இன்றைக்கு நான் பலப்பல தோட்டங்களில் பார்த்து ரசித்த வண்ண மலர்களை உங்கள் பார்வைக்கு வைத்து, அவற்றின் வாசத்தை நீங்களும் நுகர்ந்திடச் செய்ய வேண்டுமென்று விழைகிறேன். என் கை பிடித்து வாருங்கள்... ஒரு சிறு உலாச் செல்வோம்!
மலர் : 1
சின்ன வயதினிலே... ஏன் இப்பவும் நான் எம்.ஜி.ஆரின் ரசிகன். பள்ளிக்குப் போகிற அவசரமானாலும் சரி... விடுமுறை நாள் ஊர்சுற்றலானாலும் சரி... சுவரில் வாத்யாரின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தால் அதனருகில் நின்று சிலபல நிமிடங்கள் ரசிக்காமல் அந்த இடத்தைக் கடந்ததில்லை. சிலசமயம் அந்தப் போஸ்டரினைக் கிழித்து வாத்யாரின் முகத்தை எடுத்துச் சென்றுவிட முடியுமா என்று முயன்றதும் உண்டு. கவலைகள் எதுவுமற்ற சின்ன வயதின் மகிழ்வான ஆட்டோகிராப் நினைவுகளை இந்தக் கட்டுரை எனக்கு மீண்டும் தந்தது. நான் ரசித்ததை நீங்களும் ரசிப்பீர்கள் என்பதுறுதி!

மலர் : 2
நம் / பிறர் வீட்டு விசேஷங்களில்... ஷாப்பிங் மால்களில்... இப்படிப் பலவிதமான பொது இடங்களில் நாம் புகைப்படம் எடுக்கும் சமயம் அதில் தேவையற்ற நபர்களோ, அல்லது பின்னணியோ இடம் பெற்று விடுவதுண்டு. அவற்றை நீக்கி விட்டு நம் உருவத்தை மட்டும் வைத்துக் கொள்ள போட்டோஷாப்பில் சென்று பொறுமையாகக் கட் செய்து, எடுத்து.... அதற்கே நிறைய நேரம் செலவாகும். பத்திரிகைகளில் வெளிவரும் படங்களுக்காக இப்படி நிறைய நேரம் செலவிட்டு கட் செய்ய நேர்கிற போதெல்லாம் இதற்கு எதுவும் சுலப வழியுண்டா என்று யோசித்ததுண்டு நான். சமீபத்தில் நான் பார்த்த இந்தப் பதிவு சுலபமாக போட்டோவின் பேக்ரவுண்டை நீக்கும் தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது. நீங்களும் எனக்கு ஸேம் பிளட்டாக இருந்தால் உங்களுக்கும் இது பயன்படும்.

மலர் : 3
கம்ப்யூட்டர் சம்பந்தமான நம்முடைய சந்தேகங்களாகட்டும்... கணினியில் இருக்க வேண்டிய மென்பொருட்கள், அதன் வேகத்தைப் பராமரித்தல் போன்ற தொழில்நுட்ப விஷயங்களாகட்டும்... நமக்குத் தெரிந்த, நம் மொழியில் இருந்தால் அதன் மதிப்பே தனிதான். அப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கிய இந்தத் தளத்தின் பெயரே தமிழ் கம்ப்யூட்டர். நான் இதன் மூலம் பலமுறை பயனடைந்தது போல உங்களுக்கும் பயன்படும் என்பது என் நம்பிக்கை!
மலர் : 4
நம்ம எல்லாருக்கும் குறைஞ்சது பத்துத் திருக்குறளாவது தெரிஞ்சிருக்கும் நிச்சயமா. பள்ளியில் படிக்கிற காலத்தில் மனப்பாடப் பகுதிக்காகப் படித்ததும், பேருந்துப் பயணங்களில் திரும்பத் திரும்பக் கண்ணில்பட்ட குறள்களும் நினைவில் நிற்பவை. 133 அதிகாரங்களையும் படித்துப் பொருள் அறிந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்கும் விருப்பம் இருந்தால் இந்தத் தளத்திற்கு விசிட் அடியுங்கள். இங்க ‘குறள் காட்டும் பாதை’ என்ற தலைப்பில் எளிமையாக விளக்கம் வழங்கப்பட்டு ஒரு தொடர் வந்து கொண்டிருககிறது நிச்சயம் ரசிப்பீர்கள்!

