Saturday, December 28, 2013

கவிதை கேளுங்கள்

கவிதை எழுதத் தெரியாது எனக்கு. ஆனால் கவிதையைப் படிக்கப் பிடிக்கும்.
இந்தப்பதிவில் பகிர்ந்து உள்ள கவிதைகள்  தாயிடம் அன்பு, தந்தையிடம் உள்ள அன்பு, பேரனிடம் உள்ள அன்பு, தாய் மகளிடம் உள்ள அன்பு பற்றிய கவிதைகள்;  காதல்,நட்பு  பற்றிய கவிதைகள்;இயற்கையை (பஞ்சபூதங்களையும்)போற்றும்  கவிதை;  சிறு வயதில் குழந்தைக்கு  சிறு வயதில் விளையாடப் பொம்மை கொடுக்காமல் பின்னால் வருந்தும் அம்மா பற்றிய கவிதை; ஆங்கிலப் புத்தாண்டு எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் கவிதை; மனிதநேயம் காக்கச் சொல்லும் அருமையான கவிதை, பொங்கலோ பொங்கல் என்று உற்சாகக் குரல் கொடுக்கும் கவிதை.

  கவிதைகளை முழுமையாகப் படித்து மகிழுங்கள்.

1.  தாய்மை

 //ஆயிரம்கோடி எழுத்துக்கள் இருந்தும்
   வர்ணிக்க முடியாத வார்த்தைகளால்
   வேயப்பட்ட ஓர் அன்புக்கூரை,
   அம்மா!//

வழங்கியவர் :வாணிகல்கி வனிதா
வலைத்தளம் :” ஒரு நாள் ஒரு கவிதை”.



2. தாய்மை

//பிள்ளைக்காக வாழுகின்ற
  புனிதமான தாய்மைக்கு
  தலை தாழ்ந்து வணங்கி
  திருவடிகள் போற்றி//

யூத்ஃ புல் விகடனில் வெளியான கவிதை.

 வழங்கியவர்: பிரபாகர்;
 வலைத்தளம் - "வாழ்க்கை வாழ்வதற்கே”


 3 தந்தை
//ஞாலம் நம்மை என்றும் போற்றிட
   பாலமாக இருப்பவர் தந்தையே.//

 வழங்கியவர் : கவிஞர். பால இளங்கோவன் .
 வலைத்தளம்: ”தமிழ் கூடல்"


4  முகவரி தந்த தந்தை
//எத் துயர் அடைந்தும்
  மகன் உலகில் சிறக்க
  நீர் கொண்ட வேடம்
  மட்டிலடங்கா வேசங்கள்//


வழங்கியவர்: ஹாசிம் .
வலைத்தளம் -"ஈகரை தமிழ் களஞ்சியம்"

5.தமிழில் குறும்பூ

//அப்பா ஒன்று.
 அம்மா ஒன்று.
  வெற்றி ஒன்று.
  பற்றுவோம் தொடர்ந்து.//
வழங்கியவர் :கோவை கவி.
வலைத்தளம்: "வேதாவின் வலை"
 //நிற்க நடக்க 
  சிறகு விரித்து பறக்க மட்டுமல்ல
  உன்னை பாதுகாத்துக் கொள்ளவும் 
  கற்றிட வேண்டும்கண்ணே!//
  வழங்கியவர் : ராமலக்ஷ்மி.
  வலைத்தளம்: முத்துச்சரம்.

 7.கர்வக் காதல்
 கள்ளத்தனமில்லாமல்
 கர்வமாயத்தான் இருக்கிறது
 காதல்...

வழங்கியவர்  தென்காசித் தமிழ்ப் பைங்கிளி வலைச்சரம் தென்காசித் தமிழ்ப் பைங்கிளி.

