Tuesday, February 25, 2014

கல்யாணம் ஆகாதவர்களுக்கான பதிவு!

ராஜி! என் ஃப்ரெண்ட் வீட்டுக் கல்யாணத்துக்குப் போய் வந்தோமே! கல்யாணம் எப்படி இருந்துச்சு!!?

ரொம்ப செலவு பண்ணி கல்யாணம் செஞ்சிருக்காங்க. நாம குறைச் சொல்லக்கூடாது. ஆனா, அதிலிருந்து நம்ம வீட்டுக் கல்யாணத்தை எப்படி நடத்தலாம்ன்னு ஐடியா பண்ணிக்கலாம்.

குறைச் சொல்லச் சொல்லல ராஜி! ஆனா, எப்படி இருந்துச்சுன்னு பகிர்ந்துக்கலாமில்ல!

அதுக்கு ஏன் உங்க ஃப்ரெண்ட் வீட்டு கல்யாணத்தைப் பத்திப் பேசனும்!?

கல்யாணம்ங்குறது ஆயிரங்காலத்துப் பயிர். அதை அவசர, அவசரமா பெத்தவங்களை மதிக்காம கல்யாணம் கட்டிக்கிட்டு நம் பசங்கக்கிட்ட அல்லல்படாம இருக்க அட்வைஸ் பண்றார் சேவியர் .

பெண் பார்க்க வரும்போது எப்படி உடைகள், நகை அணியனும்ன்னு வாசுகி மகாலில் டிப்ஸ் கொடுக்குறாங்க.

பெண் பார்க்கப் போகும் மாப்பிள்ளை வீட்டார் நினைவில் கொள்ள வேண்டியவைகளை ரவி பட்டியலிடுகிறார்.

நம்ம ஊர்லலாம் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு வெல்லத்தால் செஞ்ச பானகம்தான் தருவாங்க. அதுக்கப்புறம்தான் டீ,காஃபி, கூல் ட்ரிங்க்ஸ்லாம். அந்த பானகத்தை எப்படி செய்யுறதுன்னு சித்ரா சுந்தர் சொல்றாங்க.

இப்பலாம் கல்யாண விருந்துல பூசணிக்காய்ல செய்ய்ற காசி அல்வா கண்டிப்பா இருக்கு. அதை எல்லோராலும் நல்லா செய்ய முடியறதில்ல. அந்த அல்வா செய்முறையை வாசன் சொல்றார்.

ருசியானதும், உடலுக்கு வலுவான காளான் சாதம் செய்யுறது எப்படின்னு கார்த்திக்கேயன் சொல்றார். அதுப்போலதான் சாப்பாட்டைத் தேர்ந்தெடுக்கனும்.

கல்யாணம் மண்டபம் புக் செய்யுறதுக்கு முன்னாடி கவனிக்க வேண்டியவைகளை கௌதம் ராம் நினைவூட்டுகிறார்.

காதல் திருமணமோ! இல்ல நிச்சயக்கப்பட்ட திருமணமோ எதுவாயிருந்தாலும் பொருத்தம் பார்க்கனும்ன்னு ஜிரா சொல்றார்.

இப்பலாம் ஒரு கார்டு 300 நானூறு ரூபாய்ன்னு கூட அழைப்பிதழ் அச்சடிக்குறாங்க. ஒரு சில நாள் சொந்தக்காரங்க வீட்டு டேபிள்ல இருந்துட்டு குப்பையில் வீசி எறியும் தாளுக்கு எதுக்கு எம்புட்டு செலவு செய்யனும்ன்னு கேட்டு, மாதிரிக்கு சில வித்தியாசமான அழைப்பிதழ்களை முத்துலெட்சுமி காட்டுறாங்க.

ஒரு வீட்டுக்கு கல்யாண அழைப்பிதழ் கொடுக்க சரியான நேரம் எதுன்னு உஷா சொல்றாங்க.

அலங்காரமென்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆணகளுக்கும் கூட இருகுங்கன்னு ஆண்களுக்கான அழகு டிப்ஸ்களை தமிழ்ஜோதி அள்ளி விடுறார்.

திருமணத்துக்கு முன் என்ன நகை வாங்கனும்!? என்ன முக, கூந்தல் அலங்காரம் பண்ணனும், நகம்,கைக்கால் பராமரிப்பதெப்படின்னு பிரபாதாமு சொல்றாங்க.

திருமனத்துக்குப் போடுவதற்குண்டான அழகான மெகந்தி டிசைன்களை அன்புடன் மலிக்கா படம் போட்டு காட்டுறாங்க.

திருமணத்தில் அரசானிக்கால் ஏன் நடப்படுதுன்னு மயில்வாகனம் பிரபா சொல்றாங்க.

அம்மி மிதிக்குறது எதுக்குன்னா வூட்டுக்காரரைத் தூக்கிப் போட்டு மிதிக்குறதுக்கான ஒத்திகைன்னு என்னைப் போல எடக்கு மடக்கா யோசிக்காம சந்தானம் சொல்லுறதைப் படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க.

அருந்ததி பாருன்னா கல்யாணத்துக்கு வந்திருகும் யாரோ ஒரு அருந்ததியை இனி வரும் மாப்பிள்ளைகள் சைட்டடிக்காம இருக்க அருந்ததி பார்த்தல்ன்னா என்னன்னு சிவ ஆணந்த் சொல்றதை மனசுல வாங்கிக்கனும்.

இரு உயிர்களை இணைக்கும் திருமணத்துக்கு ஆடம்பரம் அவசியமான்னு உஷா அன்பரசு முணுமுணுக்குறதை என்னன்னு கேளுங்க.

தாலி கட்டும் சடங்கு ஏன்னு நாராயணசாமி ஜெகதீசன் விளக்குறதைப் படிச்சுப் பாருங்க.

திருமணத்தைப் பதிவு செய்வதன் அவசியத்தை ராஜேஷ் சொல்லுறதை நாமெல்லாம் நினைவு வச்சுக்கனும்.

அழகான ஆரத்தித் தட்டுகளை  தென்றல் சரவணன் நமக்காக பதிவிட்டிருக்கிறார்.

நா ஊறும் கல்யாண சீர் பலகாரங்களை ஸாதிகா அக்கா பட்மாக்கிருக்காங்க.

கல்யாணம்னா மொய் இல்லாமலா!? திருமணங்களில் மொய் எழுத உக்காருவங்க நிலையை தங்கராசு நாகேந்திரன் புலம்புறார்.

பாடுப்பட்டு சேர்த்த பணத்துல லட்சம் லட்சமா கொட்டி பட்டு, நகைன்னு வாங்கி பொண்ணுக்கு சீர் செய்யுறோம். அதை எப்படி பராமரிக்குறதுன்னு ஹாதிம்சஹா டிப்ஸ் தர்றாங்க.

கல்யாணமான பெண் மாமியார் வீட்டுக்குப் போறதுக்கு எப்படி பயப்படுவாளோ! அதுப்போலதான் மாப்பிள்ளையும் பெண்வீட்டுக்கு மற்வீடு போறதுக்கு பயப்படுவாப்ல. மச்சினிச்சி கிண்டல், மாமியாரின் உபசரிப்பு, மாமனாரின் தயக்கம், மச்சினன்களின் கேலின்னு ஒரு வழிப் பண்ணிடுவாங்க. மறுவீட்டுக்குப் போகும் மாப்பிள்ளை எப்படி நடந்துக்கனும்ன்னு சின்னப்பையன் எச்சரிக்கிறார்.

மேல சொன்னதுலாம் இல்லாமச் செய்யும் புரட்சித் திருமனம்ன்னா என்னன்னு சீனிவாசன் சொல்றார்.

தாம்பூலப் பை கொடுப்பதன் அறிவியல் காரணம் சொல்கிறார் சாஸ்திர சர்மா.

என்னங்க இதெல்லாம் நினைவுல வச்சுக்கோங்க. நம்ம பசங்க கல்யாணத்துக்கு உதவும்.

ம்ம்ம்ம் இதெல்லாம் நம்ம கல்யாணத்துக்கு முந்தியே யாராவது எனக்குச் சொல்லியிருந்தா நான் தப்பிச்சிருப்பேனே!!

ஒரு சின்ன விளம்பரம்:
எங்க வீட்டு கல்யாண நிகழ்ச்சிகளைக் காண இங்க போங்க.

36 comments:

  1. முதல் மொய் என்னுதுதான்!

    ReplyDelete
  2. நாங்களும் மொய் வைப்போமுல்ல!...

    ReplyDelete
    Replies
    1. வச்சாதான் தாம்பூலப் பை தருவோமில்ல!

