Tuesday, November 12, 2013

கவிதைநதியில் நீந்தலாம் வாங்க


இனிய காலை வணக்கம் அனைவருக்கும்....
எல்லோரும் அழகாக ஒவ்வொரு நாளையும் ஒருவிதமாக தொகுத்து கலக்கி இருந்தாங்க.... நான் எப்பவும் அடுத்த நாள் போடுவதை அதற்கு முந்தின நாள் இரவு மட்டுமே தயாரிக்கும் சுறுசுறுப்பு தேனீ என்பது ஊர் அறிந்த இரகசியம். என்ன போடரதுனு இரவு 12 மணிக்கு மண்டைய குடைந்து தேடிட்டு இருந்த போது (யாரோட மண்டையனு கேள்வி லேசா எட்டிப்பாக்குதா உங்க மனசுல.....சாட்சாத் என்னோட மண்டையைத்தாங்க) மோகன் சொன்னது தான் வயதைவைத்து பிரித்து போடு என்று(அவர் தீவிர ரஜினி இரசிகர்).
ஆகா...போட்டுடலாமுனு நினைக்கும் போதே எப்படி பிரிக்கரதுனு ஒரு குரல் தெளிவா அலறுச்சு உள்ள. வைரமுத்து எட்டு எட்டா பிரிச்சார்.....நாம பத்து பத்தா பிரிக்கலாமுனு முடிவு செய்து (நீ எப்படி பிரிக்கலாமுனு கேஸ் போட நினைக்கரவங்கள ஆபிஸ் ரூம்ல கூட்டிட்டு போய் கவனிச்சுக்குவாங்க நம்ம வீரர்கள்) எழுத ஆரம்பிச்சுட்டேன். இன்னைக்கு முதல் பருவமா குழந்தைப்பருவம்(1 - 10வயது) பாக்கலாம் வாங்க.
அப்பாவித்தனத்தின் மொத்த இருப்பிடம் இந்தப்பருவம்.  கிடைக்கும் துரும்புகூட மகிழ்ச்சியை மட்டுமே விதைத்துவிட்டு போகும் காலமிது. இந்தப் பருவத்தின் எல்லா பதிவுகளும் நினைவு அடுக்களில் இல்லாமல் போனாலும் எல்லோரும் ஏங்குவது இந்தப் பருவத்திற்கு தான்.
குழந்தைப்பருவத்தின் எதுவாகினும் இனிய  கவிதையாகவே தோன்றும். குழந்தை சிரிப்பது ஒரு கவிதையென்றால், அழுவது பெருங்கவிதையாகும். அவர்கள் வளர்வதே காணக் காணக் தெவிட்டாத ஒரு அழகிய கவிதைதானே......இப்ப எதுக்கு இத்தன பில்டப்புனு தோனுமே.........அப்படியே கேள்வியைத்தூக்கி ஒரு ஓரத்துல போட்டுட்டு வாங்க ........

இன்னைக்கு நாம பார்க்கப்போவது நான் ரசித்த கவிதைகளை. புதுக்கவிதைகளை விரும்பிப் படித்தாலும் மரபுக்கவிதை மீது தீராத காதலுண்டு எனக்கு. மரபுக்கவிதை எழுத பாடம் நடத்திய கபிலன் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன். அவரது திருக்குறள் வகுப்பில் அறிந்து கொண்டது ஏராளம். அவரது புலமை வியக்கத்தக்கது. இப்ப என் கதைக்கு வருவோம் வாங்க. மரபுக்கவிதை கத்துகிட்டாங்க போல சூப்பரா எழுதுவாங்கனு நீங்க நினைத்தா பெரிய பல்பு உங்களுக்கு தான். ஐயாவே அசந்து போய்ட்டார் இப்படியும் ஒரு மாணவியானு.(வஞ்சப்புகழ்ச்சினு தெரியக்கூடாதுனு நான் வேண்டிக்கரது உங்களுக்கு கேட்கல தானே)..
நிறைய பேருடைய எழுத்துக்களை நாம படிச்சுட்டே வரும் போது சில எழுத்துக்கள் நம்மை அப்படியே கட்டிப் போட்டுவிடும். “என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்” அப்படினு உள்ளுக்குள்ள பாட்டு ஓட ஆரம்பிச்சுடும். அப்படி நான் ரசித்த 5 பேருடைய கவிதைகளை இன்னைக்கு பார்ப்போம்.
1) க. உதயகுமார்
யாருமற்ற வனத்திலும் மரங்கள் பூக்கின்றன. காட்டு மரங்களுக்கு யாரொருவரும் தேவையில்லை” இந்த வாசகத்தோடு அறிமுகம் ஆகும் க.உதயகுமார் எழுத்துக்களால் அசர வைத்துவிடுவார். இவரது ஆழ்மனக் குறிப்புகள் வலைப்பக்கம் நம் மனதை மெளனமாக்கிவிடும் சில நிமிடங்கள்.
இவரது வழியனுப்புதல் சுலபமில்லை கவிதை படித்துவிட்டு இவர் எழுத்துக்களுக்கு இரசிகை ஆகிவிட்டேன்.இதில் வரும் ஒவ்வொரு வரியும் அப்படி ஒரு வழியனுப்பதலுக்காக ஏங்க வைத்துவிடும் மனதை.
இவர் சமீபத்தில் எழுதியதில் மிகவும் கவர்ந்தது
இலையின் இயல்பற்ற இதயம் : இதில் இவர் கையாண்டு இருக்கும் வார்த்தைகள் இவரது புலமையை பறைசாற்றும். அதில்வரும்
 நதிவழி நீந்தும் 
 இலைபோல்
 
 லாவகம் வருவதில்லை
 
 விதிவழி வற்றும் வாழ்வில்
"  என்னை மிகவும் கவர்ந்த வரிகள்.
முகத்தில் துப்பிச்சென்ற
உண்மைகள் அனைத்தையும்
நக்கி முடித்தாகிவிட்டது 

மிடறு மிடறாய்
குடிக்க
வலியெதுவும்  புதிதாய் இல்லை

என்ற வரிகள் நம்மை ஒருநிமிடம் செயலிழக்க செய்துவிடும். இவரது கவிதைகள் போலவே கட்டுரைகளும் மனதை கவரக்கூடியவையே. எல்லோரும் தவறாது படிக்க வேண்டியதாக நான் கருதுவது.
இவர் புதியநடையில், வித்தியாசமான கோணத்தில் அழகாக சித்தரிக்கிறார் எண்ணங்களை. கண்டிப்பாக குறுகிய காலத்தில் விண்ணைத்தொடுவார். இவர் எழுத்து அதைச் செய்யும் என்பதில் ஐயமில்லை எனக்கு.
------------------------------------------------------------------------------------------------------
 2) சசிகலா பாபு

