வணக்கம் வலைச்சர நண்பர்களே,
இதுவரை குறைந்த பதிவுகள் எழுதிய பதிவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் வலைப்பூ பதிவுகள் பற்றி ஒவ்வொரு பதிவிலும் தொகுப்பாக எழுதிவருகிறேன். அதேபோல ஒரு புதிய தொகுப்பை இன்றும் பார்ப்போமா?
சலனம் என்னும் வலைப்பூ ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆயினும் கடந்த ஆண்டு மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. கீற்று தளத்தில் இவர் பகர்ந்த பதிவுகளை இந்த வலைப்பூவிலும் பதிந்து வருகிறார். ஓலம் எனும் கவிதையில் அவளுடன் செல்ல சிறகுகள் வேண்டுமே என்ற கருத்தை பகிர்ந்துள்ளார்.
சிகரம் என்னும் வலைப்பூ ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் கடந்த ஆண்டில் வெறும் 13 பதிவுகள் மட்டுமே எழுதப்பட்டு உள்ளது. அதில் நீ.. நான்... காதல்... என்ற கவிதை பதிவில் காதல் வரிகளை எழுதியுள்ளார். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.
தோட்டம் என்னும் வலைப்பூ ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆயினும் இதுவரை 39 பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. இந்த வலைப்பூவில் வீட்டு தோட்டக்கலை பற்றிய பதிவுகளே அதிகம் எழுதப்பட்டு வருகிறது. அதில் தோட்ட உலா எனும் தலைப்பில் என்னென்ன செடிகள் வளர்க்கலாம்? அப்போதைய சீசனுக்கு ஏற்ற காய்கறிகள் என்னென்ன? என்பதை விளக்கி நிறைய புகைப்படங்களுடன் பயனுள்ள விசயங்களை பதிவேற்றி வருகிறார். வீட்டில் தோட்டம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள தளமாக இருக்கும்
சில நேரங்களில் சில கருத்துக்கள் என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 43 பதிவுகள் எழுதப்பட்டுள்ளது. அதில் பொருளாதார மந்தநிலை என்னும் பதிவில் தொழிலகங்கள் மூடப்படுவது பற்றியும், தொழிலாளர் மனநிலை பற்றியும் சுருக்கமாக விளக்கியுள்ளார். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.
மதிப்பு என்னும் தளம் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, ஆன்லைன் வர்த்தக இணையதளங்களில் உள்ள சலுகைகள் பற்றி இந்த வலைப்பூவில் பதிவிடப்பட்டு வருகிறது. மொபைல் ரீசார்ஜ் செய்தால் என்ற பதிவில் ரீசார்ஜ்-க்கு சில சலுகைகள் கிடைப்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது (நானும் இந்த ரீசார்ஜ் செய்து சலுகைகள் பெற்று பயனைந்துள்ளேன் நண்பர்களே). ஆன்லைன் வர்த்தக தளங்கள் நிறைய இருந்தாலும், மதிப்பு தளத்தில் முக்கியமான சலுகைகள் பற்றி பதிவிடுவதால் உங்களுக்கும் பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கின்றேன்.
பாண்டுவின் பக்கம் என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகச் சில பதிவுகளே (31 பதிவுகள்) எழுதப்பட்டுள்ளது. இதில் இவரது கவிதைகள், கதைகள் பதிவிடப்பட்டு வருகிறது. அதில் புத்தகப் பாவை என்னும் கவிதையில் புத்தகத்தை பெண்ணாக நினைத்து அழகாக வர்ணித்து வரிகளை அமைத்துள்ளார். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.
இரயில் பயணங்களில் என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 20 பதிவுகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. நடமாடும் ATM வங்கி எனும் அவரது அனுபவ பதிவில் பணம் எடுக்க நடமாடும் ATM அவரது ஊரில் துவங்கியிருப்பதாக பதிவிட்டுள்ளார். உங்கள் ஊரிலும் இந்த வசதி உள்ளதா?
சுவாதியும்கவிதையும் என்னும் வலைப்பூ ஆரம்பித்து மூன்றே மாதங்களில் நூறு பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளது. அதில், கவிதைகளும், ஹைக்கூ-களும் நிறைய பதிவிடப்பட்டுள்ளது. அதில் கடிதம் என்னும் கவிதைப் பதிவில் நீண்ட நாட்களாக சொல்லப்படாத, எழுதப்படாத விஷயங்கள் கடிதம் வாயிலாக சொல்ல வேண்டும் என்ற கருத்தை தாங்கி எழுதப்பட்டு உள்ளது. நீங்களும் வாசித்துப் பாருங்கள்.
சுவாதியும்கவிதையும் என்னும் வலைப்பூ ஆரம்பித்து மூன்றே மாதங்களில் நூறு பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளது. அதில், கவிதைகளும், ஹைக்கூ-களும் நிறைய பதிவிடப்பட்டுள்ளது. அதில் கடிதம் என்னும் கவிதைப் பதிவில் நீண்ட நாட்களாக சொல்லப்படாத, எழுதப்படாத விஷயங்கள் கடிதம் வாயிலாக சொல்ல வேண்டும் என்ற கருத்தை தாங்கி எழுதப்பட்டு உள்ளது. நீங்களும் வாசித்துப் பாருங்கள்.
நண்பர்களே, இன்றும் மிகச் சில பதிவுகள் எழுதியவர்களின் தொகுப்பு தான்... நாளை இன்னுமொரு வலைப்பதிவு தொகுப்பில் உங்களைச் சந்திக்கின்றேன்...
சோதனை மறுமொழி
ReplyDeleteஇந்தத் தொகுப்பும் மிக அருமை.தேடித் தேடி அறிமுகம் செய்வது பாராட்டுக்குரியது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...
DeleteI will read all the new blogs
ReplyDeleteSo many new comers
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...
Deleteசில நேரங்களில் சில கருத்துக்கள் & மதிப்பு - இந்த இரு தளங்களும் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தோட்டம் தளம் மிகவும் சிறப்பான தளம்...
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...
Deleteஎனது தளத்தை அறிமுகப் படுத்தியதிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிததுக் கொள்கிறேன்
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...
Deleteமிக்க நல்லதொரு முயற்சி சகோதரரே!
ReplyDeleteபல புதிய பதிவர்களை, இலைமறை காயாக இருப்பவர்களை
வெளிச்சத்திற்கு பலரின் கண்களிலும் மனத்தினிலும்
பதியப்பட வைக்கும் விதமாக செயலாற்றுகின்றீர்கள்! மிகச் சிறப்பு!
நானும் நேரம் கிடைக்கும்போது உங்கள் அறிமுகப் பதிவர்கள் பக்கமும் செல்வேன்.
உங்களுக்கும் அனைத்துப் அறிமுகப் பதிவர்களுக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...
Deleteசிகரம் தவிர மற்ற தளங்கள் அனைத்தும் எனக்குப் புதியவை.....
ReplyDeleteபடிக்கிறேன் பிரகாஷ். அறிமுகங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎனது 'சலனம்' வலையினை அறிமுகம் செய்தமைக்கு வலைச்சரத்திற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஉண்மையில் இன்ப அதிர்ச்சி தான்.
தொடர்ந்து எழுதவும் வாசிக்கவும் முயற்சிக்கிறேன் :-)
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...
Deleteஎமது மதிப்பு(www.mathippu.com) தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! உங்களது ஊக்கம் எம்மைப் போன்ற புதிய பதிவர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமைகிறது.
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...
Deleteஅதிகம் அறியப்படாத பதிவுகளைத் தேடி, தொகுத்துத் தரும் தங்கள் பணிக்கு... மிக்க நன்றி!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteI will read all the new blogs. Beautiful introductions.
ReplyDeleteஎமது www.pandukavi16.blogspot.in தளத்தை அறிமுகப் படுத்தியதிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிததுக் கொள்கிறேன். மேலும், எமது ‘புத்தகப் பாவை’ என்ற கவிதையை ரசித்துப் போற்றியமை, தங்களை நல்ல ரசிகனாக அடையாளம் காட்டுகிறது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். @பாண்டூ, சிவகாசி.
ReplyDelete