செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும்னு சொல்லுவாங்க. ஆனா நான் அவ்வளவு நல்லவளா இருந்தா உலகம் அழிஞ்சிறாது? அதோட, ‘நன்கு பசித்தபின் உணவு’ன்னும் சொல்லிக் கேட்டிருக்கேன். ஆனா இப்போ உள்ள டயட்டீஷியன்ஸ் என்ன சொல்றாங்கன்னா, பசிக்கிதோ இல்லையோ அந்த நேரத்துக்கு சாப்பிடணும். பசி வந்தப்புறம்தான் சாப்பிடனும்னு இருந்தா பசியில நமக்கே தெரியாம நாம நிறைய சாப்பிடுறோம்னு. அதனால சத்துள்ள சுத்தமான உணவுகளை நேரத்துக்கு சாப்பிடுவோம்.
இன்னைக்கு நாம பார்க்கப் போறது எல்லாமே சமையல் ப்ளாக்ஸ் தான். எப்படி பசி வந்தபிறகு தான் சாப்பிடணும்னு நினைக்கக் கூடாதோ, அதே மாதிரி பசியோட இருக்கும்போது தயவு செஞ்சு இந்த ப்ளாக்ஸ் பக்கம் போயிறாதீங்க. அவ்வளவுதான்..
1. சமையல் தளம்னு சொன்னவுடனே என் நினைவுக்கு வர்றது கீதா அசல் அக்காவோட ‘என் சமையல் அறையில்’ ப்ளாக் தான். அய்யோ, அழகழகான எவ்வளவு ரெசிபிஸ்! உலகத்துலயே ரொம்ப கொடுத்துவச்சவங்க கீதா அக்காவொட குடும்பத்தினர்தான்னு அடிக்கடி நினைச்சிப்பேன் :-)
இவங்களோட ‘மிளகாய் துவையல்’ பாருங்க. ரொம்ப சிம்பிளான காரசாரமான ஒரு சைட் டிஷ். இத மாதிரி நிறைய சட்னி வகைகள் கொடுத்திருக்காங்க. இதோ இங்கே ’25 வகையான சத்தான டயட் தோசை’ படங்களோட கொடுத்திருக்காங்க. அசைவ சமையல் குறிப்புகளும் அருமை. முக்கியமா ‘செட்டிநாடு பெப்பர் சிக்கன்’ அப்புறம் ‘மீன் பிரியாணி’.
2. அடுத்ததாக ஷஷிகா அக்காவோட ப்ளாக். பார்த்தாலே வாயில நீர் ஊறும் படங்களோட சுவையான ரெசிபிஸ் கொடுத்திருக்காங்க.
இவங்களோட ‘மிளகு சீரக இட்லி’ ஒரு நாள் செஞ்சு பாருங்க. அவ்ளோ டேஸ்டி. காரசாரமான ‘கோங்கூரா துவையல்’, பாசிப்பருப்பு வடையோட ஒரு ‘ராஜஸ்தானி தாளி’, அசைவத்துல இவங்களோட ‘கருவாட்டுக் குழம்பு’ ரெசிபி எல்லாம் எடுத்துக்காட்டுகள் தான். போய் பாருங்க.
3. ஆசியா உமர் அக்காவோட ப்ளாக் அடுத்தது. நாம வழக்கமா செய்ற சமையல் வகைகள் மட்டுமில்லாம ரொம்ப வித்யாசமான ரெசிபிஸ், முக்கியமா அசைவ உணவுவகைகளுக்கு இவங்களை அடிச்சிக்கவே முடியாது.
உதாரணத்துக்கு ‘சிக்கன் மக்லூபா’, ‘கிரீன் சிக்கன் பார்பிக்யூ’, ‘கிரில்ட் ஃபிஷ்’ எல்லாம் பார்க்கவே அழகா இருக்கு.
4. அடுத்தது மனோ சாமிநாதன் மேடத்தோட ‘மனோஸ் கிட்சன்’. நியூ இயர் அன்னைக்கு ‘ரஸ் மலாய்’ செய்முறை போட்டாங்க பாருங்க. பார்த்தால் செய்யாம விடமாட்டீங்க. ‘வெண்டக்காய் தயிர் பச்சடி’ மாதிரி நிறைய பச்சடி வகைகள் கொடுத்திருக்காங்க. ‘பலாக்காய்ல வடை’ செஞ்சிருக்காங்க. அப்புறம் ‘பாகற்காய் பொடிமாஸ்’னு ஒரு ரெசிபி கொடுத்திருக்காங்க. பாகற்காய் சாப்பிட விரும்பும் டயபடிக் ஆட்கள் இந்த மாதிரி சுவையா செஞ்சு உணவுல சேர்த்துக்கலாம்.
5. ஜலீலா கமல் அக்காவோட ‘சமையல் அட்டகாசங்கள்’ பார்க்கலாம். இவங்க கொடுத்திருக்குற ‘தேங்காய் மினி தோசை’ குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு. ‘ஃபிலிப்பைனி, அராபிக், இடாலியன், குஜராத்தி, ஹைதரபாதினு' இவங்க கவர் பண்ணாத ஏரியாவே கிடையாது போல. சமையல் குறிப்பு போக உணவு சம்பந்தப்பட்ட எக்கச்சக்கமான பதிவுகள் நிறைஞ்சு கிடக்குற இவங்களோட ப்ளாக் ஒரு பொக்கிஷம்.
6. அப்புறம் மாதேவி அக்காவோட ‘சின்னு ரேஸ்ரி’ ப்ளாக். பெயருக்கேற்றாற்போல சுவையான ரெசிபிஸ் நிறைய இருக்கு. இவங்களோட ‘பனங்காய்ப் பணியாரம்’, ‘யாழ்ப்பாணம் கிராமத்துப் பக்குவ’ சமையல் குறிப்புகள் எல்லாம் நமக்கு ரொம்ப புதுசா இருக்கும். ‘தேங்காய்ப் பால் கஞ்சி’ குறிப்பு ஒன்னு கொடுத்திருக்காங்க. சுவையா இருக்கும் போல பார்த்தாலே தெரியுது.
7. அப்புறம் ‘மகி’ஸ் கிட்சன்’. இதிலேயும் வெரைட்டியான ரெசிபிஸ். சுரைக்காய்ல கூட்டு வெச்சிருப்போம், சாம்பார்ல போட்டிருப்போம். ஆனா இவங்க ‘சுரைக்காய் வெச்சு பாயசம்’ பண்ணிருக்காங்க. இவங்களோட ‘சர்க்கரைப் பொங்கல்’ பாருங்க. கொஞ்சம் வித்யாசமா இருக்கு. ‘பாலைக்கீரை உருண்டைக் குழம்பு', ‘மேத்தி ரோட்டி' எல்லாம் மிஸ் பண்ணக்கூடாதவை.
8. அடுத்து நாம பார்க்கப் போறது ‘விஜி பார்த்தி’யோட வலைத்தளம். சமையல் மட்டுமில்லாம வேறு குறிப்புகளும் நிறைய இருக்கு இவங்க ப்ளாக்ல. கலர்ஃபுல்லான ‘பைனாப்பிள் அல்வா’, ‘வெண்டைக்காய் மோர்க் குழம்பு’, ‘சப்பாத்தி உப்மா’, ‘வெந்தயக்கீரை சாம்பார்’ மாதிரி வித்யாசமான ரெசிபிஸ் நிறைய புகைப்படங்களோட போட்டிருக்காங்க. நிச்சயமா பாருங்க.
9. அடுத்து, அனுராதா முரளிதரனோட வலைத்தளம். ‘வெந்தயக் கீரை கோழிக்கறி’, ‘தேங்காய்ப்பால் மீன் குழம்பு’, ‘ஜவ்வரிசி வடை’, ‘எக் நூடில்ஸ்’, ‘சிக்கன் சூப்’, ‘பிரட் போண்டா’ எல்லாம் செஞ்சு வீட்டுல உள்ளவங்களை அசத்தலாமே!
10. சித்ரா அவங்களோட ‘காரைக்குடி சமையல்’ ப்ளாக் நாம அடுத்ததா பார்க்கப் போறது. இவங்களோட ‘பிரெட் வடை’, ‘பீட்ரூட் கட்லெட்’, ‘ரவா புட்டு’, ‘குழிப் பணியாரம்’, ‘பருப்பு உருண்டைக் குழம்பு’ எல்லாத்துக்கும் படங்களோட செய்முறை விளக்கம் கொடுத்திருக்காங்க. இதையும் ட்ரை பண்ணிப் பாருங்க :-)
இன்னைக்கு நிறைய சமையல் வலைத்தளங்கள் பார்த்தாச்சு. நான் சொல்லியிருக்கிற ரெசிபிஸ் மட்டுமில்லாம, அந்தத் தளங்கள்ல இருக்குற எல்லாப் பதிவுகளையுமே பாருங்க. வித விதமா சமையல் செஞ்சு உங்க வீட்டில இருக்குறவங்களையும் விருந்தினர்களையும் நல்லா கவனியுங்க! மீண்டும் சந்திக்கலாம் :-)
செம டைமிங்...பொங்கல் அன்று சமையல் பதிவர்கள்...சுவையான பகிர்வு
ReplyDeleteமிக்க நன்றி :-)
DeleteAnuradha Muralidharan, ChitraKrishna - இவர்களின் தளம் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அனைவரது தளத்திற்கும் சென்று படித்ததுமட்டுமல்லாமல் வலைச்சரத்தைல் அவர்கள் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் விபரத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்.. மிக்க நன்றி!
Deleteஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். சுபத்ரா அருமையான அறிமுகங்கள். என்னையும் இந்தப் பகிர்வில் இணைத்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஎன்ன பால் ப்ங்கிட்டா? --------- ஒரு வருஷம் காத்திருக்கனும்// மனதை தொட்டன இந்த உணர்ச்சிகரமான வரிகள்.
//பசிக்கிதோ இல்லையோ அந்த நேரத்துக்கு சாப்பிடணும். பசி வந்தப்புறம்தான் சாப்பிடனும்னு இருந்தா பசியில நமக்கே தெரியாம நாம நிறைய சாப்பிடுறோம்னு. அதனால சத்துள்ள சுத்தமான உணவுகளை நேரத்துக்கு சாப்பிடுவோம்.//
சூப்பராக சொல்லிட்டீங்க. பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
நன்றி அக்கா..
Deleteவணக்கம்
ReplyDeleteவலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்
Deleteபசியான - மன்னிக்கவும், சுவையான சமையல் குறிப்புகள் அள்ளி வழங்கும் தளங்களை இன்று பகிர்ந்து கொண்டீர்கள். அருமை.
ReplyDeleteத.ம. +1
மிக்க நன்றி!
Deleteஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!..
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கும் அறிமுகபடுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...என்னையும் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி சுபத்ரா!!
மற்றும் இதனை எனக்கு தெரியபடுத்திய தனபாலன் சகோவுக்கும் நன்றி!!
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் அக்கா..
Deleteஇதுவரை சமையல்க்கலையை வலைச்சர ஆசியர்கள் யாரும் இந்தளவுக்கு கெளரவிச்சது இல்லை! உங்க வழி தனி வழிதான், சுபத்ரா! :)
ReplyDeleteஇதுவும் வஞ்சப் புகழ்ச்சி தானோ? ரைட்டு..
Deleteநன்றி. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
ReplyDeleteசமையல்கலையை முதலிடத்தில் வைத்து, அதுவும் நடிகர் ரங்கராவின் புகழ்பெற்ற
ReplyDelete' கல்யாண சமையல் சாதம்' பாட்டின் புகைப்படத்தையே வைத்து பதிவிட்டிருப்பது அருமை!
விருந்துடன் ஆரம்பித்திருப்பதால் போகப்போக இன்னும் அசத்தலாயிருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் சுபத்ரா!
என் தளத்தையும் அறிமுகம் இங்கே செய்திருப்பதற்கு அன்பு நன்றி!
அறிமுகம் பெற்ற அனைத்து சகோதரியற்கும் இனிய வாழ்த்துக்கள்!!
மிக்க நன்றி!
Deleteமிக அருமையான தொகுப்பு சுபத்ரா. அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னையும் இங்கு அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி.
ReplyDeletehttp://samaiyalattakaasam.blogspot.com/
http://www.chennaiplazaki.com/
வாழ்த்துகள் & நன்றி உங்களுக்கும்!
Deleteஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்...அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி...
ReplyDeleteசூப்பர்ப் பதிவு...
நன்றி கீதா அக்கா!
Deleteஇந்த சமையல் பிளாக்குகளில் பெரும்பாலானவை நான் படிச்சிருக்கேன். கவனிங்க... படிச்சிருக்கேன் மட்டும்தான்! செஞ்சு பாத்து மத்தவங்களைச் சோதிக்கற மாதிரி யாரும் அகப்படாததால... செஞ்சு போடச் சொல்லி ருசிப்பேன் சில சமயம். அழகான ரெசிப்பிகளை அறிமுகப்படுத்தினதுக்கு தாங்க்ஸ்!
ReplyDeleteஹஹா :-) நன்றி!
Deleteசுபத்ரா அருமையான அறிமுகங்கள். என்னையும் இந்தப் பகிர்வில் இணைத்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஎன் தளத்தையும் அறிமுகம் செய்திருப்பதற்கு நன்றி...
அறிமுகம் பெற்ற அனைத்து சகோதரியற்கும் இனிய வாழ்த்துக்கள்....
Thank U !
ReplyDelete