Saturday, November 2, 2013

இது நம்ம தீபாவளி....


நேத்து ராத்திரி நல்லா பட்டாசு வெடிச்சிருப்பீங்க, இந்த அதிரசம், முறுக்கு, உன்னியப்பம் எல்லாம் சாப்ட்டுருப்பீங்க, அப்படி சாப்டலனா ஏதாவது பேக்கரில இருந்து பால்கோவா, ஜாங்கிரி, லட்டு, மிக்சர்னு வாங்கி ஆச ஆசையா சாப்ட்டுருப்பீங்க.... என்னமோ எல்லாம் பாத்த மாதிரியே சொல்ற, உனக்கு இதெல்லாம் தெரியுமான்னு கேக்குறீங்களா? பின்ன, நேத்துல இருந்து இந்த பக்கம் யாரையும் காணோம், இப்பவும் எட்டிப்பாப்பீங்களா மாட்டீங்களான்னு தெரியல, ஆனாலும் நான் என் கடமைய செய்து தானே ஆகணும்....

ஆனா ஒண்ணுங்க, நல்ல நாளும் அதுவுமா ஆன்-லைன்ல இல்லாம குடும்பத்தோட கொண்டாடுற எல்லோருக்கும் ஒரு பெரிய ஓ...... போட்டுக்குறேன் முதல்ல....

அப்புறம், இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு, இத்தனநாள் என்னை பொறுத்துகிட்டு சகிச்சுகிட்டு, இருந்த உங்க எல்லோருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

இத்தன நாள், எனக்கு ரொம்ப தெரிஞ்ச, அப்புறம் தெரியாத பதிவர்கள தேடி தேடி இங்க கொண்டு வந்து சேர்த்தேன். ஆனா இப்போ அப்படி யாரையும் தேடி ஓடப் போறதில்ல... இங்கயே, நமக்குள்ள நல்லா அறிமுகமானவங்க எல்லாம் எப்படி தீபாவளி கொண்டாடுறாங்க, தீபாவளி பத்தி என்னதான் சொல்றாங்கன்னு எல்லாத்தையும் கொண்டு வந்து கொட்டப் போறேன்.

அப்படி கொட்டுறதுக்கு முன்னாடி ஒரே ஒரு புதுமுக அறிமுகம்... ஆனா நான் கண்டுபிடிக்குறதுக்கு முன்னாடியே நம்ம திண்டுக்கல் தனபாலன் அண்ணா அங்க அட்டனன்ஸ் போட்டுட்டாங்க. சோ அவருக்கு பழசு, நமக்கு புதுசு. இந்த ப்ளாக்ல அப்படி என்ன இருக்குனு கேக்குறீங்களா?

திரைக்கதை முதல் திரைப்படம் வரை ஒரு கதைய அணுஅணுவா எப்படி உருவாக்குறதுன்னு சொல்லிக்குடுக்குறார். திரைக்கதை மேல ஆர்வம் இருக்குறவங்க வாங்களேன், ஒண்ணா கைக்கோர்க்கலாம்னு கூப்டுறார்... போய் தான் பாருங்களேன்.
கனவுப்பட்டறை


இந்த தீபாவளி எதனால வந்துச்சு, எப்படி வந்துச்சு, அப்படின்னு ரொம்ப ரொம்ப சிம்பிளா விளக்குறாங்க மீரா அம்மா... கண்டிப்பா படிச்சு பாத்துடுவோம்

சரி சரி, இப்போ தீபாவளி கவிதைகள்ல ரெண்டை பாக்கலாம்

ஒருநாள் அசுரன் அழிந்ததனால் திருநாள் தீபாவளி வந்திடுச்சாம்... அது ஏன்னு அருணா செல்வம் அண்ணா சொல்றாங்க, கேளுங்க கேளுங்க...

கூடவே நாம எப்போ என்ன பண்ணினா சிவக்குமார் அண்ணா நமக்கு தீவாளி வாழ்த்து சொல்வார்னு பாக்கலாம் வாங்க...

அப்புறம், தீபாவளிய கலகலப்பா கொண்டு போக வேணாமா? அதுக்கு தானே இவங்க எல்லாரும் இருக்காங்க. இவங்கன்னா யார் யாரு?

