வணக்கம் நண்பர்களே...
வாழும் மரங்களை வெட்டினோம்
வாழாவெட்டியாகிப் போயினர்
வனப்பேச்சிகள்!
சமீபத்தில்
இயற்கை எய்திய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்
ஐயா அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.
இயற்கை
மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சில பதிவுகளை இன்று காண்போம். ஆலைகள், தொழிற்சாலைகள், குளிர்சாதனப் பெட்டிகள் இவற்றிலிருந்து
நாம் வெளியேற்றும் கரிமச்சேர்வைகளால் எவ்வளவு கலகம்! கிடுகிடுவென
உயரும் வெப்பத்தால் உருகிக்கொண்டிருக்கிறது உலகம்!
அவனை நிறுத்தச்
சொல், நான் நிறுத்துகிறேன்
என்று அடுத்தவரைக் கைகாட்டிக்கொண்டு தொடர்ந்து அழிவைத் தேடிக்கொண்டிருக்கிறோம் நாம்.
ஒவ்வொரு தனிமனிதனும் தன்னளவில் சுற்றுப்புறச்சூழலைப் பேணுவதற்கான உறுதி
எடுத்துக்கொண்டாலே போதும், பூமி வாழும். அப்படியொரு அற்புதமான முயற்சியில் மதுரைவாசிகள் ஒன்றிணைந்திருப்பது மன ஆறுதலை
மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் ஒரு உத்வேகம் தரும் வகையில் அமைந்துள்ளது.
மதுரையில்
உள்ள சூழலியல் ஆர்வலர்களை ஒன்றிணைத்து பசுமை நடை என்ற பெயரில், மாதம் ஒரு முறை மதுரையை சுற்றியுள்ள
வரலாற்று சின்னங்கள், மலைகள், சமணர்
படுகைகள், குகைகள், பாறை ஓவியங்கள் என
தொடர்ந்து பயணிக்கிறது இந்தக் குழுமம். இது வரை மதுரையை சுற்றியுள்ள முக்கியமான 12 வரலாற்று சின்னங்கள் நோக்கி பசுமை நடைகள் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு
மாதமும் 250 பேர் ஆர்வமாக இதில் கலந்து கொள்கிறார்கள் என்கிறார்
இந்த இயக்கத்தை உருவாக்கியவர்களுள் முதன்மையானவரான எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன்.
1. பாதுகாக்கப்படவேண்டிய வரலாற்றுத் தளங்களை எந்த அளவுக்கு நம் மக்கள், தங்கள் பெயர்களைப் பொறித்தும், குப்பைகளை வீசியும் அவமரியாதை செய்துள்ளனர் என்பதை இப்பதிவுகள் மூலம் அறிந்து மனவருத்தம் உண்டாகிறது. கொங்கர் புளியங்குளம் பகுதியில் நடைபெற்ற பசுமை நடை பற்றி மிக விரிவாக படங்களுடன் எழுதியுள்ளார் மதுரக்காரன் அவர்கள்.
2. கருங்காலக்குடி பஞ்சபாண்டவர் மலைக்குச் சென்ற பசுமை நடை பற்றிய தன் அனுபவங்களைப் புகைப்படங்களோடு பகிர்ந்துள்ளார் திரு. வேல்முருகன் அவர்கள். ஏற்கனவே சென்றுவந்ததைப் போல் அல்லாமல் வேறு வேறு புதிய அனுபவத்தை தருவதால் மீண்டும் மீண்டும் பசுமைநடையில் கலந்துகொள்வதாகக் கூறுகிறார். உள்ளூரில் உள்ளவர்களே அறியாத பல அபூர்வத் தகவல்களைத் திரட்டி உலகறியச் செய்யும் அற்புதப்பணியின் செயல்வீரர்களுக்கு நம் அனைவரின் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
3. கண்கெட்டபின்னே சூரிய நமஸ்காரம் என்பதைப் போல், பஞ்சபூதங்களும் தங்கள் சீற்றத்தைக் காட்டத்தொடங்கிய பின்னர்தான் சூழலியல் பற்றிய விழிப்புணர்வு நமக்குள் எழத் தொடங்கியுள்ளது. காலம் காலமாகவே நமக்கு அத்தகைய விழிப்புணர்வை உருவாக்கப் பலரும் பாடுபட்டபோதும் பசுமை இலக்கியம் என்று தனியே அடையாளப்படுத்தப்படவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் சூழலியல் தொடர்பாக தமிழில் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளை அறியத் தருகிறது சஞ்சிகை தளம்.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் இயல் விருது, இவ்வருடம் திரு சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தியை சென்ற வாரம் அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு நம் அனைவரின் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது.
4. மழை – நினைக்கும்போதே மனம் நனைக்கும் இதம். வெளியில் உள்ள வெக்கையை மட்டுமில்லாமல், மனதில் உள்ள வெக்கையையும் குளிர்விக்கின்ற மழை நம் அனைவருக்குமான வரம் என்கிறார் தோழி தீபா நாகராணி தனது வலைத்தளத்தில். எதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம் என்கிறார். எனக்குத் தட்டுப்பட்டவை ஏராளம்.
5. பசுமை தமிழகம் என்னும் இத்தளத்தில் விவசாயிகளுக்கு உதவிகரமான வகையில் ஏராளமான வேளாண் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் தகவல்கள் நிறைந்துள்ளன. கண்ட இடத்திலும் காட்டுச்செடியெனப் பரவி விதைகள் மூலம் காற்றை மாசுபடுத்தும், சுவாசக்கோளாறுகளை உண்டாக்கும் பார்த்தீனியம் என்னும் களைச்செடிகளை அழிக்கும் வழிமுறைகளை அறிந்துகொண்டு அதன்படி செயல்படுவோம்.
6. நம்முடைய சுயநலத்தாலும் பேராசையாலும் இயற்கையை அழித்து பல உயிரினங்களை அழிவின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறோம். அவற்றைப் பற்றி எடுத்துச்சொல்லி எச்சரிக்கிறது தடாகம் வலைத்தளம். கலை, இலக்கியம், சுற்றுச்சூழல், அரசியல், புத்தக ஆர்வலர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் ஒரு அற்புதமான இத்தளத்தின் மூலம் ஆபத்தான நிலையிலிருக்கும் செந்நாயினத்தைக்கண்டறிந்துகொள்ள வாருங்கள்.
7. கள்ளி முளையான், சிறுகுறிஞ்சான், சீந்தில், சிலந்தி நாயகம், நீர்முள்ளி, பாவட்டை, பழம்பசி, கடுகுரோகிணி இவையெல்லாம் யாருடைய பெயர்கள்? இவை ஆட்களின் பெயரல்ல. அரும் மூலிகைகளின் பெயர்கள். பாட்டி வைத்தியம் என்று தமிழிலும் Granny Theraphy என்று ஆங்கிலத்திலும் இயங்கும் இத்தளத்தில் கைவைத்தியம், அழகுக்குறிப்புகள், ஆரோக்கிய சமையல் போன்ற பல உபயோகமானக் குறிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நினைவாற்றலுக்கும் இலந்தைப்பழத்துக்கும் என்ன தொடர்பு? அறிந்துகொள்ள பாட்டியின் வைத்தியத்தளத்துக்கு வாருங்கள்.
8. முடி உதிர்தல் இன்றைய பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சனை. வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்க வழக்கங்களில் உண்டாகும் மாற்றங்களாலும் பணியழுத்தம், நேரமின்மை, பொறுமையின்மை போன்ற காரணங்களாலும் இது நேர்கிறது. முடி உதிர்தலைத் தவிர்த்து அடர்கூந்தல் பெறத் தேவையான இயற்கை வைத்திய முறைகளை வழங்குகிறது பெட்டகம் வலைத்தளம்.
9. நம்
வாழ்க்கைமுறையும் உணவுப்பழக்கமும் மாறிவருகிறதென்று சொன்னேன் அல்லவா? பிள்ளைகள் மட்டுமல்லாமல்
பெரியவர்களும் நூடுல்ஸ், பீட்ஸா பர்கர் என்று மாற்றுணவுக்குப்
பழகிவிட்டனர். சோறு என்றாலே
முகத்தை சுழிப்பார்கள். ஆனால் சோற்றில் எவ்வளவு நல்ல சத்தான விஷயங்கள்
இருக்கிறது என்று பார்த்தோமானால் சோற்றை ஒதுக்க முன்வரமாட்டோம். வனப்பு வலைத்தளத்தில் சோற்றின் மகிமை குறித்து தோழி சந்திரகௌரி எழுதியுள்ளதைப்
பார்ப்போம்.
10. வெறும் அரிசிச்சோறு மட்டும் சாப்பிட்டுக்கொண்டிராமல்
சிறுதானியங்கள் பக்கமும் நம் கவனத்தைத் திருப்பவேண்டும். அப்படி செய்தால் மழையை எதிர்பாராத
மானாவாரிப் பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் தஞ்சை விவசாயிகள் தற்கொலைகளிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்
என்னும் அரியதொரு கருத்தை முன்வைக்கிறார் திரு. மது அவர்கள்
தனது மலர்த்தரு வலைத்தளத்தில்.
