Tuesday, December 10, 2013

வலைச்சரத்தில் இரண்டாம் நாள் : செவ்வாய் மலர்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்று சில பதிவர்களுடன், அவர்களின் பதிவுகளையும் உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகிறேன். உங்களுக்கு அவர்களை முன்பே தெரிந்திருக்கும், இருந்தாலும் அவர்களின் எழுத்து ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்ததால் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அதற்குமுன் 'வலைச்சரம் எனக்கு எப்படி அறிமுகமானது' என்று ஒன்றிரண்டு வரிகளில்......

'வலைச்சரம்' பற்றி அறிந்திராத சமயத்தில் ஒருமுறை திரு.வெங்கட்நாகராஜ் அவர்கள் என் வலைப்பூவின் ஒரு பதிவில் 'வலைச்சரத்தில் உங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்' என்று பின்னூட்டமிட்டிருந்தார். எதற்காக என்னை அறிமுகம் செய்ய வேண்டும்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் கொடுத்த 'லிங்க்'கை க்ளிக் செய்து பார்த்தேன். அங்கே எல்லோரும் அவருக்கு நன்றி சொல்லியிருந்தனர். அதனால் நானும் நன்றி சொல்லிவிட்டு வந்துவிட்டேன். இவர்தான் வலைச்சரத்தின் ஆசிரியர் என்று நினைத்திருந்தேன். அது நீடித்ததா........ (நாளை தொடரும்)
                                               .......................................................................

1) காமாக்ஷி அம்மாவின் வலைப்பூ 'சொல்லுகிறேன்'.

வலையுலகில் இவரைப்பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. சமையல், கதை, அனுபவம்,  நினைவுகள் என எதுவாக இருந்தாலும் அவற்றை சொல்லும் விதமே வித்தியாசமானதாய், விரும்பத்தக்கதாய் இருக்கும். அவரது காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுவார். இவரைப்பற்றி ஒரு சிறு அறிமுகத்தில் அடக்கிவிட முடியாது. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

அவரது சமையல் குறிப்புகள் அனைத்தும் எதிரில் இருப்பவரிடம் பேசுவது போலவே இருப்பதுதான் அதன் சிறப்பே. நிறைய கொட்டிக்கிடக்கின்றன. அதில் உதாரணத்திற்கு ஒன்றான‌ பால்போளி யை கண்ணாலேயே சாப்பிட்டுப் பார்த்து, எப்படி இருக்குன்னு சொல்லுங்க. என்ன பார்த்து, சுவைத்துவிட்டீர்களா ! 

அம்மாவின் சமையலையும் தாண்டி அவரது கதைகள் என்னை நிறையவே பாதித்தன‌. 'ஹலோ ஹலோ ஹலோ' என்ற கதையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக்கொள்ளும் இரண்டு வயதான தோழிகளின் தொலைபேசி உரையாடல்தான் கதையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் தொணதொணவென தன் குறைகளைச் சொல்பவராகவும், மற்றொருவர் அதைக் கேட்க பிடிக்காமல் நடிப்பவர் போலவும் காட்டியிருப்பது அருமை. வயதானவர்களின் நிலையை இதைவிட சிறப்பாக எப்படி சொல்ல முடியும் !

இது எனக்குப் பிடித்த இன்னொரு கதை. தோழிகள்போல் பழகும் விதவை அம்மாவும், அவரது பெண்ணுமாக இரண்டு பேர், அவர்கள் அருகில் விமானப் பயணம் மேற்கொள்ளும் அந்தக்கால அம்மா, ஆனாலும் இந்தக் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு, விதவைப் பெண்ணிற்கு கூறிய ஒரு சிறு அறிவுரை அப்பெண்ணின் வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுக்க வைத்தது என்பதுதான் தை பிறந்தால் கதை. படித்துப்பாருங்கள், விறுவிறுப்பாக இருக்கும்.

மேலும்  'எங்கள் ஊர் நினைவுகள்' என்ற தலைப்பில் அவரது இளமைக்கால நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்வதோடு அந்தக்கால வளவனூர் எப்படி இருந்தது என்பதை, அக்கால பேச்சு வழக்கின்படியே, நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார். அடிக்கடி போன ஊர் என்பதால் இந்தப் பதிவை நான் விரும்பிப் படித்தேன்.

அவர் வீட்டு வரலக்ஷ்மி பூஜை யைக் கொண்டாடியதை நம்முடன் பகிர்ந்துகொண்டதுடன் அதைக் கொண்டாடும் முறையையும் இங்கே சிரமம் பாராமல் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் தட்டச்சு செய்து கொடுத்திருக்கிறார்.

மே மாதம் வரும் அன்னையர் தினத்தை முன்னிட்டு எழுதியபோது தன் அம்மாவின் நினைவுகளை இங்கே பதிந்து வருகிறார். இதுவரை ஒன்பது பதிவுகளாக வந்துள்ளது. மேலும் தொடர தம்பதி சமேதராய்  ஆரோக்கியமான நல்ல உடல்நிலையை அவர்களுக்கு அருளுமாறு கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.
       ......................................................................................................................

2) Dr.M.K.முருகானந்தன் அவர்களின் வலைப்பூ 'முருகானந்தன் கிளினிக்' .

டொக்டர்.முருகானந்தன் ஐயா அவர்களின் மருத்துவப் பதிவுகளைப் படிக்க நேர்ந்தபோது "நம்ம ஊரில் இப்படியும் ஒரு மருத்துவரா! மருத்துவராய் இருப்பவர் இவ்வளவு நகைச்சுவையாளராக இருப்பாரா " என எண்ணி ஆச்சரியப்பட்டு போனேன். படிப்பவரும் மருத்துவப் பதிவாச்சே என‌ பயந்துபயந்து படிக்காமல் கொஞ்சம் ரிலாக்ஸாக படிக்க முடியும்.

முன்பெல்லாம் நமக்கு காது பிரச்சினை என்றால் என்ன செய்வோம்? முதலில் நம் கைக்கு சிக்குவது தலையில் போடும் ஹேர் பின் அல்லது சேஃப்டி பின்தான். இவையெல்லாம் தவறு என இப்போதுள்ள குட்டிப்பிள்ளைகளே சொல்லிவிடுவார்கள். இங்கே ஐயாவிடம் வந்தவர் என்ன செய்துவிட்டு வந்தார்? ஏன் அவரைப் பற்றி சொல்லும்போது    காது பொரியல் சட்டியல்ல என்று சொல்கிறார். இந்த‌ பதிவைப் படித்தபோது என்னை மறந்து சிரித்துவிட்டேன்.

'வாடகைத் தாய்மார்கள் மருத்துவத்தின் சங்கடங்களும் சாதகங்களும்' என்ற தலைப்பில் மனதை கசக்கிப் பிழியும் சில உண்மைகளை தெளிவாக விளக்குகிறார். வாடகைத் தாய்மார்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகமாம். ஏழைத் தாயின் உயிர் துச்சம், (பணக்கார)குழந்தையின் உயிர் விலை மதிப்பில்லாதது என்பதை அறியும்போது மனம் கலங்குவது இயல்பே.

மேலும் முருகானந்தன் கிளிக்குகள்  என்ற வலைப்பூவில் அழகழகான, ஆடம்பரமில்லாத, நம்மண்ணின் புகைப்படங்களும், அவற்றிற்கான ஒரு சிறு கவிதையும் இடம் பெறுவது இன்னும் சிறப்பு.

           ........................................................................................................................

3) விமரிசனம் என்ற இந்த வலைப்பூவின் ஆசிரியர் காவிரிமைந்தன் என்னும் புனைபெயரில் எழுதுகிறார்.

இவரது வலைப்பூவில் சூடான சமூக, அரசியல் பதிவுகள் நிறைய வந்துகொண்டிருக்கும். படிக்கவே சுவாரசியமாக இருக்கும். ஒருசில தடவை இவற்றிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான பதிவுகளும் வரும். அவற்றிலிருந்து சில‌ பதிவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

கோவில்கள் என்றாலே நமக்கு பக்தி, ஆன்மீகப் பணிகள்தான் முதலில் நினைவுக்கு வரும். 'இப்படி ஒரு கோயில்' என்னும் தலைப்பில் இவர் எழுதியுள்ள பதிவிலிருந்து திருச்சிக்கு அருகே உள்ள சுவாமி ஐயப்பன் கோவிலில் கால மாற்றத்திற்கேற்ப  ஆன்மீகத்துடன், சமூக சேவைகளையும் செய்வதாகக் கூறுகிறார், ஆச்சரியமாகத்தானே இருக்கிறது ! அவை என்ன என்பதை பதிவின் மூலமாகவும், நேரிலும் சென்று பார்த்து வருவோமே  ! அங்கேயே முகவரியையும் கொடுத்திருக்கிறார்.

