Tuesday, December 24, 2013

குருவே சரணம்

'குரு இல்லா வித்தை பாழ்' என்பார்கள். எல்லோருக்கும் முதல் குரு அம்மா. அப்புறம் அப்பா ; பின், பள்ளியில் ஆசிரியர்.  வாழ்க்கை நடத்திச் செல்லும் போது நல்ல வழிகாட்டிகளாய் வருபவர்கள் எல்லாம் குருதான்.
அவரவர் தேடலுக்கு ஏற்ப  குருஅமைவார்கள்.

காயத்ரீ மந்திரம்:

நம்முடைய உயிராற்றலாகவும், துக்கத்தை அழிப்பதாகவும், இன்பமே வடிவமாகவும் உள்ள சூரியனைப் போன்ற ஒளிமயமானதும்  தன்னைவிட மேலாக ஒன்றும் இல்லாததும் நம் பாபங்களை அழிக்கக் கூடியதுமான தெய்வீக பரம்பொருளை நாம் மனதில் இருத்தி தியானிப்போமாக! அந்தப் பரம்பொருள் நமது அறிவை நல்வழி யில் ஈடுபடுத்தட்டும். 

எவர் நம் அறிவைத் தூண்டிப் பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக!

 இப்படி நம் அக இருளைப் போக்கி ஞான ஒளி ஏற்றுபவர்  குரு தானே! அந்த குருவாய் வந்து வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் குருவைப்பற்றிய பதிவுகள்:-

1. ’குருவே சரணம்’ என்ற பதிவில் குருவின் அவசியத்தைச் சொல்கிறார்,  வாசுதேவன் திருமூர்த்தி அவர்கள்.

கடவுள் எல்லா இடத்திலும் நேரே வரமுடியாது; மனித உருவில் நடமாடும் தெய்வங்கள் நமக்கு உதவுவார்கள் என்பார்கள், அனுபவப்பட்டவர்கள். என் கணவர்,  பாடல் பெற்ற தலங்களுக்குச் செல்லும்போது  (அந்தக் காலத்தில் சரியான பஸ் வசதி இல்லாத ஊர்களுக்கு செல்லும் போது) எங்கிருந்தோ நல்ல மனிதர் வந்து சைக்கிளில் அழைத்துச் சென்றார் என்று சொல்வார்கள்.

2. முத்துப்பாண்டி என்று வலைத்தளம் வைத்து இருக்கும் தேவா சுப்பையா,  ’கடவுளின் மொழி ’  என்ற பதிவில்,  அவர் அவசரமாய்  ஊருக்குப் போக வேண்டி இருக்கும்போது, சாலை மறியலில்  மாட்டிக்கொண்டு தவித்தபோது,  முன்பின் தெரியாத மனிதர் ஒருவர் வந்து அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு வண்டியில் அழைத்துச் சென்று விட்டதையும்,  அவர் குலதெய்வ வழிபாட்டுக்கு செல்ல வந்தவர் செல்லாமல்  தனக்கு உதவிசெய்ததையும், அதைத்தான்  இறைவன் விரும்புவான் என்று  உதவியவர் கூறியதையும் அழகாய் சொல்கிறார். அவரது செல் நம்பர் வாங்கியவர் , பெயரைக் கேட்க மறந்து, பின் செல்லில் ’கடவுள்’ என்று போட்டுக் கொள்கிறார். தக்க நேரத்தில் உதவுபவர் கடவுள்தானே!

3. வாழ்க்கையில் நாம் நிறைய பேரைச் சந்திக்க வேண்டி உள்ளது. அவர்கள் கருத்துடன் நாம் ஒத்துப் போக முடியாமல் முரண்பட வேண்டி இருக்கும். சிலர் குதர்க்கமாய் பேசுவார்கள். அதை எப்படிச் சமாளிக்கலாம் என்று புத்தரின் அனுபவ  போதனைகளில் இருந்து  சிலவற்றை அழகாய்ப் பகிர்கிறார், ’சித்தவித்யா விஞ்ஞானம்’ என்ற வலைத்தளத்தை வைத்திருக்கும் சுமனன் அவர்கள். முரண்பாடுகளை, குதர்க்கங்களை எப்படி சமாளிப்பது -- புத்தரின் ஞானம்


