Sunday, December 29, 2013

நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை !

இன்றைய வலைச்சரத்தில் நினைவுகளின் தொகுப்பைத் தொகுத்து இருக்கிறேன்.  எல்லோர்க்கும் நினைவுகளில்  மூழ்குவது என்றால் பிடித்த மான விஷயம் தானே. பெரியவர்கள், ’அந்தக்காலத்திலே’ என்று ஆரம்பித்தால் ஓடும் குழந்தைகளும் உண்டு. ’சொல்லுங்கள். உங்கள் மலரும் நினைவுகளை’ என்று கேட்டு மகிழ்ந்து ஆரவாரம் செய்யும் குழந்தைகளும் உண்டு.  அது போல் நீங்களும் இந்த மலரும் நினைவுகள் பதிவை ரசித்துப் படிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

சிறு வயது  பள்ளிப் பருவ நினைவுகள்!

கிராமத்து நினைவுகள்!

காதலர் இருவர் சந்தித்த நாளை சிந்திக்கும் நினைவுகள்!

எட்டுஅடி எடுத்து வைக்க முடியவில்லை. இங்கே இருக்கும் இடத்திற்கு போக, ’வண்டி வேண்டும்’, என்று கேட்கும் குழந்தைகள்! நடப்பதையே மறந்து விடுவார்களோ என்ற நிலை இப்போது .அப்போது எல்லாம் எப்படி நடப்பார்கள் எல்லோரும் ! என்று பழையகாலத்தை எண்ணும் நினைவுகள்!

 அந்த காலத்து சம்மர் கேப்  கற்றுக் கொடுத்த பாடங்கள் பற்றிய நினைவுகள்!

அந்தக் காலத்து குழந்தைப் பாடல்கள் தந்த மகிழ்ச்சியான நினைவுகள்!

பேனா, பென்சிலில் வரைந்த கடந்தகால நினைவுகள்!

பேருந்துப் பயண  நினைவுகள் !

என்று இங்கு வழங்கி இருக்கும் நினைவுகள் எல்லாம்  என் மலரும் நினைவுகளை  சிந்திக்க வைக்கிறது.

பதினைந்து வயதினிலே

’தவறு செய்து திருந்திய பையனை ஹீரோவாகக் கொண்டாடி, பரிசு கொடுத்து, தன் செல்லப் பிள்ளை போல அருகில் நிறுத்திக்கொண்டு, பிரேயரில் அத்தனை பிள்ளைகளுக்கும் அறிமுகப்படுத்திய நீங்கள், தவறே செய்யாமல் ஒழுங்காக இருக்கும் என்னை ஏன் இப்படி கௌரவிக்கவில்லை?’ இப்படி கேட்ட தன் பள்ளிப் பருவத்து மலரும் நினைவுகளைக்கூறுகிறார்,  ’உங்கள் ரசிகன்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் ரவி பிரகாஷ் அவர்கள்.


கிராமத்து நினைவுகள் - நீர் பாய்ச்சுதல்

//இந்தப் பாடலை எங்க ஐயா (அப்பாவின் அப்பா) பாடினார் என்றால் ரொம்ப தூரத்துக்கு கேட்கும். அவ்வளவு அழகாக பாடுவார். பள்ளியில் படிக்கும் போது இரவு நேரத்தில் டியூசன் விட்டு இருட்டில் வரும்போதே பாட்டை வைத்து யார் தண்ணீர் இறைக்கிறார்கள் என்று சொல்லிவிடுவோம். பெரும்பாலும் எங்க ஐயா இறைத்தால் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.அந்தக்குரலை வைத்தே நடுவுலார் காஞ்சரமடையில தண்ணீர் இறைக்கிறார் போல பாட்டுச் சத்தம் கேக்குது எனச் சொல்லிவிடுவார்கள்  ////
 இப்படி தன் கிராமத்தில் வயலுக்கு தண்ணீர் இறைக்கும் போது பாடும் பாடல்களை நினைவுகூர்கிறார்  ’மனசு’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் குமார் அவர்கள்.

மலரும் நினைவுகள் - சந்தித்த நாள் 29.10.1999
//அந்த நாள் நினைவுகள் சுகமாக இருக்கின்றது இப்பவும். வாழ்க்கையினை வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் இந்த நினைவுகள் தான். சுவாசமாய் நிறைந்திருக்கிறது என்றென்றும்...
எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்த இறைவனுக்கு நன்றி....// .

இப்படித் தன் மலரும் நினைவுகளைச் சொல்வது ,’ கோவை நேரம்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்  ஜீவானந்தம் அவர்கள்.

எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்!

//ஆரோக்கியத்திற்கான பயிற்சி முறைகளிலேயே உலகம் பூராவும் எல்லா மருத்துவத்துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி நடைப்பயிற்சிதான். இதனைத் தவறென்று எந்த மருத்துவ முறைகளும் சொல்லவில்லை. சொல்லமுடியாது. தினசரி நடைபயிலுங்கள் என்றுதான் எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள். எல்லா மருத்துவத்துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி நடைப்பயிற்சிதான்.     எல்லா டாக்டர்களும் எல்லா மருத்துவர்களும்(சித்த ஆயுர்வேத யுனானி ஹோமியோ ரெய்கி அக்குபிரஷர் இன்னோரன்ன) சொல்கிறார்கள். மக்களுக்கும் தாமாகவே ஒரு விழிப்புணர்வும் வந்திருக்கிறது. //

இப்படி சொல்வது ’அமுதவன் பக்கங்கள்’ என்று வைத்து இருக்கும் அமுதவன் அவர்கள்.


சம்மர் கேம்ப்

//சம்மர் கேம்ப் என்றதும் நான் எதோ சம்மர் கேம்ப்
ஆரம்பிக்கிறேன் , அதைப் பற்றி எழுதுகிறேன் என்றோ  இல்லை எங்கோ கேம்ப் அடிக்கப் போகிறேன்  என்றோ யாரும்  அவசரப்பட்டு   யோசிக்க வேண்டாம். நான் சொல்வது   என் சிறு வயது நினைவுகளை.

நான்  சம்மர் கேம்பிற்கு சென்று கற்றுக் கொண்டு அனுபவித்து  ஆனந்தித்தது பற்றி தான் இந்தப் பதிவு. // இப்படி மலரும் நினைவுகளை சொல்கிறார் அரட்டை என்று வலைத்தளம் வைத்து இருக்கும் ராஜலக்ஷ்மி பரமசிவம்.

குழந்தைகளுக்கான தமிழ் பாடல்கள் - 2

ஒன்று, யாவருக்கும் தலை ஒன்று
இரண்டு, உடம்பில் கை இரண்டு
மூன்று, முக்காலிக்கு காலி மூன்று
நான்கு, நாற்காலிக்குக் கால் நான்கு
இப்படி பழைய பாடல்களை நாம் பாடிய பாடல்களை நினைவுக்கு தருகிறார்
பூந்தளிர் என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் தியானா அவர்கள்.


குரு தட்சிணை - அன்றும் இன்றும்

//இன்று குரு தட்சிணை மதிக்கப்படுகிறதா? குருவின் மேல் மரியாதையாவது இருக்கிறதா? குருவும் மாணவர் மேல் அக்கறை கொண்டு கற்றுக் கொடுக்கிறாரா? என்று பல கேள்விகள் அடுக்காய் எழுகின்றன. மனிதருக்கு மனிதர், இடத்திற்கு இடம் இவை எல்லாம் வேறுபடுகின்றன.//
இப்படிச் சொல்கிறார், ’ தேன் மதுரத் தமிழ்’ கிரேஸ் அவர்கள்.

வீடும், பூவும்

//முன்பு பேனா கொண்டு பேப்பரில் ஓவியங்கள் வரைந்த நான் இப்போது கணினியில் வரைய ஆரம்பித்து விட்டேன்.அப்படி வரைந்த ஓவியம் ஒன்று உங்களுடைய பார்வைக்கு..//

 இப்படிச் சொல்பவர், ’வெளிச்சக்கீற்றுகள்’ வலைத்தளம் வைத்து இருக்கும் ரோஷிணி.  பிரபல பதிவர்கள் ஆதி வெங்கட், வெங்கட் நாகராஜ் அவர்களின் அருமை மகள்.

கிராமத்து பேருந்து -- சில நினைவுகள்

//12 வயது வரை தனியாக பேருந்தில் பயணம் செய்ததில்லை நான். முதல்முறையாக தனியாக பேருந்தில் பயணம் செய்த போது ஏதோ மிகப் பெரிய சாதனை செய்ததைப் போன்ற ஒரு ஆனந்தம். இத்தனைக்கும் மிகப் பெரும் தொலைவெல்லாம் இல்லை. வெறும் 10கிமீ மட்டுமே. ஆனால் அந்த 10கிமீ தூர பயணத்தைப் பற்றி நாள் முழுக்க நண்பர்களிடம் பேச விஷயங்கள் இருந்தன.//

இப்படிச் சொல்வது, ’என் எண்ணங்களின் வழித்தடம்’  என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் அன்பு அவர்கள்.

இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பும் , உங்களுடன் கழித்த இந்த நாட்களும் நினைவுகளாய் என்னிடம் தங்கி மணம் பரப்பிக் கொண்டு இருக்கும்
பசுமை நிறைந்த நினைவுகள் என்றும் அழிவது இல்லை!

                                                               *      *       *
 இந்த ஒரு வாரகாலமாய் வந்து ஆதரவு தெரிவித்த அன்பு  உள்ளங்களுக்கு நன்றி.

எனக்கு மீண்டும்  வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு அன்புடன் அழைத்த சீனா சாருக்கு நன்றி.

 உங்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் ஆண்டு அனைவருக்கும் நல் ஆண்டாய் மலர இறைவன் அருள்வான். உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்  எல்லோருக்கும்  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

                                              

வாழ்வை இனிதாக்குவது அன்பு. கஷ்டங்களையெல்லாம் மீளச்செய்வது அன்பு. குடும்ப வாழ்க்கையை மேன்மைப்படுத்துவது அன்பு. உலக வாழ்க்கையைச் சுவைக்கச் செய்வது அன்பு. அழகற்றதற்கு அழகூட்டுவது அன்பு. அன்பு பொலியுமிடம் சுவர்க்கம், அன்பு மறைந்தவிடம் நரகம். மனமே நீ அன்பில் ஊறி வளர்க. -ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.  
                                                   வாழ்க வளமுடன்!

                                                          -------------------

50 comments:

  1. என்னுடைய வலைத்தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி பாட்டி..
    எனக்காக தாத்தா வரைந்த ஓவியம் அழகாக இருக்கு.. நன்றியைச் சொல்லி விடுங்கள்..

    ரோஷ்ணி
    திருவரங்கம்

    ReplyDelete
    Replies
    1. செல்லகுட்டி ரோஷ்ணி வாழகவளமுடன். தாத்தாவிடம் சொல்லிவிட்டேன் உன் நன்றியை. இன்னும்
      நிறைய அழகான படங்கள் நீ வரைய எங்கள் வாழ்த்துக்கள்.

      Delete
  2. அருமையான அறிமுகங்கள் அம்மா.... இந்த வாரப் பணியை சிறப்பாக செய்துள்ளீர்கள். பாராட்டுகள். எங்கள் மகளுக்கும் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி.. சாரின் ஓவியம் ரொம்பவே அழகு.. நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆதி வெங்கட், வாழ்க வளமுடன். தினமும் முதலில் வந்து கருத்து தெரிவித்து உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி.
      உங்கள் பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி. சாரின் ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.

      Delete
    2. இன்றைய கோலமும் அழகாக உள்ளது... வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா... தங்களுக்கும் சாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
    3. கோலத்தை பாராட்டியதற்கு நன்றி.உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி ஆதி.

      Delete
  3. இன்றைய பதிவு நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்தது போன்ற ஓர் உணர்வு. அழகாகத் தொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சித்ராசுந்தர், வாழ்க வளமுடன்.
      நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்தது மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  4. பசுமையான நினைவுகள்..
    மீண்டும் மீண்டும் நெஞ்சில்..
    உண்மைதான்..
    பசுமை நிறைந்த நினைவுகள்
    என்றும் அழிவதே இல்லை!..

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், நீங்கள் சொல்வது உணமை. பசுமையான நினைவுகள் , மீண்டும், மீண்டும் வந்து போகும்.
      உங்கள் கருத்துக்கும், நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  5. அருமையான பதிவுகள்
    அற்புதமாக அறிமுகம் செய்து
    வலைச்சர வாரத்தை சிறப்புமிக்க
    வாரமாக்கியமைக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் , வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  6. அருமையான தளங்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி. உடல் நலம் சரியானவுடன் வந்து உறசாகபின்னூட்டங்கள் தந்தமைக்கு நன்றி.
      மற்ற தளங்களுக்கு சென்று வாழ்த்து சொன்னதற்கு நன்றி.
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  7. நன்றி கோமதி , என் வலைப்பதிவை இங்கு அஅறிமுகப்படுத்தியதற்கு.உங்களைப் போன்றவர்களின் பாராட்டு ,என்னை ஊக்குவிக்கும் உரம்.
    என்னோடு அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    நன்றி.
    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அறிமுக செய்தியை ஓடி வந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்த DD சாருக்கு நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் நான் இங்கு குறிப்பிட்ட பதிவுகளுக்கு சென்று செய்தி சொல்லி வாழ்த்தி வந்தேன்.
      தனபாலன் அவர்களும் , ரூபன் அவர்களும் அனைவருக்கும் செய்தி சொல்லியது பாராட்டப் பட வேண்டிய விஷயம்.
      வாழ்த்துக்கள், நன்றிகள் அவர்களுக்கு.

      Delete
  9. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது உண்மைதான். பாராட்டுக்கள் ஊக்குவிக்கும் உரம் தான். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  10. அருமையான அறிமுகங்கள்.....

    எனது மகளின் வலைப்பூவினையும் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிம்மா......

    ஓவியம் அழகு..... சேமித்துக் கொண்டேன்......

    ReplyDelete
  11. சிறப்பான அறிமுகங்களுக்கு என் இனிய வாழ்த்துக்களும்
    உங்களுக்கு எனது பாராட்டுக்களும் புத்தாண்டு வாழ்த்துக்களும்
    தோழி .பிறக்கப் போகும் புத்தாண்டு தங்களுக்கும் மகிழ்ச்சியானதாக
    அமைய வேண்டும் .மிக்க நன்றி தோழி வலைத்தள ஆசிரியைப்
    பொறுப்பை ஏற்று வெகு சிறப்பாகச் செலாற்றியமைக்கு .

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்பாளடியாள் ,வாழ்க வளமுடன்.
      உங்கள் பாராட்டுக்களுக்கும், இனிய வாழ்த்துக்களுக்கும் நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  12. வலைத்தள வலைச்சர உறவுகளுக்கு பிறக்கப் போகும் புத்தாண்டு
    மகிழ்ச்சியானதாக அமைய என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  13. வலைச்சர உறவுகளுக்கு புத்தாண்டு சொன்னதற்கும் நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  14. தெரிந்த சில தளங்களும், தெரியாத சில தளங்களும்.

    ஓவியம் அழகு. ஸார் பென்சிலில் வரைவாரா? பேனாவிலா? அழித்து அழித்து வரைவாரா, ஒரே கோட்டில் இழுத்து விடுவாரா...

    சிறப்பாக முடித்தீர்கள். உங்களுக்கும், வலைச்சர வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன். சார் ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.
      சாரி கணினியில் உள்ள பெயிண்ட் என்கிற உபகரணத்தை பயன் படுத்துகிறார்கள். அதில் நம் இஷ்டம் போல் அளித்து வரையலாம். இந்த படம் வரைய அவர்களுக்கு 15 நிமிடம் ஆனது. நேற்று வீட்டில் விருந்தினர் வருகை அதனால் நேரம் இல்லை நேரம் இருந்து இருந்தால் கொசுவத்தி ஓவியம் கேட்டு இருந்தேன், மலரும் நினைவுகளை குறிக்க .உங்கள் விருப்பதால் தினம் படம் வரைந்து தந்தார்கள்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

      பென்சில், பேனா கிடையாது.

      Delete
  15. இன்றும் அருமையான சிறந்த நல்ல தளங்களையும் பதிவர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்!

    நேரக் குறைபாட்டினால் உடனடியாக அனைவரிடமும் செல்ல முடியவில்லை.
    குறித்துவைத்துக்கொண்டேன். அவ்வப்போது செல்வேன் அங்கும்!
    அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    இவ்வார வலைச்சர ஆசிரியப் பணியைச் சிறப்பாகச் செயலாற்றி
    நிறைவுக்குக் கொண்டுவந்துள்ளீர்கள் சகோதரி! மகிழ்ச்சி!

    என்னையும் இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு மீண்டும் மனமார்ந்த நன்றியுடன்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்!
    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி, வாழ்க வளமுடன். வலைச்சர பொறுப்பால் தினம் தேடி நிறைய வலைத்தளங்களை படித்தேன். இல்லையென்றால் நம்மால் எப்படி தினம் எல்லா வலைத்தளங்களுக்கும் செல்ல முடியும்?
      இது ஒரு கடல் நான் கரையில் தான் இருக்கிறேன். வீட்டுவேலைகள், மற்றும் பல வேலைகளீல் குறிப்பிட்ட சில வலைத்தளங்களுக்கு தான் செல்ல முடிகிறது. மெல்ல நேரம் கிடைக்கும் போது படியுங்கள். குறித்து வைத்துக் கொண்டது நல்லது.
      உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.


      Delete
  16. நன்கு தேர்ந்தெடுத்துத் தொகுத்து... சிறப்பான பதிவுகளாய் வழங்கினீர்கள். செவ்வனே பணி செய்தீர்கள். பாராட்டுக்கள்...!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க முஹம்மது நிஜாமுத்தீன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.. உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.

      Delete
  17. //உங்கள் விருப்பதால் தினம் படம் வரைந்து தந்தார்கள்.//

    ஆஹா.... நன்றி. நன்றி.

    //கணினியில் உள்ள பெயிண்ட் என்கிற உபகரணத்தை பயன் படுத்துகிறார்கள்//

    அட!

    ReplyDelete
    Replies
    1. ஆம், ஸ்ரீராம் நீங்கள் கேட்டதனால் தான் வரைந்து தந்தார்கள். நேரம் எடுத்துக் கொண்டால் அழகாய் வரைவார்கள். ரோஷ்ணி படம் மிக சீக்கீரம். அவள் படம் வேறு கொடுக்கவில்லை அவள் படம் கொடுத்து இருந்தால் அது போல வ்ரைந்து தந்து இருப்பார்கள்.
      நன்றி உங்கள் மீள் வருகைக்கு.

      Delete
  18. கோலம் அழகு. தங்கள் கணவர் வரைந்துள்ள படம் நல்லா இருக்கு. குழந்தை ரோஷ்ணியின் அறிமுகம் அசத்தல். அனைத்துக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    மேலும் ஒருவாரம் வலைச்சர ஆசிரியராகத்தொடரலாமே ! அதற்கான வாய்ப்பு உங்களுக்காகவே ஸ்பெஷலாகக் கொடுக்கப்பட்டுள்ளது போலிருக்கே ;)))))

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      தொடர்ந்து ஒருவாரம் கணினி முன் உட்கார்ந்து இருந்தது முதுகுவலி, பொங்கல் வேலைகள் மற்றும் வேறு பணிகள் இருப்பதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சார் புரிந்து கொண்டார்.
      ஸ்பெஷலாகக் கொடுக்கப்பட்ட்து மகிழ்ச்சி தான். ரோஷ்ணி அழகாய் படங்கள் வரைவாள்.

