Saturday, December 7, 2013

அருகே ஒரு ஆபத்து!

நீண்ட நாளாக வீட்டுப் பக்கமே வந்திராத என் நெருங்கிய நண்பனொருவன் நேற்று காலை வந்தபோது மிக குஷியாகி வரவேற்றேன் நான். ‘‘என்னய்யா... பாத்தே ரொம்ப நாளாசசு. அப்பப்ப வந்துட்டுப் போலாம்ல...?" அவன், ‘‘ஏன் நீ வர்றது? அதான் போன்ல தெனம் பேசிக்கறோமே... இப்ப நான் வந்தது உன்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டுத்தான்..." என்றான். ‘‘என்ன வேணும் சொல்லு... உடனே செஞ்சிரலாம்...!"

‘‘நான் உடனே ப்ளாக்கர் ஆகணும்...! அதுக்கு நீதான் ஹெல்ப் பண்ணணும்!"

‘‘ரொம்ப ஸிம்பிள்டா அது! நடுவெயில்ல மொட்டை மாடியில ஜட்டியோட நின்னுக்கிட்டு தினமும் எக்சர்ஸைஸ் பண்ணு. மெட்ராஸ்பவன் சிவகுமார் மாதிரி சிவப்பா இருக்கற நீ, சீக்கிரத்திலேயே என்னை மாதிரி ப்ளாக்கா ஆயிடுவே..."

‘‘அடப்பாவி...! நான் கேட்டது ப்ளாக் எழுதி நானும் ஒரு ப்ளாக்கர் ஆகணும்னுங்கறதுக்கான ஐடியாடா..."

‘‘என்னடா இது வலையுலகத்துக்கு வந்த சோதனை! சரி, ஆரம்பிச்சுத் தரேன். என்ன மாதிரி சப்ஜெக்ட் எழுதப் போறேன்னு முடிவு பண்ணிட்டியா?"

‘‘இன்னும் இல்லப்பா. நீதான் ஏதாவது சஜஸ்ட் பண்ணேன்..."

‘‘சமுத்ராங்கறவங்க கலைடாஸ்கோப்ன்னு ஒரு மேடடர் பண்ணிட்டிருக்காங்க. படிச்சா ஒவ்வொரு மேட்டரும் மனசை அள்ளும். இதப் பாரு.. இந்த மாதிரி எழுதறியா நீ?"


‘‘அட... இதுக்கெல்லாம் நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணனும்ப்பா... நம்மால ஆவாது. வேற என்ன மாதிரி...?"

‘‘சுஜாதா தேசிகன்னு ஒருத்தர் சூப்பரா ஒரு சிறுகதை எழுதியிருககாரு பாரு. இவரை மாதிரி சிறுகதை எழுதிப் பாரேன்..."

‘‘இவ்வளவு சுவாரஸ்யமா எழுதறதுக்கு நல்ல கற்பனைத்திறன் வேணும்ப்பா. நம்மகிட்ட லேது!"

‘‘சரி... அதுபோகட்டும்... வஸந்த்துன்னு ஒருத்தர் கவிதைகளை படங்களோட டிசைன் பண்ணி அசத்திட்டிருக்காரு. இதக்கவனி... இந்த மாதிரி எழுத ட்ரை பண்றியா...? இல்ல... பத்மஜா எழுதிருககாங்களே... இந்த மாதிரி கவிதைகள் எழுதிப் பாக்கறியா?"

‘‘கவிதை எழுத ஒண்ணு தமிழ் இலக்கணம் தெரிஞ்சிருக்கணும். இல்ல மனசுல நினைக்கறத கவிதையாக்க வார்த்தைகள் வசப்படணும். நமக்கு அவ்வளவு மூளை கிடையாதுப்பா...."

‘‘அவ்வளவா என்ன... உனக்கு அவ்வளவும் கிடையாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்..."

‘‘ஏய்....!"

‘‘சரி.... சரி... விடு! இணையத்துல புதுசா வர்ற சினிமாக்களை யார் முதல்ல பாத்துட்டு விமர்சனம் எழுதறதுன்னு ஒரு போட்டியே நடக்கும். சக்கரகட்டி மாதிரி சினிமா விமர்சனம் எழுதறதுக்கு ட்ரை பண்றியா?"

‘‘நான் எப்பவாவது ஆடிக்கு ஒண்ணு, அமாவாசைக்கு ஒண்ணுன்னு படம் பாக்கற ஆளு! இந்த சமாச்சாரம் நமக்குச் சரிவராது பிரதர்!"

‘‘அப்ப... இரா.எட்வின்னு ஒருத்தர் சமூக அக்கறையோட தன் பதிவுகள்ல கேள்விகளால் ஒரு வேள்வி நடத்தறாரு. இதயும் பாரு...! இந்த மாதிரி சீரியஸா எழுதேன்...!"

‘‘ம்ஹும்...! எனக்கு இப்படிப் பொறுப்பால்லாம் எழுதவராது. நாம காமெடி டைப்பாச்சே...!"

‘‘நீ ஒரு காமெடி பீஸ்ங்கறது நம்ம சர்க்கிள்ள எல்லாத்துக்கும் தெரிஞ்சதுதான். அப்ப ஒண்ணு பண்ணு.. இதப்பாரு... ஜி.டி.காயத்ரி என்னமா மொக்க போட்டு கழுத்துல ரத்தம்வர வெச்சுட்டாங்க பாரு... இந்த ஸ்டைல் பிடிச்சிருக்கா?"

‘‘இவங்க மொக்கை தவிரவும் பல நல்ல சிறுகதைகளையும், கட்டுரைகளையும்ல எழுதறாங்க. எனக்கு என்னமோ இந்த மொக்கை ஸ்டைல்தான் சரிப்பட்டு வரும்னு தோணுதுப்பா... நிறைய எஸ்.எம்.எஸ்., ஈமெயில்ல இந்த மாதிரி ஜோக்ஸ் வரது. அதையெல்லாம் தொகுத்துப் போட்டா நல்லா வந்துரும்னு நெனக்கறேன்..."

‘‘சரிப்பா... ப்ளாக் டெம்ப்ளேட் தேட ஆரம்பிச்சுரலாம்... என்ன பேர்ல எழுதப் போறே?"

‘‘எருமை மாடு!"

‘‘இன்ன என்ன கேட்டுட்டேன்னு இப்படித் திட்டறடா?"

‘‘திட்டலை. நான் எழுதப் போற பேரைச் சொன்னேன். சின்ன வயசுல அப்பா எருமை மாடு மேய்க்கத்தான்டா லாயக்கு நீயின்னு திட்டித் திட்டி அதுமேல ஒரு தனிப்பிரியமே வந்துருச்சுப்பா..."

‘‘இனப்பாசம்! ரைட்டு... ப்ளாக்குக்கு என்ன டைட்டில் வைக்கப் போறே?"

‘‘பரதேசியின் டைரி! நல்லா இருக்கா?"

‘‘உனக்கு ரொம்பப் பொருத்தமா இருக்குடா! உன் ப்ளாக்கை திரட்டிகள்ல இணைக்கறதுக்கு முன்னால நான் என் வாசகர்களுக்கு ஒண்ணு சொல்லியாகணும்... டியர் மக்கள்ஸ்! எங்கயாவது திரட்டிகள்ல எருமைமாடுங்கற பேரைப் பார்த்தா... க்ம்க்ம்கும்... க்ம்க்ம்கும்..."

‘‘அதாவது... உடனே உள்ள புகுந்து படிச்சு, கருத்தும் ஓட்டும் போட்டுடுங்க்ன்னு இவர் சொல்றாரு... ஆ...! கையக் கடிக்காதடா!"

=================================================================
நண்பரே... டி.என்.முரளிதரன்...! இந்த ஸ்டைல் பிடிச்சிருக்கா?
=================================================================

55 comments:

  1. ஹஹஹா.. ஒவ்வொருத்தர் ஸ்டைலோடவும் அறிமுகம் அசத்தல்.. அதிலும் மெட்ராஸ் பவன் சூப்பரோ சூப்பர்..

    ReplyDelete
    Replies
    1. அறிமுகங்களை ரசித்த ஆவிக்கு அன்புடன் என் நன்றி!

      Delete
  2. அழகாக அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்....
    சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. அறிமுகம் செய்த பாங்கினை ரசித்த வெற்றிவேலுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  3. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாணியில் அறிமுகங்கள் தூள் கிளப்புகிறது .... எருமை மாட்டுக்கு என் வாழ்த்துக்களை கூறிவிடுங்கள் வாத்தியாரே ...

    ReplyDelete
    Replies
    1. சொல்லிடறேன் அரசன்! அறிமுகங்களையும் ஸ்டைலையும் ரசித்த உனக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  4. சூப்பர் கணேஷ் சார். இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். பலர் மலர் முறையில் எழுதிட்டதால அதை சொன்னேன் தவறாக நினைக்க வேண்டாம். அதெல்லாம் என்னைமாதிரி ஆளுங்க சிம்பிளா எழுதறது.முந்தைய தினங்களின் அறிமுக ஸ்டைலை ஒப்பிட்டதால் சொன்னேனே தவிர நேற்றும் சிறப்பாகவே இருந்தது .
    இதுவரை நான் படித்த வலை சரங்களில் சிறப்பாக தொகுக்கப்பட்ட மிகச் சிலவற்றில் உங்களுடையதும் ஒன்று
    சுஜாதா தேசிகன், வசந்த் இரண்டும் படித்ததில்லை .அவ்வலைப் பக்கத்திற்கு செல்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போய் தவறா நினைப்பேனா முரளி...! என் எழுத்தும், படிப்பவர் ரசனையும் மேம்பட நீங்கள் சொன்ன கருத்து எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. நேத்து நிறைய வேலை இருந்ததால சிம்பிளா முடிச்சுட்டேன். அப்புறம் யோசிச்சப்ப... இதுவும் ஒரு வேலைதானேன்னு டைம் எடுத்துக்கிட்டு யோசிச்சு இப்படி எழுதினேன். ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
    2. முரளி அவர்கள் கூற்றை வழி மொழிகிறேன் @ பால கணேஷர்!

      இப்ப என்னா பண்ணுவீங்க ...ஆஹ் இப்ப என்னா பண்ணுவீங்க ....:-))

      (முரளி மறுபடியும் அதே கேள்விக்கேட்டுடுவாரோ அவ்வ்)

      Delete
  5. நறுக்கென அறிமுகம் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அறிமுகங்களை ரசித்த ரமணி ஸாருக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  6. அசத்தலான முறையில் அறிமுகம்...

    அனைவரும் அறிந்த முகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அனைவரையும் வாழ்த்தி, அறிமுகம் செய்த விதத்தையும் ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  7. ’’அவ்வளவு மூளை கிடையாதுப்பா...."

    ‘‘அவ்வளவா என்ன... சுத்தமா கிடையாதுன்னு நல்லாவே தெரியும்..."

    உச்சம்!..

    ReplyDelete
    Replies
    1. உச்சத்தைப் பாராட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  8. மீண்டும் இங்கே அசத்தல்..:)

    அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அசத்தல் எனப் பாராட்டி மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  9. அசத்தலான அறிமுக ஸ்டைல்.
    வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. ஸ்டைலை ரசித்த குமாருக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  10. சுஜாதா தேசிகன், வசந்த் இரு பக்கங்களும் எனக்கு புதிது. அறிமுகங்களை சொல்லிய விதம் சூப்பர்..!

    ReplyDelete
    Replies
    1. சொல்லிய விதத்தை ரசித்துப் பாராட்டின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  11. அனைவரும் அறிந்தவர்கள்....

    எருமை மாடு! - அம்மா என்னை தில்லி எருமை என பாசத்தோடு அழைத்தது நினைவில்! :)

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. பிற்காலத்துல நீங்க டெல்லியிலதான் குப்பைகொட்டப் போறீங்கன்னு அவங்களுக்கு ஞானதிருஷ்டியில தெரிஞ்சிருக்குமோ அப்பவே? ஹி... ஹி...! உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி நண்பரே!

      Delete
  12. aiyaiyo aiyaiyo pidissurukku !
    +1

    ReplyDelete
    Replies
    1. ‘சாமி’ படப்பாடலை நினைவுபடுத்தும் விதமாக ‘பகவான்’ஜி பாராட்டுவது என்ன பொருத்தம்! மிக்க நன்றி!

      Delete
  13. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஒரு சமுதாய போர் வாள், சிந்தனை சிப்பிய இப்படி மொக்க மாக்கான்னு சொல்லிட்டியளே.....

    ReplyDelete
    Replies
    1. ஸாரிம்மா காயத்ரி... உண்மையில மொக்கை தவிரவும் எல்லாருக்கும் பயன்படற நிறைய விஷயங்களை நீங்க எழுதறீங்கன்னு குறிப்பிட மறந்தது தப்புதான். இதோ தோப்புக்கரணம் போட்டுடறேன். ஹி... ஹி..! மன்னிச்சூ!

      Delete
    2. இப்ப மாத்தி எழுதிட்டேம்மா காயத்ரி! கோவமில்லையே...?

      Delete
    3. ஹஹா முதல்ல இருந்ததே நல்லா இருந்துச்சு. இருந்தாலும் நான் சொன்னத கூட சீரியஸா எடுத்துட்டீங்களே அண்ணா, நான் அந்த அளவு எல்லாம் இன்னும் வளரல.... நீங்க எங்கள recognize பண்ணதே பெரிய விஷயம்

      Delete
  14. :))))) என் செல்ல மகளுக்கு குரங்குக் குட்டி என்றால் மிகவும் பிடிக்கும் .
    காரணம் அது அழகாக வாழைப் பழத்தை உரித்துச் சாப்பிடுகின்றது என்பாள் .
    நானும் அந்தப் பாசத்தைக் கண்டு வியந்துள்ளேன் .ஒரு நாள் இப்படித் தான்
    அவளுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்குக் குழந்தை பிறந்துள்ளது என்று
    கேள்விப் பட்டு நானும் என் மகளும் சென்றிருந்தோம் ( 6 மாதங்கள் கழித்து )
    அந்தக் குழந்தையின் குறும்புத் தனத்தைக் கண்டதும் பாசத்தில் என் மகள்
    என் செல்லக் குரங்குக் குட்டி என்று கொஞ்சினாள் பாருங்க அவ்வளவு தான் :))))என்
    தலையே விறைச்சுப் போச்சு போங்க. நல்ல வேளை ஆசிரியை அதைப்
    பார்க்கவே இல்லை :))))) இன்றும் கணேஷ் ஐயா தங்களின் நகைச்சுவை மிகுந்த
    சிறப்பான பகிர்வினைக் கண்டதும் எனக்கு பழைய நினைவு தான் புரண்டது .
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அறிமுகமான அனைவருக்கும் அறிமுகப் படுத்தி
    வைத்த ஆசிரியர் தங்களுக்கும் .மேலும் சிறப்பாகத் தொடரட்டும் தங்கள் பணி .

    ReplyDelete
    Replies
    1. குரங்குக குட்டி, குட்டிக் களுதை... இப்படில்லாம் சின்னக் குழந்தைங்களைக் கொஞ்சறது எல்லோராலும் ரசிக்கப்படற ஒரு விஷயமாச்சே...! உங்கள் சுட்டியுடன் சம்பந்தப்பட்ட சுவாரஸ்யத்தைச் சொல்லி என்னையும் பாராட்டி ஊக்கம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி சிஸடர்!

      Delete
  15. பால கணேஷர்,

    //‘‘எருமை மாடு!"

    ‘‘இன்ன என்ன கேட்டுட்டேன்னு இப்படித் திட்டறடா?"

    ‘‘திட்டலை. நான் எழுதப் போற பேரைச் சொன்னேன். சின்ன வயசுல அப்பா எருமை மாடு மேய்க்கத்தான்டா லாயக்கு நீயின்னு திட்டித் திட்டி அதுமேல ஒரு தனிப்பிரியமே வந்துருச்சுப்பா..."//

    "எருமை மாடு" பதிவு எழுதுவது தான் உங்களுக்கு "அருகே ஒரு ஆபத்தா" தெரியுதா? இதனை நான் "அனிமல் பிளாணட் வலைப்பதிவர்கள் சங்கம்" சார்பாக வன்மையாக, திண்மையாக,தன்மையாக கண்டிக்கிறேன்!!!

    # "அருகே ஒரு ஆபத்து" தலைப்பு பி.கே.பி கதை தலைப்பு தானே? இல்லை ராஜேஷ்குமாரா?

    எப்பவோ இப்படிஒரு கதைப்படிச்ச நியாபகம், அழகிய ஆபத்துனு கூட கதை படிச்சிருக்கோம்ல அவ்வ்!

    நீங்களே உருவாக்கின தலைப்புனா, இது மாதிரி தலைப்பெல்லாம் பதிவு செய்து வைத்துக்குங்க,இல்லைனா யாராவது சுட்டு படத்துக்கு வச்சுடுவாங்க :-))

    # அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அருகெ ஒரு ஆபத்து&ங்கறது சுபா எழுதின நாவலுக்கான டைட்டில். அழகிய ஆபத்து எழுதியவர் ராஜேஷ்குமார். நான் வலைல எழுதறதே விபரீதம்னு நினைக்கறவன் நான். அதனாலதான் எருமை எழுத வர்றதை ஆபத்துன்னு டைட்டில் வெச்சேன்! இதுக்கெல்லாம் கண்டனமா?: அவ்வ்வ்வ! அனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு அன்புடன் என் நன்றி!

      Delete
  16. சுவாரஸ்யமான அறிமுகம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைய நன்றி மாதேவி!

      Delete
  17. அட்டகாசம்! வலைப்பூக்களை மிகப் புதுமையாக, நறுக்கு சுருக்கென்று அறிமுகப்படுத்தியிருக்கிறார்! புதுமையான பாணி!

    ReplyDelete
  18. அண்ணே சூப்பர் அண்ணே சிறு கதை வடிவில் அறிமுகங்கள் அமர்க்களம்

    என்னையும் இணைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. அறிமுகங்களை ரசித்த சக்கரக்கட்டிக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  19. சுபா நாவலின் தலைப்பு ரொம்பப் பொருத்தம்.

    நண்பருடன் உரையாடல் என்ற வடிவத்தில் பதிவர்கள் அறிமுக பாணி அருமையாயிருந்தது.

    இன்றைய உரையாடல் இரு நண்பர்களுக்கிடையே நடைபெறும் கலாய்த்தல் வகை நகைச்சுவையை அப்படியே கண்முன் கொண்டு வந்து படிப்பதற்கு அதிக பரவசம் தந்தது.

    அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    அழகாய் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அறிமுகங்களை வாழ்த்தி, என் எழுத்தை ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  20. ஆவிதான் அசல் சிகப்பு மனிதர்.

    # செகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்.

    ReplyDelete
    Replies
    1. அது சரிதேங்! டாங்ஸுப்பா!

      Delete
  21. இவ்வளவு அருமையா எழுதறவங்களை அறிமுகப்படுத்திய பிறகும் தைரியமா ஒருத்தர் அவங்க கூட போட்டி போட தயாரா வர்ரார்னா கண்டிப்பா நல்ல பதிவா கொடுப்பார்னு நம்பறோம்.. வாங்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அட... எருமைக்கும் வாழ்த்துச் சொல்லி வரவேற்கறீங்களே... ரொம்ப நன்றி!

      Delete
  22. அறிமுகப்படுத்திய விதம் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு இதயம் நிறை நன்றி!

      Delete
  23. சுவாரசியமான முறையில் சிறப்பான அறிமுகங்கள்.எருமைமாடு சிரிப்புத்தாங்க முடியல முடிவில் கடி:)))

    ReplyDelete
    Replies
    1. சிரித்து ரசித்த நேசனுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  24. வெரைடியாக அறிமுகங்கள்... கலக்கல்.. நன்றி பால கணேஷ் சார் ..

    ReplyDelete
    Replies
    1. அறிமுகங்களை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  25. அசத்தல் அறிமுகம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வு தந்த உங்களின் கருத்துக்கு மனம் நிறைய நன்றி ஜெயக்குமார்!

      Delete
  26. வாத்யாரே... சினிமா இன்டிஸ்ட்ரி காண்டி ஜமாய்க்க வேண்டிய ஆளு நீ... இன்னும் பிரஸ் காண்டியே கீறியேபா...?

    ReplyDelete
    Replies
    1. என்னை உயர்வாய் மதிப்பிட்டுப் பாராட்டின உங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட நன்றி நைனா!

      Delete
  27. மிக்க நன்றி கணேஷ்.

    ReplyDelete