பேய் இருக்கா!? இல்லியா!?ன்னு ஆராய்ச்சிகள், விவாதங்கள் செஞ்சிக்கிட்டு இருக்கு ஒரு இனம். கொல்லிவாய் பிசாசு, ரத்தக் காட்டேரி, பே, பிசாசு, பூதம், குட்டிச்சாத்தான்னு பேர் வச்சு பயப்பட்டுக்கிட்டு இருக்கு இன்னொரு இனம்.
விடை நல்லாத் தெரிஞ்ச ஒரு விசயத்தையே, இன்னும் கொஞ்சம் அலசி, ஆராய்ஞ்சு புதுப் புது அர்த்தங்கள் கண்டுப்பிடிக்குற நம்மாளுங்க விடைத் தெரியாத அமானுஷ்யமான பேய், பிசாசு டாபிக்கை மட்டும் விட்டுடுவாங்களா, என்ன!? அதையும் பின்னிப் பெடலெடுத்திருக்காங்க.
பேய் பிசாசுகள் பத்தி, யாரு!? என்னப் பதிவிட்டிருக்காங்கன்னு இனிப் பார்க்கலாம்..., வாங்க! பதிவுக்குப் போகும் முன் திருநீறு பூசிக்கிட்டு காலில் செருப்புப் போட்டுக்கிட்டு, பக்கத்துல தொடைப்பம் முறம் எடுத்து வச்சுக்கிட்டு பதிவுகளைப் படிங்க.
தப்புப் பண்ணால் சாமிக்குப் பயப்படலாம். தப்பு செய்யாத போதும் பேய், பிசாசுக்குப் பயப்படலாம். ஆனா, பேயா!? சாமியான்னு பயந்திருக்காரே! சுரேஷ் அவரை என்னச் சொல்லலாம்!?
கொள்ளிவாய் பிசாசுடன் கொஞ்ச நேரம் செலவழிச்ச சின்னக்குட்டியின் தைரியத்தை என்னச் சொல்ல!?
ராமு ரத்தக்காட்டேரியாய் மாறிப்போனக் கதையை ஜெயேந்திரன் சொல்றார்.
பாலபாரதிக்கு வெளிநாட்டுப் பேய்களைவிட நம்ம ஊர் பேய்கள்தான் பிடிச்சிருக்காம். அதுக்கு அவர் சொல்லும் காரணங்கள் சரியாதான் இருக்கு.
கொள்ளிவாய் பேய் செய்முறையை தென்பாண்டி நாட்டான் நமக்காகப் பகிர்ந்திருக்கார்.
பேய் ராத்திரில மட்டும் வருவது ஏன்!? தொடைப்பம், செருப்பு கண்டு ஏன் பேய் பயப்படுது!? பேய்ன்னா என்னன்னு உதய சங்கர் விளக்குகிறார்.
மகாலட்சுமி விஜயன் ரசிக்கும்படி பேய்ப்படம் வரனுமாம். அம்மணியோட பேய்ப்பட வரலாற்றை நம்மக்கிட்டச் சொல்றாங்க.
வெளிநாட்டில் கொண்டாடும் பேய்த்திருவிழாவின் ஃபோட்டோக்களைக் காட்டி பயமுறுத்துறார் ராஜ்கமல் .
ஆவி இருக்கா!?இல்லியான்னு ஆவியேச் சொன்னக் கதையைச் சொல்றார் அருண்
பேய் ஓட்டும் முறையையும், பேய் ஓட்டத் தேவையானப் பொருட்களையும் MCX GOLD SILVER விளக்கமா சொல்லி இருக்கார்.
செத்துப் போனவங்கலம் பேயாய் அலைவாங்கன்னு சொல்றதுலாம் சும்மாங்கன்னு விஞ்ஞான விளக்கத்தை சுதர்ஷன் விளக்குகிறார்.
பேய் ராத்திரில மட்டும் இல்ல பகலிலும் வரும்ன்னு விஜயின் ஜனனம் தான் தெரிஞ்சுக்கிட்டதாச் சொல்றாங்க.
ஆவிகளுடனான தன் அனுபவங்களைத் தொடராகவே எழுதி இருக்கார் செல்லப்பா குட்டிச்சாத்தானைப் பார்த்தாரா இல்லியான்னு தெரிஞ்சுக்கோங்க.
பேய், பிசாசுலாம் ஏன் வெள்ளை உடை மட்டும் உடுத்துதுன்னு செந்தழல் ரவி கேக்குறார்
தான் ரொம்பவும் நேசிக்கும் தன் நண்பனின் ஆவி தன்னைச் சந்திக்க வந்ததை பிரபாகர் கதையாய் சொல்கிறார்.
பேய் கதை பேசும்போது மந்திரவாதி வரலைன்னா எப்படி!? மந்திரவாதிகள் செய்யும் வேலைகள் பற்றி சேக்கனா M.நிஜாம் பகிர்கிறார்.
பேயை நீங்க பார்த்திருக்கீங்களான்னு கேட்டு பேய்கள் மீதான தன் சந்தேகங்களை நம்மக்கிட்ட கேட்கிறார் பாலா
அப்பாவுடன் தான் கொள்ளிவாய்ப் பிசாசைப் பார்த்த அனுபவத்தை ரவி பிரகாஷ் பகிர்ந்துக்கிறார்.
அவியுடன் பேசுவது எப்படின்னு கிருத்திகன் குகேந்திரன் சொல்லித் தர்றார்.
இந்த பதிவுலாம் படிச்சுட்டு யாராவது பயந்தால் அதுக்கு கம்பெனை பொறுப்பல்ல. பேய், பிசாசு, ஆவிகள் பத்திய பதிவுகளைப் படிச்சு பயத்துல நைட்டெல்லாம் துங்கலை. இப்ப விபூது பூசிக்கிட்டு, பக்கத்துல துடைப்பம்,செருப்புலாம் போட்டுக்கிட்டு தூங்கப் போறேன்.
பேய்ட்டு சாரி போயிட்டு தூங்கி எழுந்து வரேன்.
முதல் கருத்து சொல்றவங்களுக்கு தாயத்து இலவசம்
ReplyDeleteதாயத்தா!... எனக்கா!..
ReplyDeleteநான் காளியம்மன் கோயில்ல பூஜை செய்றவன் - ங்க!...
அப்ப நம்ம சகோதரர்கள்லாம் எல்லா வளமும் பெற்று நல்லப்படியா நோய் நொடி இல்லாம வாழனும்ன்னு ஒரு ஸ்பெஷல் அர்ச்சனை செஞ்சிடுங்க.
Deleteஆஹா.. அதுக்கென்ன!..
Deleteஅம்பாள் கடாட்சம் அத்தனை உயிர்களுக்கும் உண்டு!..
நேத்து - கல்யாண மாலை!..
ReplyDeleteஇன்னிக்கு தாயத்து வியாபாரமா!?..
எதா இருந்தாலும் நமக்கு கல்லா கட்டனும். அதான் முக்கியம்
Deleteஅதுதான்.. அதேதான்!..
Deleteஎனக்கு பேய் பயம் சுத்தமாக் கிடையாதும்மா. நான் கல்யாணமானவன். ஹி... ஹி... ஹி...! தவிர, ஆவிக்கே அல்வா குடுக்கறவங்க நாங்க! தெர்தா?
ReplyDeleteநீங்க மொகினிப் பிசாசோடு குடும்பம் நடத்துற ஆள்ன்னு தெரியும் அண்ணா! அதுப் பத்தி ஒரு பதிவு நீங்கப் போட்டிருக்கீங்க(http://minnalvarigal.blogspot.com/2013/08/blog-post_19.html).
Deleteஅப்புறம் நீங்க அல்வா தந்தது கோவை ஆவிக்குதானே!!
hi... hi... Amam Sis!
Deleteநேற்று - திருமணப் பதிவு;
ReplyDeleteஇன்று - பேய் பதிவு"
திருமணத்திற்கும் பேய்க்கும் தொடர்பு உள்ளதா மகாராணீ?
ஆஹா! என்னைய கோர்த்து விடுறதுக்குன்னே புதுசு புதுசா சேர்றாங்கப்பா!
Deleteஆஹா இன்னைக்கு செம்ம டாபிக்.. பேய் பிசாசுன்னு சொல்லி பயமுறுத்தாம சுவாரஸ்யமாக சொல்லி பதிவர்களை அறிமுகப்படுத்தியது மிக அழகுப்பா ராஜி. எல்லோருக்குமே மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா... த.ம.3
ReplyDeleteவருகைக்கும், வாத்துகளுக்கும் நன்றி மஞ்சுக்கா!
