Thursday, February 27, 2014

காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி

”காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி”ன்னு பாரதிப் பாடினார். நாடு,இனம், ஜாதி, மதம் பார்க்காம தாயாய், பிள்ளையாய் இருக்கும் வலை உறவு பாரதி சொன்ன காக்கை, குருவியை மட்டும் விட்டுடுமா!? என்ன!? 

யானை, முதல் எலி வரைப் பதிவுல கொண்டு வந்து ஜாமாய்ச்சிருக்காங்க. வாங்க பதிவுக்குள் போலாம்.....,

ஆசைப்பட்டு நாய் வளர்க்கப் போய் தான் பட்ட இன்னல்களையும், பின் அதுவே விருப்பமாகிப் போனதையும் தேசிகன் சொல்றார்.

மாட்டுச் சந்தையைப் பற்றி விளக்கி, மாட்டுச் சந்தைக்கும், வேற ஒரு துறைக்கும் சம்பந்தம் இருக்குறதா சதங்கா சொல்றார். அது நிஜமா!? இல்லையான்னு படிச்சுப் பார்த்துச் சொல்லுங்க.

வானில் பறந்துத் திரியும் காக்கைக்கும் ஒரு கனவு உண்டென்று முனைவர்.நா.இளங்கோவன் தன் கவிதை மூலம் சொல்கிறார்.

சும்மா இருந்தாலே மயில் அழகு. அதுலயும் மயில் தோகை விரிச்சுக்கிட்டிருந்தா செம அழகு. அத்தகைய அழகுகளைப் படம் பிடித்து நமக்காக பதிவிட்டிருக்கிறார் அபுஅனு  .

ஆறு மாதமாய் எலியால் அவஸ்தைப் பட்டு, அதை ஒழிச்சுக்கட்டியப் பின் எலியை நேசிக்கத் தொடங்கியதை கதையாய் ப.செல்வக்குமார்  சொல்கிறார்.

யானை ஏன் காதுகளை அசைச்சுக்கிட்டே இருக்குன்னு  
திமிங்கலம் தெரியும். நீலத்திமிங்கலம்!? அதைப் பற்றி முத்துக்குமாரசாமி என்னச் சொல்றர்ன்னு பார்க்கலாம்.

செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி அழிஞ்சுப் போச்சுன்னு ஆதங்கப்பட்டு சொல்றார் துரை செல்வராஜு

ஆஸ்திரேலியா சின்னமான கங்காருவைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை வெங்கடேசன் விளக்குகிறார்.

எல்லோருக்கும் திமிங்கலம் தெரியும். நீலத்திமிங்கலம்!? தெரிஞ்சுக்கனும்ன்னா ரத்னா சொல்றதைக் கேளுங்க.

தும்பி பிடிச்சு அதன் வாலில் நூலைக் கட்டி பறக்க விடுவேன். அதைப் பார்க்கும் பெரிசுகள்லாம், ராஜி! தும்பிப் பிடிச்சா உன் அம்மாக்கு தலையை வலிக்கும்ன்னு சொல்லி பயமுறுத்துவாங்க. அப்படியும் திருட்டுத்தனமா தும்பிப் பிடிப்பேன். என்னைப் போலவே தும்பிப் பிடிச்ச கதையை மதுரகன்  சொல்றார்.

நாம் வேடிக்கைப் பார்க்கும் குரங்கைப் பற்றி மனம் கனக்க வைக்கும் கவிதை முருகானந்தன் சொல்கிறார். இதுவரை இவர் ஒரு டாக்டர்ன்ற அளவில்தான் தெரிந்து வைத்திருந்தேன். இப்பதான் தெரியுது ஐயா கவிதையும் எழுதுவார்ன்னு.

பாம்பென்றால் படையும் நடுங்கும். அந்த பாம்பைப் பற்றி இந்த அன்புப் படைக்கு வால்பையன் சொல்றார்.

மயிலுக்கு அடுத்தப்படியா அழகுக்கு பட்டாம்பூச்சிதான்.மயில் போல இல்லாம பட்டாம்பூச்சியை எல்லா இடத்திலயும் பார்க்கலாம். அந்த அழகுப் பட்டாம்பூச்சிகள் பற்றி சிவ சங்கர் படங்களோடு சொல்றார்.

பாம்புகள் பழிவாங்காதுன்னு சொல்லி நம்மை நிம்மதியடைய வைக்கிறார்கள் சிந்திக்க உண்மைகள் தளத்தில்.

சிறு வயது முயல் வேட்டையின் நினைவுகளைப் பற்றி மதிவாணன்  பகிர்கிறார்.

வாய் பேசாத இந்த ஜீவன்களெல்லாம் பாட்டுப் பாடினா! என்னப் பாட்டுப் பாடும்ன்னு பர்ஹான்  நகைச்சுவையாய் பதிவிட்டிருக்கிறார்.

என்னங்க ஐந்தறிவு ஜீவன் களைப்பற்றி நம்மாட்கள் பகிர்ந்தைப் படிச்சீங்களா!? இனி ஐந்தறிவு ஜீவன்களை நேசிப்பீங்கதானே!!??

மின்வெட்டுக் காரணமாகவும், சிவராத்திரிங்குறதால கோவிலுக்குப் போய் வந்ததாலும் லேட்டா பதிவிட்டமைக்கு மன்னிச்சு சகோஸ்.

18 comments:

  1. புதிய தளங்களை அறிந்து வருகிறேன் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தெரியாத தளங்கள் எதாவது இருக்கனும்ன்னு சிவப்பெருமான்கிட்ட வேண்டிக்குறேன் அண்ணா!

      Delete
    2. அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும்... இன்றைய தொகுப்பு சிறப்பு... பாராட்டுக்கள் சகோதரி...

      இரு தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

      அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

      Delete
    3. அப்பாடா! தப்பிச்சேன்

      Delete
  2. நல்லவேளை!...
    ஏகத்துக்கும் இன்றைய பதிவு தாமதமா.. அதனால -
    நேத்து பேயைப் பத்தி பதிவு தொகுப்பு போட்டுட்டு - காய்ச்சல் வந்து விட்டதோன்னு பயந்து விட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. பேய்க்கு ராஜிப் பயப்படுறதா!? ஹே!ஹே! பேய் ராஜிக்குப் பயப்படாம இருந்தாப் போதாதா!?

      Delete
  3. சிவராத்திரி அதுவுமா - நல்லபடியாக சிவ தரிசனம் செய்து விட்டு வந்திருக்கின்றீர்கள்.. வாழ்க வளமுடன்!..
    இன்றைய தொகுப்பில் எனது தளத்திற்கும் இடம் அளித்திருப்பதற்கு மனம் நிறைந்த நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஐயா!

      Delete
  4. இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் அருமை. பாராட்டுகள். அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஆதி!

      Delete
  5. வணக்கம்
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் தளங்களை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அனைவரும் நேசிக்கும் தலைப்பு. புதியவர்கள் அறிமுகம். சிறப்பான பகிர்வு,

    ReplyDelete
  7. சக உயிர் பிராணிகள் பற்றிய சுவையான தொகுப்புங்க...
    நன்றி!
    த. ம. 5.

    ReplyDelete
  8. முற்றிலும் வித்தியாசமான அருமையான தொகுப்பு
    எனது கவிதையையும் பகிர்ந்தற்கு நன்றி
    தகவல்களையும் கருத்துரைகளையும் சுடச் சுடத் தரும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  9. வேலைகள் நிறைய இருப்பினும் நிறைய தளங்களை தொகுத்து சரமாய் கொடுத்திருக்கிறீர்கள்! நானும் இரண்டு தினங்களாய் சிவராத்திரி கோவில் வேலைகளில் மூழ்கியதால் உடனடியாக பார்வையிட முடியவில்லை! எனது தளம் பற்றி பதிவு பற்றி நீங்கள் எழுதிய வேளை அந்த பதிவு இந்த வாரம் முன்னனியில் வந்துள்ளது! நன்றி சகோ! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. இன்றைய பதிவர்களின் அறிமுகம் மிக அருமைப்பா ராஜி.

    த.ம.7

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்கள். அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. நல்ல அறிமுகஙக்ள். இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete