வலைச்சர நண்பர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.
இன்றைய பதிவில் சிந்தனை சிதறல்கள் சில...
இந்த பாடலில் மாபெரும் விஞ்ஞான உண்மை மறைந்து கிடக்கிறது.
இந்த பிரபஞ்சம் (macro Universe) அதாவது அண்டம் என்பது மண், விண், காற்று, தீ, நீர் என ஐந்து வகை மூலப்பொருட்களால் உருவானது.
நம் உடம்பை பிண்டம் (micro Universe) என்று சொல்கிறோம். உயிருக்கும் உலகத்திற்கும் இடைவிடாத தொடர்பு உள்ளது. இந்த தொடர்பில் பிரச்சனை ஏற்படும் போது அல்லது அறுபட்டு போகும் போது உயிர் பிரிந்து விடுகிறது எனறு சொல்லலாம். இந்த நுட்பமான கருத்தை மேலே உள்ள பாடல் தெரிவிக்கிறது.
எப்போதோ படித்ததை எடுத்து வைத்திருந்த குறிப்பு இது
இந்த கவிதை வரிகளை உற்றுப் பார்த்தால் பெரிய தத்துவத்தை உணர்துகிறது. என்ன அது ? நம்முடைய சந்தததியினர் நாம் இருந்ததற்கு சாட்சியாக இருப்பார்கள் இந்த தொடர் சங்கிலி இணைப்பு சொல்லும் நிஜம் யாருமில்லை சாட்சியாக. நம்முடைய ஒவ்வொரு ஆராய்சிக்கும் அறிதலுக்கும் மனமே கேள்வியாகவும் சாட்சியாகவும் இருக்கிறது.
அங்கே யாருமில்லை சாட்சியாக
மனம் தான் கேள்வியாக
எனக்குள்ளே ஒருவன் நீதி தேவன்
கூண்டிலேற்றினான் குற்றவாளியாக.
புத்தர் எட்டுவழிகளை போதித்தார் என்று சொல்கிறார்கள். அந்த வழிகளை நாம் நடை முறைப் படுத்துவதையோ ஏன் தெரிந்து கொள்ள விரும்புவதையோ என்றோ மறந்துவிட்டோம் என்று தான் சொல்லவேண்டும்.
அந்த எட்டு தத்துவ விளக்கங்கள் இவை ; 1. சரியாக புரிந்து கொள்; வாழ்வையும் உலக இயல்புகளையும், வாழ வேண்டிய நெறிகளையும், புரிந்து கொள்.
2. சரியாக எண்ணு; மனதில் தூய்மை இருக்கட்டும். கொடுமையையும், கெட்ட எண்ணத்தையும், ஆசை வெறியையும் அகற்று.
3. சரியானபடி பேசு; சாந்தமாகப் பேசு, பொய் சொல்லாதே, புறஞ்சொல்லாதே, கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதே. வம்பு பேசாதே.
4. சரியான செயல்களில் ஈடுபடு; உன் செயல் தூய்மையான செயலாக இருக்கட்டும். துன்பம் கொடுக்காதே, அழிக்காதே, அவர்களது நிதானத்திற்குப் பங்கம் ஏற்படுத்தாதே.
5. சரியான தொழிலைத் தேர்ந்தெடு; நாணயமான தொழிலைச் செய்; பிறருக்குக் கேடு செய்யாதே நியாயமற்றவைகளை செய்யாதே.
6. சரியான முயற்சியில் ஈடுபடு; உழைப்பதிலும், முயற்சியிலும் ஈடுபடும்போது கெட்ட எண்ணம் எழாது. நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்.
7. சரியான சிந்தனை; மனத்தைப் பற்றி உடலைப் பற்றி உன் உணர்வுகளைப் பற்றி இயற்கையைப் பற்றி சரியாக சிந்தித்துத் தெரிந்து கொள்.
8. சரியான கவனம்; மன சக்தியை ஒன்று திரட்டிக் கருத்தில் செலுத்து அமைதி பெறுவாய். உள்ளொளி பெறுவாய்.
