வணக்கம் நண்பர்களே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்,
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!
வாழ்க்கையின்
பல்வேறு பரிமாணங்களை சித்தரிக்கும் பல
அற்புதப் படைப்புகளை நம் வலையுலகில் நாள்தோறும் வாசித்து மகிழ்கிறோம். சோர்ந்த
மனத்துக்குப் புத்துணர்வு ஊட்டுவதாய் சில,
குழம்பிய மனத்துக்குத் தெளிவுதர வல்லவையாய் சில, ஆத்திரம் கொண்ட மனத்தை அமைதிப்படுத்துவதாய் சில, அறியாமையை
அகற்றி விழிப்புணர்வை உண்டாக்குவதாய் சில, துயருற்ற மனத்துக்கு
ஆறுதலாய், தோல்வியுற்ற நெஞ்சத்துக்கு ஆதரவாய், ஆற்றாமைக்கு வடிகாலாய், கழிவிரக்கத்துக்கு தேறுதலாய்….
என்று எவ்வளவு பதிவுகளைக் காண்கிறோம். வாழ்வியல் தொடர்பான பல அரிய
சிந்தனைகளை முன்வைக்கும் சில பதிவர்களை இங்கு அடையாளங்காட்ட விரும்புகிறேன்.
‘வாழ்க்கை ஒரு சிக்கலான ஆட்டம்! ஒரு மனிதனாக வாழ்வதற்கான உங்களுடைய
பிறப்புரிமையைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே உங்களால் அதில் வெற்றி பெற
முடியும். இந்த உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்றால் நீங்கள்
துணிச்சலுடன் செயல்படவேண்டும். எந்த விஷயத்தையுமே இப்படித்தான் செய்தாகவேண்டும்
என்று மற்றவர்கள் நிர்பந்திப்பதை, புறக்கணிக்கும் மன உறுதி
தேவை.’ என்கிறார் திரு. அப்துல் கலாம்.
1. வாழ்க்கையில் அதையும் இதையும் தேடி ஓடிக்கொண்டிருக்கும் நாம் எதற்காக ஓடுகிறோம் என்ற உண்மை உணர்ந்திருக்கிறோமா? வாழ்வின் தேடலை உணர்த்தத் தலைப்பட்டிருக்கிறார் வாழ்வியலின் நுட்பத்தை எளிய வரிகளில் அநாயாசமாக எழுதிச்செல்லும் திரு. ரமணி ஐயா அவர்கள்.
1. வாழ்க்கையில் அதையும் இதையும் தேடி ஓடிக்கொண்டிருக்கும் நாம் எதற்காக ஓடுகிறோம் என்ற உண்மை உணர்ந்திருக்கிறோமா? வாழ்வின் தேடலை உணர்த்தத் தலைப்பட்டிருக்கிறார் வாழ்வியலின் நுட்பத்தை எளிய வரிகளில் அநாயாசமாக எழுதிச்செல்லும் திரு. ரமணி ஐயா அவர்கள்.
2. அன்றாட வாழ்க்கையில் உண்டாகும் சின்னச் சின்னப் பிரச்சனைகளிலிருந்து
நம்மை நாமே விடுவித்துக்கொள்ளும் வகையில் ஏராளமான அற்புதக் கருத்துக்களை கதைகளாக
அள்ளி வழங்குகிறார் திரு. கே.பி. ஜனா அவர்கள். கோபம் வராத மனிதர்கள் எத்தனை பேர்?
அந்தக் கோபத்தால் எவ்வளவு இழக்கிறோம்? அதைக்
கட்டுப்படுத்தமுடியவில்லையென்றாலும் மட்டுப்படுத்தும் வித்தையை அழகான கதையாக அறியத்தருகிறார்.
நமக்கொரு
பிரச்சனை என்றால் என்ன செய்வோம்,
ஒன்று அதைப் பற்றிப் பேசிப் பேசி மாய்வோம். அல்லது
நம்மை நேரடியாய் பாதிக்காதவரை பிரச்சனைகளைக் கண்டும் காணாததுபோல் விலகிச் செல்வோம்.
சின்ன பிரச்சனை பெரிய பிரச்சனையாகிவிடும். பின்
அதன் பூதாகாரத்தைக் கண்டு பயந்து ஒதுங்கி ஒளியத் தலைப்படுவோம். ஆனால் கலாம் என்ன சொல்கிறார், பிரச்சினைகளுடன் நேருக்கு
நேராய் நின்று மல்யுத்தம் புரியச் சொல்கிறார்.
‘வாட்டி வதைத்தாலும் கடுமையாகப் பாடுபட்டால்தான் பிரச்சனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காணமுடியும். முடிவு காணமுடியாமல், எந்தக் காரியத்தையும் இழுத்தடித்துக்கொண்டே போவது நமக்கு வாடிக்கையாகிவிட்டது. எல்லாப் பிரச்சினைகளுக்குமே முடிவுக்கு வர வேண்டிய ஒரு கட்டம் உள்ளது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை.’
3. எந்தப் பிரச்சனையையும் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டுமானால் மனத்தெளிவு வேண்டும். குழம்பிய மனநிலையில் எடுக்கும் முடிவுகள் பிரச்சனையை சிக்கலாக்குமே தவிர தீர்க்காது. மனதை அமைதிப்படுத்த தியானம் பெரிதும் உதவும் என்று உரைப்பதோடு கவலையிலிருந்து விடுபடவும் மனதை மகிழ்வாய் வைத்திருக்கவும் ஏற்ற உபாயங்களைக் கற்றுத்தருகிறது, தியானம்-வெற்றி-மன அமைதி என்னும் இந்த வலைத்தளம்.
4. தோல்விகளிலிருந்து வெற்றிக்கு மீளும் வழிமுறைகளை மிகவும் தெளிவாக அழகாக இங்கு விளக்கியிருக்கும் தளத்தின் பெயர் விடிவெள்ளி. வாழ்க்கைக்கான விடிவெள்ளியாய் பல அற்புதப் பதிவுகளைத் தந்துள்ள இவர் தந்திருப்பது குறைந்த அளவிலான பதிவுகள் என்றாலும் நிறைவானவை.
4. தோல்விகளிலிருந்து வெற்றிக்கு மீளும் வழிமுறைகளை மிகவும் தெளிவாக அழகாக இங்கு விளக்கியிருக்கும் தளத்தின் பெயர் விடிவெள்ளி. வாழ்க்கைக்கான விடிவெள்ளியாய் பல அற்புதப் பதிவுகளைத் தந்துள்ள இவர் தந்திருப்பது குறைந்த அளவிலான பதிவுகள் என்றாலும் நிறைவானவை.
வாழ்க்கையில்
வெற்றி அடைந்தவர்களின் பின்னணி என்ன?
கலாம் சொல்லும் காரணத்தைப் பார்ப்போம்.
‘வெற்றியடைந்த எல்லோரிடமும் காணப்படும் பொதுவான அம்சம், முழுமையான பொறுப்புணர்வு. உங்களுடைய நம்பிக்கை முறைக்கு
முரண்பட்டிருக்கும்சில விஷயங்களைப் பார்ப்பதற்கோ அல்லது சில காரியங்களில் ஈடுபடுவதற்கோ
நீங்கள் மறுக்கிறீர்களா? வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் மன
உளைச்சல்களை, இறுக்கத்தை உங்களால் சமாளித்துக் கொள்ள முடிகிறதா?
துடிதுடிப்பான ஒருவருக்கும், குழப்பத்தில் சிக்கிக்
கொண்ட ஒருவருக்கும் உள்ள வேறுபாடு அவரவர் மனோபாவங்களைப் பொறுத்தது. அனுபவங்களை அவரவர் மனம் கையாளுகின்ற விதம்தான் இந்த வேறுபாட்டை ஏற்படுத்துகிறது.’
5. நமது எண்ணங்களை மேம்படுத்துவதற்கு அல்லது நிறைவேற்றுவதற்கு அல்லது வெற்றி பெறுவதற்கு நமக்குத் தேவையான தாரக மந்திரம் ஒன்று உண்டு என்கிறார் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள். அந்த தாரகமந்திரம் என்னவென்று அறிய விருப்பமா? தயங்காமல் அவர் வலைக்கு வாருங்கள். காத்திருக்கின்றன இன்னும் ஏராளமான வாழ்வியல் சூத்திரங்கள்!
நாம்
ஆரோக்கியமாக வாழ கஷ்டங்கள் தேவை என்கிறார் டாக்டர் அப்துல் கலாம். ஏன்? காரணத்தையும் அவரே சொல்கிறார்.
‘நமது ஆரோக்கியத்திற்கு கஷ்டங்கள் அவசியம் தேவை. நமது
உடலுக்குள்ளேயே நல்லவிதமான உணர்வுபூர்வ சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாவிட்டால்,
வெற்றியடைந்த பிறகு அதை அனுபவித்து மகிழ்ச்சியடைய முடியாமல் போய்விடும்.
நாம் அனைவருமே நமக்குள்ளேயே ஏதோ ஒருவித அதி அற்புத அறிவாற்றலை வைத்துக்
கொண்டிருக்கிறோம். உங்களுக்குள்ளேயே அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும்
எண்ணங்களை, ஆசைகளை, நம்பிக்கைகளை நீங்கள்
ஆராய்ந்து பார்க்க ஏதுவாக, அந்த அறிவாற்றல் தூண்டி விடப்படட்டும்.’
6. வலியில்லாத வாழ்க்கை யாருக்குதான் சாத்தியம்? அந்த வலியிலிருந்து மீண்டு வருவதில் அல்லவா இருக்கிறது சாமர்த்தியம்! உடல் வலியைத் தாங்கும் அளவுக்கு மன வலி(மை) இருக்கிறதா நமக்கு? வாழ்க்கைக்குத் தேவையான மன, உடல் ஆரோக்கியத்துக்கான பல நன்முத்துக்களை அள்ளித்தரும் திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் தான் பெற்ற அவதிக்குப்பின்னர் தான் கற்ற அனுபவங்களைப் பற்றி அறியத்தந்துள்ளார்.
இந்த உலகத்தின்
இயல்பென அப்துல் கலாம் அவர்கள் காட்டும் உதாரணம் வியக்கவைக்கிறது. கருப்பு
நூலையும் வெள்ளை நூலையும் சேர்த்து ஒரு துணியை நெய்திருப்பது போல இந்த பூமியில் நல்லவர்களும்
கெட்டவர்களும் சேர்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்.
7. அசத்தலான அனுபவங்களுக்கும் நேர்மையான மனந்திறந்த
கருத்துக்களுக்கும் உரிய திரு. ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயாவோ நினைவில் நல்லனவையும் அல்லனவையும் இணைந்தே கிடக்கின்றன
என்கிறார். ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்து முடிக்கும் வேளையில் தமது வாழ்க்கையை அசைபோட்டு எவ்வெவற்றால் ஒருவரது வாழ்க்கையில் நிம்மதி உருவாகிறது என்று வரிசையாகக் குறிப்பிட்டுள்ளார். அவை நமக்கும் பொருந்துகின்றனவா என்று பார்க்க அவரது வலைத்தளம் செல்வோம், வாருங்கள்.
8. சிங்கத்திடமும் கொக்கிடமும் இருந்து ஒன்றும், சேவலிடமிருந்து நான்கும் காக்கையிடமிருந்து ஐந்தும், நாயிடமிருந்து ஆறும், கழுதையிடமிருந்து மூன்றும் என நாம் கற்க வேண்டிய குணங்கள் என்னென்ன?
தூங்கிக்கொண்டிருக்கும்போது எப்போதுவேண்டுமானாலும் எழுப்புதற்குரியவர்கள் யார் யார்?
மலையில் பெய்யும் மழை போலப் பயனற்றவை எவை?
தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொண்டவர்கள் யாவர்?
இவை போன்ற ஏராளமான வாழ்வியல் சூட்சுமங்களை விளக்கும் சுபாஷிதம் என்னும் சமஸ்கிருத புராதான வடிவிலான நானூறு ஸ்லோகங்கள் கொண்ட அற்புத நீதிக்கோவைகளை நமக்காக தமிழில் எளிமையாக மொழிபெயர்த்துத் தந்துள்ளார் திரு. சுந்தர்ஜி பிரகாஷ் அவர்கள். அவர் கைகள் அள்ளிய நீரை நமக்கும் பருகத் தரும் அன்புக்கு நன்றியுரைப்போம்.
மலையில் பெய்யும் மழை போலப் பயனற்றவை எவை?
தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொண்டவர்கள் யாவர்?
இவை போன்ற ஏராளமான வாழ்வியல் சூட்சுமங்களை விளக்கும் சுபாஷிதம் என்னும் சமஸ்கிருத புராதான வடிவிலான நானூறு ஸ்லோகங்கள் கொண்ட அற்புத நீதிக்கோவைகளை நமக்காக தமிழில் எளிமையாக மொழிபெயர்த்துத் தந்துள்ளார் திரு. சுந்தர்ஜி பிரகாஷ் அவர்கள். அவர் கைகள் அள்ளிய நீரை நமக்கும் பருகத் தரும் அன்புக்கு நன்றியுரைப்போம்.
‘உங்களுடைய வாழ்க்கை ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் லகான் உங்கள் கையில்
இருக்கிறதா? உங்களைத் திசைதிருப்பிவிடவும், முடக்கிவிடுவதற்காகவும் வெளி நிர்பந்தங்களின் ஆதிக்கம்
தொடர்ந்துகொண்டிருக்கும். அதில் சிக்கிக் கொள்ளாமல் நிறைய முடிவுகளை உங்களால்
தீர்மானிக்க முடிந்தால் உங்களுடைய வாழ்க்கை சிறக்கும்; உங்களுடைய
சமுதாயம் மேம்பாடு அடையும்.’ என்கிறார் கலாம்.
9. குடும்ப உறவின் மேன்மை புரிந்தாலே வாழ்க்கை நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் அல்லவா? மதிப்புக்குரிய தோழி சாகம்பரி அவர்கள் குடும்ப உறவில் முரண்பாடுகளைத் தவிர்க்கும் வழிமுறைகளைப் பல பாகங்களாக எழுதியுள்ளார். அவருடைய பல பதிவுகள் இன்றைய வாழ்க்கைச்சூழலில் உண்டாகும் சிக்கல்களை மிக எளிதாகக் கடக்க உதவக்கூடியவை. பெருகி வரும் விவாகரத்துக்களுக்கான காரணங்களை நான்காக வகைப்படுத்தி அலசலையும் தீர்வையும் முன்வைத்துள்ளார். அறிந்துகொள்ள மகிழம்பூச்சரம் வலைக்கு வாருங்கள்.
நம்முடைய
கல்விஞானம் உயர்ந்தாலும் கேள்விஞானத்தில் நாம் இன்னும் குறைபாடுடையவர்களாகவே இருக்கிறோம்
என்பது கலாமின் கருத்து.
‘பள்ளிக்கூட வாழ்க்கை முழுவதுமே நமக்கு வாசிக்கவும் எழுதவும் படிக்கவும் மட்டும்தான்
கற்றுத் தந்திருக்கிறார்கள். கவனிப்பது எப்படி என்று கற்றுத்
தரப்படுவதே கிடையாது என்பதுதான் வேடிக்கை. இன்றும் கூட கிட்டத்தட்ட
அதே நிலவரம்தான் தொடர்கிறது. பாரம்பரியமாக இந்திய விஞ்ஞானிகள்
பிரமாதமான பேச்சாளர்கள். ஆனால் கவனித்துக் கேட்கும் திறமையை போதுமான அளவுக்கு அவர்கள் வளர்த்துக்கொள்ளவில்லை.’
10. ‘படிக்கும் பிள்ளைகளைப் பற்றி நமக்கிருந்த ஒரு முடை நாற்றம் வீசிக் கொண்டிருந்த ஒரு பொதுக் கருத்தை பேய் மழைச்சாரல் தந்த குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த என்னை தங்களது செயலால் சூடேற்றி திமிறேற்றினார்கள்’ என்கிறார் திரு. இரா. எட்வின் அவர்கள். தெய்வம் இல்லையென்னும் தெளிவுள்ளவரை தெய்வங்களுக்கு சொல்லிக்கொடுத்தவன் என்று பெருமைகொள்ள வைத்த நிகழ்வு எதுவென்றறிய அவர் தளத்துக்கு வாருங்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெற ஆசை வேண்டுமாம். பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல்
நமக்கென்று ஒரு லட்சியத்தை மனத்தில் கொண்டு அதை நோக்கி நடைபோடும்போதுதான் ஒரு மனிதனாக
முழுமை பெறுகிறோம் என்கிறார் அப்துல் கலாம்.
‘உங்களின் உள் ஆதாரங்களை, குறிப்பாகக்
கற்பனை வளத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதையே வாழ்க்கையின் முதலீடாக மாற்றிக்கொள்ள
ஆசைப்படுங்கள். அந்த ஆசை உங்களுக்கு வெற்றியைத் தரும். தனிப்பட்ட நிலையில்
உங்களுக்குள் ஒரு லட்சியத்திற்காக உறுதி எடுத்துக்கொள்ளும்போதுதான் நீங்கள் ஒரு
மனிதராக மாறுகிறீர்கள்.’
11. எங்கள் ப்ளாக் என்ற பெயரில் நண்பர்கள் இணைந்து நடத்தும் இத்தளத்தில் வாரவாரம் பாஸிடிவ் செய்திகள் என்ற தலைப்பில் பல நல்ல மனிதர்களைப் பற்றியும் இயக்கங்களைப் பற்றியும் தொகுத்து வெளியிடுகிறார்கள். ஒவ்வொரு தகவலும் நமக்கு புத்துணர்வு அளிப்பதாய் வியப்பளிப்பதாய் நெகிழவைப்பதாய்… மொத்தத்தில் மனிதநேயம் இன்னும் மரத்துப்போகவில்லை என்பதைக் காட்டுவதாய் உள்ளது. பல நல்ல உள்ளங்களை நமக்கு அடையாளம் காட்டும் அவர்கள் பணி சிறக்கட்டும் என வாழ்த்துவோம்.
11. எங்கள் ப்ளாக் என்ற பெயரில் நண்பர்கள் இணைந்து நடத்தும் இத்தளத்தில் வாரவாரம் பாஸிடிவ் செய்திகள் என்ற தலைப்பில் பல நல்ல மனிதர்களைப் பற்றியும் இயக்கங்களைப் பற்றியும் தொகுத்து வெளியிடுகிறார்கள். ஒவ்வொரு தகவலும் நமக்கு புத்துணர்வு அளிப்பதாய் வியப்பளிப்பதாய் நெகிழவைப்பதாய்… மொத்தத்தில் மனிதநேயம் இன்னும் மரத்துப்போகவில்லை என்பதைக் காட்டுவதாய் உள்ளது. பல நல்ல உள்ளங்களை நமக்கு அடையாளம் காட்டும் அவர்கள் பணி சிறக்கட்டும் என வாழ்த்துவோம்.
12. என்னதான் நாம் நாகரீக முன்னேற்றமடைந்திருந்தாலும், அறிவு
வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்னும் தீண்டாமை எண்ணம் நம்மை விட்டு விலகவில்லை என்பதை
பூங்குழலியின் பதிவொன்று எடுத்துரைக்கிறது. சமூகத்தின் தீண்டாமை
பற்றி அறிவோம். இது மருத்துவத்துறையின் தீண்டாமை பற்றியது.
மனவேதனையுடன் அதைப் பற்றிப் பகிர்ந்துள்ளார் மருத்துவரான தோழி பூங்குழலி.
இப்படித்தான் வாழவேண்டும்
என்று வழிகாட்டும் பதிவுகளும் இப்படியும் வாழ்கிறார்கள் என்று எச்சரிக்கும்
பதிவுகளும் இதுதான் வாழ்க்கை என்று எடுத்தியம்பும் பதிவுகளும் இழந்த வாழ்க்கையை
திரும்பிப் பார்க்கும் பதிவுகளுமாய் வாழ்வியல் பற்றி ஏராளமாய்க் கொட்டிக்
கிடக்கும் வலையுலக நன்முத்துக்களினின்று சிலவற்றை மட்டுமே இன்று தரவியன்றது. மற்றுமொரு தலைப்பிலான பதிவுகளோடு
நாளை சந்திப்போம்.
நன்றி உறவுகளே.
(செவ்வண்ணச்சிதறல்கள் யாவும் மேதகு அப்துல் கலாம் அவர்களின் எண்ணச் சிதறல்களே)
(படம் நன்றி: இணையம்)
வணக்கம்
ReplyDeleteசிறப்பான விளக்கவுரையுடன் அதிலும் அப்துல் கலாம் அறிவு மொழி மிகவு அருமை இன்று சிறப்பான வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உடனடி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன்.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகமாகியுள்ள தளங்கள் அத்தனையும் தொடரும் தளங்கள் புதியவை ஒன்றும்மில்லை சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்
த.ம1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பலருக்கும் அறிமுகமான தளங்கள்தாம் இவை என்றாலும் புதியவர்களுக்கு ஒரு வழிகாட்டலாய் இருக்குமல்லவா? நன்றி ரூபன்.
Deleteநன்றி சகோதரியாரே
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteஎனது வலைத்தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி... இன்றைய அறிமுகங்களை பார்த்து விட்டு பிறகு வருகிறேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்.
Delete'எங்கள்' தளத்தைக் குறிப்பிட்டுள்ளமைக்கு மிக்க நன்றி. எங்களுடன் குறிப்பிடப்பட்டிருக்கும் சக வலையாதிபதிகளுக்கும் எங்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும்! :)))
ReplyDeleteஅதே, அதே! நன்றி கீத மஞ்சரி.
Deleteநன்றி ஸ்ரீராம், நன்றி கௌதமன்.
Deleteவலையாதிபதி.... அவசரத்தில் வளையாபதி என்று படித்துவிட்டேன். :)
நான் தவறாது தொடரும் அற்புதப் பதிவர்களுடன்
ReplyDeleteஎன்னையும் இணைத்துச் சொன்னது
அதிக மகிழ்ச்சியளிக்கிறது
மிக்க நன்றி
மதிப்பிற்குரிய கலாம் அவர்களின் அமுத
மொழிகளோடு இணைத்து பதிவர்களை
அறிமுகம் செய்த விதம் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி ரமணி சார்.
Deleteஆரம்பத்தில் தந்துள்ள பொன்மொழி அபாரம். வாழ்வியல் தொடர்பான பதிவுகளையும் பதிவர்களையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!
ReplyDeleteதொகுப்பை ரசித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteமேதகு அப்துல் கலாம் அவர்களின் எண்ணங்களை வண்ணமாகக் கொண்டு வழங்கிய - இன்றைய தொகுப்பு அருமை..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.
Deleteவிடிவெள்ளி தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்.
Deleteஇன்றைய தொகுப்பு அருமை..
ReplyDeleteநன்றி காஞ்சனா
Deleteஇன்றைய அறிமுகத் தளங்களிற்கும் தங்களிற்கும்
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி தோழி வேதா.
Deleteசெவ்வண்ணச்சிதறல்களாய் அருமையான பதிவுகள்..பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றி மேடம்.
Deleteகாலத்தின் மணல் பரப்பில்
ReplyDeleteஉன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்,
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!/
அருமை.
இன்றைய வாழ்வியல் சிந்தனையை கூறும் பதிவுகள் அறிமுகம் அருமை.சிலர் தெரியாதவர்கள் பார்க்கிறேன் அவற்றை.
அப்துல்கலாம் அவர்கள் அமுத மொழி பகிர்வை சொல்லி பதிவர்களை அறிமுகபடுத்திய விதம் அருமை.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
வருகைக்கும் பதிவை ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி மேடம்.
Deleteநூற்றுக்கணக்கான பதிவுகள் தினமும் வெளியாகும் வேளையில் எல்லோரும் எல்லாத் தளங்களையும் வாசிக்க இயலாது. நல்ல வாசிக்கும் படியான தளங்கள் ஏது என்றே தெரியாத நிலையில் பலருக்கும் உங்கள் அறிமுகங்கள் ஒரு துணையாய் இருக்கும். என் தளத்தை அறிமுகப் படுத்தி இருப்பதற்கு நன்றி.
ReplyDeleteஊக்கந்தரும் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteஅருமையான பதிவுகளை பகிர்ந்து கொண்டு வரும் தங்களுக்கு பாராட்டுகள்..
ReplyDeleteஅனைத்துப் பதிவுகளையும் வாசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி ஆதி.
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி வெங்கட்.
Delete