Monday, December 23, 2013

மாதங்களில் மார்கழி

வலைச்சர அன்பர்களுக்கு வணக்கம். வாழ்க வளமுடன்.
மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
மீண்டும் வாய்ப்பு கொடுத்த சீனா சாருக்கு நன்றி.

எனக்கும் வலைச்சரத்திற்கும் உகந்தது, மார்கழி மாதம்தான் போலும்! 2012ல் ஜனவரி மாதம் 1 ம் தேதியில் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு திரு. வை. கோபாலகிருஷ்ணன் சார் பரிந்துரைக்க, சீனாசார் அன்புடன் அழைத்தார்.  அவர்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு என்னால் முடிந்தவரை வலைச்சரப் பொறுப்பை ஏற்று செய்தேன்.

முந்திய வாரம்  திரு. துரைசெல்வராஜு அவர்கள் அருமையாக வலைச்சர ஆசிரியர் பணியைச் செய்தார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

முன்பு ”வலைச்சரத்தில் நான்” என்ற அறிமுக உரையில் என்னைப்பற்றி விரிவாகப் பகிர்ந்து இருக்கிறேன். எப்படி வலைத்தளம் ஆரம்பித்தேன், என் வலைத்தளத்தின் பெயர்க்காரணம் எல்லாம் எழுதி இருக்கிறேன்.
 லிங்  கொடுத்து இருக்கிறேன்.  படித்துப் பாருங்கள்.
 2009 மே மாதம் 31ம் தேதி வலைத்தளம் ஆரம்பித்து எழுதி வருகிறேன். அடிக்கடி வெளியூர்களுக்குச்  சென்றுவருவதால்  154 பதிவுகள் தான் எழுதி இருக்கிறேன். போனமுறை கொடுக்காத பதிவுகளை இப்போது கொடுத்து இருக்கிறேன். படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

இதோ என் பதிவுகளில் சில:-

உலக சுகாதார தினம்’  தாய் சேய்நலம், முதியோர் நலம்
உலக சுகாதார தினத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்படுவது முதுமையும் ஆரோக்கியமும்.உலக சுகாதார தினத்தில் தாய் சேய் நலமும் பாதுகாக்கப்படவேண்டும் என்று
சொல்லப்படுகிறது.

'மார்கழி கோலங்கள்' என்ற பதிவில் கோலங்கள் போடுவதால் உண்டாகும் நன்மைகளைச் சொல்லி இருக்கிறேன்.

’மார்கழியின் சிறப்பு ’  மார்கழியின் சிறப்பைச் சொல்லும் பதிவு
 மார்கழி என்றாலே  மாதவன், மகேசன் புகழ்பாடுவது, கோலங்கள், இசைவிழா இவை முக்கியம் அல்லவா?

'பாவை நோன்பு'-  மார்கழியில் நோற்கப்படும் நோன்பைப்பற்றிச் சொல்லும் பதிவு. பாவையர் மழை வேண்டியும்நல்ல கணவரை அடைய வேண்டியும் பாவைப் பாடல்களைப் பாடினார்கள்.
மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்தால் மழை வளம் பெருகும். நல்ல இறை நம்பிக்கை உள்ள கணவன் கிடைப்பார். மழை வளம் இருந்தால் நாடு செழிப்பாய் இருக்கும். மக்கள் நலம் பெறுவர்.

 இந்தக் காலத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சொல்வது போல் அந்தக் காலத்திலும்  உள்ளதுஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்று. படித்துப்பாருங்களேன்.


ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்கான விழிப்புணர்வுக் கட்டுரை.

அன்புள்ள என்று ஆரம்பித்து ,பேரோ அல்லது கண்ணே மணியே என்றோ ஏதோ எழுதிஇங்கு நாங்கள் எல்லோரும் நலம், அங்கு எல்லோரும் நலமா?நலம் நலம் அறிய ஆவல் என்று
அந்த காலத்தில் கடிதம் இப்படித்தான் நலம் விசாரித்து எழுதிக் கொள்வார்கள். ’இங்கு மழை பெய்கிறது,அங்கு மழை உண்டாமாடு கண்ணு போட்டுதா,வெள்ளாமை எப்படி இருக்கு? ’என்று ஊர் நடப்புநாட்டு நடப்பு எல்லாம் கேட்டுக் கொள்வார்கள்.
பழைய கடிதத்தை எடுத்துப்பார்த்தால் அந்த அந்தக் காலக்கட்டங்களின் நிலை புரியும். என் சொந்தங்கள் எப்படி கடிதம் எழுதினார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசையா படித்துப் பாருங்கள்.

அவரவர்களுடைய அடிமனமே வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அவரவர்கள் மனத்தின் தரத்தைக் கொண்டு அவர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன இன்பம்துன்பம் வர வேண்டுமோ அதற்குச் சரிபங்கேற்க ஒரே ஒருவரால் தான் முடியும். அந்த ஒருவரை அவரவர் அடிமனமே தேர்ந்தெடுக்க, அது பல பேர் மனதில் பிரதிபலிக்கமற்றவர்கள் வெறும் கருவிகளாகத் திருமணத்தை நடத்திவைப்பார்கள். இதையே
மனம்போல் மாங்கல்யம்’ என்றும், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது’ என்றும்

கூறுவர். யார் சொல்லும் கருத்து இது?- படித்துப் பாருங்கள்.


 இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரைநோய்
குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
சர்க்கரைநோய்ச் சிகிச்சைக்கான சிறப்பு- 
மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க் கல்வித்
துறை என்ற தனிப் பிரிவே செயல்படுகிறது
வெண்டைக்காய் எப்படி சர்க்கரைநோயைப் போக்கும்?- படித்துப் பாருங்களேன்.

மழை என்றாலே மகிழ்ச்சிதான்.  மழைக்காலத்தில் சூடாய் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டு, அல்லது புத்தகங்களைப் படித்துக் கொண்டு இருக்காமல் மழையை  ரசிக்க பிடிக்கும். மழைக்கால என் மலரும் நினைவுகளைச் சொல்லும் பதிவு.

இன்று வலைச்சரம் வந்து இருக்கும்  அன்பர்களை வருக வருக என்று இருகரம் கூப்பி வரவேற்கிறேன். ஒருவாரகாலம் உங்கள்  அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
                                  ------
"எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி, எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்."- வேதாத்திரி மகரிஷி
                                  ------



50 comments:

  1. அன்பின் கோமதி அரசு - அருமையான சுய அறிமுகம் - பதிவுகளுக்குச் சென்று பார்க்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. வணக்கம்

    அறிமுகம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்...தங்களின் வலைப்பூ பக்கம் தொடருகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம் சீனாசார், வாழ்க வளமுடன்.
    உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  4. சிறப்பான அறிமுகம்... விடுபட்ட பதிவுகளை சென்று பார்க்கிறேன்...வாழ்த்துகள் கோமதிம்மா..

    ReplyDelete
  5. வாங்க ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.
    விடுபட்ட பதிவுகளை படித்து கருத்துச் சொல்லுங்கள் மகிழ்வேன்.
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. சிறப்பான அறிமுகம்
    வாழ்த்துக்கள் சகோதரியாரே
    த.ம.2

    ReplyDelete
  7. சுய அறிமுகம் மிகவும் அருமை... மேலும் அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. ஒரு வாரம் கலக்குங்கள் கோமதி அரசு அம்மா

    ReplyDelete
  9. வாங்க கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  10. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  11. வாங்க முருகானந்தம் சுப்பிரமணியன், வாழ்க வளமுடன்.
    உங்கள் உற்சாக பின்னூடடத்திற்கு நன்றி.
    தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  12. அருமையான அறிமுகம்
    இவ்வார வலச்சர ஆசிரியர் பணி
    சிறப்பாக அமைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வாங்க ரமணி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  14. வாழ்க.. வளமுடன்..
    நல்லதொரு அறிமுகம். மனம் கவரும்படியான -
    பதிவுகளைச் சுட்டிக் காட்டி இருக்கின்றீர்கள்..
    இந்த வாரம் சிறப்பாக அமைந்திட நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அம்மா.. வணக்கம்.
    தங்கள் கேதாரம் மற்றும் திருத்தலங்களுடன் திருக்கயிலாய தரிசனம் செய்தவர்கள் என்பதை தங்களுடைய வலைப் பக்கத்தின் வாயிலாக அறிந்தேன்.
    மிக்க மகிழ்ச்சி!..

    ReplyDelete
  16. சிறப்பான அறிமுகம். ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துக்கள் கோமதி.

    ReplyDelete
  17. வலைச்சர ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள். உங்களின் பதிவுகள் சிலவற்றையும் சென்று பார்த்தேன். நன்றி...

    ReplyDelete
  18. வாங்க துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
    என் பழைய பதிவுகளை படிப்பது அறிந்து மகிழ்ச்சி.
    இறைவன் அருளால் கயிலை, மற்றும் தலங்கள் தரிசனம் கிடைத்தது.

    ReplyDelete
  19. வாங்க எழில் . வாழ்க வளமுடன். என் பதிவுகளை படித்து வருவது மகிழ்ச்சி.. மோதிர பதிவுக்கு பின்னூட்டம் பார்த்தேன் மகிழ்ச்சி. நன்றி.
    வாங்க தொடர்ந்து.

    ReplyDelete
  20. வலைச்சரம் ஆசிரியை பொறுப்பேற்ற சகோதரிக்கு வாழ்த்துக்கள்! தங்களது ”வலைச்சரத்தில் நான்” என்ற பதிவை மீண்டும் ஒருமுறை வாசித்தேன். மற்ற பதிவுகளை நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்!

    ReplyDelete
  21. வாங்க தி. தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
    ’வலைச்சரத்தில் நான் ’படித்தமைக்கு நன்றி.
    நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள் .உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  22. சிறப்பான சுய அறிமுகம். உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. சுய அறிமுகம் மிக இனிமையும் அழகும் சேர்ந்த சிறப்பு!
    வாழ்த்துக்கள்! தொடருங்கள்!..

    ReplyDelete
  24. வாங்க சத்யா நம்மாழ்வார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  25. வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  26. "எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி, எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்."- வேதாத்திரி மகரிஷி

    அருமையான அறிமுகப்பகிர்வுகள்...வாழ்த்துகள்..!

    வாழ்க வளமுடன் ..!

    ReplyDelete
  27. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  28. வலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கு பாராட்டுக்கள், கோமதி. உங்களுடைய கைலாய யாத்திரை எல்லாப்பகுதிகளும் படித்துவிட்டு வந்தேன். எனக்கும் அங்கெல்லாம் செல்ல ஆசை. நீங்கள் சொல்லியிருப்பது போல தெய்வ சித்தம் இருந்தால் நடக்கும்.

    வரும் நாட்களில் உங்கள் அறிமுகங்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    உங்கள் மகள் எழுதிய ரிஷிகேஷ் யாத்திரைகளையும் படித்துவிட்டு வந்தேன்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. வாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
    கைலாய யாத்திரை எல்லா பகுதிகளும் படித்தமைக்கு நன்றி.தெய்வசித்தம் உங்களுக்கும் நிச்சயம் உண்டு. கையிலை தரிசனம். கிடைக்கும்.
    என் மகளின் ரிஷிகேஷ் யாத்திரையை படித்தமைக்கு நன்றி.
    உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  30. (மீண்டும்) வருக..வருக.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவேற்புக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  32. தாங்கள் குறிப்பிட்ட பதிவுகளில் சிலவற்றைப் படித்தேன். ரசனைக்குரியதாக இருக்கின்றது.
    நாளையும் தொடர்வோம்...

    ReplyDelete
  33. வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துகள்:)!

    ReplyDelete
  34. தங்களின் சுய அறிமுகத்தினைச் சுருக்கமாகச்சொல்லி, தங்களின் பல்வேறு புதிய பதிவுகளைப் பற்றி எடுத்துச்சொல்லி, மார்கழி மாதத்திற்கு ஏற்ப கோலமிட்டு எல்லோரையும் வரவேற்றுள்ளீர்கள்.

    மிகச்சிறப்பான அழகிய துவக்கம். பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. // 2012ல் ஜனவரி மாதம் 1 ம் தேதியில் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு திரு. வை. கோபாலகிருஷ்ணன் சார் பரிந்துரைக்க, சீனாசார் அன்புடன் அழைத்தார். //

      ஆஹா, இதைக்கூட மறக்காமல் ஞாபகமாகச் சொல்லியுள்ளீர்கள். சந்தோஷம். திறமையுள்ளவர்களை வாய்ப்புகள் தேடித்தேடி மீண்டும் மீண்டும் வரும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ;)

      சென்றமுறை தாங்கள் பதவி ஏற்றபோது, என் கணினி பழுதடைந்திருந்ததால் தினமும் என் பின்னூட்டங்கள் வலைச்சரப் பின்னூட்டப்பெட்டியில் நேரிடையாக தங்களுக்குக் கிடைப்பதில் நிறைய பிரச்சனைகள் இருந்தன. மெயில் மூலமே தங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.

      இன்றும் அதுபோலவே நான் பிறரின் வலைப்பதிவுகள் பக்கமே வர முடியாதபடி வேறு பல வேலைகளில் மூழ்கிப்போகும்படியாக ஆகிவிட்டது. அதனால் மிகவும் தாமதமாக வரும்படி ஆகி விட்டது.

      வாழ்த்துகள். பாராட்டுக்கள். நாளை முதல் பிறரின் சிறந்த அறிமுகங்களை செவ்வனே செய்து அசத்துங்கள். அன்புடன் VGK

      Delete
  35. வாழ்த்துக்கள் தோழி தங்கள் ஆசிரியைப் பணி மேலும் சிறப்பாகத்
    தொடரட்டும் .

    ReplyDelete
  36. வாங்க முகம்மது நிஜாம்முத்தீன், வாழ்க வளமுடன்.
    நீங்கள் மழை பதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி.
    தொடர்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  37. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  38. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி. பல வேலைகளுக்கு இடையில் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி சார்.

    ReplyDelete
  39. வாங்க அம்பாளடியாள் வாழ்க வளமுடன்.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  40. அருமையான சுய அறிமுகம்......

    தொடர்ந்து சந்திப்போம்

    ReplyDelete
  41. கோமதிக்கா சூப்பர் சுய அறிமுகம்.அசத்துவீங்க நிச்சயம்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  43. வலைச்சர வாரம் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  44. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  45. இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
      இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  46. இனிய வாழ்த்துகள். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete