வலைச்சரத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இன்று முதல் ஒரு வார காலத்திற்கு வலைச்சர பொறுப்பாசிரியர் பொறுப்பு எனக்குக் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி.
இந்த வலைச்சரத்தில் என்னுடைய வலைப்பூக்களையும், அதிலிருந்து சில பதிவுகளையும் அறிமுகம் செய்துகொள்ள அருமையான வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கு எனது நன்றி.
வலைச்சரத்தில் என்னையும் ஒரு பூவாக சேர்த்துக்கொண்டதற்கு முதலில் சீனா ஐயாவுக்கு நன்றி. இந்தப் பூவும் அந்தப் பூக்களைப்போல் மணம்வீச வேண்டும் என்ற ஆவலில் வந்துள்ளேன். இதுநாள்வரை என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி பல.
வலைச்சரத்தில் பங்குகொள்ள முதலில் கொஞ்சம் தயக்கம் இருந்தது உண்மைதான். ஆனால் நேற்று பதிவர்கள் என்னை வாழ்த்தி, வரவேற்றதைப் பார்த்த பிறகு 'எங்கே அந்தத் தயக்கம்' என தேடும்படி ஆகிவிட்டது.
யாரைப்பற்றியாவது விமர்சனம் செய்யச் சொன்னால் வலிய வந்து எளிதாக, போட்டுக் கொடுத்துவிட்டு போய்விடலாம். ஆனால் 'நம்மைப்பற்றி' எனும்போது எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு! இருந்தாலும் சொல்லித்தானே ஆகவேண்டும்.
என்னுடைய சொந்த ஊர் பண்ருட்டிக்குப் பக்கத்தில் உள்ள அழகிய ஒரு கிராமம். முருகனின் பெயரைச் சொல்லச்சொல்ல இனிப்பதுபோல், எங்கள் ஊரின் பெயரைச் சொல்லும்போதும் நாவில் ஒரு இனிப்பு தெரியும். பெயரைக் கண்டுபிடிப்பவருக்கு அந்த இனிப்பில் ஒன்று பரிசாக அனுப்பி வைக்கப்படும், நம்புங்க ! (S & H உங்கள் செலவில்)
சமையல் வலைப்பதிவை வைத்துக்கொண்டு கடையில் வாங்கிய இனிப்புகளுடன் உங்களை வரவேற்க மனம் இல்லாமல் நானே என் கைப்பட செய்த பாரம்பரியமான இனிப்பான அதிரசங்களை செய்துகொண்டு வந்திருக்கேன், வேண்டியமட்டும் எடுத்து, சாப்பிட்டுப் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க !
"பார்க்க நல்லாத்தான் இருக்கும், சாப்பிட்டுப் பார்த்தால்தானே தெரியும்", என்று நினைக்கிறீர்களா ! பிட்டு சாப்பிட சிரமப்படுவீர்களே என்று நினைத்துதான் உங்களுக்காகவே நம்ம ஊர் சுத்தி,கோடரி இவை பத்தாதுன்னு அயலகத்தில் இருந்து ராட்சஸ இயந்திரங்களை எல்லாம் வாடகை கொடுத்து, வரவழைத்து உடைத்தே எடுத்து வந்துவிட்டேன். அதனால பயப்படாம எடுத்துக்கலாம்.
இந்தப் பதிவில் என்னுடைய வலைப்பதிவுகளையும், அதிலுள்ள சில பதிவுகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன். ஆனால் அவற்றில் எதை அறிமுகப்படுத்துவது, எதை விடுவது என எனக்குத் தெரியவில்லை. இரண்டு வலைகளிலும் உள்ள பதிவுகள் எல்லாமே எனக்குப் பிடித்தமானவையே. இருந்தாலும் சிலவற்றை சொல்லியே ஆகவேண்டும்.
நான் இரண்டு வலைப்பூக்களில் எழுதுகிறேன். ஒன்றில் சமையல் பற்றியும், மற்றொன்றில் பொழுதுபோக்காக, அதாவது எல்லாமே இருக்கும், ஆனால் எதுவுமே இருக்காது என்ற அளவிலும் இருக்கும்.
முதல் வலைப்பூ: http://chitrasundar5.wordpress.com/
என்னதான் விதவிதமாக சமைத்து அல்லது ரெஸ்டாரண்டில் சாப்பிட்டாலும் என் அம்மா, ஆயா (பாட்டி) சமைத்து, அறிமுகம் செய்து கொடுத்த அந்த கிராமத்து சமையல்தான் இன்னமும் நாவில் சுவையாக இருக்கிறது. அதை விட்டுவிடக்கூடாது, வீட்டில் உள்ளவர்களுக்காக, அவர்கள் பயன்பெறும் வகையில் அவற்றை இங்கே பதிவு செய்து வைத்துள்ளேன். விரும்பியவர்கள் சென்று பார்க்கலாமே.
அதிலும் இந்த பொருளங்கா உருண்டை , அரிசி உருண்டை, பொரிஉருண்டை இவை எல்லாம் திகட்டாத நம்ம ஊர் இனிப்புகள். சின்ன வயசுல இந்தப் பொரி உருண்டையை வாங்க நான் பட்டபாடு, அதாவது அப்பா, அண்ணன் இல்லாத சமயமாகப் பார்த்து விற்பவர் வந்தால்தான் தப்பிக்க முடியும். அது செய்வதற்கு இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று அப்போது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தாலும் என் அம்மாவின் பாடு அவ்வளவுதான் !
சுவையான ஆப்பம் இங்கே . இந்த ஆப்பத்திற்காகவே ஒரு 7 கிமீ தொலைவில் இருக்கும் எங்கள் சித்தி வீட்டிற்கு அடிக்கடி படையெடுப்போம்.
மறந்தேபோன புட்டு செய்முறைகள்கூட இங்கே உள்ளன.
அரிசிமாவு புட்டு, கேழ்வரகு புட்டு எல்லாம் சரிதான், இதென்ன 'வெண்ணெய் புட்டு' என்கிறீர்களா? இந்த இனிப்பை எங்கம்மா அடிக்கடி செய்து தருவாங்க. இதன் செய்முறையை அம்மாவிடம் கேட்டுவாங்கி நானும் அடிக்கடி செய்வதுண்டு. ஒருமுறை செய்து பாருங்க, பிறகு உங்க வீட்டிலும் அடிக்கடி இதைப் பார்க்கலாம்.
முக்கியமாக கேழ்வரகு கூழ் . கோடையை இதை வைத்தே சமாளித்துவிடலாம்.
எளிய பொருள்களை வைத்துக்கொண்டு சில வெளிநாட்டு உணவுகளையும் முயற்சித்திருக்கிறேன், செய்து, சுவைத்து பாருங்கள். இன்னும் நிறைய நல்லநல்ல சமையல் எல்லாம் உள்ளது. நேரமிருக்கும்போது வந்துட்டு போங்க.
இது சமையலுக்கான தளம் என்றாலும் சில புகைப்படங்களையும் இங்கு காணலாம்.
அதிலும் குளிர் காலத்தில் கலிஃபோர்னியா காடைக் குருவிகள் எப்படி இந்தக் கடுங்குளிரிலிருந்து தப்பிக்கின்றன என்பதை இங்கே சென்று பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
அதுமட்டுமல்ல இங்கே சிலந்தியார் எப்படி தன் குளிர்கால நிலைய சமாளிக்கிறார் பாருங்கள்.
இரண்டாவது வலைப்பூ: http://chitrasundars.blogspot.com/
இதைத் தொடங்கி ஒருவருடம் ஆகப் போகிறது. என்னுடைய பொழுதுபோக்குக்காகவும், நான் எடுக்கும் புகைப்படங்களை சேமித்து வைக்கும் இடமாகவும் இதைப் பயன்படுத்துகிறேன்.
எங்கள் ஊர் இலையுதிர்காலம் எப்படி இருக்கிறதென்று இங்கே வந்துதான் பாருங்களேன்.
என்னுடைய முதல் நகைச்சுவையை இங்கே முயற்சித்திருக்கிறேன், படித்துவிட்டு சிரிப்பு வருகிறதா என பாருங்கள்.
மீள்சுழற்சி முறையில் செடிகளை வளர்க்கும் முறையில் நான் வளர்த்த கொத்துமல்லி செடியை இங்கே காணலாம்.
எங்கள் ஊரில் எனக்கு அறிமுகமான கார்த்திகை தீபம், தீபாவளி இவற்றை உங்கள் ஊரில் நீங்கள் கொண்டாடியவற்றுடன் ஒப்பிட்டுப்பார்த்து சொல்லுங்களேன்.
இப்போதே பதிவு நீண்டுவிட்டது. மேலும் (சுய)தம்பட்டம் அடித்து உங்களையும், ஏன் என்னையுமே சோர்ந்துவிடச் செய்ய வேண்டாமென முடிவெடுத்து, இன்று இத்துடன் முடித்து விடைபெறுகிறேன்.
மீண்டும் நாளை சில பதிவர்களுடன், அவர்களின் பதிவுகளையும் அறிமுகம் செய்ய வருவேன், நன்றி.
அன்பின் சித்ரா சுந்தர் - அருமையான சுய அறிமுகம் - மற்றும் தங்களுடைய பதிவுகள் அறிமுகம் - அனைத்தும் நன்று - சென்ற் பார்த்து படித்து மகிழ்ந்து மறுமொழிகள் இடுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉடனடியான வருகைக்கும், பாராட்டுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா.
Deleteவணக்கம்
ReplyDeleteசிறப்பான சுய அறிமுகத்துடன் .. தங்களின் வலைப்பூ அறிமுகங்கள் சிறப்பு... தொடர்து அசத்த எனது வாழ்த்துக்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------
தைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி.. தலைப்புக்களுடன்... விபரம் பார்வையிட இதோ வாருங்கள் .http://2008rupan.wordpress.com.
http://tamilkkavitaikalcom.blogspot.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க ரூபன்.
ReplyDeleteதங்கள் வலைக்கும் சென்று வருகிறேன்.
த.ம :1
ReplyDeleteசூப்பரான சுய அறிமுகம்... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க நம்மாழ்வார்.
Deleteசிறப்பான அறிமுகம்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
த.ம: 2
வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க தமிழ்வாசி பிரகாஷ்.
ReplyDeleteவாருங்கள். வாருங்கள்.
ReplyDeleteவலைச்சரத்திற்கு வாருங்கள்.
வருகைக்காக, நீங்கள் செய்யும்
வண்ண வண்ண அதிரசங்களுக்காக
அப்பம், பொருவிளங்காய்
உருண்டைகளுக்காக,
புட்டு பணியாரங்களுக்காக,
ஏங்கிக்கிடக்கும்
எங்களைப் போன்ற
இளம் கிழவர்களை
காதினிக்க மட்டுமல்ல,
வயிறும் நிறைய
பல பல தின் பண்டங்கள்
எடுத்து வாருங்கள்.
அதிரசம் அதுவே நமது வாழ்வில்
அதி சுகம்.
ஆக ஒரு அம்பது கொண்டு வாருங்கள்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
வாங்க சுப்பு ஐயா,
Deleteசாப்பிட ஆள் இருந்தால் அம்பது என்ன நூறாகவே செய்துகொண்டு வந்திடலாம். நீங்க கூட இருந்து உதவி செய்வதாக இருந்தால் வீட்டில் அம்மா செய்து கொடுக்காமலா போயிடுவாங்க ! வருகைக்கும், அதிரசத்தைவிட இனிமையான உங்கள் கருத்துக்கும் நன்றி ஐயா.
வருக வருக
ReplyDeleteவாசமிகு வலைச்சரம் தொடுத்திடுங்கள்.
வாழ்த்துக்கள்...
வரவேற்புக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.
Deleteவாழ்த்துக்கள்! கலக்குங்க! :)
ReplyDeleteஉங்க பிஸியான நேரத்திலும் இங்கு வந்தது சந்தோஷம் மகி. தொடர்ந்து வாங்கோ !
Deleteவருக.. வருக!..
ReplyDeleteஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர். பாரம்பர்யம் மிக்க நமது உணவு வகைகளை சிரத்தையுடன் தயாரித்து அன்பினோடு வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி!..
வாருங்கள் துரை செல்வராஜ்,
Deleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.
சிறப்பான சுய அறிமுகம்.......
ReplyDeleteதொடர்ந்து வாரம் முழுவதும் சிறப்பான பகிர்வுகள் தந்திட வாழ்த்துகள்....
பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க வெங்கட் நாகராஜ் .
Deleteமிகச் சிறப்பான சுய அறிமுகம் சித்ரா.நீங்கள் எழுதிருக்கும் தின்பண்டங்கள் அஅனைத்தையும் உங்கள் வலைப்பதிவில் சென்று சாப்பிட்டு விட்டு ,மீண்டும் நாளை வருகிறேன்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணி சிறக்க அவாழ்த்துக்கள் சித்ரா.
நீங்கள் எல்லாம் வந்திடுவீங்க என்ற தைரியத்தில்தான் வந்துள்ளேன். அதனால போய் சாப்டுட்டு இல்லை ஆர்டர் பண்ணிடட்டுமா !!
Deleteவாழ்த்துகளுக்கு நன்றிங்க.
வாழ்த்துக்கள் சித்ரா சுந்தர்
ReplyDeleteஅறிமுக படுத்தியுள்ள அனைத்து வகைகளும் அருமை, அதிரசம் படத்த போட்டு காலங்காத்தால வாயூற வைத்து விட்டீர்களே
வங்க ஜலீலா,
Deleteஇங்குள்ள மாலை உங்களுக்கு காலை என்பது மறந்துபோச்சு.
வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.
சிறப்பான சுய அறிமுகம்...
ReplyDeleteஅசத்த வாழ்த்துக்கள்...
வாங்க வாங்க DD,
Deleteபாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.
அதி ரசமான அறிமுகப்பதிவுக்கு
ReplyDeleteஅன்புடன் வாழ்த்துகள். பாராட்டுக்கள்..!
வாருங்கள் ராஜராஜேஸ்வரி,
Deleteஅதிரசத்தைப் பிரித்துப் போட்டாலும் அதி ரசமாக இருக்கும் என்பது இப்போதுதான் புரிகிறது. வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.
கமகமவென்ற வாசனையுடன் முதல் நாள் பதிவு சூப்பர்!
ReplyDeleteஉங்களுடைய பல படிக்காத சமையல் பதிவுகளை bookmark செய்துகொள்ளுகிறேன். என் மாட்டுபெண்ணிற்கு காட்ட.
எல்லாமே செய்து பார்த்துவிடவேண்டும்!
வாங்க வாங்க,
Deleteஉங்களைத்தான் தேடிட்டே இருந்தேன். பாராட்டுக்கு நன்றிங்க.
மாட்டுப்பெண் (என்னைய)திட்டப்போறாங்க, 'இதையெல்லாம் செய்ய வச்சிட்டாங்களே'ன்னு. சும்மா டமாஸூ. இனி ஜாங்கிரி, பஜ்ஜி எல்லாம் வாங்காம(கிடைக்கலையேன்னு ஒரு பொறாமைதான்) நல்ல பிள்ளையா இனிப்பு உருண்டைகளா செஞ்சு சாப்பிடுங்க.
வாருங்கள்! இவ்வார வலைச்சர ஆசிரியப் பணி உங்களிடமா!..:)
ReplyDeleteமகிழ்ச்சி! மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
சமையல் ராணியல்லவோ சுய அறிமுகமே கமகமக்கிறதே!..:)
தொடருங்கள்! .. மீண்டும் இனிய வாழ்த்துக்கள்!
வாங்க இளமதி,
Deleteகவிதை ராணியிடமிருந்து பரிசா, மகிழ்ச்சிங்க ! கமகம வாசனைக்கு காரணம் சமையல் ப்ளாக்ல இருந்து வருவதால் வந்த வாசனையாக இருக்கலாம்.
வாழ்த்துக்கு நன்றிங்க.
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்... சுய அறிமுகம் அருமை... உங்க ஊர் பேர் கண்டிபிடிக்க முடியவில்லை....:) சொல்லிடுங்களேன்...
ReplyDeleteவாங்க ஆதிவெங்கட்,
Deleteகொஞ்சம் வெயிட் பண்ணுங்க, யாராவது கண்டுபிடிக்கிறாங்களான்னு பார்ப்போமே !
பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.
பலாப் பழம் உரிப்பதைவிட கஷ்டமா உங்க ஊர் பெயரைக் கண்டு பிடிப்பது ?
ReplyDeleteகலக்குங்க ...வாழ்த்துக்கள் !
த.ம +1
வாங்க பகவான்ஜீ,
Deleteபலாப்பழம் உரிப்பது அவ்ளோ கஷ்டமா ! வண்டி நெறைய அனுப்பி வச்சுத்தான் பாருங்கோ ! வாழ்த்துக்கு நன்றிங்க.
சுய அறிமுகம் சூப்பர்.தொடருங்கள்.உங்கள் கிராமம் பெயர் வல்லம்.சரி தானே !
ReplyDeleteவாங்க ஆஸியா ஓமர்,
Deleteஇல்லீங்களே, அதை செய்யுற மூலப்பொருள். முயற்சிக்கு நன்றிங்க.
உங்களைப் பார்த்தது மகிழ்ச்சி. பாராட்டுக்கும் நன்றிங்க.
சித்ரா அழகாக அருமையாக, அதி ரஸத்துடன் அறிமுகம். பார்த்தேன் ரஸித்தேன்,சாப்பிட்டேன் அதி ரஸத்தை. அன்புடன்
ReplyDeleteகாமாக்ஷிமா,
Deleteவாங்கமா, நினைவு வச்சிக்கிட்டு வந்திட்டீங்க, சந்தோஷம். அதி ரஸத்தை பார்த்து, ரஸித்து, சாப்பிட்டது எல்லையில்லா மகிழ்ச்சிமா. அன்புடன் சித்ரா.
சித்ரா சுந்தர்
ReplyDeleteவலைச்சர ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள்!
அனேகமா உங்க ஊருப்பெயர் கரும்பூர் ஆ இருக்கனும் இல்லைனா கனிசம்பாக்கம் ஆக இருக்கலாம்!
வாங்க வவ்வால்,
Deleteபரிசு உங்களுக்குத்தான். ஷிப்பிங் & ஹேண்லிங் அமௌண்டை மட்டும் அனுப்பிடுங்க. நானும் இங்கிருந்து (USA) ஒரு கத்தையை ஏற்றி அனுப்பிவிடுறேன்.
(பெயர் வவ்வாலாக இருப்பதால்) இரவு முழுவதும் ஸாரி உங்க பகல் முழுவதும் தேடியலைந்து கண்டு பிடிச்சிட்டீங்களே ! முதல் பெயர்தான். அப்படின்னா நீங்க பண்ருட்டி பக்கமாத்தான் இருக்கணும். நீங்க சொன்னபிறகுதான் 'கனி'சப்பாக்கத்திலும் இனிப்பு இருக்குன்னு தெரிஞ்சிகிட்டேன்.
வாழ்த்துக்கு நன்றிங்க.
தங்களிரு வலைப்பூக்களையும் சுவையாகவே அறிமுகப்படுத்தி... நாளையும் என்ன அறிமுகம் என்று எண்ண வைத்துவிட்டீர்கள்.
ReplyDeleteவாங்க அ. முஹம்மது நிஜாமுத்தீன்,
Deleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.
தொடர்ந்து அசத்துங்க வலைச்சரத்தை.
ReplyDeleteதனிமரம்,
Deleteவாங்க. உற்சாகமான வார்த்தைகளுக்கு நன்றிங்க.
அல்லாமே சோக்கா கீதும்மே....
ReplyDeleteமுட்டா நைனா,
Deleteவாங்க. என்க்கும் அதாம்பா வோணும்.
நல்வரவு சித்ரா.
ReplyDeleteமன்னிக்கணும் இன்றுதான இங்கே வரமுடிஞ்சதுப்பா.
'அரி' முகமே அட்டகாசமா இருக்கு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
வாங்க துளசி கோபால்,
Deleteமன்னிப்பெல்லாம் எதற்குங்க !! தங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
உங்கள் வலைப பக்கம் வந்ததில்லை. இவ்வளவு நாள் மிஸ் செய்து விட்டேனே. ஆண்களுக்கு உதவும் வலைப்பக்கமாக இருக்கிறதே! இனி அடிக்கடி ஆஜர் ஆவேன்.
ReplyDeleteவாங்க டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று,
Deleteஇனி மிஸ் பண்ணாம தொடர்ந்து வாங்க. வந்து கருத்தைப் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சிங்க.
இன்று தான் வலைச்சரம் வந்தேன்..உங்களின் பதிவுகளுக்குச் சென்று வந்தேன்... சுவையா இருந்தது... பின்ன அழகான புகைப்படங்களுடன் , செய்முறைகள் .... கொத்தமல்லிச் செடிகள் பறிக்கச் சொல்லி அழைத்தது...அவ்வளவு ப்ரெஷ்ஷாக... போன் நகைச்சுவையைப் பார்த்ததும் மலையாளமோன்னு நினைச்சேன்... வாழ்த்துக்கள் வலைச்சரப் பணிக்குமாய்...தொடர்கிறேன்...
ReplyDeleteஎழில்,
Deleteவாங்க வாங்க. பதிவு முழுவதையும் அலசி எடுத்திட்டீங்க போலிருக்கு. உங்க பின்னூட்டமும் அழகா இருக்கு. வாழ்த்துகளுக்கும், தொடர்வதற்கும் நன்றிங்க.