Tuesday, November 26, 2013

நகைச்சுவைகள்...ரசிப்போம் சிரிப்போம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், 

இன்றைய பதிவில் சில நகைச்சுவைகளையும், நகைச்சுவை பதிவர்களை பார்போம்.




ஒரு பியானோ வாசிப்பவர் முதன் முதலா ஒரு படத்திற்காக வாசித்து கொடுத்தார்.  தயாரிப்பாளரிடம் கேட்டார் “ படத்த நான் பார்காமலே வாசிச்சிருக்கேன் இந்த டியூன் போதுமா ?”
தயாரிப்பாளர் அதெல்லாம் டைரக்டர் பார்த்துப்பார்.

சரி எப்ப நான் அந்த படத்த பார்க்கலாம் படம் ரிலீஸ் செய்வாங்க அப்ப பார்துக்குங்க.

படம் ரிலீஸ் ஆச்சு, அது ஒரு மாதிரியான படம். இவரோட சேர்த்து மூன்று பேர் அவங்க ரெண்டு பேர் கணவனும் மனைவியும்.

இவருக்கு சங்கோஜமா போச்சு அவங்க கிட்ட சொன்னார்  “ நான் இந்த படத்த பார்க்க வரல என்னோட மியூசிக்க கேட்க வந்தேன்’’

கணவன் சொன்னான் நாங்களும் எங்களோட நாய் குட்டிய தான் பார்க்க வந்தோம்.

@@@@@@@@@@@@@

 நடிகை தோழியிடம் : இன்னும் ஒரு இருபத்திமூனு வருசத்துக்கு நடிச்சுகிட்டே  இருக்கனும் இதுக்கு ஏதுன்னா வழி இருக்கா?

ஒ இருக்கே சீரியல்ல நடிக்க ஒத்துக்கோ.

@@@@@@@@@@@@@

என்னய்யா இது மேடையில் சேருக்கு பதில் ஊஞ்சல் கட்டி வைச்சிருக்கு ?

அது விளையாட்டு துறை அமைச்சருக்கான சீட்டு.

@@@@@@@@@@@@@

ஓட்டு போட அப்ப எல்லாம் வாக்கு சீட்டு இருந்துச்சு
அதுக்கப்புரம் ஓட்டு மெசின் வெச்சாங்க
இப்ப ??

ஐ பேட் வைச்சிருக்காங்க

@@@@@@@@@@@@@

அவள் அவன் கன்னத்தை பார்த்து : நீங்க எத்தனை முறை சேவ் செய்வீங்க
அவன் :  ஒரு நாளைக்கு 20 - 30

அவள் : ஙே...



அவன் : என்னோட தொழிலே அதானே

@@@@@@@@@@@@@

(பெண் டாக்டரும் , வைத்தியம் பார்க்க வந்த பெண்னும்)

டாக்டர் ஏன் அந்த பேசண்ட திட்டி அனுப்பீட்டீங்க

பின்ன என்ன அவரு கதை ஆசிரியராமா எங்கிட்ட வந்து கதைக்கு கரு கிடைக்குமான்னு கேட்கறான், ராஸ்கல்.

@@@@@@@@@@@@@

ஆசிரியர்  : வெரும் வயத்தில எத்தனை இட்டிலி சாப்பிட முடியும் ?

ஒவ்வொருத்தரும் 6, 10, 12 ன்னு அடிச்சிவிட்டாங்க அதுல ஒரு பையன் மாத்திரம் சார் ஒன்னுதான் சார்.

ஆமா சார் ஒரு இட்லி சாப்பிட்டதுக்கு அப்புரம் அது வெறும் வயிரா இருக்காதே.

@@@@@@@@@@@@@

ஒன்பது நட்சத்திரங்களின் பெயர் எழுது ?

கேள்விக்கு மாணவன் எழுதிய பதில்
“நயன்தாரா”

(நமக்கு ஒன்னு விளங்கு மாணவனுக்கு இங்கிலீசும் இந்தியும் தெரிஞ்சிருக்கு)

@@@@@@@@@@@@@

டாக்டர் பக்கத்தில எதுக்கு ஒரு மந்திர வாதிய பக்கத்திலேயே
உட்கார வச்சிருக்கார்.

