தீபாவளி கொண்டாட்டங்கள் ஆரம்பிச்சாச்சு. வீட்ல பெண்கள் எல்லோரும் ஸ்வீட்ஸ், காரம், பலகாரம்னு சமையல்ல பிசியா இருப்பாங்க. டிவி பாத்துட்டே அத எல்லாம் கொறிச்சுட்டு, கூடவே இந்த பேஸ் புக், ப்ளாக்ஸ் னு பாத்துட்டு இருப்பாங்க அந்தந்த வீட்ல உள்ள ஆண்கள்..... ஹே ஹேன்னு கூச்சல் போட்டுட்டு பக்கத்துக்கு வீட்டு பசங்களோட சேர்ந்து வெடி வெடிசுட்டு இருப்பாங்க, இந்த வாண்டு பசங்க எல்லோரும்... அப்புறம் இந்த இளைஞன், இளைஞிகள் எல்லோரும் என்ன பண்றாங்கன்னு யாரும் சரியா கணிக்கவே முடியாது. இது அவங்க காலம், யார் கூட தீபாவளி கொண்டாடனும்ங்குறது அவங்க தான் டிசைட் பண்ணுவாங்க....
நான் என்ன பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா?
“அவ்வாறு நோக்கினால், எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டேன்.
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம் ,
ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்..
எதிர்பாராமலே அவன்………..
எதிர்பாராமலே அவன்……. ஓ
பின் இருந்து வந்து என்னை
பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெருவாயன் – எந்தன்
வாயோடு வாய் பதித்தான்...
இங்கு பூலோகம் என்றொரு
பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி...”
இந்த பாட்ட கேட்டு மறுபடி மறுபடி அதுல லயிச்சுட்டே இருக்கேன். அப்போ தான் இவங்க என்னோட பார்வைல பட்டாங்க. என் பார்வைல தான் பட்டுட்டாங்களே, அப்புறம் அவங்கள இங்க அறிமுகப்படுத்தலனா எப்படி?
இவங்களுக்கு நாணமே வராதாம்? அப்படியா? ஏன் அப்படின்னு அவங்களே சொல்றாங்க கேளுங்க
எனக்கு ஒன்னும் பாட்டு ஞானம் எல்லாம் பெருசா கிடையாதுங்க... முதல்ல ஒண்ணு ரெண்டு லைன்ஸ் தெரிஞ்சா போதுமே, அப்புறமா அத வச்சே முழு பாட்டையும் தேடி எடுத்துடலாம்... இதுக்குன்னே ஏகப்பட்ட ப்ளாக்ஸ் இருக்கே. நாம ரசிக்கணும்ங்குரதுக்காகவே இவங்க ரசிச்சதோட மட்டுமில்லாம நமக்காகவும் எழுதி வச்சிருக்காங்க பாருங்க, பாட்டு ரசிகர்கள் கண்டிப்பா இவங்கள எல்லாம் பாலா பண்ணினா ஈசியா நமக்கு பிடிச்ச பாட்டுக்கள ரசிக்கலாம்...
அப்படினா, அவங்கள்ல சில பேர நாம இங்க உங்க பார்வைல படும்படி கொண்டு வந்தா என்னன்னு தோணிச்சு, இந்தா கடகடன்னு என்னோட பார்வைல பட்ட மூணு ப்ளாக்ஸ் இப்போ உங்க பார்வைல...
நமக்கெல்லாம் பிடிச்ச நிலாப்பாட்டு
பிடிச்ச பாட்ட ரசிக்க இசைவரிகள்
எப்பவுமே சுவைக்க தேன்கிண்ணம்
பாட்டு கேட்டு ரசிச்சேன் சரி, திடீர்னு ஒருத்தர் நீயெல்லாம் நண்பனாடான்னு அசர வைக்குற மாதிரி ஒரு கேள்விய கேட்ட மாதிரி இருந்துச்சு, அவ்வ்வ்வ் பாவம், எந்த அப்பாவி மாட்டினார்னு தெரியலயேன்னு மெதுவா உள்ள போக போறேன், நான் மட்டும் போய் அது என்ன பஞ்சாயத்துன்னு பாத்தா போதுமா, நீங்களும் வர வேணாமா? வாங்க வாங்க, போய் பஞ்சாயத்த தீர்த்து வைப்போம்
பஞ்சாயத்து பண்ண போய் எனக்கு தலையே சுத்திடுச்சு... நாளைக்கு தீபாவளி வேற, ஏதாவது புதுசா நீங்க ரசிக்க கொண்டு வரணுமே, அதனால இப்போதைக்கு அப்பீட்டு.... நாளைக்கு மறுபடியும் ரிபீட்டு.... வர்ட்டா....
பாட்டு கேட்டுட்டே தீபாவளி கொண்டாட்டமா, இனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteதேங்க்ஸ் மேடம்... ungalukum இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
DeleteSrini Vas தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள் + இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதேங்க்ஸ் அண்ணா... :)
Deleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்
புதிது புதிதாய் தேடி பகிரும் உங்கள் உழைப்பை பாராட்டுகிறேன்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteம்ம்ம்ம் தேங்க்ஸ்... உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Deleteதீப ஒளி வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஇன்று எல்லாம் இனிய பாட்டுத் தளங்களா?
சுவையாக உள்ளது இப்பதிவு.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
-கலையன்பன்
[பாடல் பற்றிய தேடல்]
தேங்க்ஸ் :)
Deleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்
கடந்த ஒரு வாரமாக உங்களது பனி மிகவும் சிறப்பாக இருந்தது காயத்திரி....வாழ்த்துக்கள், மென்மேலும் வளர.
ReplyDelete