Sunday, January 5, 2014

ஸ்ரீ ரங்கத்தில் வசிக்கும் திருமதி ஆதி வெங்கட் தமிழ் வாசி பிரகாஷிடமிருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே ! 


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - தமிழ் வாசி பிரகாஷ்   - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும் துணைப் பொறுப்பாசிரியர் என்ற நிலையில் - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 47
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 59
பெற்ற மறுமொழிகள்                            :165
வருகை தந்தவர்கள்                              : 1527

 தமிழ் வாசி  பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - புதிய பதிவர்களை - அதிகமாக  எழுதாத பதிவர்களை - அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார். ஐந்து பதிவுகளில் தமிழ் மண வாக்குகளை ஏழும் ஏழுக்கும் மேலும் பெற்று இருக்கிறார்.  

நல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து - அவர்களீன் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார். 
பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
தமிழ் வாசியினை  அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 
ஸ்ரீரங்கத்தினைச் சேர்ந்த திருமதி ஆதி வெங்கட் நாளை முதல் ஆசிரியப் பொறுப்பேற்க  அன்புடன் இசைந்துள்ளார். 

இவர் பிறந்தது சிவகங்கைச் சீமையில். படித்தது வளர்ந்தது எல்லாம் கொங்கு நாடாம் கோவையில்… திருமணமாகி பத்து வருடங்கள் தலைநகர் தில்லியில் வாழ்க்கை… தற்சமயம் பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் புகுந்த வீட்டினருடன் வாசம்… கோவை அரசினர் பாலிடெக்னிக்கில் இயந்திரவியலில் மூன்றாண்டுகள் பட்டயப்படிப்பும், திருமணத்திற்கு முன்பு வரை ஒரு சில இடங்களில் பணி செய்த அனுபவமும் உண்டு… வலையுலகில் மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டாக உலா வந்து கொண்டிருக்கிறார்....

இவர் கோவை2தில்லி என்ற தளத்தில் எழுதி வருகிறார். 

திருமதி ஆதி வெங்கட்டினை வருக வருக என் வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் தமிழ் வாசி பிரகாஷ்
நல்வாழ்த்துகள் திருமதி ஆதி வெங்கட்  

நட்புடன் சீனா 

41 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்கும் திருமதி ஆதி வெங்கட் அவர்களுக்கு என் வாழ்த்துகள்! விடைபெறும் தமிழ்வாசி அவர்களுக்கு பாராட்டுகள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சேஷாத்ரி சார்..

      Delete
  3. பல புதிய தளங்களை அறிமுகம் செய்து வைத்த இனிய நண்பர் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி... பாராட்டுக்கள்...

    திருமதி ஆதி வெங்கட் அவர்களை அன்போடு வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வரவேற்புக்கு மிக்க நன்றி தனபாலன் சார்..

      Delete
  4. கலக்கிச் செல்லும் நண்பருக்கும்... கலக்க வரும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி குமார்..

      Delete
  5. தன் பணியினை சிறப்பாகச் செய்து இன்றுடன் விடைபெறும் இந்த வார வலைச்சர ஆசிரியர் அவர்களுக்குப் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நாளை முதல் புதிய வலைச்சர ஆசிரியராக [அதுவும் இரண்டாம் முறையாக] பொறுப்பேற்க வரும் திருமதி ஆதி வெங்கட் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.
    பாராட்டுக்கள். நன்றியோ நன்றிகள்.


    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வை.கோ சார்..

      Delete
  7. விடைபெற்றுச் செல்லும் தமிழ்வாசி பிரகாஷுக்கு நன்றி! மீண்டும் வருக! வலைச்சரம் ஆசிரியை பொறுப்பேற்க வரும் சகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தமிழ்.இளங்கோ ஐயா..

      Delete
  8. உங்கள் பதிவில் தவளை(!) அடை செய்ய சொல்லித் தந்து
    நானும் செய்த அனுபவம் நினைவில் இருக்கிறது.

    வருக.

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தவலை அடை செய்து பார்த்தீர்களா!!! மகிழ்ச்சி... நன்றி சுப்பு தாத்தா..

      Delete
  9. பணியாற்றிய ஆசிரியர் சகோதரர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள்!!!
    பணியேற்கும் ஆசிரியர் சகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன் சார்..

      Delete
  10. தன் பணியை சிறப்பாக செய்த தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு பாராட்டுகள்.

    வரவேற்பும், வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ஆதி வெங்கட்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஜலீலாக்கா..

      Delete
  12. வ‌லைச்சர ஆசிரியராய் பொறுப்பேற்றிருப்பதற்கு இனிய வாழ்த்துக்கள் ஆதி!
    ஒரு வாரம் பதிவுகள் நிச்சயம் அசத்தலாக இருக்கும் என்று நம்புகிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் நம்பிக்கைக்கு உரியவளாக இருப்பேன்.. என்று நினைக்கிறேன்.. மிக்க நன்றி மனோம்மா..

      Delete
  13. ஆதி வெங்கட் வருக வருக வலைச்சரப்பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தனிமரம்...

      Delete
  14. வலைச்சர ஆசியராகப் பொறுப்பேற்கும் ஆதி வெங்கட் அவர்களுக்கு
    இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி இளமதி...

      Delete
  15. கலக்கிச் செல்லும் நண்பருக்கும்... கலக்க வரும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க சீனி..சார்

      Delete
  16. நான் விரும்பி விடாது தொடரும்
    பதிவர் ஆதி வெங்கட் அவர்களின்
    இவ்வார வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்து கண்டு மகிழ்ந்தேன் சார்...

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ரமணி சார்..

      Delete
  17. வணக்கம்
    இந்த வாரம் வலைச்சர பொறுப்பாசிரியராக வருகிற திருமதி ஆதிவெங்கட் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ரூபன் சார்..

      Delete
  18. கடந்த ஒரு வாரமும் சிறப்பாக செயலாற்றிய தமிழ்வாசி அவர்களுக்கு பாராட்டுகளும், வரும் வாரத்தை சிறப்பாக்க வரும் சகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துக்களும்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க சித்ரா..

      Delete
  19. சிறப்பாக நிறைவு செய்த தமிழ்வாசி அவர்களுக்கு வாழ்த்துக்கள். வரும் வாரத்தை சிறப்பாக செய்ய வரும் ஆதி வெங்கட்டுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கோமதிம்மா..

      Delete
  20. அன்பின் தமிழ்வாசி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
    ஆதி வெங்கட் அவர்களுக்கு நல்வரவு!..
    Reply

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்...

      Delete
  21. வாழ்த்துக்கள் ஆதி வெங்கட்.

    ReplyDelete
  22. தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி..

    ReplyDelete
  23. அருமை.. சூப்பர்.. ஆதி வெங்கட் :)

    ReplyDelete
  24. தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தேனம்மை மேடம்..

    ReplyDelete