Deleteஎப்படியெல்லாம் பயமுறுத்துறாங்கன்னு பார்த்து விட்டு வருகிறேன்... அது வரைக்கும் இன்றைய பதிவை வாசிங்க சகோதரி...
ReplyDeleteஇணைப்பு : பரிசு பெறுவதா...? கொடுப்பதா...?
படிச்சுட்டேன். ஆனா, இன்னும் கருத்துச் சொல்லலண்ணா!
Deleteபேய்ப்பதிவெல்லாம் போய் படித்தாயிற்று..பாவம் அந்தப்பேய்கள் உங்களைப்பார்த்த பயத்தில் மிரண்டுபோயிருந்தவைகளை நாங்களும் போய்
ReplyDeleteபே.. பே.. பேய் . என்று கத்தி பயமுறுத்திட்டு வந்துட்டோம்..
என்னைப் பார்த்து பேய்லாம் பயந்துப் போயிருக்கா!? பாவம் பேகள். பேசாம ஒரு நல்ல மந்திரவாதியைப் பார்த்து கூட்டி வந்து பேய்களுக்கு மந்திரிப்போம்.
Deletenalaikku enna marana pathiwa ?
ReplyDeleteநல்ல வேளை! மரண மொக்கைப் பதிவான்னு கேக்கலை
Deleteதைரியசாலிகள் என்றதும் வந்தேன்... பேயை எனக்கு ரொம்ப புடிக்கும்... இருங்க அதோடு பேசிட்டு வர்றேன்..............
ReplyDeleteஆற அமர உக்காந்துப் பேசிட்டு வாங்க.
Deleteநிறைய தளங்கள் நான் அறியாதவை! பொறுப்போடு நிறைய தளங்களை அறிமுகம் செய்யும் தங்களுக்கு பாராட்டுக்கள்! இன்று என் தளத்தை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி! தளம் அறிமுகம் ஆன விசயத்தை இணைப்போடு சொன்ன நண்பர் தனபாலன் அவர்களுக்கும் எனது நன்றிகள். கலக்குங்க சகோ! நாளை என்ன தலைப்பா இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்! நன்றி!
ReplyDeleteஎன்னை பொறுப்பானவள்ன்னு சொன்ன ஒரே ஆள் நீங்கதான். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteஇந்த பதிவை முதல்ல படிக்கிறதுக்கு முன்னாடி, கருத்துக்களை தான் படிக்க ஆரம்பிச்சேன். அதுவும் முதல் கருத்துலேயே நீங்க தாயத்து,கீயத்துன்னு வேற சொல்லியிருந்தீங்களா, பதிவை படிக்கலாமா, வேண்டாமான்னு ஒரே குழப்பம்.
ReplyDeleteஒரு கூருட்டு தைரியத்துல அந்த தலங்களுக்கு எல்லாம் போய் பார்த்துட்டு வரேன்.
ஆனா ஒண்ணு, நான் எந்த பேய் கிட்டையாவது அறை வாங்கினா அதுக்கு நீங்கதான் பொறுப்பு, ஆமா சொல்லிப்புட்டேன்.
கம்பெனி பொறுப்பேற்காதுன்னு முதல்லியே சொல்லிட்டேன் ஒழுங்கா பதிவைப் படிச்சுப் பாருங்க சகோ!
Deleteயாருங்க அது ராஜி ?
ReplyDeleteநீங்க போட்ட பதிவெல்லாம் படிச்சுட்டு எங்க ஊட்டுக்காரரு
நேத்திக்கு ராத்திரி முழுக்கா தூங்காம, என்னையும் தூங்க விடாம,
நிமிஷத்துக்கு ஒரு வாட்டி,
அய்யய்யோ பேயி, பேய்
அப்படின்னு அலறி பிடிச்சுட்டு
அட்டகாசம் பண்றார்.
எதுனாச்சும் ஆத்தா கோவிலுக்கு போயி மந்திரிச்சு வீபுதி அனுப்பு
தாயி.
மீனாச்சி பாட்டி.
