அடுத்து ஏற்கெனவே பல முறைகள் சொல்லி இருக்கும் ஒரு தளம். இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய தளம். இதனை ஆய்வு செய்து எழுதியவர் காந்தியவாதியான திரு தரம்பால் என்பவர். நம் நாட்டின் இன்றைய நிலைமைக்கு இத்தகைய ஆய்வுகள் தேவை என்பது என் கருத்து என்பதோடு இளைய சமுதாயம் பதினெட்டாம் நூற்றாண்டு இந்தியாவை நன்கறிந்து புரிந்து கொண்டால் இன்றைய இந்தியாவை சிறப்பான முறையில் கொண்டு செல்ல வசதியாக இருக்கும். வழிகாட்டியாகவும் இருக்கும். திரு தரம்பால் 2006 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் தான் இறந்தார்.
இந்தத் தளம் ஆங்கிலத்தில் இருந்தாலும் இதன் செய்திகள் பரவலாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும். இவரின் "The Beautiful Tree" என்னும் புத்தகம் அனைவராலும் படிக்கப்பட வேண்டும். இதை இளைய நண்பர் திரு ஆமாச்சு என்பவர் தமிழில் மொழி பெயர்த்து வருகிறார்.
http://tinyurl.com/knf35cm/தரம்பாலின் படைப்புகள்
தரம்பால் குறித்த தளத்தின் சுட்டி
http://www.samanvaya.com/dharampal/தரம்பால்
இங்கே சென்று பார்க்கவும். ஆண்டவன் ஒருவனுக்கே அர்ப்பணம் செய்யப்படும் பவளமல்லியை ஒத்த இந்தத் தளத்தின் செய்திகள் அனைவருக்கும் சென்று பயனடையப் பிரார்த்திக்கிறேன்.
அடுத்து எனக்கு இணையம் வந்த சில நாட்களிலேயே அறிமுகம் ஆன மழலைகள் தளம்.
http://www.mazhalaigal.com/tamil.php/மழலைகள்
தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வெளி வரும் இந்த இணைய இதழ் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதில் எழுதி வரும் அனைவருமே ஐம்பது வயதைக் கடந்தவர்கள். தமிழ் மழலைகளில் குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் புராணக்கதைகளில் இருந்து அறிவியல் தகவல்கள் வரை அனைத்தும் அளிக்கப் படுகிறது. ஆங்கிலத்திலும் அவ்வாறே தரப் படுகிறது. தமிழ் மழலைகளில்
"http://www.mazhalaigal.com/ பிள்ளையார் பாட்டி
என்ற பெயரில் என் படைப்புகளைக் காணலாம். அதோடு மற்ற எழுத்தாளர்களின் படத்துக்கு நேரே சுட்டினால் அவர்களின் படைப்புகளைக் காண முடியும்.
http://www.mazhalaigal.com/management/team/team-001/mglta007gss_geetha.php/
என் படைப்புகளை இந்தச் சுட்டியில் காணலாம்.
இதை நிர்வகிப்பது திரு ஆகிரா என்னும் ஏ.கே. ராஜகோபாலன் அவர்கள். பொள்ளாச்சியைச் சேர்ந்த இவர் பொறியியலில் பட்டம் வாங்கி சில ஆண்டுகள் வேலை பார்த்த பின்னர் வேலையை விட்டுவிட்டுப் பல தளங்களையும் நிர்வகித்து வருகிறார்.
இன்று வரையிலும் தொடுத்த கோர்த்த பூச்சரங்களில் தாழம்பூவைப் பாவாடையாகவும், பவளமல்லியை அர்ச்சனைக்கும் பயன்படுத்தி மற்றவற்றை இணைய தேவதைக்கு மாலையாக்கிவிட்டு அடுத்து வரப் போகும் நபரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விடை பெறுகிறேன்.
ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி, வணக்கம்.

பொறுப்பாக எல்லாப் பக்கங்களையும் க்ளிக்கிப் பார்த்து விட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்! சிறப்பாக முடித்தீர்கள்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம், சிரமம் இல்லை எனில் தரம்பாலின் தளத்திலேயே "The Beautiful Tree" தரவிறக்கிப் படித்துப் பார்க்கவும். :))))))
Deleteஏற்கனவே திரு.தரம்பால் பற்றி என்னிடம் பிரஸ்தாபித்து இருக்கிறீர்கள், கீதா. இளைய சமுதாயத்தில் எனக்கு மிகவும் பிடித்துப்போன நபர், ஆமாச்சு. அமரிக்கையும் ஆற்றலும் இப்படி கூடி வருவது அபூர்வம். அவருடைய இல்லாள் சேச்சுவும் நன்றாக விஞ்ஞான கட்டுரைகள் எழுதுபவர். ரொம்ப நாளா காணோம்.
ReplyDeleteநன்றி "இ"சார். பொறுமையாக நேரம் செலவு செய்து எல்லாவற்றையும் படித்ததுக்கும் நன்றி.
Deleteஒரு பதிவைப் பார்த்து படித்து உங்களின் மொத்த அறிமுகத்தையும் படித்தேன்.
ReplyDeleteஉங்கள் உழைப்பு அர்ப்பணிப்புக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்.
நன்றி ஜோதிஜி.
Deleteமிகவும் அழகான மாலைக்கு, சரத்திற்குப் பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி மிடில் க்ளாஸ் மாதவி.
Deleteஒரு வாரகாலத்தில் வலைச்சரத்தை சிறப்பான பூக்களால் மணக்கச் செய்த தங்கள் பணி சிறப்பானது! தங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!
ReplyDeleteநன்றி சுரேஷ்.
Deleteஇன்று வரையிலும் தொடுத்த கோர்த்த பூச்சரங்களில் தாழம்பூவைப் பாவாடையாகவும், பவளமல்லியை அர்ச்சனைக்கும் பயன்படுத்தி மற்றவற்றை இணைய தேவதைக்கு மாலையாக்கிவிட்டு அடுத்து வரப் போகும் நபரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விடை பெறுகிறேன்.//
ReplyDeleteஅழகாய் நிறைவு செய்தீர்கள்.
ஊருக்கு கிளம்பும் வேகத்திலும் உங்கள் இன்றைய பதிவை படித்து விட்டென். நீங்கள் குறிபிட்ட தளங்களை படித்து விடுகிறேன்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சிறப்பாக வலைச்சர பொறுப்பை நிறைவு செய்த உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
அருமையான தளங்களை படிக்க தந்தமைக்கு நன்றிகள்.
அவசியம் படிக்க வேண்டிய தளங்கள் கோமதி அரசு. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள். நன்றி.
Delete// தாழம்பூவைப் பாவாடையாகவும், பவளமல்லியை அர்ச்சனைக்கும் பயன்படுத்தி மற்றவற்றை இணைய தேவதைக்கு மாலையாக்கிவிட்டு ............................
ReplyDeleteHAPPY இன்று முதல் HAPPY ன்னு பாட்டுப்பாடுங்கோ. ;)
நன்றி வைகோ சார், கொடுத்த கடமையை ஓரளவுக்குத் திருப்தியாகச் செய்த நிறைவு மட்டுமே. நன்றி வாய்ப்பளித்த உங்களுக்கும், சீனா சாருக்கும் மீண்டும் நன்றி..
Deleteபவளமல்லி போலவே அமைதியாக அழகாக ஆரவாரமில்லாமல் சரம் தொடுத்து முடித்திருக்கிறீர்கள் கீதா.
ReplyDeleteநீங்கள் கொடுத்திருக்கும் தளங்களும் அவ்வாறே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றி வல்லி. எல்லாம் இறை அருளே அன்றி வேறில்லை. :)))
Deleteஅற்புதமான தளங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்..ரொம்ப நன்றிம்மா..
ReplyDeleteமிக அருமையாகவும் நிறைவாகவும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறீர்கள்.. விருந்தினர்கள், குடும்பக் கடமைகள் இவற்றிற்கு இடையே கொஞ்சமும் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்ளாமல், மிகச் சிறந்த செயல் நேர்த்தியோடு தாங்கள் தொடுத்த வலைச்சரக் கதம்பம் என்றென்றும் மாறாது மணம் வீசும் நிச்சயம். நிறைவு செய்த விதம் அற்புதம்...தங்களுக்கு இறைவன் எல்லா நலமும் வளமும அருளப் பிரார்த்திக்கிறேன் அம்மா.. மிக்க நன்றி!!
ரொம்ப நன்றி பார்வதி. அதிகம் புகழ்ச்சிக்குத் தகுதியும் இல்லை. :))) கூசுகிறது.:))) உங்கள் அன்பின் மிகுதியால் அதிகம் புகழ்கிறீர்கள். :)))))
Deleteஅழகாக தொடுக்கப்பட்ட மாலைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி குமார்.
Deleteநமக்கும் பிறருக்கும் எந்த வகையிலாவது பயன்தரக்கூடியதாய் பல தளங்களை அழகாய், சிறப்பாய் அறிமுகப்படுத்தி, பொறுப்பை முடித்தீர்கள். நன்றியும் பாராட்டும்.
ReplyDeleteஉண்மை நிஜாமுதீன். தளங்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பதே என் கருத்தும். நன்றிப்பா.
Deleteஅனைத்துச் சரங்களுமே அருமை கீதா! இனிய பாராட்டுகள்.
ReplyDeleteஆரம்பத்திற்கும், முடிவுக்கும் வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றி துளசி.
DeleteVery nice your writing & blog introductions.
ReplyDeleteநன்றி விஜி"கிச்சன்க்ரியேஷன்ஸ்
Deleteதொடர
ReplyDeleteவேலை பளு காரணமாக எல்லா அறிமுக பதிவுகளையும் உடனே பார்க்க முடியவில்லை. நிச்சயம் அவற்றைப் பார்க்கிறேன். சிறந்த தேர்வுகளுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி விய பதி.
Deleteஇவ்வாரத்தை வாசமிகு மலர்களால் அழகாக தொடுத்து தந்திருந்தீர்கள்.
ReplyDeleteசிறப்பாக பணியை செய்துள்ளீர்கள் நல்வாழ்த்துகள்.
நன்றி மாதேவி. பாராட்டு உற்சாகத்தை அளித்தாலும் கூடவே கூச்சமாவும் வருது! :)))
Deleteஅருமையாக பவழ மல்லிச்சரம் தொடுத்தளித்து விடைபெறும் தங்களுக்கு அன்பின் நன்றி.. வணக்கம்!..
ReplyDeleteநன்றி துரை. வணக்கம்.
Deleteசிறப்பான வலைச்சர வாரம். நிறைய தளங்கள் எனக்குப் புதியது. ரொம்பவே பிசியாக இருந்தபோதும் இத்தனை பதிவுகளை தேடித்தேடி தந்திட்டீங்களே..... வாழ்த்துகள்.
ReplyDelete