காற்றோடு என்ற வலைப்பக்கத்தில் தன் எண்ணங்களை கவிதைகளாக பகிர்ந்து வருகிறார். இவரது கவிதைகள் முற்றிலும் புதிய கண்ணோடத்தில் இருக்கும். இவர் எழுதும் இரவுக்கவிதைகள் இரவின் மேல் மிகுகாதலை உண்டாக்கிவிடும். சூழல்களை அழகாக கவிதையாக்கி வியக்க வைப்பார். இவரது வார்த்தையாடல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இவர் எழுத்துக்களை படித்துவிட்டு பாதிக்கப்படாமல் நகர்வது எள்ளலவும் சாத்தியமில்லை. எழுத்துக்களால்  மனதையாளும் சசிகலாவில் கவிதைகளில் எனக்கு பிடித்த சில கவிதைகளை உங்களுடன் பகிர்கிறேன்.
முகம் கவிதையில் ஐந்தே வரிகளில் அன்பை புரியவைத்து இருப்பார். என்னைப் பொருத்தவரை இதைவிட பொருத்தமாக அன்பை வெளிப்படுத்த இயலாது.
உறைந்த பெண்மை கவிதை ஒரு சிற்பத்தை பற்றியது. சிற்பத்தின் அழகில் சில நொடிகள் மயங்கி, வியந்து செல்லும் எவராலும் இவரைப் போல் அழகாக கவிவிடிவாக்க முடியுமா என்றால் சந்தேகமே?? சிற்பியின் விரல்களை புகழுகையில் இவர் பயன்படுத்தும் “சமரசமில்லா கலைநயமும்” வார்த்தையில் மனம் மயங்கித்தான் போகிறது.
கல்லாய் உருக்கொள்ளுதல்
பெண்மைக்கான மறைசேதியோ
இந்த வரிகள் பெண்ணின் மனதை அழகாக படம் பிடித்து காட்டுகிறது. இந்தக் கவிதையை முடித்தவிதம் மனதுக்குள் இவரைப் பற்றிய பிரமிப்பை பலமடங்கு கூட்டி விடுகிறது.
எது காரணி என்ற கவிதையில் சித்தாளின் மழலை சலனமில்லாமல் அத்தனை சத்தங்களையும் கடந்து அமைதியாக தூங்குவதை வர்ணித்து இருப்பார். கவிதையின் மகுடமாக இறுதிவரிகள் இருக்கும். இவர் கையாண்ட உவமை இந்தக் கவிதையை மறக்கமுடியாத ஒன்றாக்கி விடுகிறது. இவரது புகழ் தரணியெங்கும் பரவ மனமார வாழ்த்துகிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------
 3. ஆத்மார்த்தி
பத்திரிக்கை துறையில் வளர்ந்து வரும் எழுத்தாளரான ஆத்மார்த்தியின் கவிதை வரிகள் நமது வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தை நம் கண்முன்னே நிறுத்திவிடும். இவரது சில கவிதைகளை மனம் பல மணிநேரம் அசை போடுவதும் உண்டு. இவரது எழுத்து நடை எளிமையாகவும், பிரமிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். கவிதையின் தலைப்பே நம்மை படிக்கத்தூண்டும் வகையில் வித்தியாசமானதாக வைப்பது இவரது தனித்தன்மை .உதவும் மனப்பான்மையுடன் பழகுவதற்கு இனிமையான மனிதர் இவர். இவரது பாவனை, நம்பிக்கை கவிதைகள் நமது கவனத்தை இவர்மேல் திருப்பிவிடும். நான் இரசித்த இவரது கவிதைகளைப் பார்ப்போம்.
ஊரோடி கவிதையின் பெயரே படிக்கும் ஆவலைத்தூண்டி விடும். இந்தக்கவிதையின் ஒவ்வொருவரியும் பல கதைகளைச் சொல்லும்.
அவனது பயணக்குறிப்புக்கள்
நீங்கள் அறியாததைப் போல்
நீங்கள் பிரார்த்திக்கிற கடவுளர்கள்
பேசாதிருக்கிற
பிரகார இருள்மூலைகளில் முட்டித் திரும்புகிற
வவ்வாலினது போல வேறொரு பயணம் அவனது
இந்த உவமை சில நொடிகள் பேச்சிழக்க செய்துவிட்டன. இந்தக் கவிதை எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒன்று. இந்தக் கவிதையை முடித்த விதம் மனதை அள்ளுகிறது.
நதிபுதைதல் கவிதையில் நதியை பற்றி பல கோணங்களை சொல்லி இருப்பார். என்னைக் கவர்ந்த வரிகள்
நினைக்கையிலெல்லாம்
ஞாபகத்தில் முண்டுகிறது
ஆயிரம் நதி
.
"
ஆழப்புதைய
"
என்கையில் மட்டும்

ஒன்றையுங் காணோம்
வினவு பகை  கேள்விபதில் போல் அமைந்திருக்கும் இக்கவிதையில் ஒவ்வொரி வரியும் எனக்கு மிகவும் பிடித்தவை.
"எங்கே உறங்குவாய்?" என்று கேட்கிறீர்கள்
"
யாருடைய கனவிலாவது" என்கிறேன்"
நம்பவா போகிறீர்கள் என்று முடித்து இருக்கும் விதம் பாராட்டுக்குரியது. இவர் மிகப்பெரிய புகழ் பெற்று எல்லா வளத்துடன் வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
 4. அமுதா சுரேஷ்
மனசு என்ற வலைப்பக்கத்தில் உணர்வுகள் என்ற தலைப்பின் கீழ் இவர் எழுதுபவை மனதை கொள்ளை கொள்கின்றன. மரத்தை பாதுக்காக்க கோரி பல கவிதைகளை படைத்துள்ளார். பல்வேறு உணர்வுகளை தனது எழுத்துக்கள் மூலம்  அழகாக படைக்கிறார். இவரது கவிதைகளில் மிகவும் கவர்ந்த சிலதை உங்களுடன் பகிர்கிரேன்.
மரம் இந்தத் தலைப்பில் இவர் எழுதிய வரிகளில் மிகவும் கவர்ந்த வரி
ரக் காதலியை வெட்டி
வீழ்த்தியப்பின் - அவள்
மேகக் காதலனிடம்
 
உயிர் பிச்சைக் கேட்கிறது

உலகம்!”


நாம் கவிதையில் ஒவ்வொரு வரியும் ஏதோ ஒரு வலியை எழுப்பிச் செல்கின்றன. முடித்தவிதம் மனதை விட்டு இன்னும் அகலவில்லை.
"நானும் நீயும்
நாமில்லை
-
நானெனும் நானும்

நீயெனும் நீயும்

விலகும்வரை!"
 வாழ்க்கையின் தத்துவத்தை அழகாக எடுத்துச் சொல்லும் வரிகள் இவை
அதற்குப்பிறகு ஒன்றுமில்லை இதில் நமது இன்றைய வாழ்க்கையை அழகாக சொல்லியிருப்பார். இதில் படித்தவுடன் கவர்ந்த வரி நெடுவானத்தில் ஒன்று
மறைந்த பிறகு
விடியல் ஒன்று

தோன்றவேயில்லை”

இவர் மேன்மேலும் எழுதி எல்லோர் மனதிலும் நிலைபெற வாழ்த்துக்கள்
------------------------------------------------------------------------------------------------------------------
 5. அரங்கன் தமிழன்

இவர் அரங்கன் தமிழ் அலைவரிசை என்ற வலைப்பக்கத்தில் தனது கவிதைகள் மூலம் நம்மை சிலநிமிடங்கள் சிந்தனைகளுக்குள் புதைய வைக்கிறார். “நம்மை போல ஒருவன்” என்ற நினைவு இவரது எழுத்துக்களை படிக்கும் எல்லோருக்கும் தோன்றக்கூடிய ஒன்றாகும். இப்படியும் சிந்திக்க முடியுமா என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஆற்றலே இவரது தனித்தன்மையாகும். இவரத்தில் எழுத்தில் நான் மிகவும் இரசித்த சிலதை உங்களோடு பகிர்கிறேன்.
நான் வசிக்கும் வீதி இந்தக் கவிதையில் வீதியில் நடக்கும் அவலங்களை எல்லாம் பட்டியலிட்ட பிறகு இவர் முடிக்கும் பாணி நம்மை அப்படியே கட்டிப்போட்டு விடும்
மற்றபடி
இந்த வீதியில் ஒருவனாய்
வாழ்வதில் எனக்கொன்றும்
முறையீடல் இல்லை…!
வீதியைப் பற்றி இவர் எழுதிய இன்னொரு கவிதை வீதியை நிரப்புகிறேன்.
இக்கவிதையில் தன் வாழ்வில் வீதியின் முக்கியத்துவத்தை அழகாக விளக்கியிருப்பார்.
அணிலின் கடைசி சுவாசம் இக்கவிதையில் தன் வண்டியில் அடிப்ட்டு இறந்த அணிலைப் பற்றி குறிப்பிட்டு வாழ்க்கை ஓட்டத்தில் அதுவும் மறந்து போகும் என்ற உண்மையையும் உணர்த்தி இருப்பார். அக்கவிதையில் மிகவும் கவர்ந்த வரிகள் இவை.
பின்னொரு நாளில்,
பெருந்துயர் காலத்தில்,
பாவமென்ன செய்தோமென
பட்டியலெடுத்து நிரடுகையில்