ஏய் கெழ்வி! பதிவுப் போட்டதே இன்னிக்குதான். இதுல உன் வூட்டுக்காரர் நேத்து ராத்திரி பேய்ன்னு பெனாத்தினாரா!? நல்லா கதை வுட்ரே நீ!! உன் மூஞ்சியைப் பார்த்துதான் அப்படிக் கத்தி இருப்பார். நீ ரெண்டு நாளைக்கு தாத்தாக்கிட்ட மூஞ்சியைக் காட்டாம இரு. பெருசுக்கு உடம்பு சரியாய்டும்.
Deleteஇன்றும் பல தளங்கள் அறியாதவை...
ReplyDeleteசுவாரஸ்யமான பகிர்வுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அப்பாடா! நீங்கள் அறியாத தளங்களா!? ஆச்சர்யம்தான்!!
Deleteவணக்கம்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சென்று வருகிறேன் பதிவுகளுக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்
Deleteதைரியசாலிகள் வாங்க அப்படின்ன உடனே ஏதோ பெரிய விவாதம் கிடைச்சிடுச்சின்னு ஓடி வந்தேன்... ஸாரி பேய்கள் மேல் எனக்கு நம்பிக்கையில்லை
ReplyDeleteஎன் வீட்டுக்காரர்க்கு கூடதான் இருவது வருசம் முன் வரை பேய் நம்பிக்கை இல்ல. இப்ப இருக்குன்னு சொல்றாரே!
Deleteசெம டெரர் பதிவு போங்க!!
ReplyDeleteஇப்படிலாம் கலாய்க்க கூடாது.
Deleteபயந்து பயந்துதுதான் படித்தேன்
ReplyDeleteஅதனால் பதிவு கூடுதல் சுவாரஸ்யமாய் இருந்தது
வாழ்த்துக்கள்
பேயை என்னிடம் அனுப்புங்க, பேய் ஓட்டிடறேன்.
ReplyDeleteபடிக்க ஆரம்பிக்கும்போது பயமாக இருப்பதைப் போல இருந்தது. படிக்கப் படிக்க அந்த பயம் உறுதியானது, இருந்தாலும் நான் அதைப் பயம் இல்லாமல்தான் படித்தேன் என்று உண்மையாகக் கூறுகிறேன்.
ReplyDeleteஎன்னங்க இது அநியாயமா இருக்குது. :-(
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டிருக்கும் “அருண்” என்பவரது ‘ஆவி உலக ஆராய்ச்சிகள்” என்ற பதிவு (http://nigalarts.blogspot.in/2013/03/blog-post_7801.html) காபி-பேஸ்ட் பதிவு. பதிவான நாள் : மார்ச் 10, 2013.
அதன் மூல, அசலான, உண்மையான பதிவு இங்கே : http://ramanans.wordpress.com/2009/08/20/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
பதிவான நாள் : 20-05-2009. அதுவும் 79 கமெண்டுகளோட அது ஒரு ஹிட் போஸ்டும் கூட.
http://ramanans.wordpress.com/ தளத்தில் ஆவி, பேய், பிசாசு, பூதம், முற்பிறவி, மறுபிறவிங்குற தலைப்புல 100த்துக் கணக்கான கட்டுரைங்க இருக்கு.
நன்றி
பகிர்வுக்கு மிக்க நன்றி !
ReplyDeleteஅறிமுகப்படுத்தியுள்ள அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...
நான் பேய்க்குப் பயப்படவே மாட்டேன்...
ReplyDelete..
..
- தூங்கும்போது!
எனது இப்பதிவினைப் படித்தீர்களா?:
"பேய்க்கு பயப்படலாமா?" இணைப்பு:
http://nizampakkam.blogspot.com/2009/09/blog-post_06.html
அறிமுகத்திற்கு நன்றி
ReplyDeleteபேய் பகிர்வு சூப்பர்:)) அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஹா........ஹா.......
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
பேய் அறிமுகத்திற்கு.... என்னமோ டைப் பண்ண வந்து என்னமோ டைப் ஆகுது!
ReplyDeleteஅதாங்க பேய் பற்றி எழுதிய தளங்களின் அறிமுகத்திற்கு நன்றி....
வணக்கம். என் தளத்தை அறிமுகம் செய்த்ததற்கு மிக்க நன்றி.இதை எனக்கு தெரிவு படுத்திய தனபாலனுக்கு மிக்க நன்றி.
ReplyDelete