11. சிறுதானியங்களை இதுவரை சமைக்காதவர்கள்
எனில் என்ன சமைப்பது, எவ்வாறு சமைப்பது என்று திணறத்தேவையில்லை. உடலுக்கு வலு சேர்க்கும்
தானியங்கள் வரிசையில் தினை, பார்லி, கேழ்வரகு,
வரகு, கம்பு, சாமை,
குதிரைவாலி போன்ற தினைப்பயிர்களைக் கொண்டு சத்தும் சுவையுமுள்ள அநேக
சிற்றுண்டிகளைத் தயார் செய்யும் முறையைப் படங்களுடன் மிராவின் கிச்சன் வலைத்தளத்தில்
விளக்கியுள்ளார் தோழி காஞ்சனா ராதாகிருஷ்ணன். வாருங்கள் வரகு சர்க்கரைப் பொங்கல் உண்டு மகிழலாம்.
12. இப்போது நம்மில் பலருக்கும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் ஒரு பெரும் சவாலாக உள்ளது. நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே குறைவாகவே உள்ளதே காரணம். பழங்களில் இனிப்பு இருக்கிறது என்று அவற்றைத் தவிர்ப்பவர்கள் அரிசி,
கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவற்றை வெளுத்துக்கட்டுகிறார்கள்.
கேட்டால் அவற்றில் இனிப்பு ஏது என்கிறார்கள். சரியான புரிதலின்மையால் நோயின் தீவிரம் அதிகமாகி உடலுறுப்புகளை இழக்கும் நிலைக்குத்
தள்ளப்பட்டுவிடுகின்றனர். நீரிழிவு நோயாளிகள் உணவில் கவனிக்க வேண்டியவற்றை இங்கே அழகாகப் பட்டியலிட்டு எடுத்துரைக்கிறார் மருத்துவர் எம்.கே.முருகானந்தன்
ஐயா அவர்கள். அறிந்து நலம்பெறுவோம் அனைவரும்.
நம்மால் இயன்றவரை இயற்கையின் வழியில் இணைந்து நடப்போம்.
சூழலியல் காப்போம் என்று உறுதியெடுப்போம்.
வாழ்விழந்து தவிக்கும் வனப்பேச்சிகளை வனந்திருப்புவோம்.
நன்றி நல்லுறவுகளே.
நாளை
மீண்டும் சந்திப்போம்.
வணக்கம்
ReplyDeleteஇன்றைய பதிவானது இயற்கை பற்றியதாக உள்ளது. வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தொடருகிறேன் பதிவுகளை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உடனடி வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்றைய அறிமுக தளங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. இலக்கம்-1இலக்கம்-7 ஆகிய தளங்கள் புதியவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி....த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்.
Deleteஇயற்கை என்னும் அற்புதப் பதிவு வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteதொடர்ந்து தரும் ஊக்கத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteத.ம.2
ReplyDeleteஅருமை!
ReplyDeleteமிக்க நன்றி டீச்சர்.
Deleteஇன்றைய தலைப்பும், அதற்கான உங்கள் வரிகளும், அறிமுகப்படுத்தப் பட்டுள்ள தளங்களும் அருமை. 'பாட்டி வைத்தியம்' பக்கத்துக்கு உடனடி விசிட்!
ReplyDeleteமிகவும் நன்றி ஸ்ரீராம்.
Deleteநம்மால் இயன்றவரை இயற்கையின் வழியில் இணைந்து நடப்போம்.
ReplyDeleteசூழலியல் காப்போம் என்று உறுதியெடுப்போம்.
வாழ்விழந்து தவிக்கும் வனப்பேச்சிகளை வனந்திருப்புவோம்.//
மிக நன்றாக சொன்னீர்கள்.பசுமை நடை, மிராவின் கிச்சன் படித்து இருக்கிறேன் மற்றவைகளை படிக்கிறேன்.
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி மேடம்.
Deleteடாகடர்.முருகானந்தன்ஐயா அவர்கள் வலைத்தளம், சந்திரகெளரி வலைத்தளங்கள் நான் பின் தொடரும் வலைத்தளங்கள் தான்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மீண்டும் நன்றி தங்களுக்கு.
Deleteமருத்துவர் எம்.கே.முருகானந்தன் அவர்களின் வலைப்பதிவு எனக்கு பரிச்சியமானது. மற்றவைகள் எனக்குப் புதியவை. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteஅருமையான தளங்கள் அடங்கிய இந்த பகிர்வு சமர்ப்பணம் செய்தது சிறப்பு... பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள்...
ReplyDeleteசஞ்சிகை, பசுமை தமிழகம், தடாகம் - இந்த தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சியும் நன்றியும் தனபாலன்.
Deleteஇயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கை பற்றி அழகான பகிர்வு...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்...
தொடர்ந்து வர இயலாமல் போய்விட்டது...
அனைத்துப் பதிவுகளையும் வாசித்துப் பின்னூட்டமிட்டதற்கு நன்றி ஆதி.
Deleteபெருமதிப்பிற்குரிய
ReplyDeleteஆசிரியை அவர்களுக்கு,
எனது பணிவான வணக்கமும் நன்றியும் ,,
எனது தளத்தில் எப்போதோ போட்ட ஒரு பதிவை இங்கே பகிர்ந்த உங்களின் வாசிப்பிற்கு ஒரு பெரு வணக்கம்.
நன்றி,
தங்கள் தளம் குறித்து எனது தோழி நிறய பேசுவாள், உங்களின் பல ரசிகைகளில் அவளும் ஒருத்தி... நன்றி...
தங்களின் நேர்த்தியான கோர்வை நான் பின்பற்ற விரும்பும் ஒன்று நன்றிகள் பல
எப்போதோ போட்ட பதிவென்றாலும் எப்போதும் பயனுள்ள பதிவல்லவா? நன்றி மது.
Deleteதங்கள் தோழிக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இயற்கையை சிறப்பித்த தளங்களை அறிமுகம் செய்திருந்தது - அருமை!..
ReplyDeleteமிக்க நன்றி தங்களுக்கு.
Deleteஇன்றும் நல்லதாய், பயன்தரத்தக்கதாய், பல, புதிய பதிவுகளை (அறிமுகத்தில்) தந்தீர்கள். நன்றி!
ReplyDeleteமிகவும் நன்றி தங்களுக்கு.
Deleteபல அருமையான வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்திய நேரத்தில் எனது பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteமிகவும் நன்றி டாக்டர்.
Deleteவலைச்சரத்தில் என்னுடைய வலைப்பதிவை குறிப்பிட்டமைக்கு நன்றி கீதமஞ்சரி.
ReplyDeleteநன்றி காஞ்சனா.
Deleteவலைபதிவுகளின் மேற்கோள் காட்டியமைக்கு நன்றி சகோதரி , குறிப்பாக" தஞ்சை விவசாயிகள் தற்கொலைகளில் இருந்து காப்பாற்ற படுவார்கள்" இந்த வலைப் பதிவு அரிசி தவிர பிற தானியங்களின் பயன்பாடு நமக்கு அவசியாமான ஒன்று என்பதை விளக்கியுள்ளமை ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது நன்றி .
ReplyDeleteமிகவும் நன்றி விமல்.
Deleteமுதன் முதலாய் உங்கள் பதிவுக்குள்
ReplyDeleteவந்திருக்கிறேன் சுந்தர்ஜி முகனூல் மூலம்.
தங்களின் இயற்கை சார்ந்த மனவோட்டம்
உங்களிடமிருந்து நான் அறிய அதிக விஷயங்கள்
இருக்கும் என்பதை அறிகிறேன். மேலும் சிந்திக்க, செயலாற்ற, மீண்டும் சந்திப்போம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.
Deleteசிறப்பான தளங்கள்..... இதுவரை படிக்காத தளங்களுக்கும் செல்கிறேன்.....
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
மிகவும் நன்றி வெங்கட்.
Deleteஅன்பிற்கினிய நண்பர் ரூபன் அவர்களே தாங்கள் பெட்டகம் வலைப்பூவை பற்றி 24-01-2014 அன்று வலைச்சரத்தில் குறிப்பிடடுள்ள விபரம் வலைச்சரத்தில் பார்வையிட்டேன். வலைச்சரத்தில் எமது பெட்டகம் வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள்! என்றும் அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
ReplyDeleteமிக்க நன்றி தங்களுக்கு.
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteஇனிமையான பதிவு. எனது தளத்தையும் இதில் அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் பல. இந்த பதிவில் இடம் பெற்ற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
மதுரக்காரன்.
இயற்கையைக் காப்பாற்றும் அக்கறையுடன்கூடிய சிறப்பான அறிமுகங்கள் கீதா.
ReplyDeleteஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்துவிட்டேன். நன்றி.
சிறப்பான அறிமுகங்கள் நன்றி
ReplyDeleteவலைப்பதிவில் என் பதிவும் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. புதிய தளங்கள் நாம் புரிந்து திருந்த வேண்டிய பல தகவல்கள். அனைத்தையும் பார்க்கின்றேன்
ReplyDelete