ஏழு நாட்கள் ஏழு நொடிகளாக ஓடி விட்டன. சீனா ஐயாவிடம் வலைத்தள ஆசிரியராக இருக்க ஒத்துக்கொண்ட போதும் முற்றிலும் புதிய தளம் என்பதால் சிறிது பயத்தோடே பயணிக்க முடிந்தது. இந்தப்பதிவோடு உங்களிடம் இருந்து விடைபெற்றாலும் வலைப்பக்கத்தில் தொடர்ந்து இணைந்து பயணிப்போம் தோழமைகளே.......
முதல் முயற்சியென்பதால் நிறைய குறைகள் இருந்திருக்கும். வெறும் பாராட்டை மட்டுமே பரிசளித்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எப்படி செய்யப்போகிறேன் என்ற மலைப்புடன் தொடங்கி, பயத்துடன் பயணித்து உங்கள் அனைவரது ஆதரவால் நிறைவுடன் முடித்துவிட்டேன்.
அடுத்த வாரம் வலைத்தள ஆசிரியராக பொறுப்பேற்பவர்க்கு எனது வாழ்த்தினை தெரிவித்து கொண்டு உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி....வணக்கம்.
அன்பின் அனிதா ராஜ் - அருமையாக ஒரு வாரம் பொறுப்பேற்று - ஏற்ற பொறுப்பினைச் சரிவரச் செய்ததற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றிங்க ஐயா
Deleteசிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்.... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteநன்றிங்க தனபாலன்...உங்களது தொடர்ந்த ஆதரவு நெகிழ வைக்கிறது
ReplyDeleteஆசிரியர் பணியை சோம்பல் விரட்டி சுறுசுறுப்பாகச் செய்து கலக்கல் வாரமாக ஆக்கிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹஹஹா...குமார்......இது வஞ்சப்புகழ்ச்சி மாதிரி இருக்கே
Deleteவாழ்த்துகள் அக்கா...
ReplyDeleteநன்றிடா....
Deleteவணக்கம்
ReplyDeleteசிறப்பாக பணியை முடித்தமைக்கு மிக்க நன்றி..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றிங்க ரூபன்
Deleteஒருவாரமாக பொறுமையுடனும், பொறுப்புடனும், சிறப்பாகவும் இச்சரத்தில் பலவண்ண மலர்களை அறிமுகம் செய்துவைத்த அனிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றிங்க ஆனந்த்
Deleteஉங்கள் மூலம் நல்ல அறிமுகங்கள் கிடைத்தமைக்கு நன்றி...வாழ்த்துக்கள்
நன்றி சத்யா
Deleteவாரம் முழுக்க வித்தியாசமான தலைப்புகளில் வாசகர்களை ஈர்த்துள்ளீர்கள்.. இனியொரு வாய்ப்பு கிடைப்பின் இன்னும் அதிகமாய் உங்கள் பங்களிப்பு இருக்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்-- உங்கள் எல்லா பணிகளுக்கும்....
ReplyDeleteநன்றிங்க நிலா தமிழன். இப்போது தான் எல்லோரது வலைப்பக்கங்களை படிக்க ஆரம்பித்து உள்ளேன். கண்டிப்பாக இதை விட சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறிது வேலைப்பளு காரணமாக முழு அற்பணிப்புடன் செய்ய முடியவில்லையென்ற வருத்தும் மனதில் இருக்கிறது.
Deleteaarambam adhiradiyaa aarmbichchu,mudivuraiya shortaa mudichuttinga....:)
ReplyDeleteஹஹஹா.....ஞாயிற்றுக்கிழமை தாங்க காரணம். மாமாவும், பையனும் வீட்டில் இருக்கும்போது இணையத்திற்கே வரமாட்டேன். இன்று கிடைத்த 10 நிமிடத்தில் விடைபெற வேண்டிய சூழலில் சின்னதாக போட்டுவிட்டேன்.
Deleteohh,okk.எல்லா பதிவும் நல்லா இருந்துச்சு,
Deleteநீங்க முகநூலில் இந்த பக்கத்தை
பற்றி சொன்னதுக்கு நன்றி.நிறைய அறிமுகங்கள். நன்றி சகோதரி.
மீண்டும் சந்திப்போம் முகநூலில்.
இனிமையான மறக்கமுடியாத ஒரு வாரமாக அமைந்துவிட்டது. எனக்கும் உங்கள் ஆர்வமான, இயல்பான, நகைச்சுவை கலந்த எழுத்து நடையை வாசிக்க இந்த வாரமும், இந்த வலைச்சரமும் வாய்ப்பளித்தது. பெருங்கவிஞர்களிலிருந்து, நண்பர்கள் வரை அனைத்துமே நல்ல அறிமுகம். நன்றி தோழி!
ReplyDeleteநன்றி சுமன்......:)
Deleteகருத்திட்டு ஊக்கமளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDelete