சென்னையில் நடைபெறும்
37-வது புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாள் இன்று. எத்தனைப் பேரின் மனம் நிறைந்திருக்கிறதோ இன்று! இந்த புத்தகத் திருவிழாவில் பதிவர்கள் பலரது புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
நூலாசிரியர்கள் அனைவருக்கும் நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
வாசிக்கும்
பழக்கம் இல்லாத வாழ்க்கையை பதிவர்களாகிய நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?
உண்மையான
வாசகன், வாசிப்பதை
விடுவதே இல்லை என்கிறார் எழுத்தாளர் ஆஸ்கார் வைல்ட்.
புத்தகம்
இல்லாத அறை ஆன்மா இல்லாத உடலுக்கு ஒப்பானது என்கிறார்
சீசர்.
புத்தகத்தைப்
போன்றதொரு நல்ல நண்பன் யாருமில்லை என்கிறார்
எர்னெஸ்ட் ஹெம்மிங்வே.
இதுவரை
எவருமே எழுதியிராத ஒரு புத்தகத்தை வாசிக்கவேண்டுமென்று நீ விரும்பினால் அதை நீயே
எழுது என்கிறார் டோனி மாரிசன்.
வாசிக்க
நேரமில்லை என்று சொல்பவர்களுக்கு வாசிப்பில் ஆர்வமில்லை என்று பொருள் என்கிறார் ஜூலி ரக்.
புத்தகங்கள்
மக்களை மாற்றுவதில்லை. பத்திகள் மாற்றிவிடுகின்றன. சில சமயங்களில் வாக்கியங்களே
அந்த வேலையைச் செய்துவிடுகின்றன என்கிறார்
ஜான் பைப்பர்.
புத்தகத்தின்
மேலட்டையைக் கொண்டு அதன் உள்ளடக்கத்தை ஒருபோதும் தீர்மானிக்காதீர்கள் என்பது ஒரு
ஆங்கிலப் பழமொழி. உள்ளடக்கம் அறிய வேண்டுமானால் ஒரு விமர்சகரின் தேவை நமக்குக் கட்டாயம்
தேவை.
எழுத்தும்
வாசிப்பும் இரு கண்கள் என்றாகிவிட்ட நிலையில் விமர்சனம் என்னும் மூன்றாம் கண்ணின்
பார்வையும் முக்கியமானதாகிறது.
விமர்சிப்பது
ஒரு திறமை. அது அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் கைவந்துவிடுவதில்லை. விமர்சனத்தை
ஏற்பதும் ஒருவித திறமை. அதுவும் அவ்வளவு எளிதில் அனைவருக்கும் கைவந்துவிடுவதில்லை.
எதிர்மறை
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை
என்பதும் உண்மை. நிறைகளைப் பாராட்டும்போது நெக்குருகும் மனம் குறைகளைப் பற்றிச்
சொன்னால் குமுறலும் குரோதமும் கொள்ளும் நிலை மாறவேண்டும்.
கண்டனத்தைத்
தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையெனில் கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியாது
என்கிறார் அறிஞர் அண்ணா.
விமர்சனங்களைத்
தவிர்க்க விரும்பினால் எதையும் பேசாமல் எதையும் செய்யாமல் சும்மா இரு என்கிறார் அரிஸ்டாட்டில்.
நமக்கேற்படும்
பெரும்பிரச்சனை என்னவெனில் விமர்சனங்களால் காப்பாற்றப்படாமல் புகழுரைகளால்
அழிக்கப்படுவதுதான் என்கிறார் நார்மன் வின்சென்ட் பீலே. உண்மைதான் அல்லவா?
கொஞ்சிக்
கொஞ்சி குழந்தைகளைப் பாழாக்குவதைப் போன்றது படைப்பாளிகளைப் பாராட்டிப் பாராட்டி அவர்தம்
குறையுணராது செய்வது. அதே சமயம் ஒரு தேர்ந்த நேர்மையான விமர்சனமானது படைப்பின்
மீதான மதிப்பைக் கூட்டுவதாக உள்ளது.
ஒரு படைப்பாளியிடமிருந்து ஒரு படைப்பை ஒரு அடித்தட்டு வாசகன் வரையிலும்,
ஒரு கலைஞனிடமிருந்து அவன் கலைத்திறனை ஒரு கடைக்கோடி
ரசிகன் வரையிலும் கொண்டுசெல்லும் வண்ணம் ஒரு பாலமாக செயல்படுகின்றன ஆக்கபூர்வ விமர்சனங்கள்.
1. ஒரு எழுத்தாளன்தான் அவனுடைய படைப்பின் முதல் வாசகனாக இருப்பான். அவனே முதல் விமர்சகனாகவும் இருக்கமுடிந்தால் அந்தப் படைப்புக்கும் நல்லது, படைப்பாளிக்கும் நல்லது என்கிறார், பிரான்சில் வாழும் புதுச்சேரிக்காரரான திரு. நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள். பிரெஞ்சு, ஆங்கில, தமிழ் இலக்கியங்களில் தேர்ந்த படைப்பாளியான அவர் ஒரு நாவலை தலை, இடை, கால் எனப் பிரித்து எங்கெங்கு எவ்வித சிரத்தை மேற்கொண்டு எழுதவேண்டும் என்னும் யுக்தியைக் கற்றுத்தருகிறார் நமக்கு.
1. ஒரு எழுத்தாளன்தான் அவனுடைய படைப்பின் முதல் வாசகனாக இருப்பான். அவனே முதல் விமர்சகனாகவும் இருக்கமுடிந்தால் அந்தப் படைப்புக்கும் நல்லது, படைப்பாளிக்கும் நல்லது என்கிறார், பிரான்சில் வாழும் புதுச்சேரிக்காரரான திரு. நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள். பிரெஞ்சு, ஆங்கில, தமிழ் இலக்கியங்களில் தேர்ந்த படைப்பாளியான அவர் ஒரு நாவலை தலை, இடை, கால் எனப் பிரித்து எங்கெங்கு எவ்வித சிரத்தை மேற்கொண்டு எழுதவேண்டும் என்னும் யுக்தியைக் கற்றுத்தருகிறார் நமக்கு.
2. . மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவன் என்னும் கவிஞர் செந்தில் பாலா அவர்களின் நூலுக்கான விமர்சனத்தைத் தருகிறார் தனது கதை கவிதைகளின் வழியே மனிதம் உரைக்கும் தோழி நிலாமகள். கவிதை விமர்சனத்தோடு
கவிஞரது வீட்டிற்குச் சென்றபோது தான் கண்ட அனுபவத்தையும் கலந்து சொல்லி விமர்சனத்துக்கு
வலு சேர்க்கிறார்.
3. மனித
வாழ்க்கையை, உணர்வுகளை எழுத்துக்களால் படம்பிடிப்பதில் தேர்ந்தவரான திரு. ஹரணி ஐயா அவர்களின் நத்தையோட்டுத் தண்ணீர் நூலுக்குக் கிடைத்த ஏராள விமர்சனங்களுள்
ஒன்றினை இங்கு பகிர்கிறேன். பேராசிரியர் நீ.வ.கருப்பசாமி அவர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்து
அதன்மீதான தன் கருத்தை நேர்த்தியாய் விரித்துள்ளார்.
4. இன்றைய புத்தகங்களுக்கு முன்னோடி எது?
அதை எழுதியவர் யாரென்று அறிய ஆவலா? இத்தாலியில்
பிறந்து தமிழுக்கு ஏராளத் தொண்டாற்றியவர், முதல் அகரமுதலியாக
தமிழ் –லத்தீன் அகராதியை உருவாக்கியவர், முதன்முதலாய் அச்சில் தமிழ்நூலை ஏற்றியவர் என்ற பெருமைக்குரியவரைப் பற்றித்
தெரிந்துகொள்ள இங்கே வாருங்கள். தமிழர் வாழ்வின் வேர்களைத் தேடித்
தேடி நமக்கு அறியத்தரும் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் ஒவ்வொரு
பதிவும் பொக்கிஷமாய்ப் பாதுகாக்கவேண்டியவை.
5. கவிஞர்
தூரன்குணா அவர்களின் சிறுகதைத் தொகுப்பான திரிவேணி பற்றிய விமர்சனத்தில் பல கதைகளை
சிலாகித்தபோதும் ஒரு சில கதைகளுக்கான மாற்றுக்கருத்தை மனந்திறந்து அதேசமயம் படைப்பாளியின்
மனம் நோகாமல் இங்கு பதிந்துள்ளார் தோழி லாவண்யா சுந்தராஜன் உயிரோடையில்.
6. திரைத்துறையிலிருப்பவர்களின் பொறுப்பின்மை குறித்த ஒரு அலசலை நேர்த்தியாக இங்கு முன்வைத்திருக்கிறார் திரு. நா. முத்துநிலவன் ஐயா அவர்கள். வீட்டுக்கூடத்துள் குந்தியிருக்கும்
தொலைக்காட்சிப்பெட்டி வாயிலாக பிஞ்சுமனங்களுக்குள் தணிக்கையற்றுத் தூவப்படும் நச்சு
வித்துக்களைப் பற்றியும் இப்பதிவில் நச்செனச் சாடியுள்ளார்.
7. மதுரை
தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியச் சூத்திர விருத்தி, சிவஞான முனிவரின் நன்னூல் விருத்தி,
தொன்னூல் விளக்கம் போன்ற பல அரிய நூல்கள் பல மறு பதிப்புப் பெறாமல் சிதிலமடைந்து
கிடப்பதாக தன் ஆதங்கத்தை மொழிவதோடு அத்தகைய அரிய நூல்களுக்கு அழிவில்லா நிலையை ஏற்படுத்த
நாம் என்ன செய்யவேண்டும் என்ற ஆலோசனையையும் இங்கு முன்வைக்கிறார் இலக்கணத்தேறல் வலையின்
திரு. கோபிநாத்
அவர்கள்.
8. கிட்டத்தட்ட
நூறு வருடங்களுக்கு முன், பல அரிய தமிழ் நூல்களை எழுதியும் பதிப்பித்தும் தமிழ்த்தொண்டாற்றியவரும்,
தான் புரிந்த பல நற்காரியங்களால் பரோபகாரப் போலீஸ் உத்தியோகஸ்தர் என்று பெயர் பெற்றவரும் தான் ஈட்டிய பொருளையெல்லாம் தான் துவக்கிய கல்வி நிறுவனத்துக்கே எழுதிவைத்தவருமான பதிப்பாசிரியர் ச.பவானந்தம்பிள்ளை பற்றி அறிந்துகொள்ள திருமதி பக்கங்களில் திருமதி. கோமதி அரசு அவர்களின் பதிவை வாசிக்க வாருங்கள். நம் முன்னோர்களைப் பற்றி அறிந்துகொள்வது நமக்குப் பெருமையல்லவா!
9. ‘என்னை புரட்சி எழுத்தாளர் என என்னை
குறிப்பிட்டுள்ளதைப் பார்த்து அதிர்ந்தேன். புரட்சியுமில்லை, எழுத்தாளனுமில்லை, வெறும் பெயர் போதும்
ஒரு மனிதனை அடையாளப்படுத்த’ என்று சொல்லும் திரு.பவா செல்லதுரை அவர்களுடைய பேட்டி 19. டி. எம். சாரோனிலிருந்து. ஒரு எழுத்தாளனே
இலக்கியக்கூட்டங்களை நடத்தும் களப்பணியாளனாக இருப்பது குறித்தும், தன் புனைவுகளும் கட்டுரைகளும் ஒரே தன்மையினவாய் இருப்பதற்கான காரணத்தையும் இன்னும் பல கருத்துக்களையும் பகிர்ந்துகொள்கிறார். அறிந்துகொள்ள
வாருங்கள்.
10. ‘நீ எதிலும் உருப்படப் போவதில்லை’ என்று ஒரு மாணவனின் எதிர்காலம் பற்றிய ஆசிரியரின் விமர்சனத்தைப் பொய்யாக்கி
உலகமே கொண்டாடும் வகையில் உயர்ந்த அறிவியல் மேதை யாரென்று அறிய வேண்டுமா? இங்கு வாருங்கள். அறிவியல் விஞ்ஞானத் தகவல்களுக்கென்றே ஒரு தனித்துவமான தளம். இடையிடையே கவித்தமிழும் அதில் கொஞ்சி விளையாடுவது காண்பதற்கின்பம். சர்.சி.வி இராமன்
முதல் ஐன்ஸ்டீன் வரை ஏராளமான விஞ்ஞானிகளைப் பற்றியும்
விஞ்ஞானத் தகவல்களையும் விரிவாக எழுதி படங்களுடன் விளக்கியுள்ள அவருக்கு நம் பாராட்டுகள்
உரித்தாகட்டும்.
11. தமிழின் முதல் புதினம் பிரதாப முதலியார் சரித்திரம் என்றுதானே அறிந்திருக்கிறோம். ஆனால் அதற்கு முன்பாகவே 1875 இல் தமிழில் வெளியான புதினம் ஆதியூர் அவதானி சரிதம் என்று கிட்டத்தட்ட நூற்றிருபது வருடங்களுக்குப் பின், 1994 இல் கண்டுபிடிக்கப்பட்டு மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று திரு.பெருமாள் முருகன் அவர்கள் அறிவிக்கும் செய்தி நமக்குப் புதியது. அந்த விவரம் என்ன? அறிந்துகொள்ள இங்கு வாருங்கள்.
12. விமர்சனப் பிரியர்களுக்காகவும்
முழுமையான ஈடுபாட்டுடன் வாசிப்பில் ஈடுபடவும் ஊக்கமளிக்கும் வண்ணம் தான் எழுதிய
சிறுகதைகளுக்கான விமர்சனப் போட்டியொன்றை இங்கு அறிவித்துள்ளார்
திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள். ரூபாய் பன்னிரண்டாயிரம் முதல் ஊக்கப்பரிசுகளை
அள்ளிவழங்கத் தயாராய் காத்திருக்கும் அவருடைய வள்ளன்மையையும் பெருந்தன்மையையும்
பாராட்டுவதோடு அனைவரும் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற என் வாழ்த்துக்கள்.
நன்றி நண்பர்களே.
மீண்டும் நாளை சந்திப்போம்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அறிமுகப்பக்கங்கள் சென்று வருகிறேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உடனடி வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் நன்றி ரூபன்.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகம் செய்து வைத்த வலைப்பூக்களில் .இலக்கம்./2/5/7/ 9/10/ஆகிய தளங்கள் புதியவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு பாராட்டுக்கள்
த.ம.1வது வாக்கு
-நன்றி-
-அன்படன்-
-ரூபன்-
மிகவும் நன்றி ரூபன்.
Deleteஅறிமுகங்கள் அருமை
ReplyDeleteத.ம.2
மிகவும் நன்றி ஐயா.
Deleteநன்றி சகோதரி கீதமஞ்சரி. வலைச்சர அறிமுகம் கிடைத்ததற்கும், புதிய நண்பர்களின் அறிமுகததிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். வலைச்சர நண்பர்களுக்கு என் வணக்கங்கள். வாசிப்புத் தொடங்கி விமர்சனம் வரையான தங்களின் அறிமுகவுரையும் அருமை. மீண்டும் நன்றி தொடர்வோம். வணக்கம்
ReplyDeleteபதிவை ரசித்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteபுத்தகக் கண்காட்சி நிறைவு பெரும் இந்நாளில் பொருத்தமான பொன்மொழிகளைத் தந்து வாசிக்கும் பழக்கம் தேவை என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதமிழின் முதல் புதினம் பிரதாப முதலியார் சரித்திரம் அல்ல என்பது புதிய தகவல்.
சில தகவல்கள் எனக்கும் புதியதாக இருந்தமையால்தான் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. மாற்றுக்கருத்துகளும் இருக்கலாம். இருந்தால் வரவேற்கிறேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
Deleteஅழகான பொன்மொழிகளை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி..
ReplyDeleteநல்ல வலைத்தளங்களை அறிமுகம் செய்த தங்களுக்கும்
அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வலைப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
தொடர் ஊக்கத்துக்கு மிக்க நன்றி தங்களுக்கு.
Deleteஅருமையான பொன்மொழிகளோடு அருமையான தளங்கள்..சென்று பார்க்கிறேன்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்!
மிக்க நன்றி கிரேஸ்.
Deleteவிமர்சிப்பது ஒரு திறமை. அது அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் கைவந்துவிடுவதில்லை. //
ReplyDeleteவணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது சரிதான்.
விமரிசிப்பது ஒரு திறமை தான்.
அதனால் தான் திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் கதைவிமர்சன போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
என் வலைத்தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி கீதமஞ்சரி.
இன்று அறிமுகமானவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ஆசிரியர் பணியை சிறப்பாய் செய்து வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
சித்திரமும் கைப்பழக்கம் அல்லவா? தொடர்ந்து முயன்றால் விமர்சனமும் கைவந்துவிடுமே. அடுத்தமுறை தயங்காமல் கலந்துகொள்ளுங்கள். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.
Deleteவலைச்சரத்தில் என் பதிவு இடம்பெற்றதை சொல்லி வாழ்த்திய ரூபனுக்கு நன்றி.
ReplyDeleteதகவல் சொன்ன உங்களுக்கும் நன்றி கீதமஞ்சரி.
நன்றி மேடம்.
Deleteஅனைத்தும் தொடரும் தளங்கள்... அருமையான தளங்கள் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ஆசிரியர் கவனத்திற்கு : புத்தகங்களைப் பற்றிய சிறிய பதிவு தான் இன்று...
1. வாழ்க்கையின் எந்த நெறிமுறைகளுமே படிப்பதற்கும், அடுத்தவர்க்கு உப்தேசிப்பதற்கும் அல்லது அடுத்தவர் உபதேசத்தை கேட்பதற்கும் நன்றாகத் தான் இருக்கும்... ஆனால்...
2. புத்தக விற்பனை மூலம் சாதனை படைத்திருந்தாலும், கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 5000 பேர்களுக்கு மேல் ஒரு கட்டுரை பதிவிறக்கம் செய்து வாசிக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா...? 5000 பேர்கள் என்பது இன்றைய நிலவரப்படி... நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகும்... மனது முழுவதும் சந்தோசம் - அதுவும் திருப்தியாக...! யாருக்கு...?
http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html - Click to read
வாசித்தறிந்து அசந்துபோனேன். பகிர்வுக்கு நன்றி தனபாலன்.
Deleteமிக்க நன்றி. :)
ReplyDeleteநன்றி லாவண்யா.
Deleteஎன் தளம் அறிமுகசெய்யப்பட்டதை தகவல் சொல்லி வாழ்த்திய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteவாசிக்கும் பழக்கம் தேவை என்பதை வாசிக்கவே ஓடி வந்து விட்டேன் தோழி. நலம் தானே ? வலைச்சர ஆசிரியா் பணிக்கு வாழ்த்துக்கள். அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள். தொடருங்கள் தொடா்கிறேன்.
ReplyDeleteநலமே சசி. வாழ்த்துக்கு மிக்க நன்றி.
Deleteஅற்புதமான பதிவர்களை
ReplyDeleteஅருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
நான் இதுவரை செல்லாத பதிவுகள்
சிலவற்றை தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்
பகிர்வுக்கு மிக்க நன்றி
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி சார்.
Deleteமிக அருமையான தளங்கள்! அழகாய் அறிமுகம் செய்தமை சிறப்பு! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்.
Deleteஎனது இலக்கணத் தேறல் வலைப் பக்கத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் சகோதரி.
ReplyDeleteமிகவும் நன்றி கோபிநாத்.
Deleteதமிழ் மொழி பெருமைகளை உள்ளடக்கிய பல பதிவுகளின் அறிமுகங்களுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி தங்களுக்கு.
Deleteபலர் எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள்... படிக்கிறேன்.
ReplyDeleteமிகவும் நன்றி வெங்கட்.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிகச் சிறப்பான அறிமுகப் பகிர்வு.
மிகவும் நன்றி குமார்.
Deleteமகிழ்வும் நன்றியும் தோழி!
ReplyDeleteஅறிமுகப் படுத்தப் பட்ட சக பதிவர்களுக்கு வாழ்த்தும்! சில புதிய பதிவுகளை சென்றடைய வலைச்சரம் பெயருக்கேற்றார் போல் எப்போதும் கைகொடுக்கிறது.
நிறை குறை இரண்டையும் விமர்சனம் என்ற சொல்லில் நாம் அடக்குவோம். தெலுங்கில் குறையை மட்டும் சொல்வது 'விமர்சனம்' என்றும், நிறையை எடுத்துச் சொல்ல 'ஹர்ஷின்ஜடம்' என்ற பதப்பிரயோகம் உண்டென்றும் இனிய தோழி சாந்தா தத் மூலம் அறிந்தபோது ஏற்பட்ட வியப்பை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
நூலை படைப்பாளியிடமிருந்து புதிய வாசகரிடம் கொண்டு சேர்க்கும் ருசி கண்ட வாசகன் அதற்காக முன்னிலைப் படுத்தப் படுவதால் மேலும் தன் செயலில் ஊக்கம் பெறுகிறான்.
ஊக்கமிகு மறுமொழிக்கு நன்றி நிலாமகள். உங்கள் படைப்புகளில் பலவும் என்னைக் கவர்ந்தவை. நூல்விமர்சனம் என்றதும் சட்டென்று மேற்குறிப்பிட்ட உங்கள் பதிவுதான் நினைவுக்கு வந்தது. புதிய தகவல் பகிர்வுக்கும் நன்றி நிலாமகள்.
Deleteஅக்கறையுடன் தகவல் அளித்த திண்டுக்கல் தனபாலன், ரூபன், கீத மஞ்சரி ஆகியோருக்கு நன்றி!!!
ReplyDeleteதங்கள் தொகுப்பு அருமை. எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள். ஆசிரியப்பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி முனைவர் அவர்களே.
Deleteஇரண்டு ஆண்டுகளாக பதிவுலகில் இருந்தும் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒரு சில பதிவர்கள் பக்கம் சென்றதில்லை . அறிமுகங்கள் அருமை
ReplyDeleteமிகவும் நன்றி முரளிதரன்.
Deleteசகோதரி ! நான் அறியாத வலைத்தளங்கள் பலவற்றை அறிந்தேன்! இன்றைய பதிவு நன்று! முதுமையும் , இயலாமையும் , என்னை அதிகம் படிக்க அனுமதிக்க வில்லை!
ReplyDeleteதங்கள் பணி சிறக்க வாழ்த்து!
உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் ஐயா. தங்கள் எழுத்துப்பணி பாராட்டத்தக்கது. தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
Deleteவாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் பதிவுகள்...
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஆதி.
Delete//12. விமர்சனப் பிரியர்களுக்காகவும் முழுமையான ஈடுபாட்டுடன் வாசிப்பில் ஈடுபடவும் ஊக்கமளிக்கும் வண்ணம் தான் எழுதிய சிறுகதைகளுக்கான விமர்சனப் போட்டியொன்றை இங்கு அறிவித்துள்ளார் திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள். ரூபாய் பன்னிரண்டாயிரம் முதல் ஊக்கப்பரிசுகளை அள்ளிவழங்கத் தயாராய் காத்திருக்கும் அவருடைய வள்ளன்மையையும் பெருந்தன்மையையும் பாராட்டுவதோடு அனைவரும் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற என் வாழ்த்துக்கள்.//
ReplyDeleteஎன் வலைத் தளத்தினைப்பற்றி இங்கு வலைச்சரத்தில் பேசியுள்ளதற்கு மிக்க நன்றி, மேடம்.
நான் தங்களுக்கு நன்றி சொல்லவே இவ்வளவு தாமதாக இங்கு வரும்படியான நிலையில் உள்ளேன். அது ஏன் என்று உங்களுக்கே நன்கு தெரியும்.
கடந்த ஒரு வாரமாக எந்த வலைப்பதிவுக்கும் நான் சென்று படிக்கவோ கருத்துச்சொல்லவோ இல்லை.
மற்றவர்களின் தகவலுக்காக இதோ என் இன்றைய சூழ்நிலை பற்றிய ஒர் இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/01/blog-post_24.html
வலைச்சர இணைப்பையும் கொடுத்து, தங்களின் + பிறரின் தகவல்களுக்கும் என் அன்பார்ந்த இனிய நன்றிகள்.
அன்புடன் VGK
தங்கள் நிலைமையை அறிவேன் சார். உடல்நலம்தான் முக்கியம். கண்களுக்குப் போதுமான ஓய்வு கொடுங்கள். பூரண குணம் பெற்றதும் மீண்டும் எழுத்துப்பணியில் ஈடுபடலாம். இங்கு வருகை தந்து கருத்திட்டமைக்காக மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு.
ReplyDelete