எல்லாம் நமக்கு நல்லா தெரிஞ்சவங்க தாங்க... இவங்கள பத்தின அறிமுகம்னு எதுவுமே நமக்கு தேவையில்லை, அப்படி நான் ஏதாவது சொன்னா அது அதிகப்ரசங்கி தனமா தான் இருக்கும். அதனால கப்சிப்ன்னு வாய மூடிட்டு, லிங்க் மட்டும் தரேன், என்னன்னு நீங்களே பாருங்க...

அதுல பாருங்க, எல்லாருமே அவங்கவங்க அனுபவங்கள சொல்றாங்க, அதுவும் ரொம்ப ரொம்ப சுவாரசியமா சொல்றாங்க.... நீங்க ஏற்கனவே படிச்சிருப்பீங்க, ஆனாலும் மறுபடியும் படிக்கலாம் வாங்க.

தீபாவளி: பொட்டுவெடி டூ பொக்ரான் குண்டு 

உல்லாசம் பொங்கும் இனிய தீபாவளி 

ஏப்பி டிவாலி

என்ன, இதெல்லாம் படிச்சிட்டீங்களா? இல்ல இனி தான் படிக்கனுமா? படிச்சிட்டீங்கனா சந்தோசம், மகிழ்ச்சி... இல்லனா படிச்சிடுங்க, ரொம்ப சந்தோசப்படுவேன்...

அப்புறம், மதியமா எல்லோர் வீட்லயும் கறிக்குழம்பு தான் விசேசமா இருக்கும். நல்லா சாப்பிடுங்க, சாப்ட்டுட்டு தெம்பா இருங்க, நாம அடுத்த பதிவுல பாக்கலாம்...

30 comments:

  1. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

      Delete
  2. ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரே மாதிரி சொல்லாதீங்கண்ணே... கொஞ்சம் மாத்தி யோசிங்க... வித்யாசம் வித்யாசமா think பண்ணனும்

      Delete
  3. அனைத்தும் சிறந்த தளங்கள்... அனைவருக்கும் உங்களுக்கும்
    இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ் அண்ணா... உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  4. ..

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ்.. சுப்பு தாத்தா... உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  5. நன்றி காயத்ரி தேவி... அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா, உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் ஆன அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  7. தீபாவளி ஆரம்பித்து அக்கம் பக்கத்து பொடிசுகள் பட்டாசு விடுவதையும், அம்மாவின் கைமணத்தில் ப்ஜ்ஜி ஸ்மெல்லையும் அனுபவித்தபடி வலைக்கு வந்தால்... இங்கே பட்டாம்பூச்சி என் தளத்தையும் சிறப்பிச்சு சொல்லியிருக்காங்க. ரொம்ப ஹேப்பியா இருக்கும்மா. இந்த இனிய நாள்ல உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா... உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  8. வலைச்சர இந்த வார ஆசிரியருக்கும், வாசகர்களுக்கும் மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்:

    வலைச்சர குழு.....

    ReplyDelete
    Replies
    1. :) thank you... எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

      Delete
  9. அனைவருக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ்... உங்களோட தீபாவளி வாழ்த்துக்கு

      Delete
  10. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்த ஏத்துக்க லேட் ஆனதுக்கு சாரி, அண்ட் வாழ்த்திய உங்களுக்கு தேங்க்ஸ்

      Delete
  11. மங்களம் பொங்கும் திருநாளாக
    மனதினில் இந்நாள் நிலைத்திடவே
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
    அனைவருக்கும் என் இனிய
    தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க

      Delete
  12. மகாவீரர் முக்தி அடைந்த இந்நந்நாளில் தீபம் ஏற்றி வழிபடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா தீபம் ஏற்றி வழிபட்டாச்சு. நன்றி

      Delete
  13. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு நன்றி

      Delete
  14. தீப ஒளி வாழ்த்துக்கள்!!!

    இன்று
    அழகிய
    அறிமுகங்கள்-
    மிக்க
    நன்று.

    பாட்டு ஒற்றுமை - 5
    கலையன்பன்
    ...இது பாடல் பற்றிய தேடல்!

    ReplyDelete
    Replies
    1. உங்களோட பாராட்டுக்கு நன்றிங்க

      Delete
  15. சிறந்த பதிவிது.
    தங்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகட்டும்!

    ReplyDelete
    Replies
    1. உங்களோட வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் பெரிய தேங்க்ஸ் :)

      Delete