இந்த 8 அம்சங்களில் நான் தெரிந்து கொண்டது கடவுளை வழிபாடு செய் உன் துயரம் தீர்பார் என அவர் பரிந்துரைக்கவில்லை.
என் பார்வையில் இந்த உலகம் ஒவ்வொரு கணத்திலும் அபாயத்தை வெளிகாட்டுவதாகவே தெரிகிறது. எல்லாம் மாயை என்று சொல்வது போல்
மக்களின் போக்கு வெகுவாக மாறிவிட்டது. யாரும் எதையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வது இல்லை. எல்லா நேரங்களிலும் ஒரு மாய உலகத்தில் இருப்பதை போன்றே உணர்கிறார்கள். நிதர்சனம் என்ன என்பதை யாரும் சட்டை செய்வதே இல்லை.
என்னைப் பொருத்த வரை இந்த நிமிடத்தை ரசிக்க கற்றுக் கொண்டால் போதும் என எண்ணுகிறேன். ஆனால் அப்படி இருப்பதையோ நினைப்பதையே இந்த உலகம் கிண்டலடிக்கிறது. ஏன் என்றால் நான் ரசனையில் இருக்கும் போது நான் பின் தங்கி விடுகிறேன், வேகமாக செல்லும் உலகம் இது.
ஆன்மீக வாதியை விடவும் நாத்திக வாதி ஆன்மீகத்தை பற்றி அதிகம் சிந்திக்கிறான். அவனை விடவும் இவனுக்கு தேடுதல் அதிகம். அப்படித்தான் பெரியாரின் தமிழ் சீர் திருத்த எழுத்தும் ஆன்மீக வாதிக்கு தெரியாதது இவருக்கு தெரிந்தது.
நாம் எப்போது வலிமை இழக்கிறோம் என்றால் மனம் தளர்ந்து விடுகிற போது என்று என்று சொல்லலாம். அப்போது நம் உடலில் எண்டார்பின்னும், லிம்போசைட்ஸும் குறைந்து போகிறது.
Endorphin என்றால் ரத்தத்தில் வலியை குறைக்கும் ரசாயணம்.
Lymphocytes என்றால் நோய்கிருமிகளை கொல்லும் பொருள்.
நீ என்னவாக இருக்க விரும்புகிறாய் என்று என்னைக் கேட்டால்
எனது பதில் நான் ஞானியாகவும் இருக்க விரும்பவில்லை விஞ்-ஞானியாகவும் இருக்க விரும்பவில்லை மனிதனாக இருக்கவே விரும்புகிறேன். (ஒன்றை கண்டுபித்தவர்கள் விஞ்ஞானிகள், மற்றதை கண்டுபிடித்தவர்கள் ஞானிகள்.)
கண்டுபிடிப்புகள் காலத்தால் அழியாது ஆனால் அது உருமாறும் மாற்றம் பெரும். எட்வின் லாண்ட் கண்டுபிடித்தது உடனடி போட்டோ மெக்கானிசம். டார்க் ரூமில் வைத்து பிரிண்ட் போட தேவை இல்லை. அப்போது அது பெரிய வித்தை தான் ஆனால் இப்போது டிஜிட்டல் வந்து விட்டது இருந்தாலும் அது அதுதான் இது இதுதான்.
அது ஒரு மழைக் காலம் மின்சார மீட்டர் பெட்டியின் உள்ளே ஒரு தவளை இருந்தது, தரையில் இருந்து எப்படி அங்கு சென்றது என்பது ஆச்சர்யமாக இருந்தது.
அது ஒரு மழைக்காலம் வீட்டு
இந்த புகைப்படம் கனடா காட்டில் எடுக்கப்பட்டது காளானை லாகவமாக பிடித்து மரம் ஏறுகிறது சிகப்பு கண் தவளை.
படித்ததில் பிடித்தது :
இயற்கை மருத்துவப் பொன் மொழிகள்
இன்றோடு எனக்கு அளிக்கப்பட்ட வலைச்சர பணி முடிகிறது. இந்த ஒரு வார காலத்தில் உங்களை யெல்லாம் சந்தித்ததில் மகிழ்ச்சி. நண்பர் திண்டுக்கல் தனபாலன் வலைச்சரத்தில் சுட்டிக்காட்டப் பட்ட பதிவர்களின் தளங்களில் இது குறித்த அறிவிப்பு செய்து வருகிறார். அவர் ஒற்றை கமெண்டும் இல்லை என்றால் பல பேர் எழுதுவதை விட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். ( Special thanks to D.D ! )
இன்றைய வலைப்பதிவர்கள்
நம்ப முடியாத தஞ்சை பெரிய கோவில் தகவல்கள்
நமக்கு அளிப்பவர் டார்ட் , இவரின் தளம் அக்கினி குஞ்சு
இம்மாதம் (நவம்பர்) முதல் பதிவுலகிற்கு வந்த புதியவர் ,
கவிஞ்சர் போலி பன்னிகுட்டி ( வலைப்பதிவு நண்பர்கள் வெச்ச பேராம் !)
பள்ளிக்கூடம்
மழலையின் பசி
தமிழ் குளோன் வலைத்தளம் அறிவியல் , அமாநுடம், தொழில் நுட்பம், வரலாறு என பல் சுவை தகவல்களை தருகிறது. சமீபத்திய பதிவு
பனிமனிதனும் டார்வினின் பரிணாமக்கொள்கையும்.
இன்று தமிழ் பேசும் நாம் நாளை மாண்டரின் பேசினால்? – Xenoglossy எனும் அமானுடம்...
நண்பர் உலக சினிமா ரசிகன் அவர்களின் தளம் பல உலக சினிமாக்களை நமக்கு அறிமுகம் செய்கிறது. ஒவ்வொரு பதிவும் ஒரு திறனாய்வே...
இப்போது மட்டுமல்ல...எப்போதுமே ‘நினைத்தாலே இனிக்கும்’!.
‘பின்லாந்து ஓநாயும்’... ‘மிஷ்கின் ஓநாயும்’.
வல்வையூரான் எனும் தளத்தின் பதிவர் ராஜமுகுந்தன் அவர்கள் இவரின் ஹைகூ பக்கங்களில் ஒன்று
காந்தள்களே வாருங்கள் (ஹைக்கூக்கள் 25)
கிராமத்து கருவாச்சி எனும் தளத்தில் எழுதிவரும் கலை
தமது பயண அனுபவங்களில் ஒன்று ( இவர் ஏன் அதிகம் எழுதுவதில்லை முகநூலில் உலவுகிறாரோ...)
சுவிஸ் பயணங்களில் ...
நண்பர் நாஞ்சில் மனோவின் ... அனுபவத்தொடர்
ஜொலி ஜொலிக்கும் அரேபியன் இரவுகளின் பயங்கரம் தொடர்....
இன்றைய பதிவில் சிந்தனை சிதறல்கள் சில...
அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே !
இந்த பாடலில் மாபெரும் விஞ்ஞான உண்மை மறைந்து கிடக்கிறது.
இந்த பிரபஞ்சம் (macro Universe) அதாவது அண்டம் என்பது மண், விண், காற்று, தீ, நீர் என ஐந்து வகை மூலப்பொருட்களால் உருவானது.
நம் உடம்பை பிண்டம் (micro Universe) என்று சொல்கிறோம். உயிருக்கும் உலகத்திற்கும் இடைவிடாத தொடர்பு உள்ளது. இந்த தொடர்பில் பிரச்சனை ஏற்படும் போது அல்லது அறுபட்டு போகும் போது உயிர் பிரிந்து விடுகிறது எனறு சொல்லலாம். இந்த நுட்பமான கருத்தை மேலே உள்ள பாடல் தெரிவிக்கிறது.
