வணக்கம் நண்பர்களே...
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
- பாரதியார்
தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த
நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது என்று புறநானூறும் சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற
காப்பியங்களும் சான்று காட்டுகின்றன.
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப
(புறநானூறு, 168 :18)
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க
(பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம்: 5)
இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய
(சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை: 38)
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
(மணிமேகலை, 17: 62)
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும்
மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டது நம் தமிழ் மொழி. இந்தியாவில்
கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000-த்திற்கும்
அதிகமானவை தமிழகத்தில் கிடைத்திருக்கின்றனவாம். இவற்றில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன என்பது வியப்பும் பெருமையும் தரவல்ல செய்தியல்லவா!
கனியிடை
ஏறிய சுளையும் முற்றல்
கழையிடை
ஏறிய சாறும்
பனிமலர்
ஏறிய தேனும் காய்ச்சுப்
பாகிடை
ஏறிய சுவையும்
நனிபசு
பொழியும் பாலும் தென்னை
நல்கிய
குளிரிள நீரும்
இனிய என்பேன்
எனினும் தமிழை
என்னுயிர்
என்பேன் கண்டீர்
- -- பாரதிதாசன்
இந்திய
நாட்டுப்புறக் கலைகளில் தமிழக நாட்டுப்புறக் கலைகள் பல்வேறு வகைகளில் சிறப்பும்
தனித்தன்மையும் கொண்டவை. இவற்றை நிகழ்த்து கலைகள், நிகழ்த்தாக் கலைகள், பொருட்கலைகள் என
நாட்டுப்புறவியல் வல்லுனர்கள் வகைப்படுத்தியுள்ளனர் என்று தமிழக
நாட்டுப்புற கலைகள் பற்றி முனைவர் எஸ். உமயபார்வதி எடுத்துரைக்கிறார். தமிழக நாட்டுப்புறக் கலைகளென
அவர் குறிப்பிடுபவை…
1.ஒயிலாட்டம்
|
2.ஆலியாட்டம்
|
3. கோலாட்டம்
|
4. கரகாட்டம்
|
5. காவடி ஆட்டம்
|
6. கும்மி
|
7. வில்லுப்பாட்டு
|
8. தெருக் கூத்து
|
9. பாவைக் கூத்து
|
10. கனியான் ஆட்டம்
|
11. வர்மம்
|
12. சிலம்பாட்டம்
|
13. களரி
|
14. தேவராட்டம்
|
15. சக்கையாட்டம்
|
16. பொய்க்கால் குதிரை ஆட்டம்
|
17. மயிலாட்டம்
|
18. உறியடி விளையாட்டு
|
19. தப்பாட்டம்
|
20. உக்கடிப்பாட்டு
|
21. இலாவணி
|
22. கைச்சிலம்பாட்டம்
|
23. குறவன் குறத்தியாட்டம்
|
24. துடும்பாட்டம்
|
25. புலி ஆட்டம்
|
26. பொம்மைக் கலைகள்
|
27. மண்பாண்டக் கலை
|
28. கோலக் கலை
|
இதுபோன்று
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலைகள் வளர்ந்துள்ளன. மேலும்
நாடகம், வீதி நாடகம், இசை நாடகம், நாட்டிய
நாடகம், பரதநாட்டியம், இசைச் சிற்பம் போன்ற பல கலை
நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன.
தமிழரின்
மொழி, வாழ்க்கை,
கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு போன்ற நிகழ்வுகளின் அடிப்படையிலான சில பதிவுகளை இன்று காண்போம்.
1. மண்ணின் குரல் என்ற தளத்தில் பண்டைத் தமிழர் வாழ்க்கை, பாரம்பரியம் தொடர்பான ஏராளத் தகவல்கள் ஒலி வடிவில் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழ் நாடு தொல்லியல் துறையில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனைவர் பத்மாவதி அவர்களுடனான பேட்டியை இங்கு ஒலிவடிவில் கேட்டு மகிழலாம்.
2. வரலாற்றுப்
புதையல் என்னும் தலைப்புக்கு ஏற்ப பண்டைத்தமிழர் வரலாற்றுத் தகவல்களைத் திரட்டியளிக்கும்
இத்தளத்தில் சோழ மன்னர்களான இராஜராஜ சோழனும் இராஜேந்திர சோழனும் கடல் கடந்து சென்று
ஆட்சியைக் கைப்பற்றியதற்குக் காரணமான கடற்படை பற்றியும் கட்டுமானக் கப்பல் பற்றியும்அறியத் தருகிறார்.
3. போர் என்பது வீரத்தின் அடையாளம் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் பெருமை பாடினாலும் பழந்தமிழரின்போர்முறைகள் காட்டுமிராண்டித்தனமானவை என்ற மாற்றுச்சிந்தனையை முன்வைத்து காரணங்களோடு நமக்கு விளக்குகிறார் எனது எண்ணங்கள் வலைப்பூவில் திரு. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்.
4. முனைவர்
ஜம்புலிங்கம் பக்கங்கள் என்ற வலைத்தளத்தோடு சோழநாட்டில் பௌத்தம் என்னும் வலையை அது
தொடர்பான ஆராய்ச்சித் தகவல்களுக்கென்றே நிர்வகிக்கிறார்
முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்கள். மன்னார்குடி
அருகே உள்ள உள்ளிக்கோட்டையில் புத்தர் சிலை கிடைத்த விவரத்தை அறிந்துகொள்ள ஆர்வமா?
இங்கு வாருங்கள்.
5. அழிந்துவரும்
கலைகளுள் ஒன்றான தோல்பாவைக் கூத்துக்கலை பற்றி இங்கு விளக்குகிறார் சித்திரவீதிக்காரன். பொம்மைகள் ஆட்டுத்தோலால் செய்யப்படுவதால் தோல்பாவைகள் எனப்படுகின்றனவாம். தோல் பாவைக் கூத்துக் கலைஞர்கள்
வறுமை நிலையில் வாடுவதை அவர்கள் வாய்மொழிக் கேட்கையில் கல் நெஞ்சமும் கலங்கிவிடும்.
6. அழிந்து கொண்டிருக்கும் மற்றொரு கலையான தெருக்கூத்து பற்றி வசந்த மண்டபத்தில் அன்னைத் தமிழை வணங்கி அழகான தமிழால் இயற்றி அவர்தம் குரலால் பாடியும் பதிவிட்டுள்ளார். கட்டியங்காரனைக் கோமாளி என்று மட்டுமே நினைத்திருக்கும் பலருக்கும் கூத்தில் அவருடைய முக்கியப் பங்கு வியப்பளிக்கும்.
7. மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக நம் தலைமுறையிலேயே காணும் பல மாற்றங்களை நினைவிடைத் தோய்த்தெடுத்துப் பதிவிடுகிறார் தோழி மணிமேகலா. அட்சயப் பாத்திரத்திலிருந்து கிடைக்கின்றன பசி தீர்க்கும் அநேக பருக்கைகள். பானை சோற்றின் பதங்காட்டும் பருக்கையாய் ஒரு நாடோடியின் கண்ணூடே படலைகளையும்புகைபோக்கிகளையும் காண வாருங்கள்.
8.
பாரம்பரியம்
பேசும் பல அற்புதப் படைப்புகளை அநாயாசமாக எழுத்தில் வடிக்கும் சக்தியின் குரலும் புள்ளிக்கோலமும்
என் மனங்கவர்ந்தவை. கடையில் அரிசியும் வெல்லமும் வாங்கி குக்கரில் வைத்து கடமைக்குக் கொண்டாடுகிறோம். ஊரும் உறவும் உற்சாகமாய்க் கூவும் பொங்கலோ பொங்கல் என்னும் மந்திரக்கூவலின் மகத்துவத்தை அறியாது போனால் அழியநேரிடும் என்பதை அழுத்தமான வரிகளால் அகம்தொடும் வண்ணம் இங்கு எடுத்துரைக்கிறார்.
9. தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு பாமரமக்களின் வாய்மொழியாய்ப் பல பழமொழிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை அறிவோம். அவற்றுள் பலவற்றை பொருளறியாமலேயே புழங்கிக்கொண்டிருக்கிறோம். பழமொழிகளை அவற்றுக்கான சரியான விளக்கத்துடன் நாமறியத் தருகிறார் திரு.சொ.ஞானசம்பந்தன் ஐயா அவர்கள். காலத்துக்கு ஒவ்வாதவற்றைச் சுட்டி, ஆணாதிக்கம் கொண்டவற்றை விலக்கி, அறியாதவற்றை விளக்கி அவர் நமக்களிக்கும் பதிவை அறிந்துகொள்வோம்.வாருங்கள்.
10. இன்றைக்கு நூறு வருடங்களுக்கு முந்தைய மதராசப்பட்டணத்தைக் காண ஆவலாக உள்ளீர்களா? கிராமத்துக் காக்கையின் வலைத்தளம் வழியே நமக்கு சுற்றிக்காட்டுகிறார். மெரீனா கடற்கரையையும், அண்ணா சாலையையும் நேப்பியர் பாலத்தையும் பாரிமுனையையும் படத்தில் உள்ளது போல் நினைத்துப் பார்க்க முடிகிறதா உங்களால்?
11. தமிழர்
தமிழர் என்று மூச்சுக்கு மூச்சு பெருமை பேசும் நாம் நம் இல்லத்து நூலகத்தில் எத்தனை
தமிழ் நூல்களைக் கொண்டிருக்கிறோம்?
ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் அவசியம் இருக்கவேண்டிய நூல்களின் பட்டியலை
இங்கு வெளியிட்டுள்ளார் தென்றல் தளத்தில் தோழி கீதா. அவருடைய முயற்சிக்கு நம்
பாராட்டுகளைத் தெரிவிப்போம்.
12. 'நீராருங் கடலுடுத்த' என்று துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பள்ளிக்காலத்திலிருந்தே பாடியும் கேட்டும் வருகிறோம். அதை இயற்றியவர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை என்பது
வரை மட்டுமே அறிந்துள்ள நமக்கு, அப்பாடலின் மகத்துவத்தையும் அது
தமிழ்த்தாய் வாழ்த்தாக அங்கீகரிக்கப்பட்டதன் பின்னணியையும் தெளிவாக எடுத்துரைத்திருப்பதோடு,
ஐந்தாம் தமிழ்ச்சங்கம் என்று பெருமைக்குரிய, நூற்றாண்டு
வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட கரந்தைத் தமிழ்ச்சங்கம் பற்றியும் நாம் அறியாத பல அற்புதத்
தகவல்களையும் இங்கு வழங்குகிறார் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.
வாழிய
செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய
பாரத மணித்திரு நாடு!
இன்றெமை
வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை
வந்தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்
வளர்ந்திடுக! மறம் மடிவுறுக!
–
பாரதியார்
நன்றி. மீண்டும் நாளை சந்திப்போம்
உறவுகளே.
(தகவல் உதவி: விக்கிபீடியா, படங்கள் உதவி: இணையம்)
//எனது எண்ணங்கள் வலைப்பூவில் திரு. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்.//
ReplyDeleteஇவர் என் இனிய நண்பர். நம்ம ஊராம் திருச்சியில் வசிப்பவர். இவரை இன்று சிறப்பித்து அடையாளம் காட்டியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
மற்றவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
மிகச் சிறப்பான அறிமுகங்களுக்குத் தங்களுக்கு என் நன்றிகள்.
மிக்க நன்றி வை.கோ.சார்.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சரத்தை சிறப்பித்த அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன். அனைத்து தளங்களுக்கும் சென்று வலைச்சர அறிமுகம் பற்றிக் குறிப்பிட்டமைக்கும் மிக்க நன்றி.
Delete//6. அழிந்து கொண்டிருக்கும் மற்றொரு கலையான தெருக்கூத்து பற்றி வசந்த மண்டபத்தில் அன்னைத் தமிழை வணங்கி அழகான தமிழால் இயற்றி அவர்தம் குரலால் பாடியும் பதிவிட்டுள்ளார். கட்டியங்காரனைக் கோமாளி என்று மட்டுமே நினைத்திருக்கும் பலருக்கும் கூத்தில் அவருடைய முக்கியப் பங்கு வியப்பளிக்கும். //
ReplyDeleteஇதை நான் ஏற்கனவே மிகவும் ரஸித்துப்படித்து மகிழ்ந்து பின்னூட்டமும் இட்டுள்ளேன். மிகச்சிறப்பாகவே எழுதியுள்ளார். அவருக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
அழிந்துகொண்டிருக்கும் கலைகளை இப்படியாவது நம்மால் அறிந்துகொள்ள முடிகிறதே. மறுவருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சார்.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகம் செய்த தளங்களில்.3.4.5.6.9.11.12இந்த இலக்கம் இடப்பட்ட தளங்கள் அறிந்தவை.. ஏனையவை அறியாதவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிகவும் நன்றி ரூபன்.
Deleteகருணையோடு என்னையும் இணைத்தீர்கள் தோழி.
ReplyDeleteமனமார்ந்த நன்றி!
கூடவே இத்தனைக்கும் அது உரித்துடையதா என்று கூச்சமாகவும் இருக்கிறது.
வலைக்குடும்ப நண்பர்களே! நீங்களும் எல்லோரும் என் உறவினரே. அஷ்யபாத்திரம் உங்களை வாத்ஷல்யத்தோடு உண்டு உறவாடி இளைப்பாறிச் செல்ல அழைக்கிறது.
மிக்க நன்றி.
உங்களுடைய அனைத்து பதிவுகளும் ஆக்கபூர்வமானவை. பலரும் படித்து பயனடையவேண்டுமென்பதே என் விருப்பம். மிக்க நன்றி மணிமேகலா.
Deleteஅழகுத் தமிழுடன், அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள் பற்றிய அக்கறையுடன் இணைந்து வந்த அறிமுகங்கள் அனைத்தும் அருமை. நான் அறியாத பல தளங்கள் இதில் உள்ளமை கண்டு மகிழ்வு. குறிப்பாக... தமிழர் அவசியம் படிக்க வேண்டிய நூல்களைப் பட்டியலிட்ட பகிர்வு மனங்கவர்ந்தது. அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteமிகவும் நன்றி கணேஷ்.
Deleteதமிழரின் மொழி, வாழ்க்கை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு போன்ற நிகழ்வுகளின் அடிப்படையிலான சில பதிவுகளை இன்று காண்போம்.//
ReplyDeleteஅருமையான் தளங்கள் அறிமுகத்திற்கு நன்றி.
வாழ்த்துக்கள் எல்லோருக்கும். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி மேடம்.
Delete
ReplyDeleteஅறிமுகப்படுத்தியுள்ள வலைப்பதிவர்களில் திரு தி தமிழ் இளங்கோ மற்றும் திரு கரந்தை ஜெயக்குமார் ஆகியோர்களின் வலைத்தளங்கள் தவிர மற்றவர்களின் வலைத்தளம் எனக்குப் புதியவை. அவைகளை படிக்க இருக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி!
மிகவும் நன்றி ஐயா.
Deleteஅற்புதமான அறிமுகங்கள்
ReplyDeleteஎன்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி
த.ம.2
தங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்து வாசிப்பவள் நான். நேரக்குறைபாடு காரணமாக பல சமயங்களில் பின்னூட்டமிட இயல்வதில்லை. தங்கள் தளம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை. வருகைக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteவணக்கம் .மிக அருமையாக தமிழ் தொடர்பான அறிய செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது .எனது வலையையும் இணைத்தமைக்கு நன்றி .வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
ReplyDeleteமிக்க நன்றி கீதா.
Deleteஇன்றைய வலைச்சரத்தின் அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteமிகவும் நன்றி தங்களுக்கு.
Deleteதமிழ் கலாசாரம்,மரபு, இவைகளைப் பற்றி விரிவாகப் படிக்க , அருமையான பதிவுகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சிலர் எனக்குப் புதியவர்களை. படிக்க செல்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.....
மிக்க நன்றி தோழி ராஜலக்ஷ்மி.
Deleteதமிழ் பேசும் பதிவு.. அருமை..
ReplyDeleteநன்றி கோவை ஆவி.
DeleteNarayanan Kannan, ரமேஷ்.மு - இவர்களின் தளங்கள் புதியவை...
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
சிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
உங்களுக்கு அறிமுகமில்லாத் தளங்களை இங்கு அறிமுகம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி தனபாலன்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமிக்க நன்றி...இந்த பணியினை தொடர வாழ்த்துங்கள்..
ReplyDeletehttp://www.varalaatrupudhayal.com/p/blog-page_12.html#
நன்றி ஐயா.
Deleteதமிழரின் மொழி, வாழ்க்கை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு போன்ற நிகழ்வுகளின் அடிப்படையிலான பதிவுகள்...சிறந்த அறிமுக தொகுப்புகள்.
ReplyDeleteமிக்க நன்றி கலாகுமரன்.
Deleteகருப்பு நிழற் படங்கள் அழகு !
ReplyDeleteஉங்கள் ரசனைக்கு மற்றுமொரு நன்றி.
Deleteசோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான வலைப்பூவில் ஒவ்வொரு மாதமும முதல் தேதி வெளியிடுகிறேன். அதன் ஆங்கிலப் பதிப்பை 15ஆம் தேதி வெளியிடுகிறேன். எனது வலைப்பூவை இணைத்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteதாங்கள் பெருமுயற்சி செய்து திரட்டும் அரிய தகவல்கள் பலருக்கும் உதவும் வண்ணம் இங்கு அறிமுகப்படுத்த எனக்கு வாய்ப்பு அமைந்தமைக்காக மகிழ்கிறேன். கூடுதல் தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteஇந்த வாரம் – வலைச்சரம் ஆசிரியை பொறுப்பேற்று , இன்றைய பதிவினில் எனது வலைத்தளத்தை அறிமுகம் செய்ததோடு, தகவலையும் எனது வலைத்தளத்தில், தெரிவித்த சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நன்றி! மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deletewow! eththanai vishayangal! paaraattukkal.
ReplyDeleteமிக்க நன்றி அப்பாதுரை சார்.
Deleteமுன்னுரையும் அறிமுகப்பதிவும் சிறப்பாக உள்ளன! அனைவருக்கும் இனிய வாழ்த்து!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteதமிழ் தமிழ் என்றே பல செய்திகளையும் தொகுத்து கண்ணிற்கும் உள்ளத்திற்கும் விருந்து படைத்தீர் தோழி, மிக்க நன்றி!
ReplyDeleteதோழி கீதா மற்றும் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தவிர அனைவரும் எனக்குப் புதியவர்..அனைவரின் தளங்களையும் பார்க்கிறேன்.
ரசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கிரேஸ்.
Deleteஎன்னுடைய தோல்பாவைக்கூத்து கட்டுரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. மேலும், தமிழின் தொன்மையை பறைசாற்றும் பதிவுகளை எடுத்தியம்பியமைக்கு நன்றிகள் பல.
ReplyDelete- சித்திரவீதிக்காரன்
www.maduraivaasagan.wordpress.com
உங்களுடைய பதிவுகளில் பலவும் என்னைக் கவர்ந்தவை. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சித்திரவீதிக்காரன்.
Deleteவலைச்சரம் ஆசிரியப் பொறுப்பேற்றமைக்கும் அழிந்து வரும் தமிழரின் பாரம்பரிய கலைகளைப் பற்றிய செய்திகள் அடங்கிய வலைப்பூக்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்திய கீதமஞ்சரிக்குப் பாராட்டுக்களும் நன்றியும்.
ReplyDeleteவருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி அக்கா.
Deleteஅருமையான தளங்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்.
Deleteதமிழின் பெருமைகளை இயம்பிடும் வலைப்பூக்களை இன்று அறியத் தந்தீர்கள். சிறப்பான அறிமுகங்கள். நன்றி!
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.
Deleteஅன்புநிறை சகோதரிக்கு வணக்கம்,
ReplyDeleteதங்களின் வலைச்சரப் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிறந்த படைப்பாளிகள் மத்தியில் என்னையும் அறிமுகப்படுத்தி
என் படைப்பை பெருமைப்படுத்தி விட்டீர்கள். நேரக்குறைவின் காரணமாக
தொடர்ந்து எழுத முடியாமல் இருக்கிறேன். நிச்சயம் நன்முறையில் தொடர்கிறேன் சகோதரி.
அறிமுகப்படுத்தியதோடு நில்லாது என் தளம் வந்து செய்தி கொடுத்தமைக்கு நன்றிகள் பல.
மேலும் இச்செய்தியை எனக்கு உரைத்த ஐயா வை.கோ, சகோதரி இராஜராஜேஸ்வரி, நண்பர் தனபாலன், நண்பர் ரூபன் ஆகியோருக்கு நன்றிகள் பல.
நாட்டுப்புறக் கலைகள் சம்பந்தமான என் படைப்புகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து
எனக்கு தன்னம்பிக்கை ஊட்டி வளர்க்கும் ஐயா வை.கோ, காட்டான் மாமா, முனைவர் இரா.குணசீலன், நண்பர் நாஞ்சில் மனோ, ஐயா சுப்பு தாத்தா ஆகியோருக்கு இந்நேரத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டிய பல தகவல்களையும் பழந்தமிழ்ச் சொற்களையும் கவிதை வாயிலாய்த் தந்து மிக எளிதாய் அறியச் செய்கிறீர்கள். உங்கள் பணி போற்றுதற்குரியது. மிக்க நன்றி மகேந்திரன்.
Deleteவாழ்த்தும் நன்றியும் கீதமஞ்சரி நிறைய சுவையான தளங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள் மிக்க நன்றி அனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteமிக்க நன்றி உமா. இப்பதிவை முகநூலில் உங்கள் பக்கத்திலும் அடையாளங்காட்டியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.
Deleteஇன்பத் தமிழே என்னுயிரே
ReplyDeleteஇறைவன் தந்த சொற்பதமே
கன்னல் சுவையில் கவிபடைக்கும்
கருத்துச் செறிவின் அற்புதமே
பொன்னும் பொருளும் கேட்க்காமல்
பொழிந்தே நாவில் எப்போதும்
என்னுள் ஏற்றம் தந்திடுவாய்
என்றும் உன்னை பாடிடவே ..!
தமிழின் பெருமை கூறும் பதிவில் நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
நாவினிக்கும் தமிழின் பெருமையை நாளெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கலாம். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீராளன்.
Deleteவலைச்சரத்தில் வாரந்தோறும் ஏராளமான தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் மொழி,கலாச்சார விடயங்களைப் பற்றிய தகவல்களைத் தரும் தளங்கள் அறிமுகப்படுத்தப்படுவது மிகக்குறைவே.அவ்வகையில் இத்தகைய தளங்களை அறிமுகப்படுத்தியமைக்காக பாராட்டுக்கள்.
ReplyDeleteமிகவும் சிரத்தை எடுத்து எழுதப்படும் பல அற்புத தகவல்கள் வாசகரைச் சென்றடையாமல் போவது வருத்தத்துக்குரியது. கடலிலிருந்து கையளவாவது சிந்தாமல் கொணரமுடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. நன்றி தினேஷ்.
Deleteமிகவும் சிறப்பான தளங்களை அறிமுகம் செய்தமைக்கு தங்களுக்கும் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி குமார்.
Deleteமொழி - கலாச்சார அறிமுக வலைத்தள அறிமுகங்கள் சிறப்பு.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மிக்க நன்றி தோழி.
Deleteசிறப்பான தளங்கள். இந்த ஞாயிறன்று தான் தில்லியில், கரகாட்டம், பொய்க்கால் குதிரை மற்றும் கைச்சிலம்பாட்டம் பார்த்தேன் - தைப் பொங்கல் விழாவில். நேற்று ஒரு பதிவும் எழுதியிருந்தேன். இன்று உங்கள் பக்கத்தில் பல்வேறு சிறப்பு அறிமுகங்கள்.... வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி வெங்கட்.
Deleteநீங்கள் வித்தியாசமானவர் என்று தெரியும்.ஏன் என்பது இப்போது தெரிகிறது. எத்தனை விதமான செய்திகள்....நிறையப் படிப்பதாலேயே ரசனையும் வித்தியாசமாய் இருக்கிறது. ஒரு ஆறுதலான விஷயம். திரு. வெங்கட் நாகராஜின் பதிவு மூலம் கல்லூரிப் பெண்கள் நம் பாரம்பரியக் கலையான கரகாட்டத்தை தலைநகரில் நிகழ்த்திய செய்தி படித்தபோது கிடைத்தது. வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல செய்தி ஐயா. விரைவில் அந்தப் பதிவை வாசிப்பேன். தங்கள் வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.
Deleteநாட்டுப்புற கலைகளை பற்றிய சிறப்பான வரிகளும், அறிமுகங்களும்... பாராட்டுகள்..
ReplyDeleteநன்றி ஆதி.
Deleteமிக அருமை நன்றி
ReplyDelete