தாயே! வணக்கம்!
தாயே! வணக்கம்
அம்மா! தாயே!
தாயே! வணக்கம்
அம்மா! தாயே!
ம்ம்ம்ம்ம்ம் வா நாரதா! வந்து நேரமாகியதா!? நான் கவனிக்கவில்லையப்பா!
நான் வந்ததைக் கூட கவனிக்காமல் அப்படியென்ன தாயே யோசனை!?
நாரதா!? நான் யார்!?
இதென்னக் கேள்வி!? கல்விக்கே அதிபதியான சரஸ்வதி தேவி.
ம்ம்ம். எத்தனையோ மொழிகள் நான் படைத்திருந்தாலும் கூட , தமிழ் மொழி மீது மட்டும் எனக்கு அலாதிப் பிரியம்.
அது உலகத்துக்கே தெரிந்ததுதானே தாயே! அதனால் தான் தமிழர்கள் உங்கள் மேல் அலாதிப் பற்று வைத்துள்ளார்கள்.
ம்ம்ம் கோவை, மதுரை,நெல்லை,சென்னைன்னு வட்டாரத்துக்கேற்றவாறு தமிழில் பேசினாலும் ஒவ்வொன்றிலும் ஒரு அழகு இருக்கு. ஏன் வெளி மாநிலத்தவர் தங்கள் மொழியோடு தமிழ் பேசுவதும் கூட ஒரு அழகுதான். ஆனா, எல்லா வட்டாரத்திலயும் இப்ப ஒரு புது தமிழ் பேசுறாங்க. அதை கேக்கும்போதுலாம் ஈயத்தைக் காய்ச்சி காதுல ஊத்தின மாதிரி இருக்கு.
அப்படியா!? ஊர் ஊரா சுத்தும் எனக்கு இது தெரியாமப் போய்டிச்சே தாயே! அதென்ன தமிழின் புது அவதாரம்!?
அதுவா!? ”பண்ணி” தமிழ்.
என்னது ”பண்ணித்” தமிழா!? விளங்கவில்லை தாயே!! நீங்கள் ஆங்கிலச் சொல்லான funnyயை சொல்றீங்களா!?
பலதரப்பட்ட ஆட்களுடன் பேசும்போது அவர்கள் மொழிச் சொற்களைக் கலந்து பேசுறவங்களைக் கூட நான் பொறுத்த்துப்பேன். ஆனா, சமையல் பண்ணி...,, ஃபோன் பண்ணி..., மேக்கப் பண்ணி..., ரெடி பண்ணி...,ன்னு பேசும் பண்ணித்தமிழைப் பேசும்போது எரிச்சல் வருது நாரதா.
உங்கள் ஆதங்கம் சரிதான் தாயே! நானும் இந்த ”பண்ணி” தமிழைக் கேட்டிருக்கேன்.
விரைவில் தமிழ் அழிஞ்சிடுமோன்னு எனக்குக் கவலை வந்திட்டுது. இதுக்கு நாம என்னச் செய்யலாம்!? நீதான் ஊர் ஊராச் சுத்துறவன். என்ன பண்ணலாம்ன்னு சொல்லேன்!!
எனக்கும் விளங்கவில்லை தாயே! ஒண்ணு செய்யலாம்..., பூலோகத்தில் ராஜின்னு ஒரு பொண்ணு இருக்கு. அவ கவிதை, ஆன்மீகம்லாம் எழுதி நல்லா எழுதுறதா கொஞ்சம் நல்ல பேர் வாங்கி இருக்கா. அவக்கிட்ட கேட்டுப் பார்க்கலாமா!?
ம்ம் உன் யோசனைப்படியே செய். இப்பவே பூலோகம் சென்று ராஜியை அழைத்து வா!
ம்ம்ம் இதோ ஒரு நொடியில் வந்துவிடுகிறேன் தாயே!!
தாயே சரஸ்வதி! என் குடும்பத்தை காப்பாத்து. என் பசங்க நல்ல மனிதர்களாய் வளர்ந்து, நல்லாப் படிச்சு.., நல்ல பேர் வாங்கனும். என் பிளாக் நல்லா ஹிட்டடிக்கனும். இன்னொரு குடும்பமாய் அன்புக் காட்டும் என் வலைத்தள சகோதர, சகோதரிகள் அனைவரும் நல்லா இருக்கனும்.
அப்படியே அருள் செய்தோம் ராஜி!
நன்றி தாயே! ஏன் சோகமா இருக்கீங்க!? ஏதோ மன உளைச்சலில் இருப்பதாய் நாரதர் கூட சொன்னாரே!
அவங்கவங்க கவலை அவங்கவங்களுக்கு. உனக்கு உன் பிளாக், குடும்பம், வலைத்தள குடும்பம் பற்றிய நினைப்புப் போல, எனக்கு என் தமிழ் மீது கவலை. சீக்கிரம் அழிந்து விடுமோன்னு.
கவலைப்படாதீர்கள் தாயே! தமிழ் அவ்வளவு சீக்கிரம் அழியாது.
கேக்கவே சந்தோஷமா இருக்கு. ஆனா, எப்படி சொல்றே ராஜிம்மா!
இப்படி வாங்க. இந்த லேப்டாப்புல சில பதிவுகளைக் காட்டுறேன். அதைப் படிச்சுப் பார்த்தப் பின் உங்க கவலையைப் பற்றிச் சொல்லுங்க தாயே!

பொன்னியின் செல்வன் புத்தகம் படித்த மற்றும் ராஜராஜ சோழன் படம் பார்த்த அனைவருக்கும் மனசுக்குள் சோழனின் பிம்பம் ஓங்கி வானுயர நின்றிருக்கும். ஆனா, தமிழனாய் பிறந்த ஒரே குற்றத்திற்காய் அவனின் சமாதியின் இன்றைய நிலையை படிக்க நேர்ந்த போது மனசு கனத்தது. வெறும் பதிவாய் நாலஞ்சு படம் பார்த்த எனக்கே இந்த உணர்ச்சி என்றால் நேரில் சென்றுப் பார்த்த கரந்தை ஜெயக்குமார் ஐயாவின் மனநிலை எப்படி இருகும். கணித ஆசிரியரான இவர் தமிழ் மேல் கொண்ட காதலால் தூய தமிழில் பதிவெழுதி வருகிறார். கண்ணகி, அகத்தியர் இல்லம்ன்னு இவரின் தமிழ் தேடலின் பட்டியல் நீளும். கரந்தைன்ற சொல்லுக்கு எனக்கு அர்த்தம் தெரியலை. அதை மட்டும் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.
ஊருக்குப் பெயரிடுவதற்கே நூத்தியெட்டு மரபு இருக்கு. ஆனா, நாம ஃபேஷன் என்ற பெயரால் வாயில் நுழையாதப் பெயர்களை வச்சுப் பசங்களைக் கூப்பிடுறோம். பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும்போது நினைவில் கொள்ள வேண்டியவற்றை முனைவர்.இரா.குணசீலன் அழகா சொல்லி இருக்கார். கூடவே தமிழில் வெளியான வித்தியாசமான திருமண பத்திரிக்கை மாதிரிகளையும் கொடுத்துள்ளார்.
யவனராணி, கடல்புறா, கங்கைக் கொண்ட சோழபுரம் புத்தகம்லாம் படிக்கும்போது தமிழனின் கப்பல் கட்டும் திறனையும், கடற்பயணத்தையும் பார்த்து வியந்திருக்கேன். அதெல்லாம் ஜுஜுபின்னு சொல்லாமல் சொல்லுது வர்ணஜாலதின் படைப்பு .
பாலை, நெய்தல், குறிஞ்சின்னு எந்த இடத்துக்கு எந்த உடை அணியனும்!? துணியின் வகைகள் என்னன்னு நம் முன்னோர்கள் அழகாப் பட்டியல் இட்டிருப்பதை நமக்காக தமிழ் நிலா பகிர்ந்திருங்காங்க.
மது, மாது, சூதுடன் நடக்கும் இன்றைய விளையாட்டுகள் போலில்லாமல், யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே அண்ணன், தம்பி, மாமன், மச்சான், அக்கா, பாட்டியுடன் விளையாடும் தமிழர் விளையாட்டான தாயம் பற்றி கவிதா பகிரும் நினைவு.
பக்கத்து வீட்டு தாத்தா சாயந்தரமானா, திண்ணையில் உக்காந்து ஒரு விளக்கிலிருந்து கண்ணாடியை துடைச்சி, மண்ணென்னெய் ஊற்றி எரிய வைப்பார். அதிகமா வச்சா கண்ணாடிலாம் கருப்பாகிடும். அந்த விளக்கின் வெளிச்சத்தில் கைவிரலில் நாய்ப் போல விசிறிப்போல செஞ்சுப்பார்ப்பேன். அந்த நினைவுகளை தி.தமிழ் இளங்கோ ஐயாவின் பதிவு விசிறிவிடும். ஐயாவைப் பற்றிச் சொல்லனும்ன்னா தமிழ்ல முதுகலைப் பெற்றவர்.
முன்னலாம் பெண்கள் பசும் மஞ்சளை உரசி தாலிக்கயிறிலும், முகத்தில், கால்களில் பூசிப்பாங்க. இப்பலாம் மஞ்சளும் காணோம். தாலிக்கயிற்றையும் காணோம். தாலிக்கயிறுக்கு பதிலா செயின்ல மாங்கல்யத்தைக் கோர்த்துக்குறாங்க. சிலர் வெளில போகும்போது எடுத்து கழுத்துல மாட்டிக்கிட்டு, வீட்டுக்கு வந்ததும் கழட்டி வச்சுடறதுலாம் கூட நடக்குது. இந்த காலத்துப் பெண்களுக்கு தாலிக்கயிறின் மகத்துவத்தை சிவா வேல்சன் அழகா சொல்லி இருக்கார்.
நான் படிக்குற காலத்துல கட்டுரை எழுதி, மனப்பாடம் பண்ணி எப்படியோ பாஸ் பண்ணிட்டேன். ஆனா, தேமா, புளிமாலாம் வந்தா வயத்துல புளியைக் கரைக்கும். ஆனா, ஐங்குறுநூறு, குறுந்தொகைக்குலாம் அனாயசமா மொழிப்பெயர்ப்பு பண்றாங்க கிரேஸ். இத்தனைக்கும் இந்தம்மணி சாஃப்ட்வேர் இஞ்சினியர். இப்பத்திய நிலவரப்படி இந்தம்மாதான் என் கடைக்குட்டி சகோதரி.
நாம் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் பொருட்களின் ஆங்கிலப் பெயர்களுக்கு அழகான தமிழ் பெயர்களைப் பட்டியலிட்டு சொல்கிறார் தேவமதி. இவர் ஒரு ஆசிரியர். எங்க ஊர்க்காரர்.
தமிழர்கள் பயன்படுத்திய காசுகளைப் பற்றியும், அதன் பெயர்கள், வரலாறுகள், அதை வெளியிட்ட மன்னன்களைப் பற்றி விளக்கி இருக்கார் நிர்மல்குமார் .
கரகாட்டம்னாலே ஆபாசமாகிவிட்டது இன்றையக் காலக்கட்டத்தில்.., ஆனா அப்படியில்லன்னு அடிச்சு சொல்லி அதன் அருமை பெருமைகளை அழகான படத்தோடு கவிதையாக்கி தந்திருக்கார் மகேந்திரன் அண்ணா. வெளிநாட்டு வாழ் தமிழர். வித்தியாசமான கருப்பொருளோடு தமிழ்ல கவிதை வடிப்பார். ஆனா, இப்ப கொஞ்ச நாளா ஆளையேக் காணோம்.
கேர்ள், லேடின்னு இரண்டு வகையில் இருக்கும் பெண்ணின் பருவங்களை தமிழில் ஏழாய் பிரித்து எங்களுக்குச் சொல்கிறார் கம்மங்குடி
பெண்ணின் பருவ நிலையைப் போலவே ஆண்களின் பருவ நிலையையும் வரலாற்று ஆதாரத்தோடு அலெக்ஸ் பகிர்கிறார்.
ஒரே கல்லில் வடிக்கப்பட்ட யானை, கல்லால் ஆன சங்கிலி என தமிழர்களின் சிற்பக்கலை தமிழகமெங்கும் நிறைந்து கிடக்கின்றது. அவற்றையெல்லாம் நாங்க பாதுக்காக்குறதில்லைன்னு குறைப்பட்டு அதை அழகான கட்டுரை மூலம் ஜெகநாதன் எங்களுக்கு நினைவுக் கூர்கின்றார்.
எங்க கஷ்டத்தை உங்களைப் போன்ற கடவுள்கிட்டச் சொல்ல கோவிலுக்குப் போவோம். அங்கப் போயும் மாமியார் கொடுமை, மச்சினன் தொந்தரவு, பக்கத்துவீட்டுக்காரி புடவைன்னு கதை பேசுவோம். இல்லாட்டி இந்தக் கோவிலுக்குப் போனா இது நடக்கும், அது நடக்கும்ன்னு பயந்து அந்தக் கோவிலுக்குப் போறதையே விட்டுடுவோம். ஆனா அது தப்புன்னுஅகிலேஷ்வரன் தங்கமணி பகிர்ந்துள்ளார். இவர் தளத்தில் நிறைய ஆன்மீக கருத்துகள் மற்றும் நல்ல விசயங்களைச் சொல்கிறார்.
தமிழர்கள் விருந்தோம்பலுக்குப் பேர் போனவங்க. அவங்க விருந்தோம்பலில் அறுசுவை உணவு கண்டிப்பாய் இருக்கும். அறுசுவை உணவினை வாழை இலையில் பரிமாறுவதுதான் அவர்களின் மரபு. வாழை இலையின் மகத்துவம், சாப்பாடு பரிமாறும் மற்றும் சாப்பிடும் முறைகளை சொல்லி இப்ப வாழையிலையின் விலைக் கண்டு மலைத்து நிற்கிறார் ஜி ஜி.
பெண் பார்ப்பதில் தொடங்கி மறுவீடு வரை தமிழர்களின் திருமண முறையில் பல சடங்குகள் உண்டு. அவற்றை வருங்கால சந்ததியினருக்கு நினைவூட்ட பதிந்திருக்கார் கதிரவன். கதை கவிதைன்னு செமையா கலக்குறார் இவர்.
நல்ல விசயங்களுக்கும், பெரிய மனிதர்கள் யாராவது வந்தாலும் ஆரத்தி எடுத்து வரவேற்பது நம் தமிழர்களின் மரபு. ஆரத்தி எதனால் செய்யப்படுவதுன்னு தொடங்கி ஆரத்தி எடுப்பதன் முறைகளை ஹரிஹரன் சொல்கிறார்.
வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா!? பெண்ணா! என்பதை அறிய ஆயிரக்கணக்கில் செலவு செய்து இன்று நாங்கள் தெரிந்துக் கொள்கின்றோம். ஆனா, எங்க முனோருகள் கர்ப்பிணியின் வயிறு, அவள் படுக்கும் முறை வச்சே என்னக் குழந்தைன்னு கண்டுப்பிடிச்சாங்கன்னு சசிதரன் வியந்திருக்கார். அவர் தளத்தின் தமிழனின் சிற்பக் கலை, கட்டிடக்கலையின் அழகை விவரித்திருக்கார். வெளியில் வர விருப்பமே இல்லை எனக்கு!! தொடர்ந்து எழுதுங்க சகோதரா!!
முருகன், விநாயகர், அம்பாள், பெருமாள்ன்னு ஆயிரம் இஷ்டத் தெய்வங்கள் உலகமெங்கும் இருந்தாலும் கூட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட தெய்வங்கள் இருக்கும். அங்குதான் குழந்தைக்கு முஹ்டல் மொட்டை அடிப்பது, காதுக் குத்துவதுலாம் நடக்கும். அந்தக் குலத்திற்கான தெய்வங்களை வழிப்படும் முறைகளை ஜெயபாலன் சொல்கிறார்.
எல்லா நாட்டு பெண்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் மூக்கு, காது குத்தி ஆபரணங்கள் அணிந்திருக்கும் விதத்திலேயே தமிழ் பெண்களை சீக்கிரம் கண்டுப் பிடிச்சுடலாம். பெண்கள் ஏன் காது, மூக்கு குத்தனும்ன்னு மணிகண்டன் சொல்றார்.
நான் சுட்டிக்காட்டிய பதிவுகளைப் படித்தப் பின்னுமா, தமிழ் சீக்கிரத்தில் காணாமல் போகும்ன்னு நினைக்கின்றீர்கள் தாயே!
இல்ல ராஜிம்மா! இந்த பதிவர்களின் தமிழ் சேவைக் கண்டு உளம் மகிழ்ந்தேன். தமிழ் இனி புத்துயிர் பெற்று வளரும்ன்னு நம்பிக்கைப் பெற்றுவிட்டது. உள்ளம் குளிர்ந்திருக்கும் வேளையில், என்னை மகிழ்வித்த உனக்கு என்ன வரம் வேண்டும். கேள் ராஜி!!
இன்று ”அனைத்துலக தாய் மொழி தினம்” தாயே! என் தமிழ் என்றும் மாறா அழகுடனும் இளமையுடனும் இருக்கனும். கூடவே தமிழ் போல நானும் இளமையா இருக்கனும்!! என் குடும்பத்தார், வலை உலக நட்பு உட்பட உலகத்தார் அனைவரும் சண்டைச் சச்சரவு இல்லாம ஒத்துமையா நோய் நொடி இல்லாம எல்லா வளமும் பெற்று வாழனும் தாயே!
ஒரு வரம் தவிர எல்லா வரமும் தந்தேன் ராஜி!
ஏன் தாயே அந்த ஒரு வரத்தை விட்டுவிட்டாய்!!?? அந்த வரம் என்ன!?
தமிழ் போல என்றும் நீ இளமையாய் இருக்க வேண்டும் எனக் கேட்ட வரத்தைதான் சொன்னேன். மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் மூப்பு வரும் இது இயற்கையின் நியதி.
அந்த இயற்கையின் நியதியையும் உடைக்கும் ஆற்றல் எங்கள் வலை உலக நட்புக்குண்டு. அவர்கள் என்னை என்றும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பர். அதனால் எனக்கு என்றும் மூப்பு வராது!
ஆஹா! ராஜி உங்கள் ஒற்றுமை கண்டு மனம் மகிழ்ந்தேனம்மா!
நீ கேட்ட அத்தனை வரத்தோடும் பூலோகம் சென்று என்றும் இளமையோடு வாழம்மா!
வருகிறேன் தாயே!

இன்று உலக தாய்மொழி தினம். தமிழர், தெலுங்கர், கன்னடத்தவர் உட்பட அனைவருக்கும் வாழ்த்துகள் சகோஸ்.
ReplyDeleteராஜிம்மா அருமையாக கதை சொல்லிச் சொல்லி அனைவரையும் அறிமுகப்
ReplyDeleteபடுத்திய விதம் வியக்க வைக்கின்றது ! தாய் மொழி தினமான இன்று அறிமுகமான
அனைத்துத் தளங்களின் சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள் .உங்களுக்கும் என்
நன்றி கலந்த வாழ்த்துக்கள் .
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா!
Deleteஅக்கா தமிழ் என்றதும் அறிமுகத்தில் மிக முக்கியமான மரபு வழியில் அசத்தும் நம் (புலவர்) அப்பாவை தேடினேன். என் கணினி கோளாறா ? அல்லது தவறிவிட்டதா ? பார்த்து சொல்லுங்க. அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteஐயாவை மாப்பேனா!? ஐயாவோட அறிமுகம் வேற இடத்தில் சசி.
Deleteசரிங்க அக்கா. கேட்டது தவறாக இருந்தால் மன்னிக்கவும். அசத்தலாக தமிழ்த்தாயிடம் உரையாடி இருக்கிங்க.. வரமும் எல்லோருக்கும் சேர்த்து கேட்டிருக்கிங்க.. மிக்க மகிழ்ச்சி அக்கா.
Deleteகேட்டதில் தப்பே இல்ல சசி! கவிதையிலும் ஐயா பெயர் வரலை, இங்கயும் ஐயா பெயர் வரலியேன்னு குழப்பம் எல்லோருக்கும் வரும். ஆனா, ஐயாவோட அறிமுகம் வேறிடத்தில்!!
Deleteஉங்க முன்னுரை எப்பொழுதும் போல அருமை..
ReplyDelete'பண்ணு' தமிழ் பற்றி முனைவர் குணசீலன் ஒரு பதிவு எழுதியிருப்பார்கள்..ஆனாலும் சில 'பண்ணு' எனக்கும் வந்துருது..காத்திருக்கேன்னு சொல்லாம 'wait பண்றேன்' தான் எளிதா வருது..மாத்தணும்.
எண்ணிக் கடைக்குட்டி சகோதரி என்று அறிமுகப்படுத்தியது இரட்டை மகிழ்ச்சி..மிக்க நன்றி அக்கா...
அனைவருக்கும் வாழ்த்துகள்! தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ்
Deleteகல்விக் கடவுளிடம் தனக்கு மட்டும் வரம் கேட்காமல், தமிழ் வாழ, சண்டை சச்சரவின்றி உலகத்தார் வாழ வரம் கேட்ட மிகப்பெரிய மனசு என் தங்கையினுடையது. அது இருக்கும் வரை உன்னை நோய்களும் அண்டாது, இளமையும் சிந்தனையில் செயலில் என்றுமிருக்கும். வாழ்க வளமுடன்!
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா! ஆனா, உங்க வாழ்த்து எனக்கு எப்பவும் உரித்தானவையே!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
எமது மொழியின் அருமையும் பெருமையும் இன்றைய பதிவில் தெரிகிறது… இன்று அறிமுகமாகியுள்ள தமிழ் மொழியை நேசிக்கும் வலைஉறவுகளின் தொகுப்பு மிக நன்றாக உள்ளது அத்தோடு தேடிப் பிடித்து அறிமுகம்செய்த வலைச்சர ஆசிரியர். (சகோதரி ராஜீ) அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் நாலாபக்கமும் சுற்றித்து வருகிறேன்…. பேருந்து கிளம்பித்து….பயணிக்கவேண்டியுள்ளது..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பயணம் நல்லப்படியாய் அமைய வாழ்த்துகள் ரூபன்
Deleteமெல்லத் தமிழ் இனி வாழும்... தொடர்ந்து வாழும்...
ReplyDeleteஅருமையான பதிவர்கள் அறிமுகம்...
அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி குமார்.
Deleteபொருள் பொதிந்த அழகான பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ!
Deleteமிக்க நன்றி அக்கா. அருமையான பகிர்வு .
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுபா!
Deleteஉலக தாய்மொழித் தினமான இன்று தமிழையும் தமிழர்களையும் பற்றிய பதிவுகளால் வலைச்சரத்துக்கு அழகூட்டியமை சிறப்பு .ஏராளமான. புதிய விடயங்களைத் தெரிந்து. கொண்டேன் .தொடர்ந்து சிறப்பான அறிமுகங்களை வழங்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தினேஷ்
Deleteமிக அருமையான முன்னுரை... இன்றைய தினத்தில் பொருத்தமான பதிவர்களை அறிமுகம் செய்து வைத்தது அற்புதம் என்றால் சரஸ்வதி தேவியிடம் உரையாடியதை பகிர்ந்தது இன்னும் அற்புதம் ராஜி. கலகலன்னு பேசுற புள்ள மட்டும் இல்ல நம்ம ராஜி.... அழகா சிந்திக்கும்படியான நிறைய சிறப்பான விஷயங்களை தரும் சொல்லரசியும் தான் நம்ம ராஜி என்பதை நிரூபிச்சிருக்கீங்கப்பா.. இன்றைய தினத்துக்கான பகிர்வுக்கு அன்பு வாழ்த்துகள்பா... அறிமுகப்படுத்தப்பட்ட அத்தனை பதிவர்களுக்கும் அன்பு வாழ்த்துகள். த.ம.4
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி மஞ்சுக்கா!
Deleteஇன்றைய அறிமுகங்களில் பல தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.... அந்த பல தளங்களும் தொடர்ந்தும் பகிர வேண்டும்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
எந்தக் குழந்தை என்று கண்டுபிடிச்ச தளத்திற்கு பின் அறிமுகப்படுத்திய இரு தளங்களின் முகவரியும் ஒரே மாதிரி உள்ளது... சரி செய்யவும்...
நன்றி சகோதரி...
சரி செய்து விட்டேன் அண்ணா!. தவற்றை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
Deleteமணிகண்டன் அவர்கள் தளம் இன்னும் மாற்றவில்லை சகோதரி...
Deleteதாய் மொழி நாளில் தமிழின் 'பண்ணி' பற்றிய பதிவை வரவேற்கிறேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteநிறைய தளங்கள் புதியவை! சென்று வருகிறேன்! சிறப்பான முன்னுரையுடன் அட்டகாசமான அறிமுகங்கள்! நன்றி!
ReplyDeleteபுதியவர்களைக் கண்டு அவர்களின் திறமைகளை பாராட்டிவிட்டு வாங்க சகோ!
Deleteசசிதரன் தளத்திற்கு பிறகு கடைசியாக குறிப்பிட்ட இரண்டு தளங்களின் இணைப்பு சசிதரன் தளத்திற்கே செல்கிறது! இணைப்பை சரி செய்யவும்! நன்றி!
ReplyDeleteசரி செய்து விட்டேன் சகோ!
Deleteதாய்மொழி தின வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteதங்களின் மூலம் இன்று அந்த தினத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. அதுபோல் நிறைய தமிழார்வர்களின் வலைப்பூக்களையும் பார்க்க முடிந்தது. நன்றி சகோ.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Delete”அனைத்துலக தாய் மொழி தினம்” வாழ்த்துகள்..
ReplyDeleteஅறிமுகமான பதிவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்..!
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிம்மா!
Deleteதாங்கள் அறிமுகம் செய்தமை மிக நன்று. எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteஉறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இப்போதுதான் வீடு வந்தேன். உங்கள் பதிவைப் பார்த்தேன்! தமிழால்தான் நான் இருக்கிறேன்! என்னையும் அறிமுகம் செய்த சகோதரிக்கு நன்றி! தகவலை எனது வலைத்தளத்தில் தெரிவித்த சகோதரர்கள் கவிஞர் ரூபன், திண்டுக்கல் தனபாலன் இருவருக்கும் நன்றி!
ReplyDeleteகல்யாணம் செஞ்சுக்குறவங்களுக்குதான் பரிசு கொடுப்பாங்க, கல்யாணத்துக்குப் போய் வந்த உங்களுக்கும் பரிசு கிடைச்சிருக்குப் போல!!
Delete@ ராஜி : அறிமுகமுகத்துக்கு நன்றி.
ReplyDelete@தி.த. : தெரியப்படுத்தியதற்கு நன்றி.
நன்றிக்கு நன்றி கவிதா
Deleteஅத்தனையும் அருமையான அறிமுகங்கள். தெரிந்த பதிவர்களின் பதிவுகளைப் படித்துப் படித்து போரடித்துவிட்டது. தெரியாத இப்படி நல்ல தகவல்களைத் தரும் பதிவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ராஜி அவர்களே. வழக்கம்போல தமிழ்மணத்துல குத்தியாச்சி.
ReplyDeleteஎன் பதிவைப் படிக்க போரடிக்குதா இல்லியா சகோ!
Deleteஅருமையான பதிவர்களை
ReplyDeleteமிக மிக அருமையாக அறிமுகம் செய்தது
மனம் கவர்ந்தது,வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா!
Deleteஎல்லாருக்கும் வரம் கிடைக்கணும்ன்னு வேண்டிக்குறேன்
ReplyDeleteஉங்க வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்க்கட்டும்
Deleteசகோதரிக்கு வணக்கம்
ReplyDeleteஅழகான கற்பனையோடு தங்கள் பதிவை வெளியிட்ட விதம் மிகவும் கவர்ந்தது. அறிமுகம் செய்த வலைத்தளம் அனைத்தும் இந்த பதிவிற்கு மிக பொருத்தம். அவர்களுக்கு பாராட்டுகள். தங்களின் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள் சகோதரி. நன்றி..
வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி சகோ!
Deleteதாய் மொழி தினத்தில் சிறப்பான அறிமுகங்கள். கலக்கறீங்க... வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஆதி
Deleteநிறைய தெரிந்த அறிமுகம்தான், தமிழ் இவர்கள் கையில் சும்மா புகுந்து விளையாடும் !
ReplyDeleteயாவருக்கும் வாழ்த்துக்கள்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா!
Delete//கரந்தைன்ற சொல்லுக்கு எனக்கு அர்த்தம் தெரியலை. அதை மட்டும் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.//
ReplyDeleteகருதட்டாங்குடி (தஞ்சாவூர் 2) என்பதுதான் சுருக்கமாக 'கரந்தை'!
இந்நேரம்வரை யாரும் விளக்கம் தரவில்லையா?
(எனது விளக்கம் சரிதானே?)
விளக்கம் சரியான்னு கரந்தை ஐயாதான் சொல்லனும்!!
Deleteஆஹா அசத்தீட்டீங்க,நிறைய அறிமுகங்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சாதியா!
Deleteதமிழால் வாழும் பதிவர்களால் தமிழ் நிச்சயம் வாழ்கின்றது. தமிழுக்காய் உழைக்கும் பதிவர்களை சுவையாய் செய்தீர்கள் அறிமுகம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteஅருமையான கற்பனையும் அறிமுகங்களும். கல்விகரசியையே கண்டு வரமும் பெற்றதோடு அல்லாமல் அனைவர்க்காகவும் வேண்டியது தங்கள் சிறப்பான பண்பை புலப்படுத்தியது. அதுவே இளமையும் அழகும் அள்ளிதரும்.
ReplyDeleteவாழ்க வளமுடன்....!
வாழ்த்துகளுக்கு நன்றி இனியா!
Deleteஅழகான முன்னுரையுடன் அருமையான அறிமுகங்கள்! ..
ReplyDeleteகரந்தை - திருநீற்றுப் பச்சை ( OCIMUM BASAILICUM) எனும் மூலிகைச்செடி எனக் கொள்வர். இந்த மூலிகைச் செடிகளால் சூழப்பட்ட வனத்தில் - வசிஷ்ட முனிவர் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பது இங்கே தலபுராணம்.
கரந்தை என்றும் கரந்தட்டாங்குடி என்றும் வழங்கப்படும். தஞ்சை மாநகரின் வட பகுதி.
தமிழவேள் உமாமகேஸ்வரனார் அவர்கள் - நிறுவிய கரந்தைத் தமிழ்ச்சங்கம் இங்கே தான் உள்ளது.
உங்கள் விளக்கம் சரியா!? தவறா!?ன்னு கரந்தை ஐயாதான் சொல்லனும்.
Deleteதமிழ்மொழியின் சிறப்பான நாளில் சிறப்பான கருத்தும் சிறந்தவர்கள் அறிமுகமும் மிகவும் பொறுத்தம் ராஜி அக்காள்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteநன்றி சகோதரியாரே
ReplyDeleteதிணை வகைகளில்
பசுக் கூட்டங்களை கவர்ந்து செல்லுதல் வெட்சி எனப்படும்.
கவர்ந்து செல்லப்பட்ட பசுக் கூட்டங்களை மீட்டு வருதல் கரந்தை எனப் படும்.
கரந்தை என்றாலே இழந்ததை மீட்டல் எனப் பொருள் படும்.
தமிழின் இழந்த பெருமைகளை மீட்கத் தோன்றிய அமைப்பே கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
கரந்தைத் தமிழ்ச் சங்கம் இருக்கும் இடத்தின் பெயரும் கரந்தை.
பெயர் காறணத்தை விளக்கியதற்கு நன்றி ஐயா!
Deleteநன்றி பெயர் காரணத்தை அழகாக கூறியதற்கு மற்றும் பெயர் காரணத்தை அறிய வழிவகுத்ததற்கும்.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteநாரதர், ராஜி சந்திப்பில் எத்தனை அறிமுகங்கள். அத்தனையும் பயனுள்ளதே! தங்கள் அறிமுகங்கள் இவ்வாறு அமைந்ததால் சற்று வாசிக்க மகிழ்ச்சி கிடைத்தது. தங்கள் பதிவு நுட்பத்தை வரவேற்கிறேன்.
ReplyDeleteதமிழ் பற்றிய பதிவர்கள் அனைவரையும் சிறப்பாக கூறியுள்ளீர்கள்.... வாழ்த்துக்கள். மகேந்திரன் அண்ணா மற்றும் கிரேஸ் இவர்களின் பணி உண்மையிலேயே பாராட்டத் தக்கவை...
ReplyDeleteநாமும் தமிழில் தான் எழுதுகிறோம் என்பதை குற்ற உணர்ச்சியாக்கும் இங்கு அறிமுகப்படுத்தியிருக்கும் பதிவர்களின் எழுத்துக்கள்... இனி தான் கற்றுக்கொள்ளணும் ராஜி.
ReplyDeleteபல தளங்கள் புதியவை. தொடர்ந்து படிக்க முயல்கிறேன்.
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.