4. சப்பாத்தி சொல்லும் வாழ்க்கைப் பாடம் - சப்பாத்தி பிசைவதிலிருந்து அதை அழகாய்ப் போட்டுச் சாப்பிடுவது வரை உள்ளதை வாழ்க்கையுடன் இணைத்து வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தருகிறார்,மகாலக்ஷ்மி விஜயன். ( பொறுமை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை) வாழ்க்கை, போரடிக்காமல் , ஒவ்வொரு நாளும் புதிதாகவும்  அழகாகவும் வாழலாம் என்கிறார்.  

5.’பிரியாவிடைகளும், பிரியங்களும்’ என்ற பதிவில், ’மகிழம்பூச்சரம்’ என்று வாசம் மிக்க வலைத்தளம் வைத்து இருக்கும் சாகம்பரி அவர்கள் பிரியாவிடைகளைப்பற்றிச் சொல்கிறார் :-
எப்போதிருந்து இந்த பிரியாவிடைகள் உருவாகுகிறார்கள்? கணவன் மனைவிக்கிடையே ஒரு ஆத்மபூர்வமான உறவு ஏற்படும்போது உருவாகலாம். அதென்ன ஆத்மபூர்வம் என்று கேட்டால், உணர்தலும் , புரிதலும் , நெகிழ்தலும் என்பதுதான்  என்கிறார்.


 6. ’கைக்கெட்டும் தொலைவில் இருந்த ஸ்ரீஅரவிந்தரை நான் உணர இத்தனை நாட்கள் கடந்திருக்கின்றன. போன வருடத்தின் ஆவணி மாத மழைநாளின் மங்கலான ஒரு முழு இரவு என்னுள் முழு நிலவு உதயமாகக் காரணமாக இருந்தது. அரவிந்தரைப் படிக்க ஆரம்பித்தேன், நள்ளிரவு கடந்த நிசப்தத்தில் அரவிந்தர் என் அருகே அமர்ந்திருப்பதாய் உணர்ந்தேன். மொழியின் துணையால் சில இடங்களையும், ஆன்மாவின் துணையால் பல இடங்களையும் நதியில் மிதக்கும் கட்டுமரமாய்க் கடந்து கொண்டிருந்தேன்.’- இப்படி சொல்வது ’கைகள் அள்ளிய நீர்’ என்ற வலைத்தளம் வைத்திருக்கும் சுந்தர்ஜி ப்ரகாஷ்.
 ஸ்ரீ அரவிந்தரின் அமுத மொழிகள்- சுபாஷிதம் 17.

7. குரு, தானே வருவார்.- இப்படிச் சொல்வது  சுவாமி ஓம்கார் அவர்கள்.
’குரு கதைகள்’ என்ற வலைத்தளத்தில்,  ’குருவைத் தேடி  என்று கதைகளைப் பகிர்ந்து வருகிறார். குரு என்பவர் எந்த தோற்றத்திலும் இருக்கலாம். உங்கள் வீட்டுக்கு வரும் குப்பை அள்ளுபவர், உங்கள் மனைவி, உங்கள் குழந்தை, உங்கள் செல்லப் பிராணியான நாய் என யார் வேண்டுமானாலும் உங்கள் குருவாக இருக்கலாம். குருவை உங்கள் பார்வையில் தேடாதீர்கள். அறியாமை இல்லா மனதைத் திறந்து  வையுங்கள் உங்கள் குரு தானே வருவார் என்கிறார்.

8.


ஸ்ரீ காஞ்சி மகா பெரியவாளின் அற்புத தத்துவம் சகலத்திடமும் சமமான அன்புதான் அவரது சாஸ்வத சத்யமான அன்புதான் அவரை உலக நாடுகளின் பேரவைக்கு ”மைத்ரீம் பஜத” என்ற கீதத்தை அருளச் செய்தது. சகல நாடுகளுக்கும் அவர் வழங்கிய இந்த கீதம் மக்களுக்கு மற்றுமோர் கீதோபதேசம். இப்படி குருவைப் பற்றிச் சொல்பவர், 'கற்றலும் கேட்டலும் 'என்ற வலைத்தளம் வைத்திருக்கும்  ராஜி.

9.குரு வாரத்தில் ஷீர்டி பாபாதர்சன் யதேச்சையாக கிடைத்த்தைப் பெரும் பாக்கியமாகச் சொல்லுபவர்,’ உலகமே ஒரு வலை, இது என் இல்லத்து வலை ’என்று சொல்லும் சூரி சிவா சார். அனைவராலும் சுப்புத் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படுபவர்.வாழ்வில் ஒரு பொருள் வேண்டும்  என்கிறார் .

 //வாழ்வில் ஒரு பொருள் வேண்டின் இறைவனைத் துதியுங்கள் . வாழ்வின் பொருள் தெரியவும் இறைவனைத் துதியுங்கள் .//
இந்த வாக்கியங்களை யார் சொன்னார். அவர் பதிவில் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

10. அன்றாட அனுபவமே பாடம் எனக் கற்றுக் கொடுத்து வரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும்  நன்றி சொல்கிறார் , ’தூரிகைச்சிதறல்’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் கவிக்காயத்ரி. 

எல்லாப் பதிவுகளும் மிக நன்றாக இருக்கின்றன.


நீ எங்கிருந்து எச்செயலைச் செய்துகொண்டிருந்தாலும் மனதை மட்டும் சதா சர்வகாலமும் தெய்வத்தின் திருவடியில் வைத்திரு. ----இராமகிருஷ்ணபரமஹம்சர்.

52 comments:

  1. அனைவருமே எனக்கு புதியவர்கள் கண்டிப்பாக ஒவ்வொருவரது பதிவையும் இந்த விடுமுறைக்குள் சென்று பார்க்கிறேன் ,ஒவ்வொருவரையும் ,நீங்கள் அறிமுகப்படுதியவிதம் மிக அருமை ..அறிமுகமானோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

    Angelin.

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா.
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாரட்டுக்கள் அம்மா.தொடருகிறேன் பதிவுகளை.
    த.ம 2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. // வாழ்க்கையை நடத்திச் செல்லும் போது நல்ல வழிகாட்டிகளாய் வருபவர்கள் எல்லாம் குருதான். அவரவர் தேடலுக்கு ஏற்ப குரு அமைவார்கள். //

    மிகவும் அனுபவமான வரிகள்! தேடலில்தான் குரு அமைகிறார்.

    ReplyDelete
  4. வணக்கம்

    எல்லாம் நான் செல்லும் தளங்கள்...அறிந்தவை. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .

    -நன்றி-
    -அன்படன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. சிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ராஜியைத் தவிர அனைவருமே புதியவர்கள்...பொறுமையாக சென்று படிக்க வேண்டும்..

    ReplyDelete
  6. அற்புதமான பதிவுகளை
    அருமையாக அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அறிமுகமாகியிருக்கும் அனைத்துப்பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தங்களது எழுத்துமழை தொடரட்டும்.

    எம்மையும் அறிமுகப்படுத்திய தோழமை.கோமதி அரசு அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும், மகிழ்ச்சியும். தங்கள் அனைவரது தொடர்ந்த ஊக்கம் எம் எழுத்துகளை வளர்த்துக்கொள்ள உதவிவருகிறது. எம் எழுத்தை வளர்த்துக்கொள்ள தொடர்ந்து உடன்வரும் அனைவருக்கும் இத்தருணத்தில் எமது மனம்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.
    நட்புடன் காயத்ரி வைத்தியநாதன். :) _/\_

    ReplyDelete
  8. அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  9. அறிமுகத்திற்கு மிக்க நன்றி கோமதி அரசு அம்மையார் அவர்களே! வலைத்தளத்தின் பெயர் தவறுதலாக சுத்த வித்யா எனக்குறிப்பிடப்பட்டுள்ளது, சித்த வித்யா என்பதே சரியான பெயர்!

    ReplyDelete
  10. வாங்க ஏஞ்சலின், வாழ்க வளமுடன். வெகு நாட்கள் ஆகி விட்டதே !
    நலமா? நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காக தான் இங்கே பகிரப் படுகிறது .முடிந்த போது படித்து அவர்கள் தளம் சென்று கருத்து சொல்லுங்கள். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  11. அன்புடையீர்..
    இன்று தாங்கள் வழங்கிய - ’’குரு தரிசனம்’’ - அழகு. அருமை.
    எங்கேயோ கேட்ட குரலாக இருக்கின்றதே - என்று - ஐயா சூரி சிவா அவர்களின் தளத்திற்குச் சென்றால் - அங்கே,
    என்னையும் ஆட்கொண்ட எம்பெருமானின் திருவருள் தான் முன் நின்றது..
    வாழ்க வையகம்!.. வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
  12. வாங்க ரூபன், வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி. இங்கு இடம் பெற்ற எல்லா தளங்களுக்கும் சென்று நீங்கள் செய்தி சொல்லி விட்டீர்கள். சகோதரர் தனபாலன் செய்வார் அந்த பணியை , இப்போது நீங்களும் மேற்க் கொண்டது மகிழ்ச்சி. என் நன்றிகள்.

    ReplyDelete
  13. வாங்க ஆதிவெங்கட், வாழ்க வளமுடன். பதிவர்களை வாழ்த்தியதற்கு நன்றி ஆதி. படித்து பாருங்கள் எல்லா பதிவுகளும் மிக அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  14. வணக்கம் ரமணிசார், வாழ்க வளமுடன். நீங்கள் சொன்னது போல் அற்புத பதிவுகள் தான். உங்கள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  15. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. வணக்கம் சுமனன், வாழ்க வளமுடன்.
    தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. தவறுக்கு மன்னிக்கவும்.
    திருத்தி விட்டேன்..

    ReplyDelete
  17. வணக்கம் துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.

    ’எங்கேயோ கேட்ட குரல்” யார் என்று தெரிந்து விட்டதா? மகிழ்ச்சி.வேறு யாரும் கண்டுபிடிக்கிறார்களா? பார்ப்போம்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  18. கோமதிம்மா, ஒவ்வொருவரின் பின்னூட்டத்தின் கீழ் வரும் REPLY என்ற பட்டனை அழுத்தி விட்டு பதில் எழுதினால்.. அந்த பின்னூட்டத்தின் கீழேயே அவர்களுக்கான பதில் வரும்...

    தவறாகத் தோன்றினால் மன்னிக்கவும்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆதி.
      இதில் தவறு என்ன!

      Delete
  19. வணக்கம் மேடம்!
    இன்று என் பதிவை தேர்ந்தெடுத்து என்னை வலைசரத்தில் அறிமுகபடுத்தியதற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்!! எனக்கு இது மிக பெரிய ஊக்கம் குடுத்தது போல இருக்கிறது.. மென்மேலும் சிறப்பான பதிவுகளை எழுத வேண்டும் என்ற ஆர்வமும் உண்டாகிறது. நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மகாலக்ஷ்மி விஜயன், வாழ்க வளமுடன் .
      அருமையாக இருந்தது உங்கள் பதிவு. மென்மேலும் சிறப்பாக பதிவுகளை எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

      Delete
  20. ரொம்ப சந்தோஷம் அம்மா!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாசுதேவன் திருமூர்த்தி, வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கு நன்றி.

      Delete
    2. வணக்கம் திவாஜி. தங்கள் வலைப்பூ பற்றிய வலைச்சரம் அறிமுகம் கண்டேன். அரிய பணி தொடர வாழ்த்துக்கள்.

      Delete
  21. குருவருள் இன்றித் திருவருள் ஏது என்பார்கள். அருமையாகக் குருவருள் பற்றிப் பதிவிட்டு சிறந்த அறிமுகப்பதிவர்களையும் அறிமுகம் செய்துள்ளீர்கள். மிகச் சிறப்பு!

    அனைவருக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி, வாழ்க களமுடன்.
      நீங்கள் சொல்வது சரியே! குருவருள் இன்றித் திருவருள் கிடையாது உண்மைதான்.
      உங்கள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  22. //நீ எங்கிருந்து எச்செயலைச் செய்துகொண்டிருந்தாலும் மனதை மட்டும் சதா சர்வகாலமும் தெய்வத்தின் திருவடியில் வைத்திரு. ----இராமகிருஷ்ணபரமஹம்சர்.//

    அருமையான பொன்மொழி. சிறப்பான கோலம். பகிர்வுக்கு நன்றிகள்.

    'கற்றலும் கேட்டலும் 'என்ற வலைத்தளம் வைத்திருக்கும் திருமதி ராஜி அவர்களை நினைவூட்டி அறிமுகம் செய்துள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது..அதற்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வை.கோபால்கிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
      பொன்மொழி, கோலம் பாராட்டுக்கு நன்றி. இங்கு பகிரும் கோலங்கள் நான் போட்டவை..
      கற்றலும் கேய்ட்டலும் ராஜி உங்களை போல் குருவைப்பற்றி பகிர்ந்து இருந்தார். உங்கள் பதிவுகளை எல்லோரும் படித்து வருகிறார்கள்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  23. அடியே கிழவி ஓடி வா .
    என்ன?
    இங்கன பார் சுப்பு தாத்தா பேரு வந்திருக்கு..
    ஆமா..
    நல்ல படிச்சு பார்.
    நீங்க எங்க வந்திருக்கீக ?
    என்னது? என் பதிவுலே வந்த சர்டி பாபா பாத்து தானே
    கோமதி அரசு அம்மா என்னைக் குறிப்பிட்டு இருக்காக...?

    அதான் இல்லைன்னேன்.
    சர்டி பாபா வரணும் அப்படின்னு நினச்ச்சாரூ.
    வந்துட்டாரு.

    ReplyDelete
    Replies
    1. என்றோ இட்ட தென்னன் கன்று
      என்றோ இளநீர் தருவது போல,

      என்றோ இட்ட பதிவு ஒன்று
      இன்று என்னை முன் நிறுத்துகிறது
      என்றால், அது
      ஷீரடி பாபாவின் அருளே.

      சுப்பு தாத்தா.

      Delete
    2. சர்டி பாபா வரணும் அப்படின்னு நினச்ச்சாரூ.
      வந்துட்டாரு.,,
      வாங்க சூரி சார், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது உண்மை. பாபா வர வேண்டும் என்று நினைத்தார் வந்து விட்டார்.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
    3. என்றோ இட்ட தென்னன் கன்று
      என்றோ இளநீர் தருவது போல,//
      என்ன அழகாய் சொல்லிவிட்டீர்கள்!
      ஷீரடி பாபாவின் அருள் எல்லோருக்கும் கிடைகட்டும்.

      Delete
  24. எடுத்துக் கொண்ட பதிவுகளும் அவற்றை அறிமுகப்படுத்திய விதமும் மிக அருமை. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
    2. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  25. அருமையான அறிமுகங்கள். ஒரு சிலர் தவிர மற்றவர்கள் எனக்குப் புதியவர்கள். படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
      படித்து பாருங்கள் , உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  26. புதிதாய் பல பேர்களை குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முஹம்மது நிஜாமுத்தீன், வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கு நன்றி.

      Delete
  27. அருமையான அறிமுகங்கள். அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜலக்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  28. அறிமுகங்கள் அருமை. வண்ண வண்ண கோலத்துடன் முடிப்பது சூப்பர்.

    ReplyDelete
  29. வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  30. வாசுதேவன் திருமூர்த்தி பதிவு தெரியும். சுப்பு தாத்தா பதிவு தெரியும். கவிக்காயத்ரி பக்கத்துக்கு கவிதைப் போட்டி சமயம் சென்றிருக்கிறேன்! மற்ற தளங்கள் புதிது.

    ReplyDelete
  31. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன். புதிய தளங்களுக்கு சென்று படித்துப்பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்.
    வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  32. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனிமரம், வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  33. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. வாங்க மாதேவி , வாழ்க வளமுடன்.அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  35. அழககிய அறிமுகங்கள். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், காமாட்சி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும் நன்றி.

      Delete
  36. குருவருளின் திருவருளில் எம்மையும் இணைத்தமைக்கு நன்றி !

    ReplyDelete