Monday, November 18, 2013

ஒரு சின்ன அறிமுகம்-முகம்மது நவ்சின் கான்

உங்களை அன்போடு  வரவேற்கிறேன்..
                    
வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு இந்த வாரம் எனக்கு..

முதலில் எனக்கு வாய்ப்பளித்த "அன்பின் சீனா ஐயா"  அவர்களுக்கும், 99Likes வலைப்பதிவை, வலைச்சரத்தில் அறிமுகம் செய்த முந்தைய ஆசிரியர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்று முதல் இன்று வரை என் வலைப்பக்கத்தில் பின்னூட்டம் கொடுத்து ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் "திண்டுக்கல் தனபாலன் ஐயா" அவர்களுக்கும்,  என் பதிவுகளை வாசித்து பின்னூட்டமிட்ட அத்தனை பேருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
                 
முதல் பதிவு என்னைப்பற்றிய அறிமுகப் பதிவு என்பதால், என்னைப்பற்றியும், எனது தளத்தில் எழுதிய பதிவுகள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

என்னைப் பற்றி சுய அறிமுகம் :)

                                           

 பெயர்: S. முகம்மது நவ்சின் கான் . இராமநாதபுரம்  மாவட்டத்தில் உள்ள  கீழக்கரை  சேர்ந்தவன் ! பயில்வது இறுதி ஆண்டு டிப்ளோம கணினி பொறியியல்.மற்றும் நான் சூப்பர் மார்க்கெட்டில் பகுதி நேரம் வேலை பாத்து வருகிறன்.
                         
            கணினி தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இணையத்தில் முதலில்  "சசிகுமார்" அண்ணன் அவர்களின் வந்தேமாதரம்
 வலைப்பதிவுகள்தான் முதலில் எனக்கு அறிமுகம்.. இவர் தளதில் இருந்துதான் பல தொழில்நுட்ப பதிவுகளை எடுத்து என் வலைப்பக்கத்தில் என் பெயர் இல்லாமல் பதிவு செய்து வந்தேன்.

                 

இப்பொது நான் சொந்தம்மாக வலை பதிவு எழுத ஆரம்பித்து 150க்கு மேற்பட்ட பதிவுகளை எழுதியுள்ளேன். நான் தொடர்து என் வலைப்பக்கத்தில் புது புது தொழில்நுட்ப பதிவுகளை  எழுதி வருகிறேன் மற்றும் என் வலைப்பக்கத்தில் கட்டண மென்பொருட்களை இலவசமாக வழங்குகிறேன்.



எனக்கு மிகவும் பிடித்தது வலைபக்கத்தை அழகு படுத்துவது தான் (web design)
அப்படி நான் அழகு படித்திய என் வலைபக்கங்கள்.

               ♥♥.... தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ்  ....♥♥                                             www.99likes.blogspot.com

           ♥♥.... நேரலை தொலைக்காட்சி ....♥♥
                          www.livetv99likes.blogspot.com

                 ♥♥.... மென்பொருள்கள் ....♥♥
                                       www.software99likes.blogspot.com


என்னுடைய பதிவுகளை பற்றிய அறிமுகம் இதோ:என்னால் எழுதப்பட்ட பதிவுகள் .

  1. Folder icon -ஐ மாற்றுவது எப்படி? (வீடியோமற்றும் அருமையான 150 Folder icon -டவுன்லோட் செய்ய.
  2. கொடி கட்டிப்பறக்கும் Google-க்கு இணையாக "DuckDuckGo" எனும் ஒரு தேடியந்திரம் Search Engine தெரிந்து கொள்வோம்
  3. Torrent file-களை uTorrent மென்பொருளில் டவுன்லோட் செய்வது எப்படி? வாங்க வீடியோ பாக்கலாம் .
  4. Android application-களை கணினியில் Run செய்ய ஒரு அருமையான மென்பொருள் BlueStacks. வாங்க பாக்கலாம்.


 இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன். தவறுகள், பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுங்கள்.மீண்டும் நாளை சந்திப்போம்! இந்த நாள் இனிய நாளாகட்டும்...


                                                                         ♥ ♥ அன்புடன் ♥ ♥
                                                                 S. முகம்மது நவ்சின் கான்.