      Delete
  3. இந்த பிப்ரவரி ஒன்பதாம் நாள் தான் என் மகளின் திருமணம் மங்கலகரமாக நிகழ்ந்தது. தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மன் சந்நிதியில் வைத்து பெண் பார்த்தல். அதன் பின் நிகழ்ந்தவை எல்லாமே அவள் செயல். வீண் ஆடம்பரங்கள் ஏதுமின்றி நிறைவாகவும் மகிழ்வாகவும் - திருமணம் நடந்தது.

    இங்கே குறிப்பிட்டதைப் போல -
    எவ்வளவு அழகாக அழைப்பிதழ் நாம் வழங்கினாலும் அதன் கடைசி புகலிடம் குப்பை தான்!.. சாலையில் செல்லும் போது ஆங்காங்கே குப்பையில் கிடக்கும் அழைப்பிதழ்களைக் கண்டால் மனம் மிகவும் வலிக்கும்..

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான். ஆனா, அதுக்காக எல்லா அழைப்பிதழ்களையும் சேர்த்து வைக்கவும் முடியாது

      Delete
  4. அறியாத... அவ்வப்போதாவது பகிர்ந்து கொள்ளாத பல தளங்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. னி தொடர்ந்து எழுதுவாங்கன்ற நம்பிக்கையில்தான் அறிமுகம் செய்தேன் அண்ணா! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  5. சிறப்பான செய்திகள். நல்ல தொகுப்பு. வேண்டுபவர்களுக்கு உபயோகமாக இருக்கும். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி!

      Delete
  6. நிச்சயம் பலருக்கு பயன் உள்ள பதிவுகள் .அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  7. நல்ல தொகுப்பு ராஜி

    இதன் மூலம் பலரையும் அறியமுடிந்தது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி விஜயலஷ்மி

      Delete
  8. இதோ ராஜியக்கா நானும் மொய் வெச்சிட்டேனாக்கும் !!

    ReplyDelete
    Replies
    1. மறக்காம தாம்பூலப் பை வாங்கிக்கோங்க மைதிலி

      Delete
  9. தம்பிக்கு தேவையான பதிவு தான் அக்கா இது ....

    ReplyDelete
    Replies
    1. உன் லைன் க்ளியர் ஆகிடுச்சுன்னு தெரியும். அதான் இப்படி ஒரு பதிவு

      Delete
  10. மிகவும் ரசித்துப் படித்தேன்.. அருமையான தொகுப்புகள்..பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!

      Delete
  11. ஆதி வெங்கட் சொன்ன மாதிரி தேவைப்படறவங்க பயன்படுத்திக்கட்டும்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எழில்

      Delete
  12. கல்யாணம் ஆகாதவர்களுக்கான தொகுப்பு
    நன்று - அது போல
    கல்யாணம் ஆனவர்களுக்கான தொகுப்பு ஒன்றை
    தொகுத்தளித்தால்
    இனிய பகிர்வாக இருக்குமெனக் கருதுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் மெனக்கெட்டால் செய்திடலாமே

      Delete
  13. மிகச் சிறப்பான அறிமுகங்கள்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்

      Delete
  14. நம்ம ஊர் பாரம்பரிய பானகத்தின் செய்முறையைக் கண்டறிந்து இங்கே அறிமுகப்படுத்தி வைத்த‌தில் மகிழ்ச்சிங்க. அறிமுகமானதைத் தெரியப்படுத்திய ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் நன்றி.

    வலைச்சர ஆசிரியைக்கும், இன்று அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா

      Delete
  15. சாப்டுக்கின்னு மொய்யி வச்சுக்கணுமா... இல்ல மொய்யி வச்சிக்கின்னு சாப்டுக்கனுமா... ஒரே கன்பீசனா கீதுபா...!

    ReplyDelete
    Replies
    1. எப்படின்னாலும் சரி. ஆனா முதல்ல மொய் வைக்கனும். அதான் முக்கியம்

      Delete
  16. கல்யாணம் ஆகாதவர்களுக்கு பயன் தரும்படியான அருமையான விஷயங்களைச்சொல்லி அறிமுகப்படுத்திய பதிவர்கள் அனைவர்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா ராஜி. த.ம.6

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி மஞ்சு!

      Delete
  17. என் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி உஷா!

      Delete
  18. அனைவருக்கும் பயனுள்ள பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  19. ராஜி!
    என் வலைப்பூவினையும் இணைத்ததற்கு மிக்க நன்றி!அழகான திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்!பதிவுகள் பதிந்தன!

    ReplyDelete
  20. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete