வணக்கம். என்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளப் பெரிதாக ஒன்றுமில்லை. 2005 ஆம் வருடம் நவம்பரில் வலைப்பூ ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் இருந்த வலைப்பூவைப் பின்னர் தமிழில் மாற்றினேன். எண்ணங்கள் என்ற அந்த வலைப்பூ தான் பிரபலம் ஆன ஒன்று. அதன் பின்னர் சில வலைப்பூக்களை ஆரம்பித்து எழுதி வந்தாலும், இன்றளவும் எண்ணங்கள் வலைப்பூவுக்குத் தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம். :)) வரும் வாரத்துக்கான வலைச்சர ஆசிரியராக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே கயல்விழி இருக்கையிலே ஒரு முறை வலைச்சரம் தொடுத்தாச்சு. அப்போ அவசரமாக் கட்டின சரம் என்பதாலோ என்னமோ சீனா ஐயா மீண்டும் பொறுப்பைக் கொடுத்திருக்கார். சரியாக நிறைவேற்ற விநாயகன் அருள்வானாக. .
வலைப்பதிவுகள் 2005 ஆம் வருஷம் எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் தமிழில் எழுத முடியலை. அதுக்கு அப்புறமா சில, பல முயற்சிகள் செய்து ஆசான் ஜீவ்ஸோட உதவியோட தமிழில் எழுத ஆரம்பிச்சேன். அவர் இங்கே வெண்பா வடித்துக் கொண்டிருந்தார்.
<a href= "http://payananggal.blogspot.in" >Jeeves</a>
இப்போ இங்கே எண்ணங்களை இனிமையாகப் பதிகிறார்.
<a href = "http://kaladi.blogspot.in" >எண்ணங்கள் இனியவை</a>
அது என்னமோ தெரியலை இரண்டு வருடங்களாக லிங்க் கொடுத்தால் போகிறதே இல்லை. :( பின்னூட்டத்தில் வருது.
ஆரம்பத்தில் எல்லோருடைய பதிவுகளிலும் போய்ப் பின்னூட்டம் மட்டுமே போட்டுட்டு இருந்தேனா! ஒரு மாதிரியா எல்லாருக்கும் தெரிஞ்சவளா ஆயிட்டேன். ஆகவே பதிவு போடும்போது நிறையப் பின்னூட்டங்கள் வரும்னு எதிர்பார்த்தால். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போணியே ஆகலை. :)) அப்புறமா ஒவ்வொருத்தர் கிட்டேயும் போய்க் கடை திறந்துட்டு உட்கார்ந்திருக்கேன், போணி பண்ணுங்கனு கூப்பிட்டேன். கொஞ்ச நாட்கள் தான். அப்புறமா தானா போணி ஆக ஆரம்பிச்சது. அப்போத் தொடங்கினது தான் இந்தப் பதிவு
http://sivamgss.blogspot.in/ எண்ணங்கள்.
அப்படி ஒண்ணும் அதிகமாப் பின்னூட்டங்கள் வரதில்லை என்றாலும் ஹிட் லிஸ்ட் பல சமயங்கள் எகிறும். ஆகவே வர கமென்டுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைனு புரிஞ்சு போச்சு! இப்போ இந்த வலைப்பக்கத்திலே 1642 பதிவுகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. அதிகம் பின்னூட்டம் வந்தது என்றால் தமிழ் மணம் நக்ஷத்திரம் ஆன வாரம் தான்.
http://sivamgss.blogspot.in/2009/07/blog-post_13.html/ இங்கே பார்க்கவும்.
இந்த தைரியத்தில் ஆரம்பிச்சது மட்டுமில்லாமல், நிறையக் கோயில்கள், சுற்றுலானு போக ஆரம்பிச்சதாலே அதை எழுதத் தனியா ஒண்ணு தேவைப் பட்டது. எண்ணங்கள் பதிவிலே மொக்கைகளும் போடுவதாலே, நல்ல பதிவுகளையும் இங்கே போட்டு அதன் தரத்தை வீணாக்கணுமானு தோணவே நாகை சிவா உதவியோடு திறந்த இன்னொரு பதிவு இது. http://aanmiga-payanam.blogspot.in ஆன்மிகப் பயணம். ஏதோ சொல்லிட்டிருந்த
http://tsivaram.blogspot.in/ ஏதோ சொல்கிறேன்
நாகை சிவா தொழில்நுட்ப ரீதியாக என் தேவைகளைப் பல முறை நிறைவேற்றிய நல்ல நண்பர் இன்றளவும். ஆன்மிகப் பயணம் வலைப்பக்கத்திலே தான் என் கைலை யாத்திரை குறித்தும் எழுத ஆரம்பித்தேன். ஓரளவுக்கு என்னையும் என் எழுத்தையும் எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சது. அதுக்கப்புறமா சிதம்பர ரகசியம் தொடர். அதைப் பெரிதும் பிரபலம் செய்தது நம்ம விசாகப்பட்டினம் திவாகர்.
http://www.vamsadhara.blogspot.com/வம்சதாரா
கதையின் தலைப்பையே தன் வலைப்பக்கத்துக்கும் வைச்சிருக்கார். நமது அடுத்த வீடான ஆந்திரா குறித்த தகவல்களைப் பதிவது இங்கே!
http://www.aduththaveedu.blogspot.in/அடுத்த வீடு
அடுத்துப் பயணங்கள் குறித்து மட்டும் எழுதவென நான் ஆரம்பித்தது இந்தப் பதிவு.
http://geethasmbsvm6.blogspot.in/ என் பயணங்களில்
இதிலே தான் அஜந்தா, எல்லோரா பத்தி எல்லாம் எழுதி இருக்கேன். ஆனாலும் நோ போணி! இதிலேயே மற்றப் பயணங்களையும் எழுதலாம்னு நினைச்சு ரசிகப் பெருமக்களை ஒரு ஆலோசனை கேட்டால் என்ன அநியாயம்! யாருமே இதுக்கு வந்து போணி பண்ண மாட்டோம்னு சொல்லிட்டாங்க. :P :P ரொம்ப தூரமா இருக்காம். :))) இப்போ எண்ணங்கள் பதிவிலேயே எல்லாமும் போட்டுட்டு இருக்கேன். அதிலே நிறைய பென்டிங். கல்யாணப் பதிவுகள் முடிக்கணும். திருமயம் போனது பத்திப் போடணும். கிடக்கட்டும். விடுங்க! :)))
சாப்பாட்டுக்கு ஆரம்பிச்சேன், முக்கியமாப் பாரம்பரிய உணவு வகைகள் குறித்து இந்தத் தலைமுறைக்காகச் சொல்ல ஆரம்பிச்சது இந்தப் பதிவு
http://geetha-sambasivam.blogspot.in/ சாப்பிடலாம் வாங்க.
இதுக்கு ஓரளவுக்கு ரசிகர்கள் இருக்காங்க என்பதோடு ஹிட்லிஸ்டும் சமயத்தில் எகிறும். இதன் தொடர் ரசிகர் நம்ம
டிடி. http://dindiguldhanabalan.blogspot.com/திண்டுக்கல் தனபாலன்
வலை உலகில் டிடியை அறியாதவர் இல்லை. இவரோட பதிவுகளும் ஆக்க பூர்வமானவை. பலதும் படிக்கிறதோடு சரி. எல்லாத்தையும் ஸ்போர்டிவா எடுத்துப்பார். வெங்காய விலை போல் நம் வாழ்க்கையையும் உயரச் சொல்லி வாழ்த்தும் மனம் கொண்டவர்.
.
ரேவதி/வல்லி சிம்ஹன் படங்கள் போடுவதைப் பார்த்துட்டுப் புலியைப்பார்த்துச் சூடு போட்ட பூனையாட்டமா நானும் என்னோட அழகான படங்களைப் பகிரவென்று ஆரம்பிச்சது இந்தப் பதிவு.
http://gsambasivam.blogspot.in/ பேசும் பொற்சித்திரமே
இதன் ஒரே ரசிகை நம்ம ரா.ல. தான். என்னை ஆறுதல் படுத்தவென்றே வரார்னு நினைச்சுப்பேன். முத்துச் சரமாகத் தொடுக்கும் அந்த வலைப்பூ
http://tamilamudam.blogspot.com/ முத்துச்சரம்
இந்த வருஷக் கல்கி தீபாவளி மலரில் அவங்க படங்கள் வந்திருக்கின்றன என்கிறார். ரா.ல. படம்னா கேட்கணுமா என்ன?
எப்போவானும் தி.வா. எட்ட்ட்டிப் பார்ப்பார்.
http://chitirampesuthati.blogspot.in/சித்திரம் பேசுதடி
இதே பெயரில் மீனாக்ஷி சுந்தரம் கிருஷ்ணசாமி என்பவரின் வலைப்பூவும் பிரபலம்.
http://chitirampesuthadi.blogspot.in/ இதுவும் அதே சித்திரம் பேசுதடி தான்.
இங்கே படங்களை எடிட் செய்யவும் சொல்லிக் கொடுக்கிறார்.
என் புகைப்படப் பதிவுக்கு ரேவதி வந்ததே இல்லைனு நினைக்கிறேன். :)
http://pukaippadapayanangal.blogspot.in/புகைப்படப் பயணங்கள்.
அவங்களோட உடல்நிலையிலும் அருமையாகப் படங்களை எடுக்கிறார்.
அந்தப் பதிவுக்கு அவ்வப்போது ரம்மியமாக எழுதும் மாதேவியும்,
http://ramyeam.blogspot.in/ ரம்யம்
அப்புறமா டிடியும் வராங்க.
இதைத் தவிரவும் சில வலைப்பூக்கள் ரகசியமா வைச்சிருக்கேனே! ஆனால் சொல்ல மாட்டேனே! :)))))))
கொடுத்திருக்கும் லிங்கில் இருந்து பதிவுகளுக்குச் செல்ல முடியலைனா தயவு செய்து காப்பி, பேஸ்ட் செய்துக்குங்க மக்களே! :( நானும் அரை மணி நேரமா முயன்று பார்த்துட்டேன்.

அழகாக எடுத்து கூறிய விதம் மனதைக்கவர்ந்தது வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteநன்றி கீதா. நான் ஒருத்தியே கீதாவாகப் பல வருடங்கள் கோலோச்சினேன். இப்போ இரண்டு , மூணு வருஷமாக கீதா அசல், கீதா சந்தானம், நீங்க கீதா எம். வருக வருக. நல் வரவு,
Deleteவருக வருக! சுய அறிமுகம் சிறப்பு. உங்கள் வலைப் பக்கம் அதிகளம் வந்ததில்லை. இனி வருவேன்
ReplyDeleteவாங்க முரளிதரன், கட்டாயமாய் வாங்க. நன்றி.
Deleteதமிழ் மணம் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்.
ReplyDeleteநன்றி.
Deleteஅருமையான அறிமுகம்
ReplyDeleteஇவ்வாரம் பூச்சரமாய் வலைச்சரம் மணக்க
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாங்க ரமணி சார். ரொம்ப நன்றி
Deleteமணமிக்க வலைச்சர பூத்தொடுத்தமைக்கு வாழ்த்துகள்..!
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, நன்றிங்க.
Deleteமுதலில் மிக்க நன்றி அம்மா... இத்தனை தளங்களா...? ரகசியத்தை நான் கண்டுபிடிக்கிறேன்... ஹிஹி...
ReplyDeleteமேலும் அசத்த வாழ்த்துக்கள்...
ஹிஹிஹி, முடியாதே! :))))
Deleteவாருங்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteநல்வரவு கீதா.
ReplyDeleteதொடுக்கும் வேகம் பார்த்தால் சரமாக இல்லாமல் பெரிய ஆளுயரப் பூமாலையாக இருக்கும் போல!!
இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
வேகமெல்லாம் இல்லை துளசி. உண்மையில் மூச்சு முட்டத் திணறலா இருக்கு. :))) வீட்டிலே விருந்தினர்கள் வருகை வேறே. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு நேரம் சாப்பிட வருவாங்க. :)))))
Deleteதளத்தின் இணைப்பு (link) தர :
ReplyDelete<a href=
தளத்தின் இணைப்பு அல்லது தளத்தின் பிடித்த பதிவின் இணைப்பு>அந்த தளத்தின் பெயர் அல்லது அந்தப் பதிவின் தலைப்பு</a>
இதை பதிவு எழுதும் போது மேலே compose பக்கத்தில் உள்ள html சொடுக்கி அங்கு டைப் செய்யவும்... பிறகு மீண்டும் compose பக்கத்திற்கு வந்து விடவும்...
Example :
<a href=
http://geetha-sambasivam.blogspot.in>சாப்பிடலாம் வாங்க</a>
மற்றொரு எளிய வழி :
பதிவு எழுதும் பக்கத்திலேயே மேலே நிறைய பட்டன்கள் இருக்கும்... அதில் Link என்பதை சொடுக்கி, Web address என்கிற கட்டத்தில் தளத்தின் இணைப்பு அல்லது தளத்தின் பிடித்த பதிவின் இணைப்பு கொடுத்து விட்டு, அதற்கு மேலே Text to display : என்கிற கட்டத்தில் அந்த தளத்தின் பெயர் அல்லது அந்தப் பதிவின் தலைப்பு கொடுத்து விட்டு (தமிழில் முதலிலேயே டைப் செய்து கொள்ளவும்...), "OK" சொடுக்கி விட்டு வெளியே வரவும்...
நன்றி...
டிடி, நீங்க முதலில் சொன்னமுறையில் தான் முயன்று பார்த்திருக்கேன். வரலை. லிங்கிலும் கொடுத்தேன். அது ஓரளவு சரியாயிருக்குமோனு நினைக்கிறேன். ஆனால் இங்கே பின்னூட்டம் கொடுக்கையில் சரியாய்ப் போகும். பதிவில் தான் போவதில்லை. உதாரணமாக எண்ணங்கள்
Deleteஅதே தான் இங்கேயும் கொடுத்தேன். இது சில மாதங்களாக என் கணினியிலும் இருக்கு; மடிக்கணினியிலும் இருக்கு. ஏன் எனப் புரியவில்லை. :( உங்களை மாதிரி தொழில் நுட்ப நிபுணர்கள் நேரே பார்த்துத் தான் கண்டு பிடிக்கணும். :)))))
Deleteநீங்கள் எண்ணங்கள் என்று அளித்துள்ள சுட்டி வலைச்சரத்தில் இப்படியொரு பக்கம் உள்ளதா என்பதைத்தான் தேடும். டிடி சொன்னதுபோல் செய்தாலும் நீங்கள் லிங்க் விலாசப் பெட்டியில் என்ன தளத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த தளத்தின் விலாசத்தை மட்டும் அளியுங்கள் உதாரணத்திற்கு என்னுடைய பதிவுக்கு செல்ல வேண்டும் என்றால் http://ennulagam.blogspot.com என்று அடித்துவிட்டு Text to display பெட்டியில் என்னுலகம் என்று கொடுத்தால் நிச்சயம் சரியான விலாசத்தை சென்றடையும். இந்த சிக்கல் உங்களுடைய கணினிக்கு மட்டும் இருக்கும் சிக்கலாக தெரியவில்லை. மீண்டும் ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.
Deleteஆமாம், இப்போத் தான் கவனித்தேன். லிங்க் விலாசப் பெட்டியிலும் போட்டுப் பார்த்தாச்சு. எனக்கு என்னமோ கணினிக்கு மட்டும் சிக்கலோனு தோன்றியது. :))) தவறைச் சுட்டிக் காட்டியதுக்கு நன்றி.
Deleteஅழகாக தொடுக்கப்பட்ட சரம்...
ReplyDelete2005ல் இருந்து பதிவுகளை வெளியிடும் தங்களுக்கு என் அன்பின் வணக்கங்கள்..
வாங்க துரை செல்வராஜு ஐயா, நன்றியும் வணக்கமும்.
Deleteஅடேங்கப்பா... இவ்வளவு blogsஆஆஆ.....
ReplyDeleteபதிவுகள்ல லிங்க் எப்படி இணைக்குறதுன்னு தமிழ்வாசி பிரகாஷ் அண்ணா படத்தோட சொல்லியிருக்காங்கம்மா... நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்களேன்
http://www.tamilvaasi.com/2013/10/tips-for-valaicharam-blog-authors.html
காயத்ரி தேவி, இணைக்கும் முறை தெரியும். ஆனால் கணினியில் தான் ஏதோ பிரச்னைனு நினைக்கிறேன். டிடிக்குக் கொடுத்திருக்கும் பதிலில் லிங்க் இணைப்புப் போயிருக்கு பாருங்க. பதிவில் கொடுத்தால் தான் போகலை. :(
Deleteஅதை யாரும் புரிஞ்சுக்கலைனு நினைக்கிறேன். ஹிஹிஹி எனக்கு லிங்க் கொடுக்க வரலைனு நினைக்கிறாங்க போல! :))))))))) வி.வி.சி.
Deleteவலைச்சர வாரத்துக்கு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி:)! ஆர்வம்தானே முக்கியம்? ஒவ்வொரு கலைக்கும் துறைக்கும் என எத்தனை வலைப்பூக்களை நிர்வகித்து வருகிறீர்கள்! வியப்பும் பாராட்டுகளும்.
ஆஹா, என்னைப் பெரிய நிர்வாகியாக்கினதுக்கு நன்றி. உங்களோட கலையைப் பார்த்து வியந்து சமயத்தில் எதுவுமே சொல்லத் தோணாமல் பேசாமல் இருந்துடுவேன். :)))
Deleteவணக்கம் அம்மா....
ReplyDeleteஇந்த வார சரத்தை அழகாக தொடுக்க வாழ்த்துக்கள்....
தளத்தின் லிங்க் தருவதில் பிரச்சனையா?
இதோ இந்த பதிவில் உதவி உள்ளது. பார்க்க: வலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்!!!
தம்பி, உங்கள் பதிவைப் படிச்சிருக்கேன். என்றாலும் என்னமோ பதிவிலிருந்து மட்டும் லிங்க் போவதில்லை. காரணம் புரியவில்லை. :(
Delete2005 லிருந்து இவ்வளவு வலைப்பதிவுகளிலும் எழுதிக்கொண்டு இருக்கும் உங்களையா பெரிதாக ஒன்றும் சொல்லிக்கொள்ள இல்லை என்கிறீர்கள்! இந்த வார சரம் சிறப்பாக அமைய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
ReplyDeleteவாங்க சித்ரா சுந்தர், உங்கள் மனம் கனிந்த பாராட்டுகளுக்கு என் நன்றி. வாழ்த்துகளுக்கும் நன்றி.
Deleteவலைச்சர பதிவில் லேபிளில் உங்கள் பெயரை தரவும்... அப்போது தான் மற்றவர்கள் உங்கள் பதிவை எளிதில் தேடி படிக்க வசதியாய் இருக்கும்.... மேலும் லேபில் பற்றிய விளக்கத்திற்கு எனது மேற்கண்ட கருத்துரையில் உள்ள லிங்கில் பார்க்கவும். நன்றி.
ReplyDeleteலேபிளில் பெயர் கொடுத்திருக்கேன். சீனா சார் முதல்லேயே சொல்லி இருந்தார். அதுவும் வரலையா? :(
Deleteபுகைபடப் பயணங்கள் பற்றிச் சொன்னதற்கு மிக மிக நன்றி.
ReplyDeleteகீதா எத்தனையாவது முறை வலைச்சரம் பதவி!!!????? அப்ப அலுத்துக்கொள்ள விஷயமே இல்லை:)
உங்களைப் போன்ற பொக்கிஷங்கள் பகிர வேண்டிய சேதிகள் ஆயிரம். அத்தனையும் எழுதுங்கள் மா. மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.
இரண்டாம் முறை தான் வல்லி. சீனா சாரும், வைகோ சாரும் ரொம்பக் கேட்டுக் கொண்டாங்க. சரினு ஒத்துண்டேன். வாழ்த்துகளுக்கு நன்றி.
Deleteஇந்தச் செய்தியை எனக்குச் சொன்ன தனபாலனுக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteநல்ல மனிதர் நல்ல உள்ளம்.வாழ்க வளமுடன்.
ஆமாம், உனக்கு என்ன வேணும்னு கடவுள் கேட்டால் டிடியைப் போன்ற உள்ளம் வேணும்னு தான் கேட்பேன். :))))
Deleteஉங்கள் பதிவுகளின் தனிச்சிறப்பே அவைதம் எளிய நடையே.
ReplyDeleteநீங்கள் வலையில் கால் வைத்த காலம் முதலாய், உங்களை வலையில், கண்ட நாள் முதலாய், நான் படிக்கிறேன்.
ஆங்கிலத்தின் மிகச்சிறந்த இலக்கியகர்த்தா ஆன ப்ரீச்டிலி யை நினைவு படுத்தும் வகையில் உள்ளது உங்கள் எளிய நடை.
அது சரி. யாரும் வரவில்லையே என என்ன வருத்தம் ??
தென்னை மரமும் கங்கை நீரும் யாரும் எடுத்துப்போகவில்லையே எனக் கவலைப்படுவதுண்டோ ?
துளசி தனது காவியத்தை ராம சரித மானஸ் எழுதியபோது அவரிடம் பலர் கூறினார்களாம். இது எதற்காக மெனக்கடுகிறீர்கள் ? ஏற்கனவே தான் வால்மீகி ராமாயணம் உள்ளதே என்றார்களாம். அதற்கு துளசி தாசர் , நான் இராம கதையை எழுதுவது எனது மனத் திருப்திக்கே, எவருடைய பாராட்டுக்காகவும் அல்ல. ( ஸ்வாந்த சுகாய) என்றார்.
எழுதுங்கள். ரசியுங்கள். ஒரு நூறு வருடம் அல்ல, ஒரு ஐநூறு ஆயிரம் வருடம் கழித்து, தமிழ் மக்கள் அறிந்து போற்றும் வண்ணம் எழுதுங்கள். அந்த ஒரு திருப்தியே போதும். யாரும் வரவில்லையே
என்ற எண்ணம் வேண்டாம்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
சூரி சார், வருத்தமோ, கவலையோ இருந்திருந்தால் இப்படித் தொடர்ந்து எழுத மாட்டேனே, என்ன சொல்றீங்க! படிக்கிறது ஒருத்தரா இருந்தாக் கூடப் போதும்னு தான் என்னோட எண்ணம். நான் சொல்ல வந்தது பின்னூட்டங்களுக்காகக் கவலைப் பட வேண்டாம்ங்கற அர்த்தத்திலே. ஆனால் அதைச் சரியாய்ச் சொல்லலை. :)))
Deleteஎன்றாலும் ஊக்கப்படுத்தும் உங்கள் பின்னூட்டத்துக்கும் ஒப்புவமைக்கும் மிக்க நன்றி. அதுவும் துளசியோடு எல்லாம் சேர்த்துச் சொல்லி இருப்பதற்கு ரொம்பப் பெரிய மனசு வேண்டும். ரொம்பவே நன்றி சார். :)))
இனிய நல்வாழ்த்துகள் ஆசிரியரம்மா..
ReplyDeleteஎட்டுக்கால் புரவி வேகத்தில் பயணம் ஆரம்பித்திருக்கிறது :-))
அப்படிங்கறீங்க?? எனக்குத் தெரியலையே? :))))
Deleteவலைச்சர வாரம் - இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துகள்.....
ReplyDeleteநானும் உங்களோட இரண்டு பக்கங்களைத்தான் தொடர்ந்து படிக்கிறேன். மற்றவற்றையும் இனிமேல் படிக்கணும்.....
இந்த வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.....
நன்றி வெங்கட், மற்றவற்றையும் படியுங்கள். :))) அப்புறமா என்னைக் கண்டாலே ஓடுவீங்க! :)))
Deleteசுய அறிமுகம் அருமை.
ReplyDelete//அப்படி ஒண்ணும் அதிகமாப் பின்னூட்டங்கள் வரதில்லை என்றாலும் ஹிட் லிஸ்ட் பல சமயங்கள் எகிறும். ஆகவே வர கமென்டுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைனு புரிஞ்சு போச்சு!
இப்போ இந்த வலைப்பக்கத்திலே 1642 பதிவுகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. அதிகம் பின்னூட்டம் வந்தது என்றால் தமிழ் மணம் நக்ஷத்திரம் ஆன வாரம் தான்.//
அதிகமாக பின்னூட்டங்கள் வராமலேயே 1642 பதிவுகள் ... !!!!!
மிகப்பெரிய சாதனை தான். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பின்னூட்டம் பத்தி ரொம்பக் கவலைப்பட்டுக்கிறதில்லை வைகோ சார். படிக்கிறாங்கனு மட்டும் புரியுது. அது போதுமே! :))) வாழ்த்துகளுக்கு நன்றி.
Deleteஇத்தனை வலைப்பூக்களிலும் ஆக்கங்களைத் தொடரும் தங்கள்
ReplyDeleteதிறமை கண்டு பெருமை கொள்கின்றேன் தோழி !!வாழ்த்துக்கள்
இவ்வாரம் முழுவதும் தங்கள் பணி வெகு சிறப்பாகத் தொடரவும்
கந்த குருவின் அனுக்கிரகமும் கிட்டிட மனமுவந்து வாழ்த்துகின்றேன் .
நன்றி அம்பாளடியாள், வாழ்த்துகளுக்கும் தங்கள் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி.
Deleteஅருமையான அறிமுகம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி ஜனா!
Deleteகீதா அம்மா.. இனிய அறிமுகம்!..தமிழ்மணத்தில் ஓட்டும் போட்டு விட்டேன்...
ReplyDeleteநீங்கள் எனக்கு புதிய அறிமுகம் ... தங்கள் வலையையும் பார்வையிட்டு வந்தேன்..
..ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com
♥... கணினி தகவல் ...♥
வாங்க முகமது நவ்சின், எனக்கும் நீங்க புதிய அறிமுகம். வந்து மெதுவாப் படிங்க. நன்றி.
Deleteஅறிமுகமே அசத்துகிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள் கீதா அம்மா.
நன்றி அருணா செல்வம், தொடர்ந்து வாருங்கள். அநேகமாய் எல்லாருக்கும் அறிமுகம் ஆன பதிவுகளாகவே இருக்கும் என்பதால் பின்னூட்டங்களும் குறைவாகவே வரும் என எண்ணுகிறேன். :))))
Deleteமுதல் நாளிலேயே முத்தான பல தளங்களை அறிமுகப்படுத்தி அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ், தொடர்ந்து வாருங்கள்.
Deleteதிருச்சி வலைப் பதிவர்களில் ஒருவரான உங்களை வருக! வருக! என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி திரு தமிழ் இளங்கோ.
Deleteவலைச் சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்... உங்கள் பதிவுகளையும் தொடர்கிறேன்.
ReplyDeleteநன்றி எழில்.
Deleteவலைப்பூ வல்லுனர் கீதா அவர்களே!
ReplyDeleteதங்கள் அசத்தலான தளங்கள் அறிந்து
வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டேன்.
ஆசிரியப் பணி சிறக்க எனது பாராட்டுக்கள்!
ஆஹா, வல்லுநர் பட்டம் கொடுத்துட்டீங்களே! நன்றி நிஜாமுதீன்.
Deleteவலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடர முடியாமல் வெளியூர் பயணம் வந்து சேர்த்து விட்டது, வந்து பார்த்து விடுகிறேன்.
அறிமுக படலமே அருமை.
ஆசிரிர் பொறுப்பை சிறப்பாக செய்வீர்கள் நீங்கள்.
வாழ்த்துக்கள்.
இன்று நீங்கள் குறிப்பிட்டவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
வாங்க கோமதி அரசு, காணோமேனு நினைச்சேன். :)) மெதுவா வாங்க.
Deleteஆரம்பம் அமர்க்களம்...
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க...
தொடர்கிறோம்.
வாங்க குமார், தொடருங்க, தொடருங்க.
Delete//சாப்பிடலாம் வாங்க.
ReplyDeleteஇதுக்கு ஓரளவுக்கு ரசிகர்கள் இருக்காங்க என்பதோடு ஹிட்லிஸ்டும் சமயத்தில் எகிறும். இதன் தொடர் ரசிகர் நம்ம
டிடி. http://dindiguldhanabalan.blogspot.com/திண்டுக்கல் தனபாலன்//
"கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..." :))))
ஹாஹா, ஶ்ரீராம், வேணும்னு தான் உங்க பேரைச் சொல்லலை. அப்போத் தானே வந்து பார்ப்பீங்க. நீங்களும் அதுக்கு ஒரு ரசிகர் தான்னு எனக்கும் தெரியும், அதிலேயும் என்னை மாதிரி சாப்பாட்டு (ஶ்ரீ)ராமர்னும் தெரியுமே! :))))))
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஒழுங்கா தொண்டு கிழங்களுக்கு கனினி ( http://techforelders.blogspot.com/ ) படிச்சு இருந்தா லிங்க் போடறதுல பிரச்சினை வருமா?
ReplyDeleteஅவசர டபேல் வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லாத்துக்கும் அவசரம்! அடுத்த வலைச்சரப் பதிவுகளையும் பாருங்க. ஒழுங்கா லிங்க் வந்திருக்கும். :)))))
Deleteஊருல இருந்து வந்தாச்ச்.. வந்து பாத்தா தீபாவளி பரிசு போல் அழகான வலை(பூ) சரத்தை தொடுத்து வைச்சிருக்கீங்க!!. சந்தோஷம்ம்ம்ம்ம்!!!..எல்லா தளங்களுக்கும் விசிட்டுடுறேன் கட்டாயம்!!!
ReplyDeleteவாங்க பார்வதி, உங்க தளமும் அறிமுகம் செய்திருக்கேன்.
Deleteவலைச்சர ஆசிரியருக்கு இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteரம்யம் அறிமுகத்துக்கு மகிழ்கின்றேன். நன்றி..
நன்றி மாதேவி கண்ணால் காணாத நட்பின் வலிமை மிக மிக அருமையாக இருக்கிறது. உங்கள் மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது.
Deleteஇப்பவும் என் பெயரை மறக்காம குறிப்பிடுவதற்கு மிக்க நன்றி :)
ReplyDeleteஆசானை மறவாத மாணவியாக்கும் நான்! :)))))
Deleteவலை உலகில் டிடியை அறியாதவர் இல்லை. இவரோட பதிவுகளும் ஆக்க பூர்வமானவை. பலதும் படிக்கிறதோடு சரி. எல்லாத்தையும் ஸ்போர்டிவா எடுத்துப்பார். வெங்காய விலை போல் நம் வாழ்க்கையையும் உயரச் சொல்லி வாழ்த்தும் மனம் கொண்டவர்.
ReplyDeleteசரியான அங்கீகாரம்.
நன்றி ஜோதிஜி. டிடிக்குத் தான் என்னோட வலைச்சர வாரத்தில் முழு ஓய்வாகப் போய் விட்டது. :)))))
Delete