ட்ரிங்..., ட்ரிங்...., ட்ரிங்....,
ஹலோ! ராஜி பேசுறேன்.
ராஜியக்கா! நான் சங்கர் பேசுறேன்.
சங்கர்ன்ற பேர்ல யாரையும் தெரியாதே! நீங்க புதுசா பிளாக் ஆரம்பிச்சிருக்கீங்களா!? வலைப்பூவோட பேர் என்ன!? வலைச்சரத்துல உங்க பிளாக்கை அறிமுகப்படுத்தச் சொல்லி இப்படிலாம் போன் போட்டு இம்சிக்கக்கூடாதுப்பா!
ம்க்கும், இந்த லொள்ளுதானே வேணாங்குறது!! நான் சினிமா டைரக்டர் சங்கர் பேசுறேன். ஜெண்டில்மேன், ஜீன்ஸ், சிவாஜி ப்டம்லாம் எடுத்தவன். இப்பத் தெரியுதா நான் யார்ன்னு!?
அடடா! நீங்களா!? நான் யாரோ பிளாக்கர்ன்னு நினைச்சுட்டேன். உங்கப் படத்துல ஹீரோயினா நடிக்கனுமா!? அழகும், திறமையும் இருந்தாலும் வயசு ஒத்து வரலியே! அக்கா, அண்ணி வேசத்துக்குன்னாலும் வீட்டுல ஒத்துக்க மாட்டாங்களேப்பா!
நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்குமாம். பாட்டி கேரக்டருக்கும்கூட நீங்க ஒத்து வரமாட்டீங்க.
அப்புறம் ஏன் எனக்கு போன் பண்ணீங்க!?
ஒரு உதவி வேணும் . அதான் போன் பண்ணேன்.
என்ன உதவி!? என்னால முடிஞ்சதைச் செய்யுறேன்.
அதாவது, நான் அடுத்து எடுக்கப் போகும் படத்துக்கு பாட்டெழுத ஆள் வேணும். அதான் உங்கக்கிட்ட கேக்கலாம்ன்னு வந்தேன்.
சாரிப்பா! இப்பலாம் எனக்குக் கவிதை எழுத மூடே வர மாட்டேங்குது. இதுல சினிமாப் பாட்டு எப்படி எழுதுறது!??
(இது எப்பவுமே இப்படிதானா!? தப்புத் தப்பாவே புரிஞ்சுக்குது!!) ஐயோ! ராஜியக்கா, நான் கேட்க வந்தது, உங்க சர்க்கிளில் நல்லா கவிதை எழுதுற ஆள் யாராவது இருந்தா சொல்லுங்கன்னு கேக்க வந்தேன்.
ஓ! அப்படியா!! எனக்குத் தெரிஞ்சு நிறையப் பேர் நல்லா கவிதை எழுதுவாங்க. எல்லோரும் எனக்கு வேண்டப்பட்டவங்களே! இதுல யாரைன்னு நான் சிபாரிசுப் பண்ண!? ஒருத்தரை சொன்னால் அடுத்தவங்களுக்குக் கோவம் வரும். அதனால, நான் நல்ல கவிதைகள் லின்க் தரேன். நீங்க போய் பார்த்து உங்களுக்கு பிடிச்சமானவங்களைச் செலக்ட் பண்ணிக்கோங்க.
ம்ம்ம் இது நல்ல ஐடியாக்கா! எங்க சொல்லுங்க. நான் குறிச்சுக்குறேன்.
மெத்தப் படித்த படிப்பாளிகள் கூட கைநாட்டு பேர்வழியாய் மாறிப்போன சோகத்தைச் சொல்லும் மோகனனின் கவிதைகள்.

புரோட்டான் நியூட்ரான் ன்னு சைன்ஸ் சம்பந்தமா முத்துக் கண்ணன் எழுதி இருக்கும் கவிதைகள்.
கொசுவை பாட்டுடைத் தலைவியாக்கி கவிதைவீதி சௌந்தர் எழுதிய கவிதை. இவர் ஜோக் மற்றும் நகைச்சுவைப் படங்களைலாம் கூட போடுவார். சண்டையும் நல்லா போடுவார். நீங்க பார்த்த லொக்கேஷன் சரியில்லாட்டி நல்ல நல்ல லொகேஷன்லாம் சொல்வார்.
கவிதைன்னா கவியாழி கண்ணதாசன் அண்ணன். மகிழ்ச்சியான இல்லற வாழ்வுக்கு அண்ணன் தரும் டிப்ஸைப் படிச்சுப் பாருங்க.
சின்ன வயசானாலும் முதியோர் இல்லத்தை பத்தின ரஞ்சித்மோ கவிதைகள்.
100 கிலோ வெயிட்டான காதலியை இருக்குறவன் கூட, சுகமான சுமைன்னு வர்ணிச்சு கவிதை எழுதுவான். ஆனா, என் தம்பி அரசன் மட்டும்தான் பாரம் கனக்குதுன்னு கவிதை எழுதி இருக்கான். வித்தியாசமா இருக்கும். படிச்சுப் பாருங்க. கூடவே சொந்தக் கிராமத்தைப் பத்தின அவனோட அனுபவங்களையும் பகிர்ந்திருப்பான். அதையும் படிச்சுப் பார்த்து உங்கக் கதைக்குத் தேவையானதா இருந்தா பயன்படுத்திக்கோங்க.
தமிழ் தேவதையையும், ஆங்கில தேவதையையும் ஒரு சேர விரும்பும் சிமரிபாவின் சாமர்த்தியம்.
அப்பா, அம்மாவைக்கூட மதிக்காத இந்தக் காலத்துல பாட்டியம்மாவைப் பற்றி கவிதாயினி சத்யா எழுதியக் கவிதை.
சொன்னால்தான் காதலா!?ன்னு கேட்குற ஆட்களுக்கு காதல்ன்னா சொல்லித்தான் ஆகனும்ன்னு ஓங்கி நச்சுன்னு மண்டையில் அடைச்ச மாதிரி சொல்லும் சுகுமாரின் கவிதை.
உறவுகளின் உன்னதத்தை ஒரு கவிதையில் அடக்கிய பிரஷா எழுதிய கவிதை.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தாகம். அந்த தாகத்தை அழகாய் பட்டியலிட்ட சிவக்குமாரனின் கவிதை
ஆயிரம் இம்சை இருந்தாலும் காதல் செய்யனும், கல்யாணம் செய்யனும்ன்னு நினைச்சு கடவுளை வேண்டுவோர் மத்தியில் பிரம்மச்சரியாய் வாழ விடுன்னு கடவுள்கிட்ட கெஞ்சும் நடராஜனின் கவிதை
விஞ்ஞான வளர்ச்சியினால் அதிக நன்மையா!? தீமையான்னு கேட்டு நம்மை குழம்ப வைக்கும் சுதர்சனின் கவிதை.
பெண்களுக்கு இள வயது ஆண்களை விட, வயது முதிர்ந்த பெருசுகளால் தான் அதிகத் தொல்லை. இதை கன்னத்தில் அறையுற மாதிரி சொல்லும் பிறைநிலா
காகிதத்துல கவிதை எழுதுறதைப் பார்த்திருப்பீங்க. ஆனா, காகிதத்தைக் கவிதையாக்கிய அதிசயம் செய்தவர்தான் இந்த ராம்பிரசாத்.
காதலி மேல் என்னக் கோவமோ தெரியலை!! முகம் துடைக்க கார் துடைத்த துணியைக் கொடுத்ததுமில்லாம அதை கவிதையாக்கிய தைரியசாலி சுகப்பிரியன்
மேலதிகாரிக்குக் கீழ்படியும் ஊழியரும், சாவிக் கொடுத்தால் ஆட்டம் போடும் நாய் பொம்மையும் ஒண்ணுன்னு சொல்லாமல் சொல்லும் என்.விநாயக முருகனின் கவிதை.
ஒரு இழவு வீட்டினை நம் கண் முன்னே படம் பிடித்துக் காட்டும் மயாதியின் கவிதை.
சுதந்திர இந்தியாவைக் குழந்தையாக்கி அதை எப்படிலாம் பார்த்துக்கனும்ன்னு யாழினி சொல்லும் அறிவுரைகளைக் கேட்டு அதன் படி நாம நடக்கலாம்.
என்னதான் பசங்கலால பல இம்சைகள் பட்டாலும் உறவு முறை அல்லாது மற்றவர் குழந்தைகளின் மழலைகள் கூட நம்மால் ரசிக்கப் படுது. மழலையின் தேன் சிந்தும் மழலைப் பேச்சை அழகான சின்ன சின்ன கவிதையாய் சொல்லி இருக்கார் பூங்குன்றன்.
பெண்ணாய் பிறப்பதே பாவம், இனி பெண்ணய் பிறக்கக் கூடாதுன்னு நாம அலுத்துக்குறோம். சாதாரணப் பெண்ணுக்கே இந்த நிலைன்னா!! விலை மகளிருக்கு!? தன்னை மீட்க கடவுளிடம் வரம் கேட்கும் விலை மகளிரின் உணர்வை உருக்கமாய் வடித்திருப்பாங்க. தேன் மொழி.
ஒவ்வொரு பெண்ணும் பல அவதாரமெடுக்கிறாள். அதிலும் மனைவியானவள்!? மனைவியின் முப்பரிமாணத்தை சொல்லிச் செல்லும் தம்பி சாய்ரோஸின் கவிதை.
சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்கு பின் மாத்திரைகளை சாப்பிடும் ஆட்களையும், மணிக்கொரு முறை மாத்திரை சாப்பிடுறவங்களையும் பார்த்து, ஐயோ பாவம்ன்னு நினைச்சிருக்கேன். அதையே, கவிதையா வடிச்சிருக்கார் ராமகுருநாதன்.
என்னதான் படோபடமா இருந்தாலும் நீங்க மனசால அழுக்குள்ளவஙக்ன்னு கன்னத்தில் அறைந்து சொல்லும் கவிதைக்கு சொந்தக்காரர் சக்தி .
கண்ணும் கருத்துமாய் பெற்று வளர்த்தப் பிள்ளைகளை தூர தேசம் அனுப்பி பெருமைப்பட்டுக்கொண்டே, மனசுக்குள் வருந்தும் பெற்றோரின் அவல நிலையை சொல்லும் ஒருவனின் கவிதை.
இந்த நாளாஇ எப்படிச் செலவழிச்சோம்ன்னு நமக்கு மட்டுமே தெரியும். நாம் வீணடித்த நாள் நம்மை ஊசிப்போல குத்துவதை கிழிக்கப்பட்டு எறிந்த நாட்காட்டியின் வாயிலாய் சொல்கிறார் தேவதூதன்.
வயாதான காலத்திலயும் வேலை செய்து வயத்துப் பாட்டைக் கவனிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கும் முதியோர்களை பார்த்து நான் தமிழன் வடித்த கவிதை.
தன் இணையோடு எப்படியெல்லாம் வாழனும்ன்னு ஆசைப்பட்டு கண்ணன் பெருமாள் எழுதிய கவிதை.
வலி, இழப்பு, பிரிவுன்னு ஆயிரம் கஷ்டங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும் மரணத்தை நாம ஏன் தவறா புரிஞ்சுக்கனும்ன்னு கேள்விக் கேக்கும் காலப்பைரவனுக்கு நீங்களாவது படிச்சுப் பதில் சொல்லுங்க.
அடுத்து..,
அக்கா! ராஜியக்கா! போதும் போதும் இப்பவே எனக்கு கண்ணைக் கட்டுது. ஏற்கனவே நான் ஒரு படத்தை முடிக்க நாலு வருசம் ஆகுது!! இவங்களையெல்லாமே நான் படிச்சு, அர்த்தம் புரிஞ்சு, அதுல நல்லா எழுதுற ஆளை நான் தேர்ந்தெடுக்குறதுக்குள்ள என் ஆயுசே முடிஞ்சுப் போகும்.
உங்க உதவிக்கு ரொம்ப நன்றிக்கா! கூடிய சீக்கிரம் யார் அந்த அதிர்ஷ்டசாலின்னு சொல்றேன். பைக்கா! போனை வச்சுடுறேன்.
சரிப்பா! எனக்கும் பதிவு போட டைம்மாச்சு! பை!

மின் தடை காரணமா கொஞ்சம் லேட்டா பதிவிட்டதுக்கு சகோஸ் மன்னிச்சு!
ReplyDeleteManichutom thankachi!
DeleteNice Introductions in Good manner! Superb! Best Wishes to all!
ReplyDeleteஎல்லாம் சரி, உங்க தங்கச்சிக்கு இங்க்லீபீசு தெரியும்ன்னு தப்புக் கணக்குப் போட்டு ஆங்கிலத்துல கமெண்ட்ப் போட்டிருக்கீங்களே! இதி நியாயமா!?
Deleteகண்ணா கிருஷ்ணா கோவிந்த நானும் ஒரு பாடலாசிரியரா வர வேண்டும்
ReplyDeleteஎன்று எத்தனை பாடல்கள் மெட்டுப் போட்டு (காக்கா மாதிரி கத்தியுள்ளேன் )பாடியுள்ளேன்
ஆக முறைக்கு பாடலாசிரியர் ஆகும் தகுதி உனக்கே உள்ளதடி என் செல்லமென்று
ஒபாமா மாமாவே கூப்பிட்டு பாராட்டிய பின்னரும் இந்த தலைப்புக்கும் எனக்கும்
சம்மந்தம் இல்லாம போச்சே என்று என் தங்கச்சி மேல கடுப்ப இருக்க "கிருஷ்ணா
கிட்டு " என்று உள்ள தலைப்பைத் திறந்தால் அம்பாளடியாள் என்று வருகுதே இது
கண்ணனின் லீலையே தான் :)))) (மாற்றுங்கள் தங்காய் ) அனைவருக்கும் என்
இனிய வாழ்த்துக்கள் .என் தங்கைக்குப் பாராட்டுகள் .
கவனிக்குறேன் அக்கா! தவற்றை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!
Deleteஅட அட..எப்படி ஒரு முன்னுரை...ராஜினாலே கலக்கல் தான் :)
ReplyDeleteவாழ்த்துகள்!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கிரேஸ்
Deleteசுவாரஸ்யம் அப்டின்ற சொல்லுக்கு டிக்ஷனரில மீனிங் தேடினா எங்க ராஜிப்புள்ளையோட பேர் வருதே எப்டிப்பா? ரொம்ப ரசிச்சு வாசிச்சேன் புள்ள. என்ன ஒரு அழகான அறிமுகப்படலம். சங்கர் ரசிச்சாரோ இல்லையோ உங்க பேச்சை. ஆனா நான் ரொம்ப ரசிச்சேன். எப்போதும் இதே சந்தோஷத்தோட சிரிப்போட சௌக்கியமா இருக்க அன்பு வாழ்த்துகள் ராஜி. அறிமுகப்படலத்தில் இருக்கும் ஒரு சில வலைப்பூக்கள் நான் அறியாதவை... இன்றைய நாளும் அசத்தல்பா.. க்ரியேட்டிவிட்டியும் கொஞ்சம் உழைப்பும் ஈடுபாடும் இருந்துட்டாலே போதும் இதோ இன்றைய நாள் போல அழகியதாய் வலைச்சரம் தொடுக்கலாம்... அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா..
ReplyDeleteபாருங்க இன்னைக்கும் த.ம. எண் கவனிச்சுட்டேன் 4
சுத்திப்போடனும் புள்ளைக்கு... என்னமா தங்கு தடை இல்லாம பேசுது. சாரி எழுதுது...
எனக்கு புகழ்ச்சிலாம் பிடிக்காது மஞ்சுக்கா!
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
இன்று அவசரமாக (office meeting ) அதனால் அறிமுக தளங்களுக்கு போகவில்லை... பின்பு வந்த பின் சென்று வருகிறேன் சகோதரி அறிமுகங்க அனைருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன-
-ரூபன்-
நீங்க கிளம்புங்க ரூபன். டிடி அண்ணா உங்க வேலையைப் பார்த்துப்பார். முடிஞ்ச அளவுக்கு நான் சொல்லிக்குறேன்.
Deleteஇன்றைக்கு அறிமுக தளங்களில் பல தளங்கள் அறியாதவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி...
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
டிடி அண்ணா போகாத தளங்களைப் பார்த்து தேர்ந்தெடுப்பதற்குள் போதும் போதும்ன்னு ஆகிடுச்சுன்னா!
Deleteஅறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
Deleteவழக்கமான உங்கள் பாணியில் அசத்தலான அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.
ReplyDeleteஅழகான அறிமுகத் தொகுப்பு. பலரும் நான் அறியாதவர்கள். அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள். கவிஞர்கள் அறிமுகத்துக்கு நன்றி ராஜி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாம்மா! நேரம் கிடைக்கும்போது புதியவர்கள் தளத்துக்குச் சென்று அவஙக்ளையும் ஊக்கப்படுத்துங்க.
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
என் கடமை முடிந்த பின் தளங்களுக்கு சென்றேன்
கவிதை வீதி
கவியாழி
ரஞ்சித்மோ.
யாழினி
போன்ற தளங்கள் நான் செல்லும் தளங்கள்
ஏனையவை எனக்கு புதிய தளங்கள் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சகோதரி... எல்லாத் தளங்களுக்கும் சென்று கருத்தும் போட்டு வாழ்த்தியும் வந்தாச்சி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமப் போய்ட்டுதுப் போல!!
Deleteஇன்று நிறைய புதிய தள அறிமுகங்கள் எனக்கு! சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்
Deleteகாலையில் போன மின்சாரம் இப்போது தான் வந்தது... சகோதரி... ரூபன் கைபேசியில் விசயத்தை சொன்னார்... அறிமுகங்களுக்கு சென்று வருகிறேன்..
ReplyDeleteஆஹா! முதல்ல வரும் நம்ம டிடி அண்ணா கடைசில வந்திருக்காரே! இன்னிக்கு மழைதான் போங்க!
Deleteஉண்மையிலேயே எனக்கு கண்ணைக் கட்டுது. அசாத்தியமான உழைப்பு. ஆமா எந்த நேரமும் இணையமே கதின்னு இருப்பீங்களா? வீட்க்காரு தண்ணி தெளிச்சி விட்டுட்டாரோ.! பாவம் அவர். சொந்த தளத்திலேயும் தொடர்ந்து பதிவு . வலைச்சரத்திலும் தினமும் பதிவு. கலக்குறீங்க. நாங்கள்ளல்லாம் உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கனும்! அறிமுகங்கள் அசத்தல். ஆனா போய் படிக்க நேரம் இருக்குமா தெரியலை????????
ReplyDeleteஎன் இம்சைல இருந்து தப்பிச்சு அவர் காலையில ஆஃபீஸ் போனா வர நைட் 9 ஆகும் அதுவரை நீங்கலாம்தான் எனக்கு துணை.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகவிதை படைக்கத்தான் முடியவில்லை;
ReplyDeleteகவிதை படிச்சுட்டாவது வரேன்.
இணைப்புகளுக்கு நன்றி!
கவிதை எழுதுறதுலாம் ரொம்ப ஈசிங்க சகோ! சும்மா நாலு வரியை பிச்சுப் போட்டு ஆச்சர்யக்குறி, கேள்விக்குறிலாம் போட்டா கவிதை ரெடி.
Deleteதெரியாத கவிஞர்கள் நிறைய பேர் இருக்காங்களே...
ReplyDeleteபோய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுங்க ஸ்பை.
Deleteவழக்கமான அதே நடை! அருமையான அறிமுகங்கள்! பல தளங்கள் அறியாதவை! அறிய முயற்சி எடுத்ததற்கு மிக்க நன்றி சகோதரி! அறிமுகப்படுத்தியதற்கும் சேர்த்துத்தான்!
ReplyDeleteசங்கர் பாவம்ங்க......அவர விட்டுருங்க...அவருக்கு ஹெ டெக் ....கவிதைதான்...பாட்டு....
நம்ம நண்பர்கள், அண்ணங்கள், தமிப்ங்க எல்லாம் நல்ல தமிழ்ல அழகா எழுதுறவங்க சகோதரி!
பகிர்வுக்கு மிக்க நன்றி!
ஹைடெக் கவிதை எழுதவும் நம்மாளுங்களுக்கு தெரியும்ங்கோ!
Deleteமிக அழகு !! என் பதிவிகளையும் இணைத்ததிற்கு நன்றி !!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரஞ்சித்.
Deleteசுவாரஸ்யமாகவே அறிமுகம் செய்கிறீர்கள். அனைத்தும் ரசிக்கும் படியாகவே உள்ளது.
ReplyDeleteநன்றாகவே ரசித்து வியந்தேன். நன்றி!
தங்கள் பணி மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி இனியா!
Deleteதங்களின் அன்பிற்கு எனது நன்றிகள் ராஜி... என்னுடைய http://tamilgana.blogspot.com போய் பாருங்க... நான் எழுதிய கானாப் பாடல்கள் நிறைய கொட்டிக் கிடக்கும்...
ReplyDeleteஇந்த தகவலை தெரிவித்த திண்டுக்கல் தனபாலருக்கும் எனது நன்றிகள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனக்கு இரண்டு பேரைத்தவிர மற்றவர்களைத் தெரியலைங்க... இவ்ளோ பேரை அறிமுகப்படுத்தினா உங்க அடுத்த பதிவுக்குள்ள அவர்களை பார்க்கக்கூட முடியாது போல....அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeletearimugathirku nandri nanbargaley...... ungalukidaiyil ivan miga siriyavan ezhuthil pizhai irupin mannikavum.......indruthaan valaithalathirku vanthu paarvaiyitten
ReplyDeletenandrigaludan sutharsan