸ்பெசல் தேங்க்ஸ், உங்களுக்கு என்னோட தீபாவளி வாழ்த்துகள்

      Delete
  8. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ். உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

      Delete
  9. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் எங்களோட இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

      Delete
  10. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! தளங்களுக்கு சென்றுவருகிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா எல்லா தளங்களையும் பாருங்க , தேங்க்ஸ்

      Delete
  11. தீப ஒளி வாழ்த்துக்கள்!!!
    இன்று எல்லாம் இனிப்பு, சாப்பாட்டுத் தளங்களா?
    சுவையாக உள்ளது இப்பதிவு.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களோட வாழ்த்துக்கு

      Delete