8. தானேயழிந்தாலும் தாங்கிடும் நட்பு !
//அன்பென்றே உயிர்வாழும் ஆருயிர் நட்பு

  ஆணிவேராய் தாங்குமெனில் அதுவே நட்பு

  இதயத்தை நம்பியே நாணயமான நட்பு

  ஈகையேயென்னாளும் அதுவுயிர் நட்பு ! //

  வழங்கியவர்: சசிகலா .
  வலைத்தளம்: ”தென்றல்”

9. இயற்கை தரும் இனிமை

//பொறுமைக்கு மண்ணாம் நல்ல
  பெருமைக்கும் பேற்றுக்கும்
  நற்கருணைக்கும் நல் அன்னையாம்//

இப்படிப் பஞ்சபூதங்களையும்  போற்றிப் பாடுபவர்: இளமதி .
வலைச்சரம் :இளையநிலா.

 10. காலங் கடந்த பின்பு
  //மழலையின் பிறந்த நாளுக்குப்
    பரிசாய்க் கிடைத்த பொம்மை
   அழுக்காகி விடுமென்று பயந்து
   குழவியிடமிருந்து பிடுங்கிக்
   காட்சிக்கு வைத்த அம்மாக்களில்
   நானும் ஒருத்தி.//

வழங்கியவர் :கலையரசி. வலைத்தளம் :” ஊஞ்சல்”.

(20/02/2012 உயிரோசை இணைய இதழில் எழுதியது)

11. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

//புத்தாண்டு என்றொரு நாளை எதிர்பார்த்து
  காத்திருக்கும் காலப் பெருந்தகைகளே!

  நல்லதை நினைப்போம் உதவிகள் செய்வோம்
  மானுடம் வாழ மனித நேயம் காப்போம்!//

வழங்கியவர் : சுஷ்ருவா.    வலைத்தளம் : சுஷ்ருவா

 12. பொங்குக பொங்கல்

//பொங்கிவரும் பாலில்
  புத்தரிசி, வெல்லமிட்டு
 "பொங்கலோ பொங்கல்" என
  மங்கலக் குரலெழுப்பி
  மகிழ்ச்சியில் ஆழ்ந்திடுவோம்!//

வழங்கியவர் : சேஷாத்திரி.  வலைத்தளம் :காரஞ்சன்(சேஷ்)  

                                                                  

                காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம், அப்பா!
                காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை
                பாட்டினிலே காதலைத்தான் பாட வேண்டிப் 
                பரமசிவன் பாதமலர் பணிகின்றேனே.
                                                                
                                                               ----மகாகவி பாரதியார்.

                                                      வாழ்க வளமுடன்.
                                                     ---------------------------------



52 comments:

  1. மின்சாரம் போய் விட்டது... பிறகு வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்.
      பிறகு வந்து கருத்து சொல்லுங்கள் நன்றி.

      Delete
  2. வணக்கம்

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், ரூபன், வாழ்க வளமுடன்.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  3. சிறப்பான அறிமுகங்கள்.. அனைவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்..

    சாரின் கைவண்ணமும், தங்களின் கைவண்ணமும் அழகாக உள்ளன...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆதி வெங்கட், வாழக் வளமுடன். உங்கள் பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி.
      எங்கள் கைவண்ணத்தை ரசித்தமைக்கு நன்றி.

      Delete
  4. வணக்கம்
    அம்மா.

    எல்லாம் தொடரும் தளங்கள்தான் . இன்று அறிமும்மான அத்தனையும் சிறப்பான தளங்கள். தேடலுக்கு பாராட்டுக்கள் அம்மா.
    த.ம 2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன், நீங்கள் தொடரும் தளங்கள் எனத் தெரிந்து மகிழ்ச்சி. பாராட்டுக்கும், தமிழ்மண வாக்குக்கும் நன்றி.

      Delete
  5. கவிதைச்சரமாய் தொடுத்தமைக்கு பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

      Delete
  6. தேடித் தொகுத்தவற்றில் எனது படைப்பையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி. கோலம் அழகு. ஒன்றிற்கு மூன்றாக ஓவிய விருந்து. அதிலொன்று என் கவிதைக்காக என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. அரசு சாருக்கு என் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்திடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். சாரிடம் உங்கள் பாராட்டுகளை தெரிவித்து விட்டேன். ஒவியத்தை ரசித்தமைக்கு நன்றி.

      Delete
  7. அன்புடையீர்..
    கவிதை கேளுங்கள் - என
    தாங்கள் சுட்டிக் காட்டிய தளங்கள் அருமை..
    மகிழ்ச்சி!.. வாழ்க வளமுடன்!..

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர் வணக்கம், வாழ்க வளமுடன்.
      கவிதை உங்களுக்கு பிடித்தமைக்கு நன்றி.

      Delete
  8. அனைத்தும் சிறந்த தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி .
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  9. கவிஞர்கள் அறிமுகம்... கலக்கல்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  10. தென்றலின் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். சக தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள். சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சசிகலா, வாழ்க வளமுடன்.உங்களுக்கு அறிமுகமா!
      எனக்கு பிடித்த நட்பு கவிதையை பகிர்ந்து கொண்டேன்.
      சக தோழமைகளுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி.

      Delete
  11. தங்களின் அறிமுகத்தில் என்னுடைய வலைப்பூவும் இடம்பெற்றிருப்பதை எண்ணி மகிழ்வடைகிறேன்! நன்றி! அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சேஷாத்திரி, வாழ்க வளமுடன்.உங்கள் கவிதையால் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து.
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  12. அற்புதமான வலைத்தளங்கள்
    அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றி
    ஒரு தலைப்பின் கீழ் அவைகளை அறிமுகம் செய்வதற்கு
    அதிகம் சிரமம் கொள்ள வேண்டியிருந்திருக்கும்
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
      பொங்கல் கட்டுரை போட்டி வேலைகளுக்கு இடையே கவிதை உங்களை இங்கு அழைத்து வந்து விட்டதே!
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெற்றிவேல், வாழ்க வளமுடன்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  14. நீங்கள் நேற்று ராதாஸ் கிச்சன் லேந்து அனுப்பிய அல்வாவை தின்று கொண்டே

    இருந்து விட்டேன். என்னை மறந்து விட்டேன்.

    கவிதை என்பதே
    கனவில் விளையும் ஒரு விதை.

    வியப்பையும் தரும்
    விண்ணையும் தொடும்.

    இனிய இளநீர் மட்டுமா !
    இல்லை.
    காணா மன நிலைக்கு கொண்டு செல்லும்
    கள்ளும் தரும்.

    கனவுகள் கலையலாம் .
    கவிதைகள் கலைவதில்லை.
    காற்றோடு கலக்கின்றன
    களை எடுக்கவும் செய்கின்றன.

    கவிதையே !!
    நான் கண்டிரா
    வனிதையே !!
    நீ வாழி.

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.
      அழகாய் கவிதை பாடி விட்டீர்களே!
      உங்கள் வரவுக்கும் கவிதைக்கும் நன்றி.

      Delete
  15. தாய்மைத் தலைப்பில் எனது வலையறிமுகம். மிக நன்றி சகோதரி.
    தங்கள் ஆசிரிய வாரத்திற்கும் வாழ்த்து.
    இதை அறியத் தந்த சகோதரர் தனபாலனுக்கும் மிகுந்த நன்றி.
    அறிமுப் படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களிற்கும் இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி, வாழ்க வளமுடன். வெற்றியின் குறும்பூ கவிதை (தமிழில் குறும்பூ) பதிவில் வந்து தெரிவித்தேன். சகோதரி . உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  16. பொருத்தமான ஓவியங்கள் சூப்பர். கவிதைகள் சுவாரஸ்யம். நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      சாரின் ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.
      கவிதைகள் பிடித்தமைக்கு நன்றி.

      Delete
  17. இத்தனை கவிஞர்களுடன் என் வலைத்தளத்தினையும் இங்கு இன்று அறிமுகம் செய்துள்ளமை கண்டு மிகவே மகிழ்கின்றேன் சகோதரி!...
    மிக்க நன்றியுடன் உங்கள் சேவை இன்னும் சிறக்க உளமார வாழ்த்துகிறேன்!

    என்னுடன் இங்கு அறிமுகமாகியிருக்கும் அனைத்து சக வலைப்பதிவர்களுக்கும் இதயம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!

    தகவலை என் வலைத்தளத்தில் அறியத்தந்த ரூபனுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும், இனிய வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  18. கவிதைச் சரம் மிக அருமை. தெரியாத கவிஞர்களை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் கோமதி .நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      கவிதை சரம் பிடித்தமைக்கு நன்றி.

      Delete
  19. தாங்கள் வ ரை ந் து ள் ள கோலம் +
    தங்கள் கணவர் போ ட் டு ள் ள சித்திரங்கள் அருமை.

    இருவருக்கும் முதற்கண் பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
      எங்கள் இருவரையும் பாராட்டியது மகிழ்ச்சி.
      உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.

      Delete
  20. //கவிதை எழுதத் தெரியாது எனக்கு. //

    அதனால் பரவாயில்லை. கவிதை என்ற பெயரில் இன்று பலரும் ஏதேதோ எழுதி நமக்கு அழுகையைத்தான் வரவழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ;(((((

    //ஆனால் கவிதையைப் படிக்கப் பிடிக்கும்.//

    அதுபோதும். பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பராட்டுக்களுக்கு நன்றி சார்.

      Delete
  21. இன்றைய தங்களின் அறிமுகங்களில் சிலர் மிகச்சிறந்த படைப்பாளிகள். [கவிஞர்கள் மற்றும் கவிதாயினிகள்]

    அதுபோல இன்று தாங்கள் வெளியிட்டுள்ள சில கவிதைகள் மிகச்சிறந்த ஆக்கங்கள்.

    அவர்களுக்கும், அவைகளுக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    தங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. கவிதை படைத்தவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் மகிழ்ச்சி அளிக்கும் நன்றி சார்.

      Delete
  22. //கவிதை எழுதத் தெரியாது எனக்கு. ஆனால் கவிதையைப் படிக்கப் பிடிக்கும்.//

    அதே அதே சபாபதே! :)

    நல்ல கவிதைகள் படைக்கும் பலரின் தளங்கள் இன்றைய அறிமுகம்..... அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன். வேலை பளு இருக்கும் போதும் வந்து அனைத்தையும் படித்து கருத்து சொல்வது மகிழ்ச்சி.
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete

  23. பதிவுலகின் சகலகலாவல்லி ராமலக்ஷ்மிக்குப் பிறந்தநாள்
    கதை, கட்டுரை, கவிதை, புகைப்படக்கலை, தத்துவம், அறிவியல் போன்ற விஷயங்களால் பதிவுலகின் எட்டு திக்குகளிலும் எதிரொலிக்கும் பெருமை பெற்ற நம்
    அன்பு ராமலக்ஷ்மிக்கு இன்று (28-12-) பிறந்தநாள்!!
    எங்களுக்கு ஆனந்தம்...பரமானந்தம்!!!
    நன்றி!: http://9-west.blogspot.in/2010/12/blog-post_28.html

    நான் ஒருமுறை அவரது சித்தப்பா வெடிவால் சகாதேவன் அவர்களது பதிவுகள் அனைத்தையும் படித்தபோது ராமலக்‌ஷ்மியின் அத்தை நானானியின் பதிவுகளையும் படித்தேன். அப்போது படித்த மேலே சொல்லப்பட்ட தகவல் ஞாபகம் வந்தது. அவருக்கு வாழ்த்துக்கள்!

    சரியான நாளில் அவரது வலைத்தளத்தினை அறிமுகம் செய்த சகோதரி கோமதி அரசுக்கு நன்றி!


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
      உங்கள் தகவலுக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  24. பலவகையான கருத்துக்கள் கொண்ட கவிதைகளைத் தேடிப் படித்து, தேடிப் பிடித்துப் போட்டுள்ளது, மிக இரசிக்க வைக்கின்றது. பதிவர்கள் அனைவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் முஹம்மது நிஜாமுத்தீன், வாழ்க வளமுடன்.
      உங்கள் இரசிப்புக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி.
      தொடர் வருகைக்கும் நன்றி.

      Delete
  25. கவிதைச்சரங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  26. வலைத்தளத்தின் ஆசிரியப் பொறுப்பு ஏற்றுள்ளமைக்கு வாழ்த்தும் பாராட்டுக்களும்! என் கவிதையையும் சரத்தில் கோர்த்தமைக்கு மிக்க நன்றி கோமதி அரசு!

    ReplyDelete