எப்போதோ படித்ததை எடுத்து வைத்திருந்த குறிப்பு இது
யாருமில்லை சாட்சியாக
மனம் தான் கேள்வியாக
இந்த கவிதை வரிகளை உற்றுப் பார்த்தால் பெரிய தத்துவத்தை உணர்துகிறது. என்ன அது ? நம்முடைய சந்தததியினர் நாம் இருந்ததற்கு சாட்சியாக இருப்பார்கள் இந்த தொடர் சங்கிலி இணைப்பு சொல்லும் நிஜம் யாருமில்லை சாட்சியாக. நம்முடைய ஒவ்வொரு ஆராய்சிக்கும் அறிதலுக்கும் மனமே கேள்வியாகவும் சாட்சியாகவும் இருக்கிறது.
இளமை எல்லாம் தருகிறது
முதுமை அனுபவத்தின் சாட்சியாக!
அங்கே யாருமில்லை சாட்சியாக
மனம் தான் கேள்வியாக
எனக்குள்ளே ஒருவன் நீதி தேவன்
கூண்டிலேற்றினான் குற்றவாளியாக.
புத்தர் எட்டுவழிகளை போதித்தார் என்று சொல்கிறார்கள். அந்த வழிகளை நாம் நடை முறைப் படுத்துவதையோ ஏன் தெரிந்து கொள்ள விரும்புவதையோ என்றோ மறந்துவிட்டோம் என்று தான் சொல்லவேண்டும்.
அந்த எட்டு தத்துவ விளக்கங்கள் இவை ; 1. சரியாக புரிந்து கொள்; வாழ்வையும் உலக இயல்புகளையும், வாழ வேண்டிய நெறிகளையும், புரிந்து கொள்.
2. சரியாக எண்ணு; மனதில் தூய்மை இருக்கட்டும். கொடுமையையும், கெட்ட எண்ணத்தையும், ஆசை வெறியையும் அகற்று.
3. சரியானபடி பேசு; சாந்தமாகப் பேசு, பொய் சொல்லாதே, புறஞ்சொல்லாதே, கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதே. வம்பு பேசாதே.
4. சரியான செயல்களில் ஈடுபடு; உன் செயல் தூய்மையான செயலாக இருக்கட்டும். துன்பம் கொடுக்காதே, அழிக்காதே, அவர்களது நிதானத்திற்குப் பங்கம் ஏற்படுத்தாதே.
5. சரியான தொழிலைத் தேர்ந்தெடு; நாணயமான தொழிலைச் செய்; பிறருக்குக் கேடு செய்யாதே நியாயமற்றவைகளை செய்யாதே.
6. சரியான முயற்சியில் ஈடுபடு; உழைப்பதிலும், முயற்சியிலும் ஈடுபடும்போது கெட்ட எண்ணம் எழாது. நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்.
7. சரியான சிந்தனை; மனத்தைப் பற்றி உடலைப் பற்றி உன் உணர்வுகளைப் பற்றி இயற்கையைப் பற்றி சரியாக சிந்தித்துத் தெரிந்து கொள்.
8. சரியான கவனம்; மன சக்தியை ஒன்று திரட்டிக் கருத்தில் செலுத்து அமைதி பெறுவாய். உள்ளொளி பெறுவாய்.
இந்த 8 அம்சங்களில் நான் தெரிந்து கொண்டது கடவுளை வழிபாடு செய் உன் துயரம் தீர்பார் என அவர் பரிந்துரைக்கவில்லை.
என் பார்வையில் இந்த உலகம் ஒவ்வொரு கணத்திலும் அபாயத்தை வெளிகாட்டுவதாகவே தெரிகிறது. எல்லாம் மாயை என்று சொல்வது போல்
மக்களின் போக்கு வெகுவாக மாறிவிட்டது. யாரும் எதையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வது இல்லை. எல்லா நேரங்களிலும் ஒரு மாய உலகத்தில் இருப்பதை போன்றே உணர்கிறார்கள். நிதர்சனம் என்ன என்பதை யாரும் சட்டை செய்வதே இல்லை.
