கலை மலர்.
அனைவருக்கும் வணக்கம்.
நேற்று ஆறாவது பதிவில் - வருகை தந்து கருத்துரையை பதிவு செய்து பாராட்டி மகிழ்ந்த - மகிழ்வித்த, நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வலைச்சரத்தில் ஏழாம் நாளாகிய இன்றும் - முதலில் ஆலய தரிசனம் செய்வோம்.
வருக... நண்பர்களே..
ஊர் சுற்றிப் பார்ப்பதிலும் ஓய்வு நாட்களில் சுவையாக உண்டு மகிழ்வதிலும்
யாருக்குத் தான் ஆசையிருக்காது!..
தமிழ்!..
நம் எல்லோருக்கும் பேச்சும் மூச்சும் ஆனது அதுவே!.. அந்தத் தமிழ் இன்பத் தமிழ் - எங்கள் தமிழ் காட்டும் - முதல் குரு அருட்திரு அகத்திய மாமுனிவர்.
அவர் வடதிசைக் கயிலையில் இருந்து நடை வழிப்பயணமாக - சிவசக்தியின் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசிக்க தென் திசைக்கு வந்து - அருள் பெற்றதையும்,
தமிழகம் எங்கும் சிவ பிரதிஷ்டை செய்து வணங்கி - பல்வேறு வழிகளிலும் மக்களுக்கு - கமண்டல காவிரி நதி உள்பட - உறுதுணையாக இருந்ததையும் பற்பல நூல்களின் வாயிலாக அறியமுடிகின்றது. அப்பர் ஸ்வாமிகள் தமது தேவாரப் பாடல்களிலும் அகத்திய மாமுனிவரைக் குறிப்பிடுகின்றார்.
அகத்தியர் தவமிருந்த மலை பொதிகைமலை. அந்த மலையில் அவருடைய தவபீடத்தைத் தரிசிக்க - இப்போது பலரும் பலசிரமங்களுக்கு இடையே சென்று வருகின்றனர். வாருங்கள் - நாமும் செல்வோம்.
நிகழ்காலத்தில் நம்மை அழைத்துச் செல்பவர் - திரு.சிவா.
இங்கே தென் பொதிகை தரிசனம் நிறைவடைந்ததும் -
அகத்திய குருவுக்கும் குருவான ஆதி குரு வீற்றிருக்கும் மாமலை -
அதுதாங்க - திருக்கயிலாய மாமலை!..
அங்கேயும் சிவா - அவர்களே அழைத்துச் செல்கின்றார்.
வாருங்கள்!.. இறைவன் துணையுடனும் - நண்பர் சிவா அவர்களின் வழிகாட்டுதலுடனும் திருக்கயிலாய மாமலையைத் தரிசிப்போம்!..
வழிகாட்டி உடன் வந்த அன்பின் சிவா அவர்களுக்கு மிக்க நன்றி!..
அடுத்து ஒரு பயணம் - கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை!..
வழித்துணையாய் வந்த அன்பின் வெங்கட் நாகராஜ் , வசிப்பது தலைநகர்.
ஐயனின் ஜோதி மலைக்கு அடுத்து அப்பனின் ஜோதி மலை - அண்ணாமலை!..
காலெல்லாம் வலிக்குதே... கொஞ்ச தூரம் தான் .. இன்னும் வாங்க!...
இங்கே மலையே கோயில் . எனவே கிரி வலம் பிரசித்தம் .
அது சரி கூட வர்றது யாருங்க?!..
அவங்கதான் - கனவுகளைத் தேடி திருவல்லம் பரசுராமர் கோயிலுக்கு அழைத்துச் சென்ற - ராஜி!..
குருநாதர்களைக் கும்பிடுவது என்றால் கொள்ளை இன்பம் தான் . அந்த இன்பத்தை மகிழ்ச்சியை சீரடி சாய்பாபா தரிசனத்தின் மூலம் வழங்குபவர் குடந்தையூர் R.V.சரவணன்.
அப்படியே - அவருடன் திருவெண்காடு கோயிலையும் தரிசனம் செய்யலாம்.
இயற்கையுடன் இணைந்த வாழ்வு நம்முடையது. வயலும் ஓடையும் தோப்பும் துரவும் என - தூய வாழ்வு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.
அவர்களுடைய அந்த வாழ்வுக்குத் துணையாய் எண்ணற்ற காவல் தெய்வங்கள். அந்த காவல் தெய்வம் முனீஸ்வரனை மனசு நிறைஞ்சு - நமக்குக் காட்டுகின்றார் - திரு. சே. குமார்.
மயிலைக் காளைகளைக் காணோம் - என்று மனம் வருந்தும் குமார் - தற்போது காதல் ஜோடிகளைக் காப்பாற்றும் களப் பணியில் தீவிரமாக இருக்கின்றார்.
பாதுகாப்பு வேண்டுபவர்கள் இவரை அணுகலாம். ஏனெனில் முனீஸ்வரன் கூட இருக்கார் அல்லவா!..
அடுத்த இடம். தவறு. இதுவும் ஒரு தலம் - கொடுமணல் .
இங்கே தான் நம் சங்க கால தமிழ் மக்கள் வெளி நாட்டுத் தொடர்புடன் வாழ்ந்தார்களாம். மண்ணைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்வோம்!..
அழைத்துச்சென்ற மழைக்காதலனுடன் - நல்ல திரைப்படம் ஒன்றும் பார்த்தாகி விட்டது.
வழியில் - நமது அன்பின் ஐயா அவர்கள் - தஞ்சை மாநகரில். பிறந்து வளர்ந்த வீட்டைத் தேடிச் சென்று கண்டு மகிழ்ந்தோம்.
இதுவரைக்கும் இயன்றவரை கோயில் மலை - ன்னு சந்தோஷ சுற்றுலா!..
தகவல் தொடர்பில் இணைந்திருந்த திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
வழி நெடுக கலகலப்புடன் அரட்டைஅடித்து மகிழ்வித்தவர் - அன்பின் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்.
குடும்ப இஸ்திரி .. ன்னு நிரூபிச்ச பக்கத்து வீட்டுப் பொண்ணு
மலரும் நினைவுகளாக பல தகவல்களைப் பற்றி பகிர்ந்து கொண்டவர் -
தமிழ் இளங்கோ அவர்கள்.
தனிமரமாய் நின்றாலும் ஸ்நேக கவிதையும் கானமும் நன்று!.
பயணம் செய்யும் போது தன் இனிய குரலால் நம் அனைவரையும் கட்டிப் போட்டவர் - நகைச்சுவை வித்தகர் நமது மதிப்புக்குரிய சுப்பு தாத்தா அவர்கள்.
சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கூடவே நமக்கு சொல்லிக் கொண்டு வந்தவர் அன்பின் திரு பாண்டியன்!.. அவர்கள்.
இப்போது - பசிக்குதே!..
பசிக்குதா!?.. அதனால தானே - இங்கே வந்திருக்கின்றோம்..
அன்பின் வித்யா விஜயகுமார் அவர்களின் கை வண்ணத்தில் -
அஞ்சரிசி பணியாரம் பர்பி ஜவ்வரிசி உருண்டை -
எல்லாம் நமக்காக...
இங்கே கோலமிட்டு விளக்கேற்றி வைத்திருப்பவர் - சின்னு ஆதித்யா.
அதோ!..
தமிழ்வாசி பிரகாஷ் கபீரன்பன் கவிஞர் இராய செல்லப்பா
கிருஷ்ணாரவி சக்கரகட்டி மலர்த்தரு S. மாது
நவ்சின் கான் நிஜாமுத்தீன் சித்ரா சுந்தர் ரூபன்
கோமதி அரசு கரந்தை சரவணன் துளசிதரன் பிரியா ராம்
ஸ்கூல் பையன்
அனைவரும் வந்து விட்டார்கள்.
அறிமுகம் ஆனதில் இருந்து நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கும் அத்தனை அன்பின் உறவுகளும் இங்கே குழுமி இருக்கின்றார்கள்.
மனம் நிறைவான பயணம் .
இது நிறைவடைந்ததாக ஒரு பாவனை தான். ஆனால் -
பயணங்கள் முடிவதே இல்லை!.. மீண்டும் அனைவருக்கும் நன்றி!..
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!..
பசுமை நிறைந்த நினைவுகளே!.. பாடித் திரிந்தபறவைகளே!..
பழகிக் களித்த தோழர்களே!..
மீண்டும் நல்லதொரு வேளையில் சந்திப்போம்!..
வணக்கம்.
