அனைவருக்கும் வணக்கம், இன்றைய பதிவு ஒரு தீர்வை எதிர் பார்கிறது, சமூக நிகழ்வை அலசுகிறது. இதில் நடைபெறும் உரையாடல் உண்மையே, சம்பவங்களும் உண்மையே.
இந்த உரையாடளில் கலந்து கொண்டவர்கள் நான், சுரேஷ் - தளிர் வலைத்தளம், எழில் - நிகழ்காலம் வலைத்தளம், மயிலன் (மருத்துவ மாணவர்) -மயிலிறகு வலைத்தளம், இன்னொரு சுரேஸ் - வீடு வலைத்தளம்.
தளிர் வலைத்தள நண்பர் சுரேஷ் ஒரு சம்பவத்தை சொன்னார்:
" இரண்டு நாள் முன்பு கோவிலில் பூஜை செய்துவிட்டு கிளம்பும்போது வந்து நின்றான் அவன். ஒரு ஐம்பது ரூபா இருக்குமா? இருந்தும் இல்லை என்றேன்! ஒரு இருபது!.. ஒரு பத்து..! எதுக்கு என்றேன்? அவசரமாக வேணும் ப்ளீஸ் கவனி நண்பா! என்றான். இரு வரேன் என்று பக்கத்து நண்பர் வீட்டுக்குள் நுழைந்து அவரிடம் பேசிவிட்டு பத்து நிமிடம் கழித்து வந்த போதும் வாசலில் நின்றான். பரிதாபமாக இருந்தது. 1987ல் ஒன்றாக எட்டாம் வகுப்பு படித்தோம்! பத்தாவது வரை ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் நாங்கள்! அன்று அவன் ஒரு மளிகைக் கடை அதிபரின் மகன். செழிப்பான குடும்பம். இன்று வீதியில் இப்படி போவோர் வருவோரிடமெல்லாம் காசு கேட்டுக் கொண்டு இருக்கிறானாம்! திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவனது மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது. கிடைக்கும் காசை குடித்து அழிக்கிறான். வியாபாரம் செய்வதில்லை! இவனுடைய அண்ணன்களும் இவனை கவனிப்பது இல்லை! ஒரு வயதான தாய் இருக்கிறாள். அவள்தான் இந்த குடும்பத்தை கவனித்துக் கொள்கிறாள். நல்ல வேளை இவன் மனைவி படித்த பெண்ணாயிருந்தும் குடும்பத்தையோ இவனையோ கை கழுவ வில்லை! இப்படி ஆக என்ன காரணமாக இருக்கும்? யோசித்தேன்! அவனுடைய தந்தை மளிகை வியாபாரம் செய்யும் போது சாராயம் காய்ச்ச வெல்லம் விற்றார். கள்ளச்சாரயம் அப்போது பேமஸ்! இவரும் திருட்டுத்தனமாய் கொள்ளை விலைக்கு விற்றார். இப்போது மகன் குடித்துவிட்டு அழிக்கிறான். ஒன்றாக படித்தவனின் இந்த நிலை வருந்த வைத்தது! # feeling sad"
கலாகுமரன் : குடிக்கு அடிமை வேறு என்ன சொல்ல முடியும். என் அலுவலகத்தில் வேலை செய்தவர் தீபாவளி அன்று இறந்து விட்டார். ஒரு வருசத்துக்கு முன்பு தான் அவருக்கு கல்யாணம் நடந்தது. இவரின் குடிபழக்கத்தை நிறுத்த நாட்டு வைத்தியம் பார்த்திருக்காங்க. அதுவே இவருக்கு எமனாகிடுச்சு. இந்த வைத்தியம் சைட் எபக்ட் ஆகிடுச்சு என்று சொல்றாங்க.
எழில் : உங்களின் பகிர்வு வருத்தமளிக்கிறது கலாகுமரன்
கலாகுமரன் : ஆங்கில மருத்துவத்தில் சைட் எபக்ட் சொல்லலாம். இது புரியல.
எழில் : நான் கேள்விப்பட்ட விஷயம் சரியான்னு தெரியாது ... அரைகுறை நாட்டு வைத்தியர்கள் பயன்படுத்தும் மருந்துகளில் ஆர்சனிக் முதலான விஷப் பொருட்கள் கலக்கறாங்களாம்
கலாகுமரன் : ஆர்சனிக் கொடிய விசமாச்சே...சின்னவயசுல இருந்தே நண்பர் குடிச்சிட்டு இருக்கார். எல்லாம் சேர்த்துவச்சு உடம்ப பாழாக்கிடுச்சு. கடந்த ஆறு மாசமா குடியை விட்டு இருந்தார்.
எழில் : உடனடி வலி நிவாரணியாம்... கொஞ்சமா சேர்ப்பாங்களோ...
கலாகுமரன் : கடந்த ஆறு மாசமா உணவு முறையை சுத்தமா மாத்திட்டாரு. அது பயனில்ல ஆர்கன்ஸ் செயல் இழக்க ஆரம்பிச்சிடுச்சு. நண்பர்கள் சொல்றது இத நிறுத்த முயற்சி செஞ்சிருக்க வேண்டாங்கரது, இது எனக்கு இன்னும் அதிர்ச்சி கொடுக்கரதா இருந்துச்சு.
எழில் : எத்தனையோ பேர் சில மது நிறுத்தும் முறைகள் கையாண்டு நலமாகியிருக்கிறார்களே... இவருடைய பிரச்சனை என்னவென்று தெரியவில்லை...
தெரிந்த ஒரு பையன் ஹோமியோ முறையில் ஹன்ஸ் பழக்கத்திலிருந்து மீண்டிருக்கிறானே..
கலாகுமரன் : மருந்து எடுக்க ஆரம்பிச்சப் பிறகு, கணயத்தின் சுரப்பு பாதிக்க ஆரம்பிச்சுது. வயிற்றில் நீர் கோர்க்க ஆரம்பிச்சிடுச்சு. முகம் கால்கள் வீக்கம். அதுக்கு பிறகு ஆங்கில வைத்தியர் கிட்ட போய் அத சரி செஞ்சாங்க. ஆனா பின் விழைவுகள் சரி ஆகல once failed not retrived.
எழில் : ஓ...பரிதாபம் தான்.
கலாகுமரன் : எழில், போதை பழக்கம் வேற குடி பழக்கம் வேற.
உங்கள் கருத்து மயிலன்
மயிலன் : ஆயுர்வேதம் பக்கவிளைவுகள் அற்றது என்பது ஒரு போலி பிம்பம்.. மிளகு சாப்பிட்டால் சலி குணமாகும்.. இஞ்சிக்கும் சில மருத்துவ குணங்கள் உண்டு.. ஆனால் காரசாரமான இவை தொடர்ந்து உட்க்கொள்ளும் பட்சத்தில் மேல்உணவு குழாய்க்கு புற்றுநோய்க்கான காரணிகளாக மாறும் வாய்ப்பு உண்டு.. உடனே பொதுப்புத்தி மிளகு சாப்பிட்டால் புற்றுநோய் வருமென இதனை பொதுமைப்படுத்த பிரயத்தனப்படுத்ல் தவறு.. அலோபதி மருத்துவத்தில் நான்கு நிலை ஆய்விற்கு பின்னரே ஒரு மருந்து புழக்கத்திற்கு வரும்.. அதீத பக்கவிளைவுகள் கொண்டவை புழக்கத்திற்கு வருவதேயில்லை.. தவிர சில மருந்துகள் வெளி சந்தைக்கு வந்தப்பின் எதிர்பாரா பக்கவிளைவுகள் வந்துவிட்டால் உடனே பின்வாங்க படுகிறது... இதனை அங்கீகரிக்க கட்டுப்பாடு குழுக்கள் இருக்கின்றன.. ஆனால் ஆயுர்வேத்த்திற்கு வரையறுக்கப்பட்ட ஆய்வுகளும் தணிக்கைகளும் மிக குறைவு.. காலந்தொட்டு நம்பப்படும் பக்கவிளைவற்ற மருத்துவ வடிவம் இன்றும் ஏற்றுக்கொள்ளப்படுவது அறியாமை,, பக்கவிளைவுகள் ஆய்வுகள் பெரிதாய் நடப்பதில்லை.. செடிகளை மருந்து என நம்பும் கூட்டம் அரளியும் ஒரு செடி என்பதை மறந்துவிடுகிறது... மேலும்,ஒரு நண்பர் இங்கே சொல்லியிருப்பது போல போலி புல்லுருவிகளின் அயோக்கியத்த்தனமும் இதற்கு காரணம்.. விஷ தாதுக்களை கணிசமான அளவு கலந்து கொடுத்த்து உறுப்புகளை காலிபண்ணுகிறார்கள்.. மேலே இறந்ததாய் கூறப்பட்டவருக்கு குடியால் கெட்ட உறுப்புகளை இந்த தாதுக்கள் முழுதும் நாசமாக்கி இருக்கும்... லெட், காப்பர், ஆர்சீனிக் என எல்லாமே கல்லீரலையும் சிறுநீரகத்தையும் சீக்கிரம் செயலிழக்க வைக்கும்...
கலாகுமரன் : நன்றி மயிலன்...சுரேஸ்குமார், குடி பழக்கத்தை விட்டுடலாம்னு நினைக்கிறவங்களுக்கு உங்க அட்வைஸ்.
(வீடு வலைத்தளத்தள பதிவர் )
குடிய நிறுத்த சொல்லுகின்ற அனைத்து வைத்தியங்களும், பிளாட்பார மூலிகை அரைகுறை வைத்தியர்கள்தான், எந்த போதையையும் நிறுத்துவதற்கு ஆயுர்வேதத்தில் மருந்து கிடையாது...அத்தனையும் பக்கா பிராடு! அலோபதியில் மட்டும்தான் அதற்கான சிகிச்சையுள்ளது..அதுவும் அனைவருக்கும் ஏற்றது அல்ல...சாதாரண புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த எடுக்கப்படும் அலோபதி மருந்தே பக்கவிளைவுகளை சிலருக்கு ஏற்படுத்தும். மனபயிற்சி, தியானம், யோகா போன்றவை பலன் தரும்.
இப்ப உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்தில இருக்கீங்க உரையாடல் எப்படி எங்கே?
இதுக்கு தான் மார்க் நமக்கு முகபுத்தகம் (Face Book) சமூக தளத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்காரே உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்கு உடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியுமே.
இங்கு வெளியிடப்பட்ட கருத்துக்கள் அவரவர் சொந்த கருத்தே, உங்களுக்கும் இதில் மாறுபட்ட கருத்து அல்லது முரண்பாடு இருக்கலாம், இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். எந்த ஒரு மருத்துவரையோ மருத்துவத்தையோ இழிவு படுத்தும் நோக்கம் இல்லை என்பதை கவனத்தில் கொள்க.
நேற்று இரண்டு படங்கள் போட்டு இருந்தேன் அதில் முதலாவது ஒரே படத்தில் உள்ளீடாக (ஒன்றினுள் ஒன்றாக) விலங்குகளின் நிழல்கள் உள்ளன. யானை மேலே ஒரு மனிதனும் இருக்கிறான். அதில் கேட்கப் பட்ட கேள்வி எத்தனை விலங்குகள் உள்ளன.
மிருகம் vs மனிதன்
இதற்கு அறிவியல் பூர்வமான விவாதத்தின் படி, இயற்கையின் படைப்பில் மிருகமும், மனிதனும் இவ்வுலகத்தின் தோன்றிய உயிர்கள். விலங்குகள் ஒவ்வொன்றும் மில்லியன் ஆண்டுகளாக தோற்ற மாறுபாடும் வளர்ச்சியும் பெற்று வந்துள்ளன. விலங்குகளின் பிற்பாடு மனிதன் தோன்றி இருக்க வேண்டும் (டார்வின் கோட்பாடு)
மனிதன் மற்றும் மிருகம் இவற்றிற்கான வேறுபாட்டை ஈ.வே.ரா பெரியார் கூறிய கருத்துக்கள் :
சரி அந்த கேள்விக்கான பதில் (8) அனைத்துமே.
அடுத்து ஒரு அணில் பிள்ளை குட்டியை கைகளில் வைத்து இருக்கிற படம். ஏதேனும் ஒரு காரணத்தினால் குட்டி அனாதையாக விடப்பட்டால் இன்னொரு அணில் பிள்ளை அதை தத்து எடுத்து பாதுகாத்து வளர்க்கும். ஆறறிவு உள்ள மனிதன் குழந்தையை குப்பை மேட்டில் வீசி செல்வதை பார்க்கிறோம். இந்த தகவல் மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு துணை பதில்.
இதே பதிலை தோழி எழிலின் பதிவில் இருப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன் நீங்களும் படித்து பாருங்களேன்;
நிகழ்காலம் எழில் : சமூக சிந்தனை கட்டுரைகள்.
வீடு சுரேஷ் சிறுகதைகள் : சமூக சுழலை, காட்சியை நம் கண் முன் கொண்டுவருகின்றன இந்த கதைகள்.
என்பிலதனை வெயில் காயும்
மல்லி என்கின்ற ராதா
மயிலிறகு மயிலன் குறுங்கதைகள்:
ரசித்த பதிவில் இதுவும் : சோம்னாம் ரியலிசம்!
ரசித்தவை, நினைவில் நிற்பவை என்ற டைடில் கார்டில் அனுபவ முத்திரைகளை பதித்து வருபவர் சுப்புதாத்தா
இதுவும் காபிதான் சமீபத்திய பதிவு
சங்கீதம் தான் தெரியல்ல, கொஞ்சம் இங்கிதமாவது வேண்டாமோ..?
அது என்ன இங்கிதம் ? (எனக்கும் தெரியல !)
இணையத்தில் படித்ததின் தழுவல்! ஆக இருந்தாலும் சுவாரசிய தழுவல் காட்சியை இரண்டொரு வார்த்தைகளில் வவரிப்பது சுவரஸ்யம் படித்து பாருங்கள் .
நான் பேச நினைப்பதெல்லாம் பிரபல மூத்த பதிவர் சென்னை பித்தன் அவர்களின் தேடி வந்த ஆவி!
கார்த்திகைப் பூத்தூவிக்
காத்திருப்போம் மாவீரரே!
பார்த்திருங்கள்! போற்றும் நம்மீழம்
புலருமே விரைந்து!
மண்ணில் உறங்கிடும் வித்துக்கள்!.. கைவேலைப்பாட்டுடன் கவிதைகளில் நம்பிக்கையும் விதைக்கிறார் இளமதி.
அழகான வடிவமைப்போடு திரைபாடல் வரிகள், குறள் விளக்கத்துடன் ஒவ்வொரு பதிவையும் செதுக்கி நம்மை சிந்தனை வசப்பட செய்பவர் பதிவர்களால் "பின்னூட்ட புயல்" என்ற செல்லமாக அழைக்கப்படும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் அனுபவப் பதிவுகளில் ஒன்று
சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்
திடங்கொண்டு போராடு - சீனு வின்
ரயிலோடும் பாதை அனுபவப்பூர்வமான உணர்ச்சிகளை கொட்டி தீர்க்கிறது
அதி விரைவாகவும் பலவித சப்தங்களோடு பயனித்த ரயில் இறுதியில் மெளனமாக...நிசப்த இருளில்.... என்ற என்னுடைய பின்னூட்டத்தை பதித்தேன்.
அர்த்த ராத்திரி...!(சிறு கதை) சமூக சிறுகதை தவறு நெருப்பின் மேல் ஆசைப்பட்ட விட்டில் மீதா? கவிதை தளத்தில் நண்பர் சீனி.
படக்கதை வழங்கியவர் : ஜி.டி என செல்லமாக அழைக்கப்படும் காயத்ரி தேவி
குறிஞ்சி மலர்கள்... !!!
கழுகுக்கூட்டங்கள் எனும் கட்டுரையில் அவருக்கு ஏற்பட்ட மருத்துவ அனுபவம் பற்றி சொல்கிறார் நண்பர் ஜோதிஜி தமது தேவியர் இல்லத்தில்...
முருகானந்தன் கிளினிக் என்ற வலைத்தளத்தில் மருத்துவம் சார்ந்த பதிவுகளை வழங்கி வருகிறார் டாக்டர் M.K. முருகானந்தன்
சிந்தனைக்கு இரண்டு படங்கள்
இது கிராபிக்ஸ் படம் அல்ல ஒரு பென்சில் ஓவியம் தத்ரூபமாக வரைந்தவர் ரஷ்ய ஓவியர் ஒளேகா மெலமோரி ( Olga Melamory)
இந்த கார்டூன் நகைச்சுவைக்காக மட்டுமல்ல... பெண்கள் மீதான வன்கொடுமையை பட்டவர்தனமாக குறியீடாக சாடுகிறது. (மனிதன் மிருகத்தை விட மேலானவனா...!)
மீண்டும் உங்களை நாளைய பதிவில் சந்திக்கிறேன்,
அன்புடன்,
கலாகுமரன்.

* * * * *

மனிதன் விலங்குகளிலிருந்து எந்த அளவு வேறுபட்டுக் காணப்படுகிறான் ? என்று சிந்திக்கோனும், மனிதன் என்பவன் மிருகங்களை, பறவைகளைவிட அறிவு அதிகம் பெற்றவன்; சுற்றுச் சார்புக்கு ஏற்றவாறு தனது அறிவின் காரணமாக மாற்றி யமைத்துக் கொண்டு வாழ்பவன் அவன் தான் மனிதன், ஆனால் இன்று நடப்பதென்ன? ஒருவனை யருவன் வஞ்சிக்கிறான் திருடுகிறான்; கொலையும் செய்கின்றான் என்றால் மனிதனுக்கும் மற்ற மிருகங்களுக்கும் என்ன மாறுபாடு இருக்கின்றது?
சரி அந்த கேள்விக்கான பதில் (8) அனைத்துமே.
அடுத்து ஒரு அணில் பிள்ளை குட்டியை கைகளில் வைத்து இருக்கிற படம். ஏதேனும் ஒரு காரணத்தினால் குட்டி அனாதையாக விடப்பட்டால் இன்னொரு அணில் பிள்ளை அதை தத்து எடுத்து பாதுகாத்து வளர்க்கும். ஆறறிவு உள்ள மனிதன் குழந்தையை குப்பை மேட்டில் வீசி செல்வதை பார்க்கிறோம். இந்த தகவல் மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு துணை பதில்.
இதே பதிலை தோழி எழிலின் பதிவில் இருப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன் நீங்களும் படித்து பாருங்களேன்;
நிகழ்காலம் எழில் : சமூக சிந்தனை கட்டுரைகள்.
அணில் பிள்ளை......
பெரியாரின் சிந்தனைத்துளிகள் -9
வீடு சுரேஷ் சிறுகதைகள் : சமூக சுழலை, காட்சியை நம் கண் முன் கொண்டுவருகின்றன இந்த கதைகள்.
என்பிலதனை வெயில் காயும்
மல்லி என்கின்ற ராதா
மயிலிறகு மயிலன் குறுங்கதைகள்:
யார் பெண்ணே நீ?
மணிமொழியும் மரணித்த பொழுதுகளும்...
பாசிடிவ் செய்திகள் என்ற தலைப்பில் சமூக அக்கரை பதிவுகளையும், வார வாரம் ஞாயிறு வித்தியாசமான புகைப்பட பகிர்வுகளையும்
எங்கள் ப்ளாக்கில் தருபவர் K.G. கவுதமன்ரசித்த பதிவில் இதுவும் : சோம்னாம் ரியலிசம்!
ரசித்தவை, நினைவில் நிற்பவை என்ற டைடில் கார்டில் அனுபவ முத்திரைகளை பதித்து வருபவர் சுப்புதாத்தா
இதுவும் காபிதான் சமீபத்திய பதிவு
சங்கீதம் தான் தெரியல்ல, கொஞ்சம் இங்கிதமாவது வேண்டாமோ..?
அது என்ன இங்கிதம் ? (எனக்கும் தெரியல !)
இணையத்தில் படித்ததின் தழுவல்! ஆக இருந்தாலும் சுவாரசிய தழுவல் காட்சியை இரண்டொரு வார்த்தைகளில் வவரிப்பது சுவரஸ்யம் படித்து பாருங்கள் .
நான் பேச நினைப்பதெல்லாம் பிரபல மூத்த பதிவர் சென்னை பித்தன் அவர்களின் தேடி வந்த ஆவி!
கார்த்திகைப் பூத்தூவிக்
காத்திருப்போம் மாவீரரே!
பார்த்திருங்கள்! போற்றும் நம்மீழம்
புலருமே விரைந்து!
மண்ணில் உறங்கிடும் வித்துக்கள்!.. கைவேலைப்பாட்டுடன் கவிதைகளில் நம்பிக்கையும் விதைக்கிறார் இளமதி.
அழகான வடிவமைப்போடு திரைபாடல் வரிகள், குறள் விளக்கத்துடன் ஒவ்வொரு பதிவையும் செதுக்கி நம்மை சிந்தனை வசப்பட செய்பவர் பதிவர்களால் "பின்னூட்ட புயல்" என்ற செல்லமாக அழைக்கப்படும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் அனுபவப் பதிவுகளில் ஒன்று
சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்
திடங்கொண்டு போராடு - சீனு வின்
ரயிலோடும் பாதை அனுபவப்பூர்வமான உணர்ச்சிகளை கொட்டி தீர்க்கிறது
அதி விரைவாகவும் பலவித சப்தங்களோடு பயனித்த ரயில் இறுதியில் மெளனமாக...நிசப்த இருளில்.... என்ற என்னுடைய பின்னூட்டத்தை பதித்தேன்.
அர்த்த ராத்திரி...!(சிறு கதை) சமூக சிறுகதை தவறு நெருப்பின் மேல் ஆசைப்பட்ட விட்டில் மீதா? கவிதை தளத்தில் நண்பர் சீனி.
படக்கதை வழங்கியவர் : ஜி.டி என செல்லமாக அழைக்கப்படும் காயத்ரி தேவி
குறிஞ்சி மலர்கள்... !!!
கழுகுக்கூட்டங்கள் எனும் கட்டுரையில் அவருக்கு ஏற்பட்ட மருத்துவ அனுபவம் பற்றி சொல்கிறார் நண்பர் ஜோதிஜி தமது தேவியர் இல்லத்தில்...
முருகானந்தன் கிளினிக் என்ற வலைத்தளத்தில் மருத்துவம் சார்ந்த பதிவுகளை வழங்கி வருகிறார் டாக்டர் M.K. முருகானந்தன்
சிந்தனைக்கு இரண்டு படங்கள்
இது கிராபிக்ஸ் படம் அல்ல ஒரு பென்சில் ஓவியம் தத்ரூபமாக வரைந்தவர் ரஷ்ய ஓவியர் ஒளேகா மெலமோரி ( Olga Melamory)
"அவன் உன் அந்தரங்க பகுதியை தொட்டானா" - "ஆ..மா"
இந்த கார்டூன் நகைச்சுவைக்காக மட்டுமல்ல... பெண்கள் மீதான வன்கொடுமையை பட்டவர்தனமாக குறியீடாக சாடுகிறது. (மனிதன் மிருகத்தை விட மேலானவனா...!)
மீண்டும் உங்களை நாளைய பதிவில் சந்திக்கிறேன்,
அன்புடன்,
கலாகுமரன்.
வாழ்த்துகள் மற்றும் 'எங்கள்' நன்றிகள் 'இனியவை கூறல்' கலா குமரன்.
ReplyDeleteநன்றி..
Deleteகுடியை சப்போர்ட் பண்றேன்னு நினைக்க வேண்டாம்.. குடிச்சவன் இன்ன தேதில சாவான்.. குடிக்காதவன் இன்ன தேதில சாவான்னு தெரியாத வரைக்கும் மக்கள் குடிச்சுகிட்டே தான் இருப்பாங்க. (குடிப்பவர்கள் குடிக்கதவர்களை விட சீக்கிரம் இறந்து என்று எப்படியாவது (??) நிரூபிக்கப்பட்டால் குடி குறைய வாய்ப்பிருக்கிறது..தவறா சொல்லியிருந்தா மன்னிக்கவும்..
ReplyDeleteகுடிப்பவர் அந்த நேர சந்தோசத்திற்காகவே குடிக்கிறார். உடல் கெட்டு போகும் நிலையை அவங்களாகவே ஏற்படுத்தி கொள்வதை மறுக்க முடியாது. நாளைக்கே சாவது உறுதி என்றால் அந்த துக்கத்தை மறக்க பழக்கம் இல்லதவனும் குடிக்க ஓடுவான் சான்ஸ் இருக்கு. நன்றி ஆவி.
Delete//தவறா சொல்லியிருந்தா மன்னிக்கவும்.// ஏன்? உங்க கருத்த தானே சொல்றீங்க இதில் தவறேதும் இல்லை.
Deleteசிறந்த உரையாடல் - பயன்தரும் பதிவு
ReplyDeleteநன்றிங்க
Deleteகுடியால் வரும் கேடினை முகப்புத்தக உரையாடலிலிருந்து
ReplyDeleteஅருமையாகத் தொகுத்துத் தந்தீர்கள் சகோ. திருந்தணும் நம் சமுதாயம்..
நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்!
இன்றைய வலைச்சர அறிமுகப் பதிவர் தளங்கள் அனைத்தும் அருமை!
இவர்களுடன் எனது வலைத்தளத்தையும் குறிப்பிட்டமை கண்டு வியந்தேன் சகோ !
மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு!
அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் உங்களுக்கும்
இதயங் கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள்!
பென்சில் ஓவியம் வியக்க வைக்கின்றது.
கார்டூன் நல்ல விடயத்தை விதைத்துள்ளது.
பகிர்விற்கு மிக்க நன்றி சகோ!
விரிவான கருத்திற்கு நன்றி இளமதி.
Deletenalla pakirvu!
ReplyDeleteennaiyaiyun inaiththamaikku mikka nantri sako..!
நன்றி சகோ...
Deleteகுப்பை கூட்டுபவர், சாக்கடை சுத்தம் செய்பவர்கள், இன்னும் இது போன்ற பல வேலைகள் செய்பவர்கள் அனைவரும் தங்கள் சம்பளத்தின் முக்கால் பங்கை, இது தவிர கையேந்தி வாங்கும் கையூட்டுகளை குடியில் தான் அழிக்கின்றார்கள்.
ReplyDeleteஇங்கு பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் 80 சதவிகிதம் தங்கள் வருமானத்தில் 60 சதவிகிதம் குடியில் தான் அழிக்கின்றார்கள்.
வாழ்ந்து கெட்டுப் போன முதலாளிகள் முதலில் நாடுவது மதுக்கடைகளையே.
மிச்சம் மீது யார்?
நம்மைப் போல பயந்து பயந்து வாழபவர்கள் மட்டுமே.
உண்மைதான் ஜோதிஜி.
Deleteமுதலில் மிக்க மிக்க நன்றி...
ReplyDeleteமுகப்புத்தக உரையாடலை நன்றாக தொகுத்துள்ளீர்கள்...
அவரவர் தானே திருந்த வேண்டும்... குடிக்கு சிறந்த மருந்து மரணம்... வேறு வழியில்லை... இன்றைய நிலை அப்படி...
இன்றைய மற்ற அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
//குடிக்கு சிறந்த மருந்து மரணம்..// பொட்டில் அடிச்ச மாதிரி சொல்லீட்டீங்க நன்றி D.D
Deleteமிகவும் வித்திசாசமாகவும் மனதில் படியும்படியான பதிவு.
ReplyDeleteமுக்கியமாகக் கலந்துரையாடல் அற்புதம்
அதில் எழிலனுடைய கருத்துக்களுடன் முழுமையாக ஒன்றிணைகிறேன்..
"ஆயுர்வேதம் பக்கவிளைவுகள் அற்றது என்பது ஒரு போலி பிம்பம்."
"..காலந்தொட்டு நம்பப்படும் பக்கவிளைவற்ற மருத்துவ வடிவம் இன்றும் ஏற்றுக்கொள்ளப்படுவது அறியாமை,, பக்கவிளைவுகள் ஆய்வுகள் பெரிதாய் நடப்பதில்லை.. செடிகளை மருந்து என நம்பும் கூட்டம் அரளியும் ஒரு செடி என்பதை மறந்துவிடுகிறது... "
மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
இன்றைய பதிவு பற்றி அறியத் தந்த நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றிகள்
தங்களின் வருகைக்கும் தெளிவான பதில் எங்களது சந்தேகங்களை தீர்க்கிறது நன்றி டாக்டர்.
Deleteமன்னிக்கவும்.
ReplyDeleteமயிலன் என்பதை எழிலன் எனத் தவறாகக் குறிப்பட்டுள்ளேன்.
பரவாயில்லை...
Deleteஎன்னுடைய அறிமுகத்திற்கு மிக்க நன்றி... அப்புறம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நம் விவாதம் இங்கேயும் தொடர்கிறது கவனிக்கிறேன்....
ReplyDeleteவிவாதம்...இதற்கு பின்னும் தொடரும் என நினைக்கிறேன்.
Deleteமருத்துவ நூல்களின் படி ஒரு சுகதேகி ஆண் நாளொன்றுக்கு 30-40 மில்லி அல்கஹோல் உட்கொள்வது அவனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ReplyDeleteதினேஷ் நமது உடல் எனும் எந்திரத்திற்கு சுமை அதிகரிக்கும் போதே மக்கர் செய்ய ஆரம்பிக்கும். தகவலுக்கு நன்றி
Deleteகலாகுமரன்,
ReplyDeleteநல்ல தொகுப்புகள்.
சித்த மருத்துவத்தில் பிரச்சினை இல்லை,அது தெரியாமல் செய்யும் சித்த மருத்துவர்களால் தான் பிரச்சினை.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி எல்லாம் வேறு வேறு ஆனால் இங்கே எல்லாத்தையும் சேர்த்து செய்துட்டு "சித்த மருத்துவர்"னு போர்டு போட்டுக்கிறாங்க அவ்வ்.
சென்னையில் ,தாம்பரம் மெப்ஸ் அருகே "அகில இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் மற்றும் மருத்துவ மனை உள்ளது,அங்கு போனால் சரியான சிகிச்சை கிடைக்கும்,ஆனால் முற்றுவதற்கு முன்னர் செல்ல வேண்டும், சித்த மருத்துவம் ஆரம்ப நிலையில் இருக்கும் போது கவனித்தால் தான் பலன் அளிக்கும், முற்றீய நிலையில் அல்ல்.
உலகம் முழுக்க மது அருந்துகிறார்கள்,ஆனால் அங்கெல்லாம் அதிகம் மதுவால் இறப்பதில்லை, இந்தியாவில் மட்டும் ஏன் என ஆய்ந்தால் பதில் கிடைக்கும்.
இந்திய மதுபானங்கள் மிக மட்டமான தயாரிப்புகள் ஆகும், மதுவை விட அவற்றில் கலக்கும் நிறமிகள்,பிரிசெர்வேட்டிவ்கள் அதிக பாதிப்பு கொடுக்க வல்லவை.
நம்ம ஊருல பெயிண்ட் தயாரிக்கப்பயன்ப்படும் நிறமிகள் தான் மது முதல் ஸ்வீட் கடை ஜாங்கிரி வரையில் போடுறாங்க அவ்வ்.
//உலகம் முழுக்க மது அருந்துகிறார்கள்,ஆனால் அங்கெல்லாம் அதிகம் மதுவால் இறப்பதில்லை, இந்தியாவில் மட்டும் ஏன் என ஆய்ந்தால் பதில் கிடைக்கும்.// ஆமாம் சரிதான். சூவீட்டுகளின் வண்ணக் கலவை புற்று நோய்க்கு காரணம் என்கிறது ஒரு ஆய்வு. நன்றி.
Deleteகுடியில் இருந்து மீள நினைக்கும் போது பலர் தம் பாதி உள் உறுப்புக்கள் செயலிழந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பது மிக வேதனையான விடயம்;
ReplyDeleteஅத்துடன் குடியால் சீரான உணவு, உறக்கம் இன்றி உடல் நலிந்து பாதிப் பிணமாகவே உலவும் இவர்களுக்கு செய்யும் எந்த வைத்தியமும் அறவே இவர்களை மாற்றுவதில்லை. சிறிது காலம் ஆயுளைக் கூட்டும் ஆனால் சொற்ப ஆயுளில் மரணம் என்பது தவிர்க்க முடியாததாகிறது.
என் நண்பர்கள் பலர் இப்படிப் போய் சேர்ந்து விட்டார்கள்.
அத்துடன் நம்மவர்களுக்குக் குடிக்கவே தெரியாது. இந்த ஐரோப்பியர் குடிப்பதை அருகில் இருந்து பார்த்துள்ளேன். அதை ஒரு அழகான சடங்குபோல் செய்வார்கள்;
வாயகன்ற கண்ணடிக் குவளையில் 5 செ லீ அளவு மதுவை ஊற்றி அதனுள் 2 கட்டி ஐஸ்கட்டி போட்டு, 5 செ.லீ அளவு தோடம்பழச் சாறோ, கொக்கா கோலாவோ ஊற்றி அந்தக் குவளையை
கையில் பிடித்துக் கொண்டு, ஆட்டி ஆட்டி அதை சுற்ற வைத்து அதிலுள்ள மதுசாரத்தை ஓறளவு ஆவியாக வைத்து, சொட்டுச் சொட்டாகக் குடிப்பார்கள்.
அளவுக்கு மீறிக் குடிப்பதே மிக அரிது, வெறிக்க வேண்டுமெனக் குடிப்பதில்லை. புட்டியைக் காலியாக்கியே முடிப்பதெனக் கங்கணம் கட்டிவதுமில்லை.
இங்கு கள்ள சாராயம் என்பதேயில்லை.
நம்மவர்கள் குடி இவையாவற்றுக்கும் நேரெதிரானது. சட்டத்துக்கு எதிரான மது உற்பத்தி, மனித நலம் பற்றிச் சிந்திக்காத அரசு, வியாபாரிகள் , ஒட்டு மொத்தம் காசைக் கொட்டுங்கள் குடித்துத் தொலையுங்கள்.
எனவே இளமையிலேயே மருந்துக்கும் குடியே என்பவர்களே நம் நாட்டில் இவ்வரக்கனிடம் இருந்து தப்பமுடியும்.
ஆனால் நடங்கும் போல் தெரியவில்லை. குடிப்பது நாகரீகத்தின் வெளிப்பாடு என ஒரு மாயத் தோற்றம் நம் நாட்டில் உருவாகி, குடிக்காதவன் நாகரீகம் இல்லாதவன் என எள்ளி நகையாடும் மோசமன நாகரீகமொன்று உருவாகிவிட்டது.
சில இலக்கிய வா(வியா)திகள் கூட குடித்துவிட்டு ஆட்டுத் தொடையை சுட்டுச் சாப்பிட்டுவிட்டு , உளறிக் கொட்டிச் சக எழுத்தாளனைக் கேலி செய்து கூச்சல் போட்டு விட்டு இலக்கிய ஆய்வு என கௌரவப் பெயர் சூட்டி இன்றைய கணணியில் காசுதேடும் இளைஞர்களிடம் ஆட்டை போட்டு சுகமாகக் குடித்துக் குடியைப் பரப்புகிறார்கள்.
நாம் எங்கேதான் போகிறோம்.
குடி குடியைக் கெடுக்கும் என்பதை எப்போ உணர்வோம்.
அதுவரை இந்த மரணங்கள் சந்தித்தே ஆகவேண்டியவை.
அணில் மாத்திரமல்ல, யானைகூட தங்கள் கூட்டத்தில் உள்ள பால்குடி யானைக்குட்டிகள் தாயை இழந்து,
அனாதையாகும் போது, அக்கூட்டத்தில் உள்ள பாலூட்டும் நிலையில் உள்ள யானைகள் ,அந்த அனாதைக் குட்டியை பாலூட்டி வளர்க்கும் , இதை நான் நசனல் யியோகிரபியில் பார்த்துள்ளேன்.
குடிப்பவர்களுக்கு பாதிப்பு ஏன் விரிவான தகவல்கள்...நன்றிங்க யோகன்.
Deleteநம்முடைய உரையாடலை பதிவிட்டமைக்கு நன்றி கலா குமரன், எங்கள் ஊரில் ஒரு கொத்தனார் இருந்தார். வேலை செய்து சம்பாதித்த பணம் முழுவதும் குடித்து அழித்தார். காதலித்து கரம்பிடித்த மனைவி தற்கொலை செய்து கொண்டார். மீண்டும் இரண்டாவது திருமணம் செய்தார். ஆனால் குடியை விடவில்லை! இரண்டாவது மனைவியும் இறந்துவிட்டார் தற்கொலை செய்து கொண்டு! மூன்றாவது மனைவி வந்தார் இப்போதும் அவர் குடியை விடவில்லை! தினமும் குடித்துவிட்டு அடி உதை என்று கொடுமைகள் வேறு! இந்த மனைவி கொஞ்சம் புத்திசாலி போல! எப்படியோ நல்வழிப்படுத்தி குடியை மறக்கடிக்க மருந்து வாங்கி கொடுத்து உள்ளார். இனி குடித்தால் இறந்து போய் விடுவாய் என்று எச்சரிக்கையும் செய்து விட்டார்! முதலில் இவரது குடிப்பழக்கத்தால் வேலை கிடைப்பதே அரிதாக இருந்தது. முதலில் மேஸ்திரிகளின் கீழ் கொத்தனாராய் வேலைக்கு போனவர் இன்று தானே மேஸ்திரியாகி காண்ட்ராக்ட் எடுத்து வீடு கட்டித்தருகிறார். முதல் மனைவிக்கு பிறந்த பெண்ணுக்கும், பையனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார். குடிசை வீட்டில் இருந்தவர் இன்று மாடி வீட்டில்! சமூகத்தில் நல்ல மரியாதையுடன் வலம் வருகிறார். இன்னொரு பெண்ணை நல்ல முறையில் படிக்க வைக்கிறார்! இதெல்லாம் அவரது மனைவியால் வந்தது என்பதை உணர்ந்து மனைவியையும் நல்லபடி பேணுகிறார்! அன்று நெகடிவ்வாக ஒன்று சொன்னேன்! இது பாசிடிவ் செய்தி! நல்ல தளங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபாசிட்டீவ் செய்திகளுக்கு நன்றி நண்பரே
Deleteகுடியின் தீமை பற்றிய உரையாடல் தொகுப்பு நன்று.
ReplyDeleteஎன் அறிமுகத்துக்கு நன்றி
நன்றி ஐயா..
Deleteநல்ல பகிர்வு.
ReplyDeleteத.ம. 6
நன்றி வெங்கட் நாகராஜ்.
Deleteகுடித்தால் குடி கெடும். எனவே யாவரும் (அதாவது குடிக்கும் யாவரும்) குடியை விடவேண்டும்.
ReplyDeleteநல்ல பகிர்வு.
அத பாட்டில்லயே போட்டிருப்பாங்களே யாரும் கண்டுகொள்வது இல்லை. நன்றி நிஜாமுதீன்.
Deleteவணக்கம்
ReplyDeleteசிறப்பான தொகுப்புடன் அருமையான தளங்களை அறிமுகம் செய்துள்ளிர்கள்.. வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
Deleteஇன்றைய அறிமுகங்கள் அருமை...ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDelete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com
நன்றி நவ்சின்கான்.
Deleteஅறிமுகப் பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி .அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉரித்தாகட்டும் !!