"தம்படி, காலணா, அரையணா, ஒரணா, இரண்டணா,நாலணா, எட்டணா, அரை ரூபாய்"_______  இவையெல்லாம் நான்கு நூற்றாண்டுக்கால அரிய இந்திய நாணயங்களாம். அவற்றைப் பார்க்க விருப்பமா? ஆசிரியர் அவரது பேத்திக்காக தேடியபோது கிடைத்த அந்த அரிய பொக்கிஷங்களை நாமும் பார்த்து பயன்பெறும் வகையில் இங்கே  கொடுத்திருக்கிறார். எப்படித்தான் இருக்கும்? ஒரு எட்டுபோய் பார்த்துவிட்டு வருவோமே !

அந்தக்கால அரிய கருப்புவெள்ளை புகைப்படங்களை இங்கே நிறைய பதிந்து வைத்திருக்கிறார். பார்த்து பயன்பெறுவோமே. 

             ...................................................................................................................

 4) அடுத்து ஒரு மாறுதலுக்காக‌  மஹாலக்ஷ்மி விஜயன் அவர்களின் 'எண்ணங்கள் பலவிதம்' என்ற வலைப்பூவுக்கு செல்வோமா !

இவர் தனது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சின்னசின்ன நிகழ்ச்சிகளை தனக்கேயுரிய நகைச்சுவையுடன் தன் எண்ணங்களாக சிறுசிறு கவிதைகள் வடிவில் இங்கே  பகிர்கிறார். ஆங்காங்கே தன் மகன்களின் குறும்புகளையும் நகைச்சுவையாகப் பதிவது மேலும் சிறப்பு. இவையெல்லாம் தன் எண்ணங்களின் நீரூற்று என்கிறார்.

இவரது பதிவுகளைப் படிக்கும்போது "அட நாமும் இதைத்தானே நினைத்தோம், ஆனால் இவர் டக்கென்று, அழகாக, கோர்வையாக, சொல்லிவிட்டாரே. நமக்கு சுட்டுப்போட்டாலும் வரமாட்டேங்கிறதே " என நினைக்கத் தோன்றும்.

இவர் மகனிடம் கதை சொல்ல போய், அதற்கு இவரது மகனின் ப‌தில் என்னவாக இருந்திருக்கும். இங்கே போய் கேட்போமே.

மேலும் ஊதக்காற்றிடம் இவர் விடும் சவால், அழகழகாக இடியாப்பம் வராமல் போனது   இதுமாதிரி நிறைய இருக்கின்றன. படித்தால் நேரம் போவதே தெரியாது.

'சப்பாத்தி சொல்லும் வாழ்க்கை பாடம்' என்ற தலைப்பில் நாம் நினைத்தே பார்த்திராத வாழ்க்கைத் தத்துவத்தை எப்படியெல்லாம் சொல்கிறார் பாருங்கள். கடைசியில் ஒரு 'பன்ச்' வச்சார் பாருங்க, அங்கதான் மஹா ஸ்ட்ராங்கா நிக்கிறாங்க. நீங்களும்தான் என்ன, ஏதுனு போய் பார்த்துட்டு வாங்களேன்.  நீரூற்று வற்றாமல் பாய்ந்தோட வாழ்த்துவோம் !
         ......................................................................................................

இத்துடன் இன்றைய அறிமுகங்களை முடித்துக்கொண்டு, நாளை வேறுசில அறிமுகங்களுடன் வருகிறேன். நன்றி !

47 comments:

  1. அன்பின் சித்ரா சுந்தர் - அருமையான அறிமுகங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  2. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகங்கள் மிகச் சிறப்பாக உள்ளது.. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.. எல்லாத் தளங்களும் நான் தொடருகிற தளங்கள்...

    தைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி மேலும் தகவல் .இங்கே-http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன்,

      பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க‌.

      Delete
  3. ஒரே தபால இருவது வூட்டுப்பாடம் குட்த்துகினாங்களே...! அல்லாரும் ஒயுங்கா பட்ச்சிட்டு வந்து கர்த்து சொல்லணும்... இன்னாபா... அல்லாம் நல்லா கேட்டுக்கினிங்களா... ம்... குவிக்... நிம்பிள் இங்கே வருது.... நம்பிள் போயி வூட்டுப் பாடம் ஸ்டார்ட் பண்ணுது...

    ReplyDelete
    Replies
    1. வாங்க முட்டா நைனா,

      ஒய்ங்கா பட்சிட்டு வந்து கர்த்து சொல்லாட்டி, அப்பாலிக்கா வெளில முட்டி போண்ணும். ஆள புச்சு, காஸு குட்து ஸ்லாங்கு கத்துக்கிறோமாக்கும். (இப்போ முட்டி போட்றாங்களா, இல்லாட்டி ஆக்ஸன் எதுவும் எடுத்துட போறாங்க)

      Delete
  4. சிறப்பான அறிமுகங்கள். நாலு பேரை மட்டும் அறிமுகப்படுத்தியிருந்தாலும் அவர்களது படைபாளுமையின் மையத்தை தொட்டுச் செல்லும் வண்ணம் அற்புதமாகச் செய்திருக்கிறீர்கள்.
    எனது இரு வலைப்பூக்களை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. டொக்டர் ஐயா,

      வாங்கோ, உங்கள் வலையிலிருந்து எதை எழுதுவது, எதை விடுவது எனத் தெரியவில்லை. எல்லாமும் முக்கியமானதுதான். கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்தவைதான் அவை. வேர்ட் ப்ரஸில் முதன் முதலில் அறிமுகமானவ‌ர்கள் இல்லையா, அதுதான். உங்கள் வேலைப் பளுவுக்கிடையே வந்து கருத்தைப் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சி ஐயா.

      Delete
  5. மிக மிக அருமையான தளங்களின் பகிர்வுகளுக்கு இனிய
    பாராட்டுக்க்ள்.. வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜராஜேஸ்வரி,

      பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      Delete
  6. உங்கள் தயவால் - பால் போளி எல்லாம் சாப்பிட்டு, அரிய நாணயங்களையும் பார்த்து விட்டு இப்போது தான் வந்தேன். நன்றி!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரைராஜ்,

      கண்ணாலேயே சாப்பிட்டுவிட்டு, அறிமுக வலைகளுக்கும் சென்று விட்டு வந்து கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு மகிழ்ச்சிங்க.

      Delete
  7. எண்ணங்கள் பலவிதம் தளம் எனக்கு புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வெற்றி வெற்றி, இதைவிட வேறென்ன வேண்டும் ! உங்க பின்னூட்ட தடம் இல்லாமல் ஒரு வலைப்பூவா !!! வருகைக்கு நன்றிங்க.

      Delete
  8. வணக்கம் சித்ரா மேடம்,
    என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்! நிஜத்தை சொல்ல வேண்டும் என்றால் நான் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன் இன்று :D என்ன சொல்ல என்றே தெரியவில்லை, என் மனதை நான் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள எடுத்த ஒரு முயற்சி தான் 'எண்ணங்கள் பலவிதம்'! என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் செய்து விட்டீர்கள் மேடம்!
    மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மஹா,

      தினம்தினம் எங்க வீட்டிலும் இது உண்டு. நீங்க சொல்வது மாதிரி இங்கே அந்த வேலையைப் பார்ப்பது என் வீட்டுக்காரர். கேட்கவே ஜாலியா இருக்கும். அதனால உங்க வலைப்பதிவும் அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு. ஓடோடி வந்து கருத்தைப் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சிங்க‌.

      Delete
  9. அன்புள்ள சித்ரா, ரூபன் அவர்கள் தகவல் கொடுத்தார் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தி எழுதியதை.
    இவ்வளவு தகுதிகள் என்னுடைய வலைப்பூவிற்கு இருக்கிறதா? யோசனை செய்தேன். மற்றவர்களும்
    படித்து ஒரு தகுதியை எனக்கு அவர்களாகவே மனதில் கொடுக்க இது நல்ல தருணம்.
    இந்தவலைச்சர அறிமுகத்திற்கு மிகவும் நன்றி. கூடவே ஸந்தோஷமும்.
    இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அனைவரின் தளங்களும் நான் விரும்பிப் படிக்கும் தளங்களே!
    /
    யாவருக்கும் என் வாழ்த்துகள்.,ரூபனுக்கு என் நன்றிகள். அன்புடன்
    .

    ReplyDelete
    Replies
    1. காமாக்ஷிமா,

      வாங்க, அனுபவமுள்ளவர் எழுதும்போது அதற்குத் தகுந்தாற்போல்தானே இருக்கும். அழகான கருத்திற்கும், வந்து அதைப் பகிர்ந்துகொண்டதற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிமா, அன்புடன் சித்ராசுந்தர்.

      Delete
  10. முதன்முதலாக காமாஷிமாவை பற்றி எழுதி பெருமைபடுத்தி விட்டீர்கள், சித்ரா! இன்று உங்கள் அறிமுகங்கள் எல்லோருமே என் மனங்கவர்ந்தவர்கள், மற்றும் நான் தவறாமல் படிப்பவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. காமாஷிமா போல அனுபவம் வாய்ந்தவரையும், மஹா போல புதியவரையும் ஒரே பதிவில் அறிமுகம் செய்தது, அனுபவம் வாய்ந்தவரிடமிருந்து, புதியவர்கள் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வதுபோல இருக்கிறது. மஹா சீரியஸ் விஷயங்களையும் நகைச்சுவையுடன் சொல்வதில் நிபுணர்.
    டொக்டர் அவர்களின் பதிவு மிக மிகப் பயனுள்ள தளம். அவரது நகைச்சுவை உணர்வு அபாரம். சமீபத்தில் டாக்டரின் மருந்து சீட்டு உயில் ஆக பாவிக்க்ப்பட்டிருப்பதை மிக மிக நகைச்சுவையுடன் எழுதியிருந்தார். கவிதை எழுதுவதிலும் வல்லவர் டொக்டர். பல்துறை வித்தகர் இவர்.
    கவிரிமைந்தனின் விமரிசனங்களை தவறாமல் வாசித்துவிடுவேன்.
    மொத்தத்தில் அசத்திவிட்டீர்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரஞ்ஜனி,

      வாங்க. எல்லோரைப்பற்றியும் சிறு குறிப்புபோல் அழகா சொல்லிட்டீங்க. உங்களுக்குத்தான் தெரியுமே, வேர்ட்ப்ரஸ்ஸில் ஒரு லிஸ்ட் இருக்குமே, வலைப்பூ ஆரம்பித்த புதிதில் அதன் மூலம் அறிமுகமானவர்கள்தான் இவர்கள். பாராட்டுக்கு நன்றிங்க.

      Delete
  11. அருமையோ அருமை! அறிமுகங்களை அம்மாவிலிருந்து ஆரம்பித்திருக்கின்றீர்கள்!..:)
    அப்புறம் நம்ம வைத்தியர் ஐயா!... இப்படி இன்றைய அறிமுகப் பதிவர்களும் அனைவரின் அறிமுகங்களும் சிறப்பு!
    உங்களுக்கும் பதிவர்கள் யாவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி,

      வலையில் முதல் அறிமுகமே காமாக்ஷிமாதான். வந்து உங்க கருத்தையும் பகிர்ந்து கொண்டது சந்தோஷம். இனிய வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      Delete
  12. உங்களுடைய முன்கதையை பாராட்டாமல் போய்விட்டேன். சுவாரஸ்யமான கதைசொல்லி நீங்கள்!
    தனபாலன் அண்ணாச்சிக்கு தெரியாத ஒரு தளத்தை அறிமுகப்படுத்தியதற்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மீள் வருகை, சந்தோஷம், கதை பாராட்டுக்கும் நன்றிங்க.

      அதான், அதுதான் வேண்டும், அவரது பின்னூட்ட தடம் இல்லாமல் ஒரு பதிவர் வந்ததை என்னால நம்பவே முடியல.