37 comments:

  1. வணக்கம்

    வலைச்சர அறிமுகம் மிக அருமை நீங்கள் சொல்வது போல திண்டுக்கல் தனபாலன் (அண்ணா) எல்லோருக்கும் ஒரு உச்சாகம் ஊட்டும் மனிதர்......இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  2. அன்பின் நவ்சின் கான் - பதிவு நன்று - அறிமுகங்கள் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  3. வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் திரு முகமது நவ்சின்கான் அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  4. திரு. முகமது நவ்சின்கான் அவர்களுக்கு நல்வரவு!..
    தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  5. மேலும் அசத்த வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி. ஐயா...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  6. உங்களது அறிமுகம் எளிமையாகவும், நன்றாகவும் இருக்கிறது. உங்கள் வலைப்பக்கத்தை பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி .. அம்மா

      Delete
  7. சலாம்.வலைச்சரம் மூலம் உங்கள் வலைப்பூவை அறிந்து கொண்டேன்.கீழையில் இருந்து நீங்கள் பதிவெழுதுவது குறித்து மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.தொழில் நுட்பபகிர்வுகள் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வா அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹு....

      தங்களின் கருத்துக்கும் நன்றி...

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  8. வாழ்த்துக்கள் நண்பரே,,

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்..

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  9. காபி ஷாபிலும், கே.எப்.சி சிக்கன் கடையிலும், ஷாப்பிங் மாலிலும், மல்டிபிளக்ஸ் தியேட்டரிலும் தங்களை பொழுதுகளை தொலைக்கும் மாணவர்களின் மத்தியிலும் சமூக அக்கறையோடு வந்துள்ள இளைஞனே வருக,, வாழ்த்துக்கள்.. உங்கள் பதிவுகளை காண ஆவலோடு காத்திருக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வுடன் நன்றி ... நிலா தமிழன் ஐயா...

      Delete
  10. கலக்குங்கள் பாஸ். . .

    ReplyDelete
  11. அட, சூப்பர் (y)

    ReplyDelete
  12. மற்றும் என் வலைப்பக்கத்தில் கட்டண மென்பொருட்களை இலவசமாக வழங்குகிறேன்

    A software pirate ???

    ReplyDelete
    Replies
    1. what boss ... i am not understanding... bro ...:)

      Delete
  13. படித்துக் கொண்டே அருமையான தகவல்களுடன் வலைத்தளம் அமைத்த உங்களுக்கு வாழ்த்துகள்! வலைச்சர ஆசிரியர் பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி.

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  14. சுருக்கமான அறிமுகம் நன்று.
    உங்கள் பணிகள்
    மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்!

    யாழ்பாவாணன் (yppubs.tk)

    ReplyDelete
  15. // பயில்வது இறுதி ஆண்டு டிப்ளோம கணினி பொறியியல்.மற்றும் நான் சூப்பர் மார்க்கெட்டில் பகுதி நேரம் வேலை பாத்து வருகிறன். //

    வலைச்சரம் பொறுப்பேற்ற தம்பி S. முகம்மது நவ்சின் கான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் அடைய இருக்கும் வாழ்வின் குறிக்கோள் நிறைவேற இறைவன் அருள் புரியட்டும்.

    ReplyDelete
  16. எளிமையான சுய அறிமுகம் மற்றும் சுருக்கமான தங்கள் தள அறிமுகம்........ வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  17. அருமையான தகவல்கள்! .... வலைத்தளம் அமைத்த உங்களுக்கு வாழ்த்துகள்! வலைச்சர ஆசிரியர் பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்!

    ஆசிரியர் : பிரியாமதி
    http://www.tnguru.com/
    Reply

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி.

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  18. அஸ்ஸலாமு அலைக்கும்,
    வாழ்த்துக்கள் தம்பி,அல்லாஹ் உங்களுக்கு எல்லா வகையிலும் அருள் புரியட்டும் எனக்கு காயல்பட்டினம்,நான் சதக் பாலிடெக்னிக்கில் DECE பிரிவில் 89-92 ல் பயின்றேன்.நீங்களும் சதக்கிலா படிக்கிறீங்க.

    ReplyDelete
    Replies
    1. வா அலைக்கும் அஸ்ஸலாம்...

      தங்களின் கருத்துக்கும் நன்றி.

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  19. வாழ்த்துக்கள் நவ்சின் கான்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கும் நன்றி.

      ♥ ♥ அன்புடன் ♥ ♥
      S. முகம்மது நவ்சின் கான்.

      Delete
  20. my dear bother am proud of you....... do well congt.............

    ReplyDelete