வணக்கம் வலைச்சர நண்பர்களே,
மீண்டும் புதிய, அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கும் வலைப்பூக்களை இன்றும் அறிமுகம் செய்கிறேன்... வாசித்து உங்கள் கருத்துகளை அவர்கள் தளத்தில் பகிருங்கள்... பதிவுக்குள் போகலாமா?
உன்னால் முடியும் என்னும் வலைப்பூ 2010-இல் ஆரம்பித்து இதுவரை பத்து பதிவுகள் மட்டுமே எழுதப்பட்டு உள்ளது. அதில் நீயா நானா எனும் தலைப்பில் சமீபத்தில் எழுதிய அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு இடையே ஏற்படும் ஈகோ-வை அவரது அனுபவத்தில் இருந்து ஒரு நிகழ்ச்சியை எடுத்து பதிவாக எழுதியுள்ளார். வாசித்து பாருங்கள். இன்னும் நிறைய பதிவுகள் எழுத பதிவரை கேட்டுக் கொள்கின்றேன்.
இனிய உளவாக என்னும் வலைப்பூ ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆனாலும் இதுவரை மிகக் குறைந்த பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. அதிலும் கடந்த ஆண்டு 15 பதிவுகள் மட்டுமே. அவரது பதிவுகள் பெரும்பாலும் சிறு சிறு கதைகளாகவும், அனுபவங்களையுமே கொண்டுள்ளது. அதில் அக்கா எங்களையும் போட்டோ எடுக்கறியா? என்ற பதிவில் அவரது மகள் போட்டோ எடுக்க விருப்பப்பட்டதையும், அவள் எடுத்த போட்டோக்களையும் பதிவிட்டு உள்ளார். நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
மனதின் ஓசை என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகக் குறைந்த பதிவுகளே பதிவிடப்பட்டு உள்ளது. பல்சுவை பதிவுகள் பெரும்பாலும் எழுதப்பட்டு உள்ளது. அதில் தமிழ் இலக்கியமும் உலக மார்க்கெட்டிங்கும் என்ற பதிவில் புத்தகங்கள் விற்பதற்காக இணையத்தில் பலரால் விதவிதமாக மார்க்கெட்டிங் செய்து வருவதைப் பற்றி சிறு கட்டுரையாக எழுதியுள்ளார். வாசித்துப் பாருங்களேன்.
அநியாயங்கள் என்னும் வலைப்பூ 2012-இல் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் இதுவரை பத்து பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. அதில் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டது பற்றிய பதிவும் ஒன்று. கேமரா கண்காணிப்பில் சார்-பதிவாளர் அலுவலகங்கள் என்ற பதிவில் அங்கு நடக்கும் முறைகேடுகளை மிக விளக்கமாக பதிவிட்டுள்ளார். நீங்களும் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள். இன்னும் நிறைய சமூக பதிவுகள் பகிரப்பட வேண்டும் என பதிவரைக் கேட்டுக்கொள்கிறேன்.
கொஞ்சம் இசை... கொஞ்சம் சினிமா... என்னும் வலைப்பூ ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும், இதுவரை 33 பதிவுகள் எழுதப்பட்டு உள்ளது. சினிமா அலசல்கள், விமர்சனங்கள் பதிவுகள் அதிகம் எழுதப்பட்டு உள்ளது. அதில், சமீபத்தில் ட்ராபிக் - கதையல்ல... கதைகள் என்ற பதிவில் அந்த திரைபடத்தை மிக ஆழமாக அலசியுள்ளார். வாசித்து அந்த பதிவரை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
புத்தகம் என்ற வலைப்பூ ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் ஆனாலும் ஒவ்வொரு வருடமும் மிகக் குறைந்த பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. பெரும்பாலும் பதிவர் வாசித்த புத்தகங்களின் விமர்சனங்கள் பதிவாக உள்ளது. The pregnent king என்ற புத்தகத்தை வாசித்து அதன் கதையம்சத்தை விமர்சனமாக பதிவிட்டுள்ளார். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.
கனா காண்கிறேன் என்ற வலைப்பூவில் இதுவரை ஐம்பது பதிவுகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அதில் 22-26 வயது - ஆண்களுக்கு மிகக் கடினமான வயது என்ற பதிவில் ஆண்களின் ஏக்கம், வாழ்க்கை நடைமுறைகள் பற்றி மிக சுவைபட ரசிக்கும்படியாக எழுதியுள்ளார். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.
இந்த வாரம் முழுதும் புதிய வலைதளங்களை ஓரளவுக்கு அறிமுகம் செய்துள்ளேன் என நினைக்கின்றேன். பெரும்பாலான வலைச்சர ஆசிரியர்கள் கதை, கவிதை, கட்டுரை, சமையல் என பல்வேறு தலைப்புகளில் பதிவுகளை தேடி தொகுத்து தருவார்கள். ஆனால் அவ்வாறு செய்தால் புதிய வலைத்தளங்களை பெருவாரியாக அறிமுகம் செய்ய இயலாது என எண்ணி, எல்லா பதிவுகளிலும் நானறிந்த புதிய தளங்களை மட்டுமே தொகுத்து பதிவிட்டுள்ளேன். இந்த முறையிலான பதிவுத் தொகுப்பு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்றே நினைக்கின்றேன். இன்றுடன் எனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பு முடிகிறது. மீண்டும் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் புதிய தளங்களின் தொகுப்புடன் உங்களை சந்திக்கிறேன்..
அடுத்து வரவிருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்தை தெரிவித்து உங்களிடமிருந்து விடைபெறுகிறேன் நன்றி... வணக்கம்... நண்பர்களே...
நட்புடன்..
தமிழ்வாசி பிரகாஷ்
சோதனை மறுமொழி
ReplyDeleteஎஸ் சம்பத் (உன்னால் முடியும்), neutron (அநியாயங்கள்), இரா. பிரபாகர் (கொஞ்சம் இசை... கொஞ்சம் சினிமா...), - இவர்களின் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வணக்கம்
ReplyDeleteவலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம். அறிமுகத்திற்கு நன்றி. நான் வலைப்பூவிற்கு வந்ததே ஒரு தனி கதை. நாட்டில் நடக்கும் அநியாயங்களை புலனாய்வு வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகைகளின் கவனத்திற்கு எடுத்து சென்றும் அவை பரிசீலிக்கப்படாததால், இந்த வலைப்பூவினை தொடங்கினேன். நேரமின்மை காரணமாக தொடர்ந்து எழுத இயலவில்லை. வணிகர் தினமும், கடையடப்பு குறித்தும், விசித்திர வழக்குகள் என்று புதிரான தீர்ப்பு குறித்தும், வாரிசு சான்றிதழ் வழங்குவதில் வட்டாட்சியரின் முறைகேடான செயல் குறித்தும் பதிவுகள் வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து பல அநியாயங்களை வெளிக்கொணர முயற்சிக்கின்றேன். நன்றி.
ReplyDeleteபாலாஜி
அறிமுகப் பகிர்வுகளுக்கு நன்று. நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கிறேன்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடரட்டும்...!!
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவாரம் முழுவதும் சிறப்பாக பணிபுரிந்த பிரகாஷ் அவர்களுக்கு பாராட்டுகள்.
காலையில் கைபேசியில் தெரிந்த மின்னஞ்சலைப்பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சி என்றே சொல்ல வேண்டும், யார் வலைப்பதிவில் வந்தாலும் முதல் வாழ்த்து தனதாகத்தான் இருக்க வேண்டும் என்று வந்து செல்லும் நான் படித்த ஊர் "திண்டுக்கல் தனபாலன்" அவர்கள் எனது பதிவில் வந்து வாழ்த்தியிருப்பது அறிந்து மகிழ்வுற்றேன். நண்பர் தனபாலுக்கும்- திரைப்படத்தில் வடிவேலு நானும் ரவுடிதான், என்னையும் கைது செய்யுங்கள் என்பது போல் சில பதிவுகள் எழுதிய எனது வலைப்பதிவையும் அறிமுகப்படுத்திய எங்களின் மதுரை தமிழ்வாசி பிரகாஷ் தம்பிக்கும் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். அடிக்கடி எழுத வேண்டும் என்ற ஆவலை அதிகப்படுத்திய நட்பிற்கு நன்றி
ReplyDeleteதாங்கள் சொல்வதுபோல் புதியவர்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதில் எங்களுக்கு பல புதிய தளங்கள்
ReplyDeleteதெரியவந்துள்ளன.
தமிழ்வாசி பிரகாஷ்... உங்களுக்கு வாழத்துக்கள்.
//இந்த முறையிலான பதிவுத் தொகுப்பு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்றே நினைக்கின்றேன்// - கண்டிப்பாக!
ReplyDeleteபுதியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறப்பாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதிய பதிவுகளை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கிய
தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
எனது தளத்தை அறிமுகப்படுத்தி ஊக்கமளித்தமைக்கு நன்றி அண்ணா
ReplyDeleteஅறிமுக தளங்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி நண்பரே!
ReplyDeleteதாங்கள் புது புது வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி அவர்களை ஊக்குவிக்கிறீர்கள்.மிக்க நன்றி. அதே போல திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும். புதுப் பதிவர்களிடம் (அல்லது பகுதி நேர பதிவர்கள்) குறைகள் இருப்பின் எப்படி நிவர்த்தி செய்வது என்று தானாக முன் வந்து செய்து தருகிறார். அவரது பணிக்கு என் நன்றிகளும், வாழ்த்துக்களும்.
ReplyDeleteநண்பர்களே!
ReplyDeleteமுடிந்தால் எனது வலைப்பூவுக்கும் வருகை தாருங்கள்.
http://muthuramsrinivasan.blogspot.in
நன்றி