      Delete
  13. அறிமுகங்கள் எல்லாமே அசத்தல் !
    காமாக்ஷி அம்மாவின் பதிவுகளை விரும்பிப் படித்து வருகிறேன்.டாக்டரின் கட்டுரைகள் எல்லாமே நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்துவை. காவிரி மைந்தனின் விமரிசனங்களை படிக்கத் தவறுவதில்லை.
    மஹா சொல்லும் விஷயத்தை நறுக் என்று சொல்லி அப்ளாஸ் வாங்குவதில் கில்லாடி. இவர் முக நூலிலும் அசத்தி வருகிறார். இவரின் பெரிய ரசிகை நான்.

    அனைத்து அறிமுகங்களும் ஸூப்பர் சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. ராஜலக்ஷ்மி,

      வாங்க ! அறிமுகங்கள் எல்லோருமே தெரிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களின் எழுத்து ஏதோ ஒரு வகையில் நம்மை ஈர்த்துவிடுகிறது.

      நீங்க சொன்னீங்கன்னா நானும் ரெடி, சீக்கிரமே ஒரு நல்ல நாளா பார்த்து மஹாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடுவோம் ! பாராட்டுக்கு நன்றிங்க.

      Delete
  14. Arumayana arimuhangal... Vazhthukkal chitra sundar.

    ReplyDelete
    Replies
    1. சித்ராகிருக்ஷ்ணா,

      வாங்க‌, எனக்கு நீங்களும் ஒரு அறிமுகமாயிட்டீங்க‌. வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  15. அட்டகாச அறிமுகம்... ரொம்ப நல்லா இருந்துச்சு

    ReplyDelete
    Replies
    1. காயத்ரிதேவி,

      வாங்க, உங்களின் பாராட்டுக்கு நன்றிங்க.

      Delete
  16. நல்ல வார்த்தைகளுக்கு நன்றி.

    -வாழ்த்துக்களுடன்,


    காவிரிமைந்தன்



    ReplyDelete
    Replies
    1. காவிரிமைந்தன்,

      உங்கள் விமர்சனங்களை எல்லாம் சத்தம் போடாமல் படித்துவிட்டு போய்விடுவேன்.

      உங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      Delete
  17. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனிமரம்,

      வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      Delete
  18. பயனுள்ள தளங்கள் பற்றிய தங்களின் சுவையான அறிமுகம் அருமை...

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்,

      வாங்க, தங்களின் வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete
  19. காமாக்ஷிம்மா பதிவுகள் படித்திருக்கிறேன்.

    மற்ற மூவர்களின் பதிவுகள் இதுவரை படித்ததில்லை.....

    பதிவின் ஆரம்பத்தில் சொல்லி இருப்பது என்னைத் தானோ? :)))

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, முதல் அறிமுகம் மகளின் பிறந்த நாள் வாழ்த்து என்பதால் நினைவில் இருக்கு.

      Delete
  20. அருமையான அறிமுகங்கள்...
    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சே. குமார்,

      பாராட்டுக்கும்,வாத்துக்கும் நன்றிங்க.

      Delete
  21. சிறப்பான அறிமுகங்கள்... காமாக்ஷிம்மா கதை சொல்லிப் போவது எனக்கு மிகவும் பிடிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆதிவெங்கட்,

      காமாக்ஷிமா எழுதும்போது வித்தியாசமான நடையிலும், விறுவிறுப்பாகவும் இருப்பதால் நானும் விரும்பி படிக்கிறேன். அனுபவக் கதைகளாச்சே ! பாராட்டுக்கு நன்றிங்க.

      Delete
  22. இன்றைய அறிமுகங்கள் அனைவருமே அவரவர் விதத்தில் அருமை.. எனக்கு அரை நாள் அதற்கே முடிந்து விட்டது... நன்றி....

    ReplyDelete
    Replies
    1. வாங்க எழில்,

      ஆஹா, அரை நாள் போச்சா !! வந்து கருத்தைப் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சிங்க.

      Delete
  23. அறிமுகங்கள் அருமை. அனைத்துப் பகிர்வையும் சென்று பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆஸியா ஓமர்,

      அறிமுகங்களைப் பார்வையிட செல்வதில் மகிழ்ச்சிங்க. வந்து வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றிங்க.

      Delete