      Delete
  19. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பலஅறிமுகங்களையும் அழகாக தொகுத்துத் தந்த.உங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

    வலைநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன். தொடர்ந்து அனைத்து வலைச்சரப் பதிவுகளை படித்து கருத்து சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்களுக்கு நன்றி மாதேவி.
    புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  21. வணக்கம்
    அம்மா.

    இன்றைய அறிமுகங்கள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க உங்களை காணோமே ! என்று நினைத்தேன்.
      இன்றுடன் நிறைவு பெறுகிறது ஆசிரியர் பணி. தினம் தொடர்ந்து வந்து உற்சாகப்பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி ரூபன்.
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  22. அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    ‘கிராமத்து நினைவுகள்’ ஆகக் குமார் பகிர்ந்திடும் அனைத்துப் பதிவுகளும் சிறப்பானவை.

    ரோஷ்ணி ஓவியத்தில் தீவிரமாக இயற்கைக் காட்சியை வரைந்து கொண்டிருக்கிறார்:). அருமை.

    கோலம் அழகு.

    நிறைவான வாரம். வாழ்த்துகள் கோமதிம்மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது போல் குமாரின் கிராமத்து நினைவுகள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கும் நானும் படித்து விடுவேன்..ரோஷ்ணி ஓவியம், கோலம், எல்லாவற்றையும் ரசித்தமைக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமல்க்ஷ்மி.

      Delete
  23. என்னுடைய பதிவையும் உங்கள் சேர்க்கையில் சேர்த்து சிறப்பித்தமைக்கு தங்களுக்கு என்னுடைய நன்றி. தங்களின் பணியை மிகவும் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறீர்கள் என்று இங்கு எல்லாருமே தங்களைப் பாராட்டிப் புகழ்ந்துரைத்திருக்கிறார்கள் . அவர்களுடன் நானும் பங்கு பெறுகின்றேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அமுதவன், வாழ்க வளமுடன்.
      உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது. உங்களின் பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  24. உங்களது நினைவுகளில் என்னையும் சேர்த்தமைக்கு மிகவும் நன்றி....

    இன்று அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    அறிமுகம் செய்யப்பட்டதை எனது தளத்தில் வந்து சொன்ன தங்களுக்கும் தனபாலன் சாருக்கும் நன்றி.

    என்னைப் பற்றி தனது கருத்தில் சொன்ன ராமலெஷ்மி அக்காவுக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க குமார், வாழ்க வளமுடன்.
      நினைவுகளில் நீங்கள் இல்லாமல் எப்படி?
      தனபாலன் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். நன்றி தனபாலன்.

      Delete
  25. குமாரின் தளம் பிடிக்கும். சம்மர் கேம்ப் படித்தேன் உங்க தயவில். சுவாரசியம்.
    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.




    ReplyDelete
    Replies
    1. வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
      சம்மர்கேம்ப் படித்தது அறிந்து மகிழ்ச்சி..
      புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  26. கோமதிக்கா உங்கள் வாரம் மிக அருமையாய் இருந்தது.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  27. என் தள பகிர்விற்கு உளமார்ந்த நன்றி கோமதி அரசு!

    ReplyDelete
  28. என் தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் கோமதி அம்மா!!

    ReplyDelete
  29. அக்கா, தற்போதுதான் இதைப் பார்த்தேன். வாழ்த்துகள் அக்கா. எல்லாப் பதிவுகளையும் படித்தேன். சில சிறந்த தேர்வுகளை ரசித்துப் படித்தேன், நன்றி அக்கா.

    ReplyDelete
  30. அக்கா, தற்போதுதான் இதைப் பார்த்தேன். வாழ்த்துகள் அக்கா. எல்லாப் பதிவுகளையும் படித்தேன். சில சிறந்த தேர்வுகளை ரசித்துப் படித்தேன், நன்றி அக்கா.

    ReplyDelete