நிச்சயம் இச்சம்பவம்
நினைவுக்கு வராமல் போகும்...!
இவர் நிறைய எழுதி புகழ் பெற வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------------------------------------
இனி நாளை சந்திப்போம் தோழமைகளே....நாளைக்கு என்னனு கேட்டப்போறீங்களா?????? அது எனக்கே தெரியாதே. ஆனா ஒன்னு தெரியும்..என்னன்னா......” உங்க கண்ணுல இரத்தம் வரும் வரை என் எழுத்து ஓயாது”  என்ற வீர வசனத்தோடு இன்று விடை பெறுகிறேன். நன்றி ....வணக்கம்.

 

 

33 comments:

  1. எழுத்து வனத்தை அலசி வெளிவந்த காற்று போல வலைப்பூக்களின் வாசத்தைப் பகிர்ந்த விதம் வியப்பு. இன்றைய அறிமுகத்தில் ஆத்மார்த்தி அவர்களின் பக்கத்தை மட்டுமே அறிந்திருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. :) நன்றிங்க. தொடர்ந்து வாசித்து கருத்துக்கள் சொல்லுங்க கண்ணன்

      Delete
  2. கவிதை உள்ளம் கொண்டவரே வருக வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க. திருப்பூர்னா....ஒரே ஊர்காரங்க ஆகிட்டோம் இப்ப.

      Delete
  3. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. நான் அப்படியே மயங்கிட்டேன்... சூப்பர் அறிமுகங்கள்.... எல்லோரையும் போய் கண்டிப்பா பாக்கணும்

    ReplyDelete
    Replies
    1. :) ரொம்ப மகிழ்ச்சிடா........தொடந்து இந்த வாரம் முழுவது வா.......

      Delete
  5. அறிமுகம் செய்யப்பட்டுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். ரசித்த கவிதை வரிகளையும் குறிப்பிட்டு அறிமுகம் செய்துள்ள விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க

      Delete
  6. கவிதை நதியில்
    நீந்தலாம் ... வாங்க!...
    அழைப்பின் பேரில் வந்தவன்
    ஆழ்ந்து தான் - போனேன்!..

    அறிமுகம் செய்யப்பட்ட தளங்கள் அனைத்தும் அருமை!... மிக்க மகிழ்ச்சி!..

    ReplyDelete
  7. சிலர் படைப்புகளை வாசிப்பதோடு நிறுத்துக் கொள்வார்கள் . அதில் ஒன்றும் பிழையில்லை . "வாசிப்பது தான் என் நோக்கம் , படைப்பாளியை கொண்டாடுவது எனக்கு தேவையில்லாத வேலை " என்ற வாசகரின் வாதத்தில் ஒரு சதவிகிதம் கூட குறை கூற இயலாது ....

    ஆனாலும் படைப்பாளி என்பவன் எங்கேனும் யாரேனும் தன் படைப்பை கூர்ந்து கவனித்து முதுகில் தட்டி உச்சியில் முத்தமிட்டு சிலாகிக்கும்போது அவன் இன்னும் இன்னும் ஊக்கம் பெறுகிறான் . அந்த ஊக்கம் தான் மேலும் மேலும் அவனை நகர்த்திச் செல்கிறது . மனசு விட்டு பாராட்டவும் , தனக்கு பிடித்த பதிவர்களை பற்றி எழுதவும் செய்திருக்கிற சகோதரி அனிதா அவர்களின் வாசிப்பிற்கும் பாராட்டுக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள் .

    எனக்கு ஆத்மார்த்தி அவர்களை முன்னமே தெரியும் . இன்றைக்கு உங்கள் மூலமாக இன்னும் மூன்று கவிஞர்களை கண்டுகொண்டேன் . தொடர்ந்து அவர்களையும் வாசிப்பேன் .

    உங்களின் பிவரும் அனைத்து பதிவுகளும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் !!!

    நேசப் பிரியங்களோடு ,
    க.உதயகுமார்

    ReplyDelete
    Replies
    1. நன்றி உதய்......அப்படியே என்னோடதும் படிங்க.....

      Delete
  8. அன்பின் தங்கை...

    கவிதை ஆசிரியர்களை அழகாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.
    சென்று படிக்கிறேன். அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார் அண்ணா...படித்துவிட்டு கருத்தை பகிருங்கள்

      Delete
  9. அருமையான கவிஞர்களின் தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! சென்று வாசித்து வருகிறேன்! மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தொடந்து வாசியுங்கள் சுரேஷ்.....நன்றி

      Delete
  10. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. ஆத்மார்த்தியின் கவிதைகள் பத்திரிக்கைகளில் படித்துள்ளேன் மற்றவர்கள் புதிதே... சென்று பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. படித்துவிட்டு கருத்துக்களை பதியுங்கள்.........அவர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும்

      Delete
  11. வாழ்த்துகள்......

    அனைவருமே எனக்குப் புதியவர்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. கவிதைக்காரர்களின் கவிதைகளை ஆழ்ந்து படித்து பதிவில் வெளிப்படுத்திய விதம் இரசிக்கும்படியிருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நிஜாமுதீன்.

      Delete
  13. அறிமுகப்படலத்தில் அமர்க்களப்படுத்திய அனிதா அதனை தொடர்ந்து கவிதைநதியில் நீந்தலாம் வாங்க என அழைத்து கவிஞர்களின் படைப்பின் மிக அற்புதமான வரிகளை எடுத்துக்காட்டி யாவரையும் கவிதை நதியில் நீந்தவைத்திருக்கும் விதம் மிக அருமையாக உள்ளது. இன்றய சரத்தில் இடம்பெற்ற மலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மிக மிக அற்புதமாக தொகுத்து வழங்கிய அனிதா அவர்களுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. மிக அருமையான அறிமுகம். எனக்கு எல்லோருமே புதிது. எப்படி நன்றி கூறுவதென்று தெரியவிலை. என் வாசிப்பின் விளிம்புகளை அதிகப்படுத்திய தோழிக்கு. ஒவ்வொருவர் கவிதைகளும் உன்னதம்.எந்த கவிதையை குறிப்பிட்டு சொல்ல! எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஒவ்வொருவருக்கும். எனது தோழிக்கு எனது நன்றிகள் பலப்பல...!

    ReplyDelete
  16. நன்றி அனிதா! உங்களிடம் ஆழ்ந்த வாசிப்பு இருக்கிறது!

    ReplyDelete
  17. முத்தான 5 கவிஞர்களை சத்தான தமிழில் சுவையுடன் பகிர்ந்தளித்துள்ளீர்கள். இதில் நான் பெரிதும் விரும்பும் கவிஞரான ஆத்மார்த்தி அவர்களும் இடம் பெற்றிருந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.. கவிதை எனது விருப்பம் என்பதால் கவிதையால் இந்த கட்டுரையை அலங்கரித்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நிலா தமிழன்.

      Delete