அம்மா! எப்படிம்மா இருக்கே!? பாப்பா, தம்பி, அப்பாலாம் எப்படி இருக்காங்க!? தாத்தா, பாட்டி எப்படிம்மா இருக்காஅங்க!? அவங்க உடம்புக்கு ஒண்ணுமில்லியே!
எல்லோரும் நல்லா இருக்காங்கம்மா! நீ எப்படி இருக்கே!? சாப்பிட்டியா!?
சாப்பிட்டேன்மா! என்ன விசயம்!? போன் பண்ணி இருக்கே!!
என் அப்பாக்கு அறுபது வயசு முடியப் போகுது. அதனால, அவருக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணனும், என் மாமனாரான உன் இன்னொரு தாத்தாக்கு என்பது வயசு தொடங்கப் போகுது அவருக்கும் என்பதாம் கல்யாணம் பண்ணனும். இப்படி அறுபது, என்பது கல்யாணம்லாம் பண்ணனும்ன்னா அவங்க பசங்களைலாம் படிக்க வச்சு, வேலையில் அமர்ந்து கல்யாணம் கட்டிக்கொடுத்து பேரப்பிள்ளைகளையும் பார்த்திருக்கனும். பிள்ளைகள், பேரப்பசங்க வ்ருமானத்துலதான் இந்த விசேசத்தை செய்யனும்ன்னு பெரியவங்கலாம் செய்யுறாங்க. அதனால,
அதனால என்னம்மா!?
உன்னால முடிஞ்ச காசை நீ தரனும். இப்பவே சொல்லி வச்சாதானே நீ பைசாக்கு ஏற்பாடு பண்ண முடியும்ன்னு சொன்னேன்.
என்னால பைசாலாம் தர முடியாதும்மா!
ஏன்மா இப்படி சொல்லிட்டே! ஒரு ஐயாயிரம் கூடவா தர முடியாது!
ஒத்தை பைசா தர முடியாதும்மா! வேற எதுக்காவது காசு கேளு தரேன்.
ஏன் தூயா!? அவங்க மேல என்னக் கோவம்!?
அவங்க மேலல்லாம் எனக்கு கோவமில்லம்மா. கோவம்லாம் உன் மேலதான்.
என் மேலக் கோவமா?! வெளங்கலியே! ஏன்?! என்னக் கோவம்!?
நீயும் பிளாக்குல இருக்குறவங்களும் ஒரு குடும்பம் போல பழகுறது எனக்குத் தெரியும். இந்த வாரம் முழுக்க வலைச்சரத்துல நீதானே பொறுப்பாசிரியர். ஒரு பெரியவங்களையாவது நீ அறிமுகப்படுத்தினியா!? அவங்களுக்கு மரியாதைச் செஞ்சியா!? உன் அப்பா, மாமனார்ன்னு மட்டும் பாசம் காட்டுறே. ஆனா, பிளாக்குல இருக்கும் பெரியவங்களை மட்டும் ஒதுக்கி வைக்குறே! வெளில ஒரு வேசம், வீட்டுக்குள் ஒரு வேசம் போடுறேம்மா நீ!!
அப்படிலாம் இல்ல தூயா! அவங்க பதிவைலாம் தனியா போடலம்ன்னு நினச்சிருந்தேன். என்மேல சந்தேகம்ன்னா சசி ஆண்டியைக் கேட்டுப் பாரு. அவக்கிட்ட இந்த விசயத்தை சொல்லி இருக்கேன்.
அப்படியாம்மா! நாந்தான் அவசரப்பட்டுட்டேனோ! சாரிம்மா! . ரெண்டு தாத்தா, பாட்டி கல்யாணத்தை அசத்திப் பதிவுப் போடலாம். யார் யாரெல்லாம் அறிமுகப்படுத்தப் போறேம்மா!
இன்னிக்கு வலைச்சரத்துல சொல்லப்போறவங்களுக்கு அறிமுகம் தேவை இல்லம்மா! மரியாதைச் செய்யுறதுக்குதான் பதிவுப் போடப் போறதே!
முதல் வணக்கத்துக்குரியவர் நம்ம புலவர் இராமாநுசம் ஐயா! தள்ளாத வயதில்கூட கணினியையும், வலை நட்புகளையும் தள்ளாதவர். தமிழ் பதிவர் சங்கம் உருவாகக் காரணமானவர். மினி பதிவர் சந்திப்பு நடக்க தன் வீட்டை கொடுப்பவர். இப்பக்கூட ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் போய் வந்தார்.
அடுத்து உன்னோட பாய் ஃப்ரெண்டான அடையார் அஜீத்ன்னு சொல்ற சென்னைப் பித்தன் ஐயா! ரொம்பவும் ஸ்மார்ட்.நகைச்சுவை, துணுக்குகள், நீதிக்கதைகள் சொல்பவர். சில சமயம் மொக்கையும் போடுவார்.
46வது திருமண நாளைக் கொண்டாட வடை, பாயாசத்துடன் விருந்து சாப்பிட்டு, வூட்டுக்காரக் கிழவியை இன்னும் கொஞ்ச நேரம் பக்கத்தில் இருன்னு கேட்டு மொத்து வாங்கியதைக் கூட பகிரும் சுப்பு தாத்தா.
50 வயதை நெருங்கிட்டாலே தலைவலி, இடுப்பு வலிப் போன்ற சின்ன சின்ன வியாதிகளைக்கூட அலட்சியம் பண்ணக்கூடாதுன்றதை தன் நன்பனின் இழப்பு மூலம் பாடம் கற்றதை டி.பி.ஆர்.ஜோசப் ஐயா சொல்றார்.
அறிமுகத்துக்கே அறிமுகமான்னு கேட்டாலும் பதிவர்களின் திறமைகளை பதிவர்கள் வாயிலாகவே அறிமுகப்படுத்த வலைச்சரத்தைத் தோர்ற்றுவித்த சீனா ஐயா. உங்களுக்குலாம் ஐயா! எனக்கு மட்டும் அப்பா! என்னை அவர் மகளாய் தத்தெடுத்து ரொம்ப நாள் ஆச்சு. தான் கணினி கற்றதை சொல்றதைக் கேளு.
மதுரைச் சேர்ந்தவர் ரமணி அப்பா! சின்ன சின்ன விசயத்தைக்கூட கருபொருளாக்கி கவிதை எழுதுபவர். தமிழர்களின் அடையாளமான வெள்ளை வேட்டி சட்டையில் அழகான மீசையோடு ப்ரொஃபைல் படம் போட்டுட்டு டி ஷர்ட்,ஜீன்ஸ் போட்டு மீசையில்லாம இருக்கும் காரணம் என்னன்னுதான் தெரியலை. தேர்தல் பற்றி அழகா சொல்கிறார்.
அடுத்து உனக்கு அறிமுகமானவர்தான். போன பதிவர் சந்திப்புல கலந்துக்கிட்ட லட்சுமி பாட்டி. உனக்குப் பிடிச்ச வெஜிடபுள் புலாவ் செய்யுறது எப்படின்னு சொல்றாங்க. குறிச்சு வச்சுக்கோ. நாளைக்கு கல்யாணமாகிப் போகும்போது உதவும்.
எனக்கு புருசனா வரப்போறவருக்குதானே! அவர்தானே கிச்சன் டிபார்ட்மெண்டைப் பார்த்துக்கப் போறவர்.
அடிப்பாவி, என் பேரை ரிப்பேர் ஆக்காம விடம்மாட்டேப் போல!! அடுத்து ராஜராஜேஸ்வரி அம்மா. ஊர்ல இருக்கும் எல்லா கடவுள்களைப்பற்றியும் பதிவாக்கியவர். அழகான படங்களைத் தேடிப் பிடிச்சு பதிவாக்குவார்.
திருமணத்தின் போது பெண் வீட்டுக்காரர் ஃபோட்டோகிராஃபரா இருந்தா அவங்க வீட்டு ஆளுங்க அதிகமாகவும், மாப்பிள்ளை வீட்டார் ஃபோட்டோகிராஃபரா இருந்தா இவங்க வீட்டு ஆளுங்களும் புகைப்படத்தில் மின்னுறதால வந்த சங்கடத்தை வல்லிசிம்ஹன் அம்மா சொல்றாங்க.
இவங்கதானேம்மா பதிவர் சந்திப்புல வந்த பெண்களுக்கு பூ கொடுத்த பாட்டி!?
ஆமா தூயா! நல்லா நினைவு வச்சிருக்கியே! அடுத்து உலகம் சுற்றும் வாலிபியான துளசிப் பாட்டி தான் கடலைப் போட்டக் கதையை சொல்றதைப் படிச்சுப்பாரு.
வாடிய பயிரைக் கண்டப் போதெல்லாம் மனம் வாடும் வே.நடனசபாபதி ஐயா முதுமை வந்தால் மூளை மழுங்கிப் போகுமான்னு நம்மையே கேக்குறார்.
இருபத்தி நாலும் மணிநேரமும் இணையத்தில் இருப்பாரான்னு தெரியலை.தனபாலன் மாமாக்கு அடுத்தபடியா இவர்தான் அதிக மறுமொழி இட்டிருப்பார்ன்னு நினைக்குறென். ஆன்மீகப் பஹ்டிவுல இவரை அதிகம் பார்க்கலாம். நான் அதிகம் மொக்கைப் போடுறதால என் பக்கம் வர்றதில்லைன்னு நினைக்குறேன் வை.கோபாலக்கிருஷ்ணன் ஐயா.
அடுத்து பதிவுலக நாகேஷ்ன்னு சொல்லப்படுற சேட்டைக்காரன் ஐயா. இவரைப் பத்தி நான் சொல்லித்தான் தெரிஞ்சுக்கனும்ன்னு இல்ல. இஅவரோட பதிவைப் பார்த்தே இவரின் நகைச்சுவை உணர்வைத் தெரிஞ்சுக்கலாம்.
90வயசானாலும் தனக்கு வயசாகிட்டதை யாரும் ஒத்துக்க மாட்டாங்க. ஆனா, தருமி ஐயா தனக்கு 70வயது நெருங்குதுன்னு பெருமையா சொல்றார்.
துடித்துக் கொன்றிருக்கும் கன்றுக்குட்டியின் வேதனையை காணுவதை விட கொன்றுவிடுவதே மேல்ன்னு காந்திஜி சொல்லி இருக்கார். ஆனாலும், நம் இந்தியச் சட்டம் அதை ஒத்துக்குறதில்லை. கருணைக்கொலை செய்திருப்பேன்ன்னு ஜி.எம்.பாலசுப்ரமணியன் ஐயா சொல்றார்.
அடுத்து ரஞ்சனி நாராயணன் பாட்டி. இவங்களைப் பத்தியும் நான் சொல்லி தெரிஞ்சுக்க ஒண்ணுமில்ல. தினம் ஒரு பதிவு போடுபவர். தினமும் பதிவுப் போட்டாலும் பயனுள்ல பதிவுகளா இருக்கும். பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு பற்றிதான் பதிவு இருக்கும்.
தான் இஸ்ரேலுக்குப் போன கதையை சொல்கிறார் பழனி.கந்தசாமி ஐயா! பேங்கில் பணம் போடும் எல்லா வழிகளையும் சொல்லும் ஐயா, பணத்தை சம்பாதிக்க வழிச் சொன்னால் நல்லா இருக்கும்!
அம்மா! எனக்கு கிருஷ்ணன் கதைகள் புத்தகம் பரிசளித்தாங்களே! அந்த பாட்டியைப் பத்தி சொல்லவே இல்லியே!
அவங்க பேரு ருக்மணி சேஷாயிப் பாட்டி. டிவில வந்து குட்டிகளுக்கு கதை சொன்னவங்க. இப்ப இணையத்துலயும், புத்தகம் வாயிலாகவும் நீதிக் கதைகள் சொல்லி அசத்துறாங்க.
நாமலாம் வெளிய எங்காவது டூர் போகும்போது உங்க பெரியப்பா, சித்தப்பாலாம் திடீர்ன்னு அடுப்பு மூட்டி சமைச்சுத் தருவாங்க. கைக்குக் கிடைச்சதை போட்டு ஆண்கள் சமைச்சுத் தரும் பண்டத்துக்கு கொஞ்சம் ருசி அதிகம்தான். வேலூர்ல இருக்கும் ராமன் ஐயா காளிஃப்ளவர்ல பொரியல் செஞ்சு அசத்தி காட்டுறார். ஆனா, ஐயாவோட தளத்துக்குப் போகனும்னாலே எனக்கு கொஞ்சம் பயம். ஏன்னு தெரியலை.
அம்மாடி! இத்தனைப் பேர் மூத்தப் பதிவர்கள் இருக்காங்களாம்மா!? இன்னும் இருக்காங்க. கரண்ட் கட் நேரம் வருது. இன்னொரு சமயத்தில் அவர்கள் பதிவுலாம் சொல்லுறேன்.
சரிம்மா! நான் போய் வேலையைப் பார்க்குறேன். நீ தாத்தாக்களின் கல்யாணம் நாள் என்னிக்குன்னு ஒரு மாசம் முன்னாடி சொன்னால் நான் பணம் ரெடிப் பண்ண வசதியாய் இருக்கும்.
சரிம்மா தூயா!! பை!
முதல் வணக்கம்
ReplyDeleteயாராவது விட்டுப்போயிருக்கும்னு தேடிப்பாக்கிறேன்... எல்லாரும் இங்கதான் இருக்காங்க....
ReplyDeleteஎல்லோரும் இங்கதான் இருக்காங்க ஸ்பை!
Deleteஇன்றைய வலைச்சரத்தில் என்னையும் என் பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி திருமதி ராஜி அவர்களே!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அண்ணா!
Deleteமிக நன்றி ராஜி. இனிமையாகக் கதைபோல எல்லோரையும் அறிமுகப்படுத்திவிட்டீர்கள். தனபாலன் அவர்கள் உடனே சொன்னதால் வந்தேன். தங்களுக்கும் குடும்பத்துக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிம்மா!
Deleteமரியாதைக்குரிய மூத்த பதிவர்கள் பட்டியலில் என் பெயரையும் இணைத்ததற்கு மனம் நிறைந்த நன்றிகள்..!
ReplyDeleteமூத்தோர் வரிசையில் உங்களுக்கு இடமில்லாம வேறு யாருக்குண்டு!?
Deleteஉன்னால முடிஞ்ச காசை நீ தரனும். இப்பவே சொல்லி வச்சாதானே நீ பைசாக்கு ஏற்பாடு பண்ண முடியும்ன்னு சொன்னேன்.
ReplyDelete//என்னால பைசாலாம் தர முடியாதும்மா!
ஏன்மா இப்படி சொல்லிட்டே! ஒரு ஐயாயிரம் கூடவா தர முடியாது!//
ஐயாயிரம் என்ன ?
யாரங்கே !! இந்த ஐம்பதாயிரம்
ரோசா மலர்களை அந்த ராஜியிடம்
கொடுத்து எனது ஆசிகளைச் சொல்லு.
நீங்க யாருங்க ?
நான் தான் மீனாட்சி பாட்டி.
துளசி கோபாலுக்கு அக்கா
ரோஒஜா மலர்கள் எல்லா வண்ணத்துலயும் இருக்கட்டும் பாட்டிம்மா!
Deleteமூத்தோருக்கான அரியாசனத்தில், எனக்கும் ஒரு சரியாசனம் தந்தமைக்கு முதலில் நன்றி, ராஜி. அத்தனைபேர்களையும் அவரவருக்குரிய சிறப்பு அம்சங்களுடன் அழகாக அறிமுகம் செய்தமைக்கு இன்னொரு நன்றி. மூத்தோருக்கு சிறப்பு செய்யச் சொன்ன தூயாவுக்கு இந்தப் பாட்டியின் ஆசிகள் பலபல.
ReplyDeleteஇன்று அறிமுகம் ஆன பலரும் தெரிந்தவர்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
தேடி வந்து செய்தி சொன்ன DD க்கு நன்றியோ நன்றி!
நான் மறந்திருந்தாலும் உங்களைலாம் தூயா மாப்பதில்லைம்மா!
Deleteராஜி மேடம் என் வலைப்பக்கத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி. அதிலும் சமையல் குறிப்பை அறிமுகம் செய்ததற்கு ஸ்பெஷல் நன்றி. தொழிற்சங்கம் மற்றும் அரசியல் களப் பணிகளுக்கு மத்தியில் சமையலறை ஒரு இளைப்பாறும் இடமாகவே உள்ளது. இன்றும் பிரெட்டில் ஒரு புது முயற்சி செய்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது எனது வலைப்பக்கத்திற்கு பயப்படாமலே வாங்க. நான் ஒன்னும் அவ்வளவு டெரர் எல்லாம் கிடையாது
ReplyDeleteஅரசியல் பதிவு போடுறவங்களைக் கண்டாலே எனக்குப் ப்யம். அதான் உங்கப் பக்கம் வரும்போது கைலாம் நடுங்கும்.
Deleteதகவல் சொன்ன தோழர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி
ReplyDeleteஅவருக்குதான் முதல் நன்றி சொல்லனும்.
Deleteமூத்தோருக்கு மிகச் சிறப்பாக மரியாதை செய்தமைக்கு மகிழ்வுடன் என் நல்வாழ்த்துகள்! அறிமுகம் பெற்ற அனைத்துப் பெரியவர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கம்!
ReplyDeleteவலையுலகின் மூத்த பதிவர்களை மிக அழகாகா அறிமுகம் செய்து
ReplyDeleteவைத்த அன்புத் தங்கைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் .இங்கே அறிமுகமான அனைவருக்கும் என்
பணிவான வணக்கங்கள் .
வித்தியாசமான ,அருமையான ஒரு வலைச்சர வாரத்துக்கு முத்தாய்ப்பாக மூத்தோர் அறிமுகம்!அதில் என்னையும் இணைத்தமைக்கு நன்றி ராஜி!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesupero super akka !!!
ReplyDelete"மூத்தோருக்கு மரியாதை" என்ற அறிமுகத்தில் அத்தனை அறிஞர்களின் தங்கள் அறிமுகவுரையை வரவேற்கிறேன். அத்தனை அறிஞர்களும் சிறந்த பதிவர்கள் என்பதைவிட இளைய பதிவர்களுக்கான சிறந்த வழிகாட்டிகளே!
ReplyDeleteசிலர் புதியவர்..பார்க்கிறேன்..
ReplyDeleteவிதவிதமா யோசிச்சு எப்படிதான் பதிவு போடுறீங்களோ..அத பத்தி ஒரு பதிவுல சொன்னா பயன்படுத்திக்குவோம் :)
வாழ்த்துகள் ராஜி!
இதை நான் வழிமொழிகிறேன் !!
Deleteபெரியவர்களுக்கு உரிய மரியாதை.
ReplyDeleteஅலுக்காமல் அறிமுகம் செய்யும் உங்க ஸ்டைல் சூப்பர் கா !
பதிவுலக மூத்தோர் அனைவரையும் ஒன்று சேர
ReplyDeleteஅருமையாக அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நீஙகள் அறிமுகப்ப்டுத்திய பதிவர்கள் பலர் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள்தான் என்ராலும் ஒவ்வொருவரையும் நீன்கள் அறிமுகப்பட்ய்த்திய விதம் மிக அருமை. அந்த் வரிசையில் என்னையும் சேர்த்ததற்கு மிக்க நன்றி
ReplyDelete//இருபத்தி நாலு மணிநேரமும் இணையத்தில் இருப்பாரான்னு தெரியலை.//
ReplyDeleteதாங்கள் சொல்வது ஓரளவு சரியே. நான் பெரும்பாலும் இணையத்தில் இருப்பவன் தான். கணினியை 24 மணி நேரங்களும் நான் SWITCH OFF செய்வதே கிடையாது.
அதனால் மட்டுமே தான் என் கண்பார்வையில் சமீபத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக என் மனைவியும் என்னிடத்தில் பல நேரங்களில் கோபப்படுகிறாள்.
[அதாவது தொலைகாட்சியில் அவளுக்குப் பிடித்தமான காட்சிகள் + நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படாத சமயங்களிலும், அவள் தூங்காத சமயங்களிலும் மட்டுமே கோபப்படுகிறாள் ;) ]
மேல் அதிக விபரங்களுக்கு:
http://gopu1949.blogspot.in/2014/01/blog-post_24.html
>>>>>
//தனபாலன் மாமாக்கு அடுத்தபடியா இவர்தான் அதிக மறுமொழி இட்டிருப்பார்ன்னு நினைக்குறேன்.//
ReplyDeleteஒருசில பதிவுகளுக்கு மட்டுமே நான் செல்வதாலும், அவற்றை ஊன்றிப்படித்து, மனதில் ஏற்றி, ரஸித்துப்படித்து வருவதாலும், எனக்கு மிகவும் பிடித்தமானவர்களின் பதிவுகள் + மிகவும் ரஸிக்கக்கூடிய பதிவுகளுக்கு மட்டும் என் பின்னூட்டங்கள் சற்றே நீண்டதாகவும், வித்யாசமாகவும், அதிக எண்ணிக்கைகளிலும் இடம்பெறுவது உண்டு தான். நான் அதை மறுக்க விரும்பவில்லை.
தனபாலன் மாமா தினமும் போகும் பதிவுகள் 100 என்றால் நான் செல்லும் பதிவு ஒன்று தான் இருக்கும். அதாவது அவருடன் ஒப்பிடும் போது எனக்கு 1% மார்க் மட்டுமே. அவருக்கு 100% மார்க்குகள்.
அவரின் வேகத்திற்கெல்லாம் என்னால் செயல்படவே முடியாது. அவர் ஓரளவு என்னைவிட இளைஞர் அல்லவா ! அதனால் எழுச்சியுடன் செயல்பட முடிகிறது.
நானும் அவரைப்போல இளைஞனாக இருந்த நாட்களில், அவரைவிட பேரெழுச்சியுடன் செயல் பட்டவனே தான் என்பதை அறியவும். இப்போது என்னுடைய வேகம் என்பது வேகமாகக்குறைந்து
’வி-வே-க-ம்’ ஆக மாறிவிட்டது.
>>>>>
// ஆன்மீகப் பதிவுல இவரை அதிகம் பார்க்கலாம். //
ReplyDelete’ஆன்மீகப்பதிவர் ஒருவரின் பதிவுகளில் மட்டும் இவரை அதிகம் பார்க்கலாம்’ என்று தெளிவாகவே எல்லோருக்கும் புரியும்படியாகவே எழுதியிருக்கலாமே ! ;)))))
>>>>>
//நான் அதிகம் மொக்கைப் போடுறதால என் பக்கம் வர்றதில்லைன்னு நினைக்குறேன் வை.கோபாலக்ருஷ்ணன் ஐயா.//
ReplyDeleteதயவுசெய்து அவ்வாறு தவறாக நினைக்க வேண்டாம்.
தங்கள் பதிவுகள் பக்கமும் வந்து அடிக்கடி அவற்றைப் படித்ததுண்டு. தங்களின் நகைச்சுவைகளை அவ்வப்போது நான் ரஸித்ததும் உண்டு.
இருப்பினும் தங்களுக்கு நான் பின்னூட்டங்கள் தந்ததாக எனக்கு நினைவில் ஏதும் இல்லை.
அதற்கெல்லாம் பல்வேறு காரணங்களும் உண்டு.
[அவைகளில் ..... கொஞ்சூண்டு மட்டும் இங்கு இப்போது தொடரும்]
>>>>>
பொதுவாக ‘ராஜி’ என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறுவயதிலிருந்தே ஆரம்பித்து ‘ராஜி’ என்ற பெயரில் என் அன்புக்குரியவர்கள் இன்று பதிவுலகம் வரை ஏராளமாகவே உள்ளனர்.
ReplyDeleteஸ்கூலில் என்னுடன் படித்த ‘ராஜி’க்களும்,
அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றிய ‘ராஜி’க்களும்,
அக்கம்பக்கத்து வீட்டு ’ராஜி’க்களும்,
என் கற்பனைக் கதாபாத்திரங்களாக என் கதைகளில் உலா வந்துள்ள ’ராஜி’க்களும்,
என் உறவினர்களான பல ‘ராஜி’க்களுமாக,
மொத்தத்தில் ’ராஜி’ களுக்கு என்னிடம் பஞ்சமே இல்லை.
இத்தகைய ‘ராஜி’க்களுடனான என் நட்புக்களும் மிகவும் ராசியாகவே இருந்து வந்துள்ளன.
‘ராஜி’ என்ற பெயருடையவர்கள் மிகவும் அதி புத்திசாலிகள் இருப்பவர்கள் என்பது என் பொதுவான சொந்தக்கருத்து.
அதனால் உங்கள் பெயர் ‘ராஜி’ என்பதால் தாங்களும் எனக்குப் பிடித்தவராகவே தான் நிச்சயமாக இருக்க வேண்டும். நியாயமாக அதுபோலவே இருந்திருக்கவும் வேண்டும்.
>>>>>
பொதுவாக செல்லமான வளர்ப்பு பிராணிகளே என்றாலும், நாயை ஏனோ எனக்குப்பிடிப்பது இல்லை.
ReplyDeleteஅதன் பின்னனியில் பல சோகமான நிகழ்வுகள் நடந்துள்ளன என்பதை நான் அறிந்துள்ளவன் என்பதாலும்கூட எனக்கு நாய்களைப் பிடிக்காமல் போய் இருக்கலாம்.
நாயினால் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்ச்சிகளை நான் என் உறவினர்கள் சிலரது வாழ்வில் நேரிலேயே கண்டுள்ளேன். அதற்காக மிகவும் மனம் வருந்தி அழுதுள்ளேன்.
தங்களது PROFILE படத்திலும் தாங்கள் ஒரு நாய்க்குட்டியை ..... குட்டியூண்டு நொண்டிநாய் ஒன்று நிற்பதுபோல வைத்துள்ளீர்கள். அதனாலும் நான் தங்கள் வலைப்பக்கம் வந்து கருத்திடாமல் இருக்கலாமோ என்னவோ ! ;)
>>>>>
’மொக்கைப்பதிவு’ என்று பலரும் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். அது என்னவென்று எனக்கு இதுவரை அதிகம் தெரியாமல் உள்ளது. தகுந்த உதாரணத்துடன் விளக்குபவர்களும் யாரும் இல்லை.
ReplyDeleteநான் சென்று வருவதோ ஒரு பத்து அல்லது பதினைந்து பதிவுகள் பக்கம் மட்டுமே. அங்கெல்லாம் என்னால் மருந்துக்கூட மொக்கைகளைக் காண முடியவில்லை.
அதனால், நான் தங்கள் வலைப்பக்கம் வருகை தந்து கருத்தளிக்காமல் உள்ளதால், தங்களுடைய பதிவுகள் எல்லாம் ‘மொக்கை’கள் என தாங்களே மொக்கையாக நினைத்துவிட வேண்டாம், என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
>>>>>
மேலும் இன்று மொக்கையாக இருக்கும் பென்சில் நாளை சீவப்பட்டு, செதுக்கப்பட்டு, மெருகூட்டப்பட்டு, கூர்மையாக்கப்படலாம். அதுவே ”என்னை மொக்கை என்றாய் சொன்னாய்” என கோபப்பட்டு, நம்மையே நறுக்கென்று குத்தவும் செய்யலாம்.
ReplyDeleteஎனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ;)
>>>>>
//இன்னிக்கு வலைச்சரத்துல சொல்லப்போறவங்களுக்கு அறிமுகம் தேவை இல்லம்மா! மரியாதைச் செய்யுறதுக்குதான் பதிவுப் போடப் போறதே!//
ReplyDeleteமரியாதைக்குரியவர்களுக்கு [அதுவும் இன்றும் மனதளவில் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளாகவே இருந்து மற்றவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக செயல்பட்டுவருபவர்களுக்கு] தாங்கள் கொடுத்துள்ள மரியாதை கண்டு மகிழ்ந்தேன்.
>>>>>
இந்த வார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று தினமும் கலக்கி வரும் தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஎன்னைப்பற்றியும், என் வலைத்தளத்தினைப்பற்றியும், அதுவும் குறிப்பாக என் “ வண்ணக்கிளி ..... சொன்னமொழி ..... என்ன மொழியோ ..... “ என்ற பதிவினைப்பற்றியும் இன்று சிறப்பாக எடுத்துரைத்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
oo oo oo oo oo
இன்று என் வலைத்தளத்தினைப்பற்றி, வலைச்சரத்தில், தங்களால் பேசப்பட்டுள்ளது என்பதை, என் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள என் அன்பு நண்பர் திண்டுக்கல் திரு. பொன். தனபாலன் அவர்களுக்கு என் அன்பு நன்றிகள்.
ReplyDeleteஅன்புடன் கோபு [ VGK ]
ஆஹா ராஜிம்மா... தூயாவோட பேசிக்கிட்டே சஷ்டியப்த பூர்த்தி சதாபிஷேகத்துக்கு புள்ள கிட்ட பைசா வாங்காதீங்க. ப்ளாக்ல இருக்கிற எல்லா சின்ன வயசு சுறுசுறுப்பான இளைஞர் இளைஞிகளை இப்படி வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்தது எனக்கு சந்தோஷமேப்பா. இன்று குறிப்பிட்டுள்ள பதிவர்களில் 99.999999 பேர் நான் அறிந்த சுறுசுறுப்பானவர்கள்.. இனிமையானவர்கள்... எல்லோருக்குமே அன்பு வாழ்த்துகள்.... எடுத்தப்பணியை மிக சிறப்பாக செய்தமைக்கு மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ராஜி... த.ம.5
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அத்தனையும் சிறப்பு..
ReplyDeleteவலையுலக மூத்தோர்களின் அணிவகுப்பு சிறப்பு! அனைவரையும் மரியாதை செய்தவிதம் சிறப்பு! நன்றி!
ReplyDeleteமூத்தோருக்கான மரியாதையை சிறப்பாக செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.
ReplyDeleteவலைச்சர குழுவில் இணைந்ததற்கு வாழ்த்துகள்.
பாவம் எல்லோரையும் தாத்தா பாட்டி ஆக்கிட்டீங்களே!? அப்பாடி நான் தப்பிச்சேன்!
ReplyDeleteநமது அன்பிற்குரிய மூத்த குடிமக்களாகிய பெரியோர்களின் அறிமுகம் மிக்க மகிழ்வைத் தந்தது. இவர்களை அறியாதோர் எவருமிலர். இவ்வாறான அறிமுகத்தை வலைச்சர ஆசிரியப் பணியின் கடைசி நாள் அன்றான இன்று கொடுத்தது, முத்தாய்ப்பாய் அமைந்துவிட்டது.
ReplyDeleteஇந்த ஒரு வார ஆசிரியப் பணியினை சீரும் சிறப்புமாக, சுவாரஸ்யம் குன்றாமல் தந்தமைக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅறிவுக்களஞ்சியங்களின் அறிமுகங்கள் மிகச்சிறப்பாக உள்ளது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteமூத்தோர் சொல் அமிழ்தம் என்று ஒரு வாக்கு இருக்கு ராஜி.
ReplyDeleteமரியாதை செஞ்சதுக்கு மனமார்ந்த நன்றிப்பா. எங்க அக்காவும் முன்னாடியே வந்து சொல்லிட்டுப்போயிட்டாங்க:-) நாந்தான் கொஞ்சம் லேட்டு. பாட்டிக்கு நடந்துவர நேரம் ஆகுதுல்லே!
பேத்தி தூயாவுக்கு என் அன்பு!
மூத்தவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteமூத்தவர்களை மதிப்பதும் அவர்களின் அனுபவங்களின் மூலம் நாம் பாடம் கற்க நினைப்பது சிறந்த மனிதனை (மனிதனாக நம்மை) உருவாக்கும்.
அதற்கு வழிகாட்டிய ராஜிக்கு நன்றி.
என்னையும் அறிமுகப் படுத்தியுள்ளதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி. நன்றி.
ReplyDeleteமூத்தோருக்கு மரியாதை செய்திருக்கும் உங்களுக்குப் பாராட்டுகள்......
ReplyDelete