மலர் : 5
கவிதை எழுதணும்னு எனக்கு ரொம்பவே ஆசை. (படிககறதுக்கு எங்களுக்கு ஆசை இல்லையேன்னு கூவறது கேக்குது. ஹி... ஹி...) ஆனா கவியெழுத ஆசையோட கொஞ்சம் புலமையும் வேணும்ங்கறதால அந்த முயற்சி சரிவர ஈடேறவில்லை எனக்கு. பா எழுத வராவிட்டாலும் பாக்களை விரும்பிப் படிப்பேன். மைசூர்பா ரசித்துச் சாப்பிடு.... ஐயய்யோ... எதுவோ சொல்ல வந்து எங்கயோ போய்ட்டனே... வெண்பா என்கிற கவிதை வடிவம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். புரிந்து கொண்டால் அதை எழுதுவது ரொம்ப சுலபம் என்று ஒரு நண்பர் இலக்கணக் குறிப்பையெல்லாம் சொல்லித் தந்து வழிகாட்டினார். இலக்கணம் எல்லாம் அட்சரசுத்தமாய் மனசில் பதிந்தது. ஆனால் வெண்பா எழுதத்தான் வரலை. காளமேகத்தில் தொடங்கி, கரேஸிமோகன் வரை நான் ரசித்துப் படிப்பவை நிறைய உண்டு என்பதால் இந்தப் பதிவு என்னை ரொம்பவே ரசிக்க வைத்தது. உங்களுக்குப் பிடிக்கிறதா... பாருங்களேன்!

மலர் : 6
திருக்குறள், வெண்பா, சங்கப்பாடல் இப்படிப் பலதையும் ரசிக்கணும்னு ஆசைதான். ஆனால் அதையெல்லாம் படிச்சதும் புரிஞ்சுக்க தமிழ் இலக்கணம் தெரிஞ்சிருககணுமே... அப்படின்னு ஒரு எண்ணம் உங்க மனசுல எழுந்திருக்க வாய்ப்புண்டு. அதுக்கும் ஒரு சுலப வழி உண்டுங்க. இந்தத் தளத்துல ரொம்ப எளிமையா தமிழ் இலக்கணத்தை சொல்லித் தருகிற தொடர் ஒண்ணு வந்துக்கிட்டிருக்கு. நான் தந்திருக்கற இந்தப் பகுதியைப் படிச்சுட்டு, பிடிச்சிருந்தா இதனோட ஆரம்பப் பகுதிகளையும் தேடிப் படிச்சுப் பாருங்க. உங்களுக்கு இது பயனுள்ளதாக அமைந்தால் எனக்கு அதைவிட மகிழ்ச்சி வேறென்ன?

இன்றைய கதம்ப சரம் உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு இங்க என்கிட்ட ஒரு வார்த்தை சொல்றதோட, படிச்ச தளங்கள்லயும் சில வார்த்தை சொல்லிப் போடுங்க. அவுங்களுககும் தொடர்ந்து எழுத உற்சாகமாவும், சந்தோஷமாவும் இருக்கும். நான் நாளைக்கு வேறொரு சுவாரஸ்ய மிக்ஸரைத் தயாரிச்சு எடுத்துக்கிட்டு வந்து உங்களைச் சந்திக்கிறேன்!
ஆஹா வெகு நாளாக நான் தேடிக்கொண்டிருக்கும் இலக்கணம் குறித்த தளங்களின் அறிமுகம்.... அருமை அருமை... நன்றிகள் பல கணேஷ் அண்ணா...
ReplyDeleteதேடினீங்களா...? இதுபோன்ற மேலும் சில தளங்களை நான் உங்களுக்கு மடலிடறேன் ப்ரியா..! முதல் நபராய ரசித்து, எனக்குத் தெம்பூட்டும் கருத்தை வழங்கின உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஇனிய வணக்கம் நண்பரே....
ReplyDeleteஅடடா...
மின்னல் வரிகள் வலைச்சரத்தில் பளிச்சிடுகிறதா...
தவறவிட்டுவிட்டேனே...
இப்போதாவது வந்து அறிந்துகொண்டேன் என்ற மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் நண்பரே.
==
சுவாரஸ்யமான அறிமுகங்கள்.
வாழ்த்துக்கள்.
நான் தொடுத்துக் கட்டிய மலர்ச்சரங்கள் இங்கே எப்போதும் இருக்கும்தானே... மொத்தமாய் ரசித்து நுகருங்கள் நண்பரே! ஊக்கம் தரும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!
Deleteவலைச்சரம் தொடுப்பதில் உங்கள் அயராத உழைப்பை பார்க்கையில் கருணாநிதிதான் நினைவிற்கு வருகிறார். பதிவுலக சூரியனாரே வாழி.
ReplyDeleteஅதுலயும் அரசியலா? ஒய் பாஸ்?
Deleteஹலோ ஆவி...! நான் கருணாநிதி மாதிரி வயசானவன்னு மறைமுகமா கலாய்க்கறாரு மெட்ராஸ்...! ரெண்டாவது வரியை மட்டும் நாம எடுத்துக்கலாம் ஹி... ஹி...!
Deleteவண்ணமய கதம்பச்சரத்திற்கு வாழ்த்துகள்..!
ReplyDeleteவாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஆறு புஷ்பங்களையும் ரசிப்பதுடன் தொடர்ந்து உங்கள் தொடுப்பை (தப்பாச் சொல்லலே )ரசித்து வருகிறேன் !
ReplyDeleteத .ம 4
என் தொடுப்புகளை (ஹி... ஹி...!) ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteபயனுள்ள தொழில்நுட்ப தளங்கள் உட்பட அனைத்தும் தொடரும் சிறந்த தளங்கள்...
ReplyDeleteசுவாரஸ்ய மிக்ஸரை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்... நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
பகிர்வைப் பாராட்டிய உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஆறு மொய புய்ப்பம்.... அல்லாமே சோக்கா கீதுபா...
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு... +1
ஆறு மொயப் புய்ப்பத்தை ரசிச்சதுககு படா டாங்ஸு நைனா!
Deleteபோட்டோஷாப் பயன்படும்.. போரடிச்சா அதுமாதிரி எதாவது டிசைன் பண்ணிட்டிருப்பேன்... அந்திமாலை, வெண்பா எல்லாம் எனக்கு புதிய தளங்கள்தான்... நிதானமாக ஆழ்ந்து படிக்க வேண்டிய நல்ல தளங்கள்.. திரும்ப திரும்ப ரிபீட் ஆகற தளங்கள் இல்லாமல் பார்த்து பார்த்து வித்தியாசமான நல்ல தளங்களை அறிமுகப்படுத்தும் உங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்...!
ReplyDeleteஅவசியம் படித்து ரசியுங்கள். தளங்களை ரசித்து என்னைப் பாராட்டிய தோழிக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஇவைகள் நான் ரசிக்கும் பூக்களும் கூட
ReplyDeleteஅருமையான பதிவர்களை
அருமையாக அறிமுகம் செய்தமைக்கு
நல்வாழ்த்துக்கள்
நீங்களும் ரசிக்கும் பூக்களைப் பகிர்ந்ததில் மகிழ்வுடன் என் நன்றி ஸார்!
Deleteநீங்கள் ரசித்த பூக்களின் வாசத்தை நாங்களும் உணர கொடுத்தமைக்கு நன்றி வரிகளை கொண்டு நீங்கள் தொடுத்த இன்றைய சரம் (பதிவு ) ரசனைக்குரியது பாராட்டுக்கள் சார்
ReplyDeleteபகிர்வை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteபயனுள்ள தளங்கள்..
ReplyDeleteபாராடடிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅனைத்து தளங்களும் எனக்கு புதியது..அறிமுகத்திற்க்கு நன்றி சகோ!!
ReplyDeleteபடித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி சிஸ்!
Deleteஇன்றும் ஆர்வத்தினைத்தூண்டும் உங்கள் பதிவுத்திறமையுடன் அறிமுகப் பதிவர் தளங்கள் சிறப்பு!
ReplyDeleteஉங்களுக்கும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஅட அட அட... சூப்பர் இன்ட்ரோ
ReplyDeleteஅறிமுகங்களை ரசித்த காயத்ரிக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபயனுள்ள தளங்கள்... நன்றி சார்...
ReplyDeleteபடித்து ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteதளராது நின்று மனம் உவக்கக்
ReplyDeleteகதை சொல்லிச் சொல்லி நற்
தளத்தையெல்லாம் அறிமுகம் செய்து வைத்த
பால கணேஷ் ஐயாவிற்கு என் இனிய வாழ்த்துக்கள் !!
கவிதையாய் வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteகதம்பத்தை அலங்கரித்த பல்சுவை மலர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமலர்களை வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteநிறைய சிரத்தை தேடி இருப்பதை பதிவே சொல்லுகிறது சார் ...
ReplyDeleteநேரம் செலவிட்டாலும் பயனுள்ளதாக மாற்றி இருக்கிறீர்கள்
மகிழ்வுதந்த கருத்திற்கு மனம் நிறைய நன்றி அரசன்!
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்திய ரூபனுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteகதம்ப தளங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteபடித்து ரசித்த மாதேவிக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteவலைப் பூக்களில் மக்களுக்குப் பயனுள்ள தளங்கள் எவை என்பதைத் தேடுவதற்கு நீண்ட நீரம் செலவு செய்துள்ளீர்கள் என்பது வெளிப்படையான உண்மை. எங்கள் தளத்தினை 'வான்புகழ் கொண்ட' வள்ளுவரின் குறளைக் காரணம் காட்டி அறிமுகம் செய்து வைத்தமைக்காக மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம். உங்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றிகள்.
ReplyDelete"ஒன்றுபட்டு உயர்வோம்"
வாழ்த்துக்களுடன்
டென்மார்க்கிலிருந்து
-ஆசிரியர்-
அந்திமாலை இணையம்
www.anthimaalai.dk
எங்கள் வலைத் தளமாகிய 'அந்திமாலையையும்' ஏனைய தளங்களையும் அறிமுகம் செய்து வைத்த நண்பர் 'பாலகணேஷ்' அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஅன்புடன்
இ.சொ.லிங்கதாசன்
டென்மார்க்
குறளை மிக எளிமையான விளக்கத்துடன் சொல்லிவரும் உங்களின் தளம் எனக்கு மிகப் பிடித்திருந்தது. உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஅருமையான தகவல்கள் அமைந்த பதிவு.
ReplyDeleteநன்றி பாலகணேஷ் ஐயா.
பகிர்வை ரசித்த அருணாவுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteபால கணேஷர்,
ReplyDeleteபூக்கள் விடும் தூதாக இருந்தது வலைச்சர தொகுப்புகள்!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
உண்மையில் இந்த கம்மென்ட் போட்டது வவ்வால்தானா?
Deleteமுரளி சாரே,
Deleteஎன்னை கட்டம் கட்டி கலாய்க்கிறதுனு முடிவு பண்ணிட்டிங்களா அவ்வ்!
அந்த கமெண்ட் போட்டது சாட்சாத் இந்த அடியார்க்கு நல்லான் வவ்வாலே தான் அவ்வ்!
யு க்னோ, பேசிக்கல்லி ஐ'ம் எ குட் கய் , ஹி...ஹி ஆனால் அதை நானே என் வாயால சொல்லிக்கிறதில்லை... அவ்வ்!
அடியார்க்கு நல்லான் & வார்த்தையே அழகா இருககு பிரதர் வவ்வால்! முரளிக்கு என்னமோ நேத்திலருந்து ஒரே டவுட்டா வந்துட்டிருக்குது! ஹி... ஹி...! மகிழ்வு தந்த வவ்வாலின் வருகைக்கு மனம் நிறைய நன்றி!
Deleteமிக நல்ல தளங்களை,
ReplyDeleteபயனுள்ள தளங்களை,
புதிய தளங்களை
அறிமுகம் செய்து வைத்தீர்கள். நன்றி!
தொடர்ந்து கருத்திட்டு எனக்குத் தெம்பூட்டு ஆதரவு தரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஒவ்வொரு நாளும் புதுமையான முறையில் அறிமுகங்கள். குறிப்பிடப்பட்ட வலைப்பதிவுகள் அனைத்தும் சிறப்பானவை.போட்டோஷாப் தளம் மிகப் பயனுள்ளது .. இன்றைய அறிமுக ஸ்டைல் சற்று ஏமாற்றமே!
ReplyDeleteதளஙகளை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி! (இப்ப புது ஸ்டைலோட வந்துடறேன்... பாருங்க...!)
Deleteபயானுள்ள தளங்களுக்கு வழி காட்டியமைக்கு மிக்க நன்றி!..
ReplyDeleteபயனுள்ள தளங்கள் என்ற உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஎனக்குப் பயனுள்ள பதிவர்களைக் குறித்துக்கொண்டேன் நன்றி....
ReplyDeleteரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteநான் போட்ட காமென்ட் எங்கே? நேற்றே எல்லா பதிவுகளையும் படித்து அங்கும் கமென்ட் கொடுத்து, இங்கேயும் எழுதினேனே!
ReplyDeleteஉங்களோட கருத்து ஸ்பாம்ல போய் மாட்டிக்கிச்சோ என்னவோ தெரியலையே ரஞ்சனிம்மா... வலைத்தளத்தில் எழுத மட்டுமே டாஷ்போர்டு அனுமதிக்கும். கமெண்ட்டுகளை அட்மின்தான் பாக்கணும். பாத்து வெளியிட்டுடவாங்க சீக்கிரமே. மிக்க நன்றிம்மா.!
Deleteஅருமையான அறிமுகங்கள். மிக்க நன்றி கணேஷ்.....
ReplyDeleteத.ம. 10
அறிமுகங்களை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Delete