என்னைப் பொருத்த வரை இந்த நிமிடத்தை ரசிக்க கற்றுக் கொண்டால் போதும் என எண்ணுகிறேன். ஆனால் அப்படி இருப்பதையோ நினைப்பதையே இந்த உலகம் கிண்டலடிக்கிறது. ஏன் என்றால் நான் ரசனையில் இருக்கும் போது நான் பின் தங்கி விடுகிறேன், வேகமாக செல்லும் உலகம் இது.
ஆன்மீக வாதியை விடவும் நாத்திக வாதி ஆன்மீகத்தை பற்றி அதிகம் சிந்திக்கிறான். அவனை விடவும் இவனுக்கு தேடுதல் அதிகம். அப்படித்தான் பெரியாரின் தமிழ் சீர் திருத்த எழுத்தும் ஆன்மீக வாதிக்கு தெரியாதது இவருக்கு தெரிந்தது.
நாம் எப்போது வலிமை இழக்கிறோம் என்றால் மனம் தளர்ந்து விடுகிற போது என்று என்று சொல்லலாம். அப்போது நம் உடலில் எண்டார்பின்னும், லிம்போசைட்ஸும் குறைந்து போகிறது.
Endorphin என்றால் ரத்தத்தில் வலியை குறைக்கும் ரசாயணம்.
Lymphocytes என்றால் நோய்கிருமிகளை கொல்லும் பொருள்.
நீ என்னவாக இருக்க விரும்புகிறாய் என்று என்னைக் கேட்டால்
எனது பதில் நான் ஞானியாகவும் இருக்க விரும்பவில்லை விஞ்-ஞானியாகவும் இருக்க விரும்பவில்லை மனிதனாக இருக்கவே விரும்புகிறேன். (ஒன்றை கண்டுபித்தவர்கள் விஞ்ஞானிகள், மற்றதை கண்டுபிடித்தவர்கள் ஞானிகள்.)
கண்டுபிடிப்புகள் காலத்தால் அழியாது ஆனால் அது உருமாறும் மாற்றம் பெரும். எட்வின் லாண்ட் கண்டுபிடித்தது உடனடி போட்டோ மெக்கானிசம். டார்க் ரூமில் வைத்து பிரிண்ட் போட தேவை இல்லை. அப்போது அது பெரிய வித்தை தான் ஆனால் இப்போது டிஜிட்டல் வந்து விட்டது இருந்தாலும் அது அதுதான் இது இதுதான்.
”எண்ணங்கள் ரகசியமானவை அவற்றை மறைத்துவிடலாம் என்று நம்புகிறார்கள் மக்கள் ஆனால் அவற்றை ஒருநாளும் நாம் ஒளித்து வைக்க முடியாது “ ------- ஜேம்ஸ் ஆலன்
அது ஒரு மழைக் காலம் மின்சார மீட்டர் பெட்டியின் உள்ளே ஒரு தவளை இருந்தது, தரையில் இருந்து எப்படி அங்கு சென்றது என்பது ஆச்சர்யமாக இருந்தது.
அது ஒரு மழைக்காலம் வீட்டு
இந்த புகைப்படம் கனடா காட்டில் எடுக்கப்பட்டது காளானை லாகவமாக பிடித்து மரம் ஏறுகிறது சிகப்பு கண் தவளை.
படித்ததில் பிடித்தது :
இயற்கை மருத்துவப் பொன் மொழிகள்
1. உணவே மருந்து ; மருந்தே உணவு.இதையெல்லாம் கடைப்பிடிப்பது கடினம் தான் போலும்.
2. தேங்காயும் வாழைப்பழங்களுமே மனிதனின் ஒப்பற்ற முழு உணவு.
3. கனிகளை உண்டு பிணிகள் இன்றி வாழ்வோம்.
4. பச்சை உணவு பாதுகாக்கும் உணவு.
5. இயற்கை உணவு காதலை (அன்பை) வளர்க்கின்றது; சமையலுணவு காமத்தை (வெறியை) வளர்க்கின்றது.
6. பதப்படுத்திய உணவு பயனற்ற உணவு.
7. கேரட் சாறு கேட்டுக் குடிப்போம்.
8. வாழ உண்போம்; உண்ண வாழோம்.
9. காற்று சிறந்த நுண் உணவு.
10. நோயை மெல்ல நெடுநேரம் மெல்லுவோம்.
11. கண்ட மருந்து காலனுக்கு விருந்து.
12. உப்பு ஒரு கூட்டு நஞ்சு.
13. சோறு அரிசியின் பிணம்.
14. ஒரு சாண் வயிறே இல்லாட்டா, இந்த உலகத்திலேது கலாட்டா; சமையலுணவே இல்லாட்டா, இந்த உலகத்திலேது கலாட்டா!
இன்றோடு எனக்கு அளிக்கப்பட்ட வலைச்சர பணி முடிகிறது. இந்த ஒரு வார காலத்தில் உங்களை யெல்லாம் சந்தித்ததில் மகிழ்ச்சி. நண்பர் திண்டுக்கல் தனபாலன் வலைச்சரத்தில் சுட்டிக்காட்டப் பட்ட பதிவர்களின் தளங்களில் இது குறித்த அறிவிப்பு செய்து வருகிறார். அவர் ஒற்றை கமெண்டும் இல்லை என்றால் பல பேர் எழுதுவதை விட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். ( Special thanks to D.D ! )
இன்றைய வலைப்பதிவர்கள்
நம்ப முடியாத தஞ்சை பெரிய கோவில் தகவல்கள்
நமக்கு அளிப்பவர் டார்ட் , இவரின் தளம் அக்கினி குஞ்சு
@@@@@@@
இம்மாதம் (நவம்பர்) முதல் பதிவுலகிற்கு வந்த புதியவர் ,
கவிஞ்சர் போலி பன்னிகுட்டி ( வலைப்பதிவு நண்பர்கள் வெச்ச பேராம் !)
பள்ளிக்கூடம்
மழலையின் பசி
@@@@@@@
தமிழ் குளோன் வலைத்தளம் அறிவியல் , அமாநுடம், தொழில் நுட்பம், வரலாறு என பல் சுவை தகவல்களை தருகிறது. சமீபத்திய பதிவு
பனிமனிதனும் டார்வினின் பரிணாமக்கொள்கையும்.
இன்று தமிழ் பேசும் நாம் நாளை மாண்டரின் பேசினால்? – Xenoglossy எனும் அமானுடம்...
@@@@@@@
நண்பர் உலக சினிமா ரசிகன் அவர்களின் தளம் பல உலக சினிமாக்களை நமக்கு அறிமுகம் செய்கிறது. ஒவ்வொரு பதிவும் ஒரு திறனாய்வே...
இப்போது மட்டுமல்ல...எப்போதுமே ‘நினைத்தாலே இனிக்கும்’!.
‘பின்லாந்து ஓநாயும்’... ‘மிஷ்கின் ஓநாயும்’.
@@@@@@@
வல்வையூரான் எனும் தளத்தின் பதிவர் ராஜமுகுந்தன் அவர்கள் இவரின் ஹைகூ பக்கங்களில் ஒன்று
காந்தள்களே வாருங்கள் (ஹைக்கூக்கள் 25)
@@@@@@@
கிராமத்து கருவாச்சி எனும் தளத்தில் எழுதிவரும் கலை
தமது பயண அனுபவங்களில் ஒன்று ( இவர் ஏன் அதிகம் எழுதுவதில்லை முகநூலில் உலவுகிறாரோ...)
சுவிஸ் பயணங்களில் ...
@@@@@@@
நண்பர் நாஞ்சில் மனோவின் ... அனுபவத்தொடர்
ஜொலி ஜொலிக்கும் அரேபியன் இரவுகளின் பயங்கரம் தொடர்....
@@@@@@@
ஆசிரியரான என் தந்தை வருங்காலத்தில் நான் ஆசிரியர் ஆவேன் என்று நினைத்திருப்பார், அது நடக்காமல் போச்சு வலைச்சரம்
மூலம் நிறைவேறிவிட்டதாக கருதுகிறேன்.
இந்த வாய்ப்பு அளித்த சீனா அவர்களுக்கு ,பின்னூட்டம் அளித்து ஊக்கம் அளித்தவர்களுக்கு , வாசித்த சைலண்ட் ரீடர்ஸ்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. அன்புடன் விடை பெறுகிறேன்,
கலாகுமரன்.
நல்ல தகவல்களுடன் வலைத் தளங்களைத் தொகுத்தளித்த -
ReplyDeleteஅன்பின் இனிய கலாகுமரன் அவர்களுக்கு மிக்க நன்றி!..
எழுத்தாளர் திரு. பாலகுமாரனின் கட்டுரையே - '' நம்ப முடியாத தஞ்சை பெரிய கோவில் தகவல்கள்'' - என்ற பெயரில் மீண்டும் அக்கினி குஞ்சு தளத்தில் வெளியாகி உள்ளது.
ReplyDeleteமீண்டும் - வெளியிட்டமைக்கு மிக்க நன்றி!..
தகவலுக்கு நன்றி அதைப்பற்றி அவர் குறிப்பிட்டு இருக்கலாம்...
Deleteசிந்தனைகள் அருமை
ReplyDeleteநன்றிங்க கவிஞரே
Deleteமிக அருமை... வாழ்த்துக்கள்...!
ReplyDelete//நண்பர் திண்டுக்கல் தனபாலன் வலைச்சரத்தில் சுட்டிக்காட்டப் பட்ட பதிவர்களின் தளங்களில் இது குறித்த அறிவிப்பு செய்து வருகிறார். அவர் ஒற்றை கமெண்டும் இல்லை என்றால் பல பேர் எழுதுவதை விட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். ( Special thanks to D.D ! )//
இதை வழி மொழிகிறேன்...
மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்...!
நன்றி முட்டா நைனா
Deleteகலாகுமரன்,
ReplyDeleteஒவ்வொரு தொகுப்பிலும் தனி இடுகை அளவுக்கு(தனி இடுகையே தான்!) தகவல்கள் கொடுத்து ,அதனுடன் பதிவுகளையும் அறிமுகப்படுத்தி ,சிறப்பாக வலைச்சரத்தினை வழங்கி பணியை நிறைவு செய்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
மிக்க நன்றிங்க வவ்வால்
Deleteமுதலில் மிக்க நன்றிகள் பல... (ஒரு சிறிய உதவி தானே...)
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
பின்னூட்டப்புயலே! தகவல் தந்தமைக்கு நன்றி!!
Deleteநன்றி கலா குமரன்.
ReplyDeleteபின்னாடியே நானும் நன்றி.
Deleteசிந்தனைச் சிதறல் சிந்திக்க வைத்தது. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி.
Deleteஉங்கள் தேடல் ஆச்சரியமானது. அதிசய புகைப்படங்களும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறியவனான என்னையும் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றிகள் கலாகுமரன்.
நன்றிங்க ராஜ முகுந்தன்
Deleteஒவ்வொரு பதிவிலும் அரிய சுவாரஸ்யமான பல தகவல்கள் அளித்தது, மிகவும் சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றிங்க gouthaman
Deleteஎல்லோருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான பணி செய்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
அருமையான தகவல்களுடன் சிறப்பான வலைப்பதிவர்களை அறிமுகம் செய்து அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக, மிக, மிகச் சிறப்பு... தங்கள் பணி. பாராட்டுக்கள்.
ReplyDelete//வாசித்த சைலண்ட் ரீடர்ஸ்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. //
ஆகா... அருமை!
அருமையான பல தகவல்களைத் தொகுத்து பதிவர்களையும் சேர்த்து அறிமுகப்படுத்திய உங்கள் திறமை அபாரம் சகோ!
ReplyDeleteஇன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் திறம்பட இவ்வார வலைச்சர ஆசிரியப் பணியை நிறைவு செய்துள்ள உங்களும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
நிறைய விஷயங்களை அசாதாரணமாக சொல்லி சென்றுள்ளீர்கள்...அருமை...பதிவு அறிமுகங்களும் அருமை...
ReplyDelete