Sunday, December 15, 2013

துரை செல்வராஜு - சித்ரா சுந்தரிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - சித்ரா சுந்தர் - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 051
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 111
பெற்ற மறுமொழிகள்                            :278
வருகை தந்தவர்கள்                              : 1153
சித்ரா சுந்தர்  நல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து - அவர்களீன் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார். 
பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் தளத்தின் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
இவரது பதிவுகளீல் மூன்று பதிவுகள் தமிழ் மணத்தில் ஏழு வாக்குகள் பெற்றிருக்கின்றன.
 
சித்ரா சுந்தரினை அவரது   கடும் உழைப்பினைப் 
பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு 
மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் 
துரை செல்வராஜூ. 

இவர் தஞ்சையம்பதி  என்னும் தளத்தில்எழுதி 
வருகிறார். 

தண்ணீரும் காவிரியே!. தார் வேந்தன் சோழனே!.. மண்ணாவதும் சோழ மண்டலமே!..

நன்செய்யும் புன்செய்யும் கொஞ்சி விளையாடும் தஞ்சையில் தான் நண்பர் துரை செல்வராஜு பிறந்ததும் தவழ்ந்ததும்.

இவரது தந்தை அரசுப் பணியில் இருந்த காரணத்தினால் இவரது 
கல்விப் பயணம் தஞ்சை மாவட்டத்தின் சில ஊர்களில் தொடர்ந்து - சரபோஜி கலைக் கல்லூரியில் அப்போதைய புகுமுக வகுப்புடன் முற்றுப் புள்ளியானது. ஆயினும் படிக்க வேண்டும் என்ற தாகத்தினால் - நான்காண்டு காலம் நூலகங்களில் கழிந்தது.
நூலகங்களீல் அமைந்தது ஆன்மீகம். 

தேவாரத் திருமுறைகள் ஏழையும் வாசித்து பதிகப் பாடல்களுடன் தலமுறை தொகுத்து வைத்துள்ளார்,

அப்பர் சுவாமிகளைக் குருவாகக் கொண்ட இவரது வழிப் பயணத்தில் பொக்கிஷமாகக் கிடைத்தவை  வாரியார் சுவாமிகளின் நல்லாசிகள். 

அரசுப் பணியை அடையும் தருணத்தில் -  நடை முறை மாற்றம் என- அப்போதைய தமிழக அரசு தடுத்தது.

அதன் பின் வேறு வேலை தேட  - அதைக் கொடுத்தது சிங்கப்பூர். அங்கே நான்கு ஆண்டுகள் பணி.

புதிய வாழ்க்கை -அன்பில் இணைந்த இல்லறம் அது நல்லறமாக - மகளும் மகனும்!.

வளைகுடா நாடுகளில் ஒன்றான  - குவைத் நாட்டில் 1991 முதல் - 2004 வரை தனியார் நிறுவனத்தில் வேலை. அதன் பின் தஞ்சை கரந்தையில் ஸ்ரீ விஷ்ணு கம்ப்யூட்டர்ஸ் என அமர்ந்தார்.

இறைவனின் நாட்டம் வேறாக இருந்தபடியால்  -  2010 முதல் குவைத் 
மீண்டும் புகலிடம் ஆனது. அன்பு மகளுக்கு 2014 பிப்ரவரி ஒன்பதாம் நாள் திருமணம் நிச்சயித்துள்ளார். 

இவர் குடும்பத்தின்  மூத்த பிள்ளை. தந்தை சிவகதி எய்திவிட தாயார்  - நலம்!.. இன்றைக்கு சகோதர சகோதரிகளும் - இவரது  மனைவி மக்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர்.
துரை செல்வராஜினை வருக வருக ! என்று 
வரவேற்று வாழ்த்தி ஆசிரியப் பொறுப்பில் 
அமர்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூடிய 
பெருமை அடைகிறோம். 


நல்வாழ்த்துகள் சித்ரா சுந்தர்

நல்வாழ்த்துகள் துரை செல்வராஜூ 

நட்புடன் சீனா 

38 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
    Replies
    1. சீனா ஐயா,

      தங்களின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுகும் நன்றி ஐயா !!

      Delete
  2. அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு,
    வணக்கம். தங்களுடைய நல்வாழ்த்துக்களுக்கு நன்றி!..

    என்றும் அன்புடன்,
    துரை செல்வராஜூ.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா!
    வலைச்சர ஆசிரியப் பணி ஏற்பமையிட்டு மிக்க மகிழ்ச்சி!

    வலைச்சரம் மலர்ச்சரமாக மணம் பரப்பிட இனிய வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சகோதரி,
      தங்களுடைய முதல் வருகைக்கும் நல்வாழ்த்தினுக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  4. வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்கும் இனிய நண்பர் துரை செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அன்பின் சரவணன்,
    தங்களுடைய வருகைக்கும் நல்வாழ்த்தினுக்கும் மிக்க மகிழ்ச்சி!..

    ReplyDelete
  6. அன்பின் சீனா அவர்களின் அறிமுகம் வழியே, தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்கள் பற்றிய ஆன்மீகப் பயணம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். வலைச்சரம் ஆசிரியராக வலம் வரவிருக்கும் சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் தமிழ் இளங்கோ,
      தாங்கள் வருகை தந்து நல்வாழ்த்து கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  7. தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ ஐயா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்பின் தனபாலன்!..
      இது தங்களால் - எனக்குக் கிடைத்த உயர்வு!..

      தங்களுடைய வருகைக்கும் நல்வாழ்த்தினுக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  8. நல்வாழ்த்துகள் சித்ரா சுந்தர்

    நல்வாழ்த்துகள்
    துரை செல்வராஜூ ஐயா அவர்களே.!

    //அன்பு மகளுக்கு 2014 பிப்ரவரி ஒன்பதாம் நாள் திருமணம் நிச்சயித்துள்ளார். //

    மகிழ்ச்சியான செய்தி ..
    இனிய நல்வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்!..

      தங்களது வருகையும் இனிய நல்வாழ்த்துக்களும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      தங்களிடம் நல்வாழ்த்துக்களைப் பெறுதற்கு என் அன்பு மகள் என்ன தவம் செய்தனளோ!..

      நன்றி.. மிக்க நன்றி!..

      Delete
    2. ராஜராஜேஸ்வரி, தங்களது நல்வாழ்த்துகளுக்கு நன்றிங்க !

      Delete
  9. வலைச்சர ஆசிரியராக புதிய பொறுப்பேற்கும் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.

    //அன்பு மகளுக்கு 2014 பிப்ரவரி ஒன்பதாம் நாள் திருமணம் நிச்சயித்துள்ளார். //

    மிகவும் மகிழ்ச்சியான செய்தி .. இனிய நல்வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வை.கோ. அண்ணா.,
      தங்களது வருகையும் -
      நல்வாழ்த்துக்களும் கண்டு - மிக்க மகிழ்ச்சி!.. மிக்க நன்றி!..

      Delete
  10. சித்ரா சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    துறை செல்வராஜு அவர்களை வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் முஹம்மது நிஜாமுத்தீன்!..
      அஸ்ஸலாமு அலைக்கும்!..

      அளவற்ற அருளுடையோனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் ஈடில்லா கருணையினால் அனைவருக்கும் நலங்களே விளைவதாக!..

      Delete
    2. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றிங்க அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

      Delete
  11. சித்ரா சுந்தர் அவர்களுக்குப் பாராட்டுகள்......

    துரை செல்வராஜு அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு.
      தங்களின் வருகையும்
      வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
    2. உற்சாகமூட்டும் பாராட்டுகளுக்கு நன்றி வெங்கட்நாகராஜ்.

      Delete
  12. சீனா சார் !!

    இனி எனக்குக் கவலை இல்லை.
    கடந்த சில மாதங்களாக
    துரை செல்வராஜ் அவர்கள் பதிவுகளுக்குச் சென்று கொண்டு இருக்கிறேன். அவரது வலைப்பதிவுகள் எனக்கு ஆன்மீக நற்களஞ்சியமாக , நான்மறை வேதங்களுக்குப் பொருள் சொல்வதாக,அமைந்து இருக்கின்றன.

    துரை செல்வராஜ் நான் பெரிதும் வாழ்நாளில் இருந்த எங்களது தஞ்சைத் தரணியைச் சார்ந்தவர். அவரை இதுவரை சந்தித்ததில்லை.
    இருப்பினும், அவர்கள் எழுத்துக்கள் மூலமாக அவர் இதயக்கதவுகளை திறந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது.

    அவரது வருகை எனக்கு பெருமை.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..

      வலைப்பதிவின் கானக் குயிலாக ( கானாக் குயில் அல்ல!..)
      என்று வலம் வந்து, தன் பாட்டுத் திறத்தாலே எங்கள் பதிவுகளைப் பரிபாலித்து - எங்கும் மணம் பரப்பும் தங்களுடை நல்லாசிகளை தலை மேல் கொள்கின்றேன்!..

      Delete
  13. பக்திமணம் கமழும் தங்களது தளத்தை இன்றுதான் பார்வையிட்டேன். இந்த வாரம் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கவிருக்கும் தங்களுக்கு வழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      ஏழு நாளும் அழகாக அருமையாக நடத்திச் சென்றீர்கள். தாங்கள் எனது வலைத் தளத்தைப் பார்வையிட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றீ!..

      Delete
  14. திருமதி சித்ரா சுந்தருக்கு பாராட்டுகள் திரு. துரை செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
    2. வாங்க ராஜலக்ஷ்மி,

      உங்களின் பாராட்டுகளுக்கும் நன்றிங்க.

      Delete
  15. வணக்கம் ஐயா...
    தங்களது வலைச்சர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
    கலக்கலான வாரமாக கொண்டு சென்று சிறப்புடன் முடித்த சித்ரா அக்காவுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு நன்றிங்க, சே.குமார்.

      Delete
    2. அன்பின் .. குமார்..

      தாங்கள் வருகை தந்து நல்வாழ்த்து கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  16. வணக்கம்
    ஐயா
    வலைச்சர ஆசிரியர் பணிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம் இந்த வாரம் வலைச்சரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பின் .. ரூபன்..
      வருகை தந்து நல்வாழ்த்து கூறி
      வரவேற்பு நல்கிய தங்களுக்கு நன்றி!..

      Delete
  17. சென்ற வார ஆசிரியர், எனது இனிய தோழி சித்ராவிற்கு பாராட்டுக்கள். இன்று முதல் பொறுப்பேற்கும் திரு துரை செல்வராஜூ அவர்களுக்கு நல்வரவு. உங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்!
    உங்களின் ஆன்மீகப்பயணத்தில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
    அன்புடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
    Replies
    1. அன்பின் அம்மா!..
      தாங்கள் வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..
      என் மகளுக்கு வாழ்த்து கூறியமைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

      Delete
  18. சிறந்தமுறையில் சென்ற வார ஆசியைப் பொறுப்பை நிறைவேற்றிச்
    செல்லும் சித்ரா அவர்களுக்கும் இவ்வார ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்
    கொண்டு வருகை தந்திருக்கும் துரை செல்வராஜு ஐயா அவர்களுக்கும்
    என் இனிய வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சகோதரி..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..

      Delete