இறந்து போன பேசண்ட் ”ஆவியா” வந்து தொல்ல குடுக்கறாங்களாமா அதுங்கள விரட்ட தான்.

@@@@@@@@@@@@@

உன் புருசன் தொன தொனன்னு பேசிட்டே இருப்பாருன்ன அமைதியா இருக்காரு.

நேற்று தீபாவளிக்கு ஆசையா அல்வா கேட்டாருன்னு செஞ்சு குடுத்தேன்
அப்போதிலிருந்து வாயே திறக்கலையே.

@@@@@@@@@@@@@

நாம எங்காவது அவரசர வேலையா போயிட்டு இருப்போம்
இந்த எடத்துக்கு எப்படிபோறதுன்னு வழி கேட்பாங்க இப்படியும் ஒரு பொது ஜனம் ;

இங்கிட்டு போஸ்டாபீஸ் எங்க இருக்கு

ஒரு கிலோமீட்டர் தாண்டி போகனும்

இரண்டடி வெச்சவன் திரும்ப வந்தான்...

ஒரு கிலோமீட்டர எப்படி தாண்டறது ?.

@@@@@@@@@@@@@

 இன்ஸ்பெக்டர் : திருட்டு DVD யா விக்கிற நட ஸ்டேசனுக்கு

ஐயா...நான் தான் இந்த பட தயாரிப்பாளர்யா... இந்த படத்த இப்படி வித்தாதான் உண்டு.

(என்ன கொடுமை சரவணன்! )
(tks to கி.ரவிகுமார்)
@@@@@@@@@@@@@

காதலி :   நீங்க லவ் லெட்டர் குடுத்த விசயம் எங்க வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு..
காதலன் : ஹையய்யோ உன் தங்கசிக்குமா?

(#எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்! அவ்..)
@@@@@@@@@@@@@

இன்ஸ்பெக்டரிடம் : சார் “பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் காணாம போய் மூணு மாசமாகுது”
அதுக்கு நீ ஏன்யா புகார் குடுக்கிற

அந்த ஆளு புகார் குடுக்காம ஜாலியா சுத்திட்டு இருக்கான் சார்..!
(tks to shahulhamid hamid)

( அதானே அடுத்தவன் சந்தோசமா இருக்கப்படாதே ! 
என்னா ஒரு கொல வெறி !)
@@@@@@@@@@@@@
 அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்குஆகவில்லை. கடைசியாக பணம் தர
வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள்,
அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். தபால் அதிகாரிகள்
இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள்.

ஒரு விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு அதை பார்த்த ஓபாமாவுக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த
பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர்
எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும்
அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார். பணம் கிடைத்தவுடன் பைய
னுக்கு குஷி தாளவில்லை.

நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான்கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்கள்..
ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல்
அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த ஓபாமா
திருடி விட்டார்.....
(tks to Kanna Kanna)

@@@@@@@@@@@@@
மனைவி நேர தாமதமாக வீட்டிற்கு வந்தாள்... நேராக தனது படுக்கை அறைக்குச்சென்றாள்...
அங்கே,

போர்வைக்கு வெளியே 4 பாதங்கள் தெரிந்தன. உடனே ஆத்திரத்துடன் கிறிக்கெட் மட்டையை எடுத்து தனது ஆத்திரமும், அலரல் சத்தமும் தீரும் வரை அடித்தாள்.

அடித்துவிட்டு சமையலறைப்பக்கம் போனாள்...
அங்கே...

கோப்பி குடித்தபடி கணவர் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார்...
மனைவியை கண்டதும்...

"உங்க அப்பா அம்மா வந்திருந்தாங்க... நான் எமது படுக்கை அறையை அவர்களுக்கு கொடுத்துவிட்டேன்... "

tks to தமிழ்குளோன்
( வெளிநாட்டில் இது சகஜம் போலிருக்கு! )

பி.கு : நகைச்சுவைகளில் சிலவற்றில் என்னோட டச்சிங் இருக்கு

@@@@@@@@@@@@@

சிலர் நகைச்சுவைகலந்து எழுதுவார்கள் சில பதிவு மொத்தமுமே  நகைச்சுவைகளா தான் இருக்கும்

வலைத்தளம் : ஜோக்காளி,   பதிவர் : பகவான் ஜி KA

ஏக'ப்பட்ட' பத்தினி விரதனா பட்டிமன்ற பேச்சாளர் ?  இந்த தலைப்பில் ஜோக் இருந்தது அதைவிடவும் அந்த ஜோக்கில் இருந்த கேள்விக்கு பதிலை நான் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  அதற்கு அவர்  ஜோக்குன்னா ரசிக்கனும் ஆராயக்கூடாது என்கிறார்.

