Tuesday, November 19, 2013

முகம்மது நவ்சின் கான்- கீழக்கரை ராசாக்கள் (இரண்டாம் நாள் )

அஸ்ஸலாமு அலைக்கும் ! 
அன்பார்ந்த சகோதர ,சகோதரிகளே . நேற்று என்னுடைய அறிமுக பதிவை வாசித்து பின்னோட்டமிட்ட  அனைவருக்கும் என்  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
                                     
படித்ததில் பிடித்தது:

                                    

சுமை தாங்கியின் சுமைகள்

மங்கிய
பார்வையிலும்,
மழுங்கிய வார்த்தைகளாக..
நலிவை அடைந்து,
வலிமை இழந்து,
பொலிவைத் தொலைத்த..
ஒரு 'முதியவரின் அறைகூவல்'
இங்கு
கண்ணீர் துளிகளால்
நதியாகி நனைக்கிறது.!


காலம் களவாடிய மிச்சம் நான்..
காலன் உறவாடும் எச்சம் நான்...
சொந்தம் விரட்டிய சோதனை நான்..
பந்தம் துரத்தும் பரிதாபம் நான்...

நாடி தளர்ந்த,
வாழ்க்கையின் விளிம்பில்
நாதிகள் இல்லாத சாதியில் நான்...

வாலிப முறுக்கில்,
வாழ்வாதாரம் சேர்த்தேன் உறவுக்கு..
வயோதிக சறுக்கில்
வாழ்க்கை சக்கரம் சேர்த்தது - என்னை தெருவுக்கு.??


மழலையாய்
மார்பில் உதைத்த பிஞ்சுக் கால்கள்
மறுபடியும் உதைக்கிறது..
மரித்துப் போவென்று !

கொஞ்சி விளையாடி
குதூகளித்தப் பாசக் கரங்கள்
காத்து நிற்கிறது..
கொல்லப் போகிறேனென்று !

தவமாய் தவமிருந்து
பெற்றெடுத்த பிள்ளைகள்,
தத்துக் கொடுத்தது..
முதியோர் இல்லத்தில் !
அவர்கள் முடிவாய்
மறந்தே போனது ...
முன் பதிவில் - முதியோர் இல்லம்
தனக்கும் உண்டென்று .!?


சுண்டிப் போன
சரீரத்தின் சுழிவுகளில் - மண்டியிடும்
சோகங்கள் சாபங்களானால்
சரித்திரங்கள் - ஒரு நாள்
சாட்சிகளாகும் !

பெற்றவர்களை
தனிமையின் புழுக்கத்தில்
தவிக்க விட்டு,
கடல் தாண்டும் கணவான்கள்
பசிக்கும் கூட பிச்சையிடவில்லை.??


மகனே
சோறு வேண்டாம்.?
பாசம் தா..
பசித்தாலும் பிழைத்திருப்பேன்.!

முதியோர்
இல்லம் வேண்டாம்.?
இருட்டறையிலாவது
இருக்க ஓரிடம் தா..
இறந்தாலும் இன்பமாயிருப்பேன்..!

பிள்ளைகளோடு
களித்த கடைசி நிமிடங்களால்...

கேள்விக் குறியாய்,
வளைந்து போன - என் கூன் முதுகில்
இன்னும் ஏற்றப்படாத சுமைகள் எத்தனையோ ?

பெற்றோர் கண்ணீர்
துடையா பிள்ளைகள்,
அடையா சொர்க்கம்
அணுவளவும்..

பெற்றோர் பழிச்சொல்
பிள்ளைகளானால்,
அடையும் நரகம்
அனு தினமும்...



பெற்றோர் பேணுவோம்..
சொர்க்கம் காணுவோம்...
   
♥..கீழை இளையவன்  ..♥



இன்றைய அறிமுகங்கள்:

எனக்குப் பிடித்த சில எங்க ஊர் வலைப்பதிவுகள். நான் முதலில் அறிமுகப்படுத்துவது  "கிங்டொம் ஒஃப் கீழக்கரை"



எனது கல்லூரி நண்பர் "அப்துல் ரஹ்மான் "கிங்டொம் ஒஃப் கீழக்கரை"  என்கிற பெயரில் வலைப்பக்கத்தை  உருவாக்கி பல்வேறு தொழில்நுட்ப பதிவுகளை எழுதி வருகிறார்.

இவர் எழுதி சில பதிவுகள்:

Hard Disk இனை மென்பொருள் இல்லாமல் Partition செய்வது எப்படி? என்று அழகாகவே புரியும்படி சொல்றாரு. மற்றும் "Bike Engines" எப்படி தயாரிக்கிறார்கள் என்று அழகாகவே புரியும்படி சொல்றாரு.

இணையதளம் அழியுமானால் எற்படும் நன்மை? தீமைகள்?

 facebook,logo,social,social network,sn பேஸ்புக் சமூக வலைதளத்தில் : "கிங்டொம் ஒஃப் கீழக்கரை"  

~~~~****~~~~




அடுத்தபடியாக சகோதரர் "A.ஹமீது யாசீன்" "கீழக்கரை டைம்ஸ்" என்கிற பெயரில் வலைப்பக்கத்தை  உருவாக்கி    கீழக்கரையில்  அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தொகுத்து வருகிறார். இந்த வலைப்பக்கம் கீழக்கரை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருகிறது.

கீழக்கரை செய்திகள்:

நவ23ல் மதுரை - துபாய் நேரடி விமானம்! மகிழ்ச்சி வெளிப்படுத்திய அமீரகத்தில் வாழும் தென் மாவட்ட மக்கள்!

துள்ளி செல்லும் பள்ளி குழந்தைகளை அள்ளி அடைத்து செல்லும் வாகனங்கள்! ஆபத்து ஏற்படும் முன் முறைப்படுத்த தமுமுக கோரிக்கை!

facebook,logo,social,social network,sn பேஸ்புக் சமூக வலைதளத்தில் :  "கீழக்கரை டைம்ஸ்

~~~~****~~~~


அடுத்தபடியாக சகோதரர் கீழை இளையவன்:
 "கீழை இளையவன்" என்கிற  பெயரில் வலைப்பக்கத்தை  உருவாக்கி   கீழக்கரையில்  அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை மற்றும் கவிதைகள்,கட்டுரை  என பல்வேறு பதிவுகளை எழுதி வருகிறார்.

இவர் எழுதி சில பதிவுகள்:

  1. கீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை !
  2. கீழக்கரையில் சுவையான 'சுக்கு மல்லி காபி' - முதிய தம்பதியின் இயற்கையான தயாரிப்பில் களை கட்டும் விற்பனை !
  3. செல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் !
  4. கீழக்கரையில் கம்பீரமாக காட்சி தரும் நூற்றாண்டை கடந்த பழம் பெரும் வீடுகள்.
  5. கீழக்கரையின் அமானுஷ்ய பக்கமா..? 'அஞ்சு வாசல் கிட்டங்கி' ! (சரித்திரப் பகுதி -1)

facebook,logo,social,social network,sn பேஸ்புக் சமூக வலைதளத்தில் : "கீழை இளையவன்" 


~~~~****~~~~

"கீழக்கரை கிளாஸிபைட்"
வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் கீழக்கரை இளைஞர் : 

எஸ்.கே.வி. சேக் என்ற இளைஞர் "கீழக்கரை கிளாஸிபைட்" என்கிற பெயரில் வேலை தேடும் இளைய தலை முறையினருக்கு பயனளிக்கும் விதமாக, ஒரு சிறப்பான, வலைப்பக்கத்தை  உருவாக்கி பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வழியாகவும் கிடைக்கும் வேலைவாய்ப்பு செய்திகளை இப்பக்கத்தில் அன்றாடம் தொகுத்து வருகிறார். 

 facebook,logo,social,social network,snபேஸ்புக் சமூக வலைதளத்தில் "கீழக்கரை கிளாஸிபைட்"

                                                                       ~~~~****~~~~


அடுத்தபடியாக நான் அறிமுகப்படுத்துவது  சகோதரர்  " ராஜாக்கான் என்ற கீழை ராஸா "
*சாருகேசி* என்கிற  பெயரில் வலைப்பக்கத்தை  உருவாக்கி கவிதை,கட்டுரை  என பல்வேறு பதிவுகளை எழுதி வருகிறார். இவர் எழுதிய என்னை கவர்ந்த சில பதிவுகள் 


  1. நீங்கள் புகைப்பழக்கம் உள்ளவரா..? இல்லாவிட்டாலும் படியுங்கள்...
  2. வெளிநாட்டில் எதைத்தேடுகிறோம்… வெளிநாட்டில் பொருள் தேடி வந்ததினால் நாம் இழந்தது எத்தனையோ... தேடிவந்த பொருள் கிடைத்தது ஆனால் தொலைத்து வந்த சந்தோசங்கள்..?
  3. விடை தெரியாத பள்ளிப் பருவக் காதல்..!
  4. இறக்கும் முன் மீண்டும் ஒரு முறை பிறக்க வேண்டும்...உலக விஞ்ஞானிகளுக்கு ஓர் வேண்டுகோள்...
  5. என் காதலும் புனிதமானது தான்…இது ஒரு சிதைந்த இதயத்தின் சிணுங்கல்…


இது போதும் என்று நினைக்கிறேன். தவறுகள், பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுங்கள்.மீண்டும் நாளை சந்திப்போம்! இந்த நாள் இனிய நாளாகட்டும்...

நாளைய தலைப்பு: தொழில்நுட்பம்


                                         ♥ ♥ அன்புடன் ♥ ♥
                                  S. முகம்மது நவ்சின் கான்.

13 comments:

  1. "..மழலையாய்
    மார்பில் உதைத்த பிஞ்சுக் கால்கள்
    மறுபடியும் உதைக்கிறது..
    மரித்துப் போவென்று !" அருமையான வரிகள்
    அறிமுகங்கள் நன்று

    ReplyDelete
  2. படித்ததில் பிடித்தது மிகவும் பிடித்தது... அறிமுகம் செய்த விதம் நன்று... அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நெடுங்கவிதை - நெஞ்சை அழுத்தியது. நிறைந்த செய்திகளுடன் இனிய அறிமுகங்கள்.. நன்று!..

    ReplyDelete
  4. அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்,,

    தொடரட்டும் உங்கள் சேவை,,,

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி.

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  5. வணக்கம்
    இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி.

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  6. //பெற்றோர் கண்ணீர்
    துடையா பிள்ளைகள்,
    அடையா சொர்க்கம்
    அணுவளவும்..//

    "தாயின் காலடியின்கீழ் சுவர்க்கம் உள்ளது" என்று முஹம்மது நபிகள் கூறிய அமுதமொழியினை நினைவூட்டியது இந்த வரிகள். மற்ற ஒவ்வொரு வரியும் சிந்தனையை தூண்டக்கூடிய வரிகளாகும்.
    நல் அறிமுகங்கள்.... தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  7. //காலம் களவாடிய மிச்சம் நான்
    காலன் உறவாடும் எச்சம் நான்//

    அடி நெஞ்சில் ஒட்டிக்கொண்டுவிட்ட வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  8. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. கவிதையுடனான அறிமுகங்கள் அருமை தம்பி.... அனைத்தும் பயனுள்ள தளங்கள்....

    ReplyDelete