வாழ்த்துக்கள் ஐயா ..... எனக்குத் தெரிந்து நீங்கள் இதுவரைக்கும் அறிமுகம்
ReplyDeleteசெய்து வைத்தவர்களில் வலைத் தளத்தின் முக்கால்வாசிப் பேர் அறிமுகமாகி
விட்டார்கள் !! தங்களின் கடின உழைப்பினால் இந்த வலைத் தள வாரத்தையே
பெருமைப்படச் செய்து விட்டீர்கள் .உங்களைப் போன்றவர்கள் மீண்டும் மீண்டும்
இந்த ஆசிரியர் பதவியில் நிலைத்திருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தி
வணகுகின்றேன் .இன்றும் இந்த வைச்சரத்தில் அறிமுகமான அனைத்து உறவுகளுக்கும்
என் அன்பு கலந்த நல் வாழ்த்துக்கள் .வாழ்க வலைச்சரம் .மிக்க நன்றி ஐயா
தங்களின் வருகைக்கும் சிறப்பான நற் பணிக்கும் .
அன்பின் சகோதரி..
Deleteதங்களின் முதல் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்.மிக்க நன்றி!..
எனக்கும் மேலும் - சில பதிவுகள் வெளியிட ஆசைதான்.. ஆனால், இங்கே வேலை நிலவரம் ஒத்து வரவில்லை. இருப்பினும் என் பணியை இயன்ற வரை செய்துள்ளேன். தங்களைப் போன்றோர் அளித்த உற்சாகமே அதற்குக் காரணம்.
வணக்கம்
ReplyDeleteஐயா.
இந்த வாரம் மிகச்சிறப்பாக ஓடியது.மிக அருமையான வலைத்தளங்களை அறிமுகம் செய்துள்ளீர்கள் முதலில் வாழ்த்துக்கள் ஐயா... இன்று அறிமுகம் செய்துள்ள தளங்கள் அத்தனையும் அருமை .தங்களின் சேவை இந்த வலையுலகத்திற்கு மேலும் மேலும் தொடர வேண்டும் ..இன்று என்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி..ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் ரூபன்..
Deleteதங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்
எனக்கும் மேலும் - சில பதிவுகள் வெளியிட ஆசைதான்.. ஆனால், இங்கே வேலை நிலவரம் ஒத்து வரவில்லை. இருப்பினும் தங்களைப் போன்றோர் அளித்த உற்சாகத்தினால் என் பணியை இயன்ற வரை செய்துள்ளேன். தொடர்ந்த வருகைக்கு - .மிக்க நன்றி!..
மனம் நிறைவான பயணம் .
ReplyDeleteஇது நிறைவடைந்ததாக ஒரு பாவனை தான். ஆனால் -
பயணங்கள் முடிவதே இல்லை!//
உண்மை, நீங்கள் சொல்வது போல் பயணங்கள் முடிவது இல்லை.
ஒருவார கால மாக
வலைச்சரத்தை மிக அழகாய் தொடுத்து தந்தீர்கள்.
வாழ்த்துக்கள்.
இன்று இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அருமையாக, சிறப்பாக ஆசிரியர் பணியை நிறைவு செய்து இருக்கிறீர்கள்.
நானும் பயணத்தில் உங்களுடன் வந்ததை குறிப்பிட்டமைக்கு நன்றி.
அன்புடையீர்!..
Deleteதங்களைப் போன்றோர் அளித்த உற்சாகத்தினால் என் பணியை இயன்ற வரை செய்துள்ளேன். தொடர்ந்த வருகைக்கு - .மிக்க நன்றி!..
உங்கள் பதிவுகள் வாயிலாக இந்த ஒரு வாரமும் கோவில்களுக்கெல்லாம் சென்று தரிசனம் பெற்றது போன்ற ஓர் உணர்வு . வாழ்த்துகளும், பாராட்டுகளும். மீண்டும் சந்திப்போம் !
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதங்களைப் போன்ற அன்பு உள்ளங்கள் அளித்த உற்சாகத்தினால் என் பணியை இயன்ற வரை செய்துள்ளேன். தொடர்ந்த வருகைக்கு - .மிக்க நன்றி!.. மீண்டும் சந்திப்போம்.
மிகவும் சிறப்பான வாரமாக இருந்தது ஐயா... நன்றிகள்... வாழ்த்துக்கள் பல...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் பல...
அன்பின் தனபாலன்...
Deleteதங்களைப் போன்ற அன்பு நெஞ்சங்கள் அளித்த உற்சாகத்தினால் என் பணியை இயன்றவரை செய்துள்ளேன். தங்களின் தொடர்ந்த வருகைக்கும் பலருக்கும் அறிவித்தமைக்கும் - .மிக்க நன்றி!.. மீண்டும் சந்திப்போம்.
மனம் நிறைவான பயணம் . பாராட்டுக்கள்..!
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி.
உங்கள் சங்கப் பலகையில் எனக்கும் ஓர் இடம் கொடுத்த தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி!
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி
வலைச்சரத்தில் தங்கள் பதிவில் என்னையும் என் தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சார்
ReplyDeleteஅன்பின் சரவணன்..
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!..
இதில் எனக்குப் பரிச்சயமான, என் தொடர்பு எல்லைக்குள் உள்ள ஒருசிலரின் அறிமுகங்கள் மட்டும் மிகவும் மகிழ்வளிக்கின்றன. பாராட்டுக்கள். நன்றிகள்.
ReplyDeleteஅன்புடையீர்..
Deleteதங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..
அன்பின் ஐயா...
ReplyDeleteதனபாலன் சார் எனது வலைச்சரத்தை தாங்கள் அறிமுகம் செய்திருப்பதாகச் சொல்லியிருந்தார். நானும் வந்து இரு முறை வாசித்தேன்... என் பெயர் இல்லை... அப்போதுதான் யோசித்தேன் காவல் தெய்வம் முனீஸ்வரர் நாம எழுதியதோ என்று... இருந்தும் அந்த இணைப்பைச் சொடுக்கி சரியா என்று பார்த்தேன்... அது நான் தான்... சே.குமாரை சேகர் ஆக்கிட்டிங்க....
அறிமுகத்துக்கு நன்றி ஐயா... தங்களைப் போன்றோரின் அன்பே எங்களை இன்னும் நிறைய எழுதத் தூண்டுகிறது என்பது உண்மை....
நன்றி.
அன்பின் குமார்..
Deleteசற்று குழம்பி விட்டேன். பெயர் திருத்தப்பட்டது .
தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்.
சிறப்பான வாரத்தில் எனக்கும் ஒரு அறிமுகம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே....
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
அன்பின் வெங்கட்..
Deleteதங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
கைலாச தரிசனம் அற்புதமாக அமைந்தது. நன்றி!
ReplyDeleteமற்றவர்களின் தளங்களையும் சென்று படிக்கிறேன். அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள். ஒருவார ஆசிரியர் பொறுப்பை மிகச் சிறப்பாக முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
அம்மா!..
Deleteதாங்கள் வருகை தந்து வாழ்த்தியமை கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி!..
"மனிதனும் இறைவனும் பயணம் செய்தாலே எவரை எவர் வெல்லுவாரோ?" என்று திரு. எம். எஸ். விஸ்வநாதன் பாடிய
ReplyDeleteவரிகள் நினைவுக்கு வருகின்றன, தாங்கள் 'பயணம்' பற்றி
எழுதிய கருத்துக்களைப் படித்ததும். இணைந்து பயணித்திருப்போம் ஐயா.
எனது உடன் வருகையையும் இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றி
ஐயா.
சிறப்பான பணி செய்தீர்கள் ஐயா.
அன்பின் முஹம்மத் ..
Deleteநல்ல மேற்குறிப்புடன் கூடிய கருத்துரை.. நன்றி!..
தங்களின் தொடர்ந்த வருகையும் இனிய கருத்துரைகளும் எனக்கு மகிழ்ச்சியளித்தன. . இணைந்து பயணித்திருப்போம்.
அருமையான தொகுப்பு....
ReplyDeleteவாழ்த்துக்கள்.....
அன்புடைய தமிழ்வாசி பிரகாஷ்..
Deleteதங்களுடைய வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
என் வலைத் தளத்தின் சுட்டியைக் கொடுத்து எழுதியிருப்பதற்கு நன்றி சார்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றியதற்கு பாராட்டுக்கள்.
அன்பின் ராஜலக்ஷ்மி பரமசிவம் தங்களின் பாராட்டுரைக்கு நன்றி
Deleteஇவ்வார வலைச்சர ஆசிரியப்பணியைச் செவ்வனே நடத்தி முடித்து விடைபெறும் ஐயாவுக்கு இதயங் கனிந்த நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பின் இளமதி - தங்களின் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி
Delete