                                                   @@@@@@@@@@@@@
 வலைத்தளம் : வலிப்போக்கன்   பதிவர் : தோழர் வலிப்போக்கன்

                                             @@@@@@@@@@@@@
 வலைத்தளம் : அவர்கள் உண்மைகள்   பதிவர் : மதுரைத்தமிழன்


தனக்கென சீடர் கூட்டம் வைத்திருக்கும் நகைச்சுவை எழுத்தாளர்  மின்னல் வரிகள் என்ற பேனரில் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டுபவர். வாத்தியார் என அன்புடன் அழைக்கப்படும் பாலகணேஷ் அவர்கள்.
இவரின் நகைச்சுவை பதிவுகள் சிரிப்புக்கு மட்டுமல்ல சிந்தனைக்கும் விருந்து
காமெடி பதிவுகள் : ஓடுங்க இது உங்களை நோக்கி தான் வருது, (படிச்சிட்டு ஓட சொல்றாரா !)

கொசுவநாத புராணம் (வைரமுத்து ஸார் மட்டும்தான் காவியம், காப்பியம்னுல்லாம் கதைகளுக்குப் பேர் வெக்கணுமா என்ன? நாம ஏன் ஒரு புராணத்தை எழுதக்கூடாது... இது நாஞ்சொல்ல அவரே சொன்னது !)

மோகினிபிசாசும் சரிதாவும் ( பேய இவரு ஓட்டுனாரா இவர பேய் ஓட்டுச்சா..)
ஆனானப்பட்ட கனேஷ் (நகைச்சுவை சிறுகதை)
நான் ரசித்த நகைச்சுவை காட்சிகள்... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் இவை அனைத்தும் இந்த லிங்கில்.
@@@@@@@@@@@@@

 கு.ஜ.மு.க வில் பொது செயலாளராக இருக்கும்  குடுகுடுப்பை அனுபவக் கதைகளோடு இணைந்த நகைச்சுவை நம்மை யோசிக்க வைக்கிறது. அது என்ன கட்சி புதுசா இருக்கே (கு.ஜ.மு.க  = குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கலகம். (அவ்..)
சாதியும் சான்றிதழும்.
                                                    @@@@@@@@@@@@@

குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும்  என்ற தளத்தின் ஓனர் குட்டன் அவர்கள். தளத்தின் பெயரிலேயே நகைச்சுவை கொப்பளிக்கிறது.
ஷாக் அடிக்காத ஜோக்ஸ்!  சமீபத்திய பதிவு. 

                                                      @@@@@@@@@@@@@

சாதாரணமானவள் என்ற பெயரில் எழுதிவரும் சாதாரணமானவள் என சொல்லிக்கொள்ளும் அசாதாரணமானவர்.
                                                       @@@@@@@@@@@@@

இன்னொரு தளம் வம்புப்பு பையன் விநோத் , பதிவர் ஜேம்ஸ் கே.வினோத்

மிச்சம்  பத்து  ஜோக்ஸ் இந்த லிங்கில் இருக்கு 
நம்பர் போட மறந்திட்டாரா தெரியல 

                                                    @@@@@@@@@@@@@

நண்பர் சுரேஷ் தளிர் என்ற வலைத்தளத்தில் அவ்வப் போது நகைச்சுவைகளை நம்மோடு பகிர்ந்து கொள்வார்.



                                                     @@@@@@@@@@@@@

வலை : சிரிப்பு போலீஸ் பதிவர் : ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா (இது அவருக்கு அவரே கொடுத்த டைட்டில்)

கர்.தூ. இதெல்லாம் ஜோக்கா ?  (இது பதிவோட தலைப்பு !)


                                                      @@@@@@@@@@@@@

தமிழன் களம் என்ற வலைபூவை எழுதிவரும்  வேலன் வேலவன் 

ஆசிரியர் ஜோக்ஸ்

                                                    @@@@@@@@@@@@@


மெளன தேசம் என்ற வலைதளம், பதிவர் :  ரிஷி

கணவன் மனைவி கலாட்டா..! 

@@@@@@@@@@@@@

வலைப்பதிவின் பெயர் சிரியுங்கள்,  பதிவர்  : அப்புக்குட்டி PVS

வாய் விட்டு சிரிங்க.... அழைக்கிறார் இந்த பதிவில்.

@@@@@@@@@@@@@

வலைப்பதிவு : ராஜனின் மசாலா கார்னர்  பதிவர் : காளிராஜன் லட்சுமணன்

புருஷனுக்கு எது பிடிச்சாலும் … அது பொண்டாட்டிக்கும் பிடிக்கணும்..

@@@@@@@@@@@@@

யோசிப்பதற்கு இரண்டு




இந்த இரண்டு படங்களை பற்றிய தகவல்களை நாளை தெரிவிக்கிறேன்.

அன்புடன்,

கலாகுமரன்







38 comments:

  1. சுவாரஸ்யத் தோரணம்!

    ReplyDelete
  2. Interesting! I feel happy to see my introduction lovely! tks dear friend!

    ReplyDelete
  3. அருமையால்ல இருக்கு!.. அசத்துங்க!..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க துரை செல்வராஜூ

      Delete
  4. nagaichuvai virundhu piramaatham! ROFL

    ReplyDelete
  5. அருமை உங்கள் ரசனை!
    இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வயிறு வலிக்கச் சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மகிழ்ச்சி எமது மகிழ்ச்சி

      Delete
  7. பதிவர் ஜேம்ஸ் கே.வினோத்
    ஜோக்ஸ் - 11 --> இந்த இணைப்பு மட்டும் சரி பார்க்கவும்...

    நகைச்சுவை சரம் அருமை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரி செய்துவிட்டேன்.

      Delete
  8. அறிமுகம் செய்ததிற்கு நன்றி கலாகுமரன் ஜி !

    ReplyDelete
  9. அருமையான நகைச்சுவை பதிவர்களோடு என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! சிறப்பான தொகுப்பு! உங்களின் உழைப்பு புரிகிறது! தொடருங்கள்! மின்வெட்டு காரணமாக நிறைய பதிவுகள் படிக்க இயலவில்லை! விரைவில் படிக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அதே தான் எனக்கும் பிரச்சனை ஒரு பதிவு போடறதுக்குள்...நன்றி

      Delete
  10. மிக பிரபல பதிவர்களோடு என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! இங்கு அறிமுகப்படுத்தி இருப்பதை எனக்கு சொன்ன திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  11. நகைச்சுவைக் கடல்ல மூழ்கடிச்சு இருக்கீங்க...பதிவர்களை படித்துச் சிரிக்கத் தயாராயிட்டேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நகைச்சுவை ஆற்றில் மூழ்கிவிட்டேன்...

    ReplyDelete
  13. Replies
    1. நன்றி ஓட்டளிப்பிற்கும்..

      Delete
  14. அருமை....

    எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...

    அசத்தல்... தொடருங்க....

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க குமார் வருக...

      Delete

  15. வித்தியாசமான முறையில் அறிமுகம் சிரிப்புத்தோரணம் அட்டகாசம்.

    ReplyDelete
  16. சி(ரி)றப்பான அறிமுகங்கள். நன்றி கலாகுமரன்.

    ReplyDelete
  17. அன்பின் கலா குமரன் - அருமையான நகைச்சுவைகள் அடங்கிய பதிவு - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    த.ம : 6

    ReplyDelete
  18. அன்பின் கலா குமரன் - அருமையான நகைச்சுவைகள் அடங்கிய பதிவு - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    த.ம : 6

    ReplyDelete
    Replies
    1. இருமுறை ஆனால் ஓட்டோ ஒருமுறை...நன்றிங்க ஐயா.

      Delete
  19. இன்றுதான் பார்த்தேன்;எனவே தாமதமாக நன்றி தெரிவிக்கிறேன்!அறிமுகத்துக